கோயில்பாளையம்





	


	



























	




 




	








 




9:56:59 AM         Tuesday, April 21, 2026

கோயில்பாளையம்

கோயில்பாளையம்
கோயில்பாளையம் கோயில்பாளையம் கோயில்பாளையம் கோயில்பாளையம் கோயில்பாளையம் கோயில்பாளையம் கோயில்பாளையம் கோயில்பாளையம்
Product Code: கோயில்பாளையம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
                                                                            கோயில்பாளையம், காலகாலேசுவரர்
 
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோயம்புத்தூர்- சத்தியமங்கலம் செல்லும் தேசிய சாலையில்  சுமார் 15 கி.மீ. தொலைவில் கோவில்பாளையம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்து சில நிமிட நடை தூரத்தில் அமைந்துள்ளது.
 
இறைவன் : காலகாலேசுவரர்
இறைவி :  கருணாகரவல்லி
தல தீர்த்தம் : காலபொய்கை தீர்த்தம்
 
தல சிறப்புகள் :  தொன்மை வாய்ந்த இந்தத் திருக்கோயில் எமனின் சாபம் நீக்கிய சிறப்பு வாய்ந்த தலம். இந்தத் தலம் அதி சிறப்பு வாய்ந்த குரு பரிகார தலம் ஆகும். இக்கோவிலுள்ள குருபாவான் ஆலங்குடியிலுள்ள தட்சிணாமூர்த்திக்கு இணையாக, ஆசியாவிலேயே மிகப் பெரிய தட்சிணாமூர்த்தி என்றுக் கூறுவார்கள். ஒவ்வொரு குருப் பெயர்ச்சியும் இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடபடுகிறது. உயிர்களை அழிக்கும் தனது சக்தியை இழந்த காலன் இத்தலத்தில் மணலும் நுரையாலுமான லிங்கம் செய்து வழிபட்டுத் தன் அழிக்கும் ஆற்றலை மீண்டும் பெற்றார். இதன் காரணமாக இக்கோவிலில் சிவன் காலகாலேசுவரர் எனப்படுகிறார். காலகாலேசுவரை வழிபட ஆயுள் பலமாகும். இக்கோவிலில், தம்பதியினர் அறுபதாம் திருமணம் செய்துகொள்கின்றனர். 
 
கோவில் அமைப்பு : இத்திருக்கோயில் கிழக்கு பார்த்து உள்ளது. முன்புறம் மூன்றுநிலை கோபுரமும், இறைவனின் சந்நிதானத்திற்கு முன் நந்தியெம்பெருமான் மரகத நிறத்தில் தரிசனமளிக்கிறார். இதுபோன்ற நந்தி மிகவும் அரிது. மரகத கற்கள் விசேஷ சக்தி பொருந்திய ஒரு தனி வகைப்பட்ட கல்லாகும். இக் கோவில் நூறு ஆண்டுகளையும் கடந்து அதன் பழமை மாறாமல் இன்றும் நின்றுக் கொண்டுள்ளது இதன் தனிச் சிறப்புக்களில் ஒன்று. கொடிமரத்திற்கு அடுத்து வரும் நுழைவாயிலுக்குள் சென்றதும் இடப்புறம் சந்திரனுக்கும் வலப்புறம் சூரியனுக்கும் சிறியதாய் தனிச் சன்னிதிகள் உள்ளன. அடுத்து பலிபீடமும் நந்திதேவரும் உள்ளனர். சுவாமி சன்னிதிக்கு இடப்புறம் அமைந்துள்ள கருணாகரவல்லி அம்மன் சன்னிதியின் முன்பகுதியில் இடப்புறம் பூதேவி, ஸ்ரீதேவியுடன் பெருமாளும் வலப்புறம் துர்க்கையும் உள்ளனர். சுவாமி சன்னிதிக்கும் அம்மன் சன்னிதிக்கும் இடையில் வள்ளி தெய்வானையுடன் முருகன் 12 திருக்கைகளுடன் கால சுப்பிரமணியர் என்ற பெயருடன் தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். சுவாமி சன்னிதியின் வெளிச்சுற்றுச் சுவரின் பின்புறத்தில் சண்டிகேசுவரருக்கு எதிரில் பிரம்மாவும் உள்ளார். இத்திருக்கோயில் உள்ளே கரிவரதராஜப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. சிவன் கோவிலில் விஷ்ணு, பிரம்மா இருவரும் வழிபடப்படுவது இக்கோவிலின் சிறப்பு. கோவில் பிரகாரத்தில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு நாயன்மார்களின் திருவுருங்களும் தனியிடத்தில் அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. இங்கு சூரியன், சந்திரன், குரு, சனீஸ்வரர் என தனித்தனி சன்னதி அமைந்திருக்கிறது. 
 
டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக்காபூர் இரண்டு தடவை தமிழகத்தின் மீது படையெடுத்துவந்து, தமிழகத்தில் இருந்த திருக்கோயில்களைத் தேடித் தேடிச் சென்று சின்னாபின்னப்படுத்தி சூறையாடினான். அவ்வாறு சிதைக்கப்பட்ட கோவில்களுள் இதுவும் ஒன்று. இத்திருக்கோயில் பற்றி ஏராளமான கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அவற்றிலிருந்து இத்திருக்கோயிலின் புராதனப் பெருமை தெரிய வருகிறது. இவற்றில் சோழர் காலத்து கல்வெட்டுகள் அதிகமாக உள்ளன. ஹோய்சலர் நாட்டினர் கல்வெட்டு ஒன்றும் இங்கு கிடைத்துள்ளது.
 
தல வரலாறு : தவம் செய்து விசுவாமித்திர முனிவராக மாறிய கௌசிக மன்னர் இத்திருத்தலத்தில் யாகம் செய்ததால் கௌசிகபுரி எனும் பெயர் பெற்றது. யாகம் செய்த இடம் ’திருநீற்றுமேடு’ என்று வழங்கப்படுகின்றது. திருக்கடையூரில் மார்க்கண்டேயரையும் சிவபெருமானையும் அவமதித்ததற்குப் பரிகாரமாக சிவபெருமான் எமதேவனை கொங்கு நாட்டின் கோவில்பாளையத்தில் வழிபடக்கூற, அவ்வாறே இங்கு வந்து தமது தண்டத்தினால் பூமியை அழுத்தி தீர்த்தம் ஏற்படுத்தி, அதனை பயன்படுத்தி மண்ணைக்குழைத்து சிவலிங்கத் திருமேனி செய்து வழிபட்டு பலன் பெற்றார் எமதேவர். சிவபெருமானும் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதால் அன்றுமுதல் திருக்கடையூருக்கு இணையான திருத்தலமாக வழிபடப்படுகின்றது. கரிகாற் சோழன் காரணமின்றி ஓர் இளம் பன்றியைக் கொன்ற பாவம் தீர நாரதர் அறிவுரைப்படி இத்திருத்தலத்தில் வழிபட்டு பன்றியைக் கொன்ற பாவத்திலிருந்து விமோசனம் பெற்றார். கரிகால் சோழர் வில், அம்புடன் கூடிய நஞ்சுண்டேஸ்வர சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து திருக்கோயிலைப் புனர்நிர்மாணம் செய்தார். சிவன் சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் சில தலங்களில் மூலிகையால் தைலாபிஷேகம் செய்வர். ஆனால், காலகாலேஸ்வரர் கோயிலில் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
 
மார்க்கண்டேயரின் ஆயுளை முடிக்கச்சென்ற எமதர்மன், தவறுதலாக சிவன் மீது பாசக்கயிறை வீசினான். கோபம் கொண்ட சிவன், பணியை சரியாக செய்யாத எமனின் பதவியை பறித்து சாதாரண மனிதனாக பிறக்கும்படி செய்துவிட்டார். பூலோகம் வந்த எமன் விமோசனம் பெறுவதற்காக பல தலங்களில் சிவனை வழிபட்டு வந்தார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது, சிவ வழிபாடு செய்ய எண்ணினார். ஆனால், இங்கு லிங்க வடிவம் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, மணலால் லிங்கம் செய்ய நினைத்து, ஒரு குச்சியால் தரையை தோண்டினார். அப்போது, நுரை பொங்கியது. மணலையும், நுரையையும் சேர்த்து அவர் லிங்கமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார். சிவன் அவருக்கு காட்சி தந்து, பறிக்கப்பட்ட எமலோக தலைவர் பதவியை மீண்டும் கொடுத்தார். 

இத்திருக்கோவிலில் நாள்பட்ட நோய் தீரவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் சுவாமி அம்பாளுக்கு தேன் மற்றும் சந்தனம் உட்பட பல்வேறு திரவியங்களுடன் அபிஷேகம் செய்கின்றனர். அபிஷேக தேனும், சந்தனமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை சாப்பிடுவதன் மூலம் குழந்தை பிறக்கவும், நோய் தீரவும் வழிபிறப்பதாக நம்பிக்கையுள்ளது. திருமணத் தடை விலகவும், விஷக்கடிக்கும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

காலை 6.00 மணிமுதல் பகல் 12.30 மணிவரை, மாலை 4.00 மணிமுதல் இரவு 7.30 மணிவரையிலும் கோவில் திறந்திருக்கும்.
 
அருகிலுள்ள விமான நிலையம் :  கோயம்புத்தூர் 
 
அருகிலுள்ள ரயில் நிலையம் : இருகூர்,  கோயம்புத்தூர் வடக்கு 
 
பேருந்து வசதி  : உண்டு 
 
தங்கும் வசதி : இல்லை 
 
உணவு வசதி : இல்லை
Mail this page Printable view
×
×
×
×
×
×
×