அன்னதாசம்பாளையம்





	


	



























	




 




	








 




11:46:00 PM         Monday, April 20, 2026

அன்னதாசம்பாளையம்

அன்னதாசம்பாளையம்
அன்னதாசம்பாளையம் அன்னதாசம்பாளையம் அன்னதாசம்பாளையம் அன்னதாசம்பாளையம் அன்னதாசம்பாளையம் அன்னதாசம்பாளையம் அன்னதாசம்பாளையம் அன்னதாசம்பாளையம் அன்னதாசம்பாளையம்
Product Code: அன்னதாசம்பாளையம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                  அன்னதாசம்பாளையம், மாதேஸ்வரர் 

திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அன்னதாசம்பாளையம் எனும் ஊரில் அமைந்துள்ளது. 

இறைவன் : மாதேஸ்வரர்

இறைவி :  ராஜ ராஜேஸ்வரி

தல சிறப்புகள் : சிறுகுன்றின் மீது அமைந்துள்ளது. பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வருவது சிறப்பாகும். 

கோயில் அமைப்பு : கிழக்கு நோக்கி ஆலயம் அமைந்துள்ளது.  தோரண வாயிலில் வரசித்தி விநாயகர் காட்சி தருகிறார். பெரிய அரசமத்தடியில் நாகர் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. நகருக்கு இடையே விநாயகர் உள்ளார். எதிரே மகா மண்டபத்தில் நந்தி, பலி பீடம், முருகன், விநாயகர் தனி தனி சன்னதி கொண்டு உள்ளனர். கருவறையில் ஈசன் லிங்க வடிவில் காட்சி தருகிறார். வெளி பிரகாரத்தில் கன்னிமூலை கணபதி, சண்டிகேஸ்வரர்,  கால பைரவர், தட்சணாமூர்த்தி, ப்ரம்மா, லிங்கோத்பவர், துர்கை, நவகிரகங்கள்  உள்ளனர்.

தல வரலாறு : சிவ பக்தர்கள் சிலர் விசேச நாட்களில் வண்டி கட்டி கொண்டு காரமடை, பவானிசாகர் வழியாக உள்ள சிவன் கோவில்களுக்கு குடும்பத்தோடு வழிபாடு செய்து வந்தனர். நாட்கள் செல்ல செல்ல வயது முதிர்வின் காரணமாக நமது கிராமத்திலே சிவன் கோவில் கட்ட முடிவு செய்தனர். ஊரின் எல்லையில் சிறு குன்றின் மீது லிங்கத்தை பிரதிஷடை செய்து வழிபட்டனர். நாளடைவில் கருவறை, அர்த்த மண்டபம், மக மண்டபத்தும் கோவில் விரிவடைந்து காணப்படுகிறது. திருமண தடையுள்ளவர்கள் இங்கு வந்து பிராத்தனை செய்கின்றனர். மேலும் பிரதோஷ நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 5 மணிக்கு திருப்பாவை, திருவெம்பாவை பாடி கிரிவலம் வருகின்றனர். ஆனி திருமஞ்சனத்தின் போது நடராஜர் சிவகாமி திருக்கல்யாணம் காலை 9.00 மணிக்கு நடைபெறுகிறது. சிறுமுகையில் உள்ள கோதண்டராம உற்ச்சவங்கள், இடுக்கம்பாளையத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கும், ராம நவமி அன்று இத்தலத்தின் வழியாக கொண்டுசெல்லப்படுவது சிவ விஷ்ணு அங்கமாக காட்சி தருகிறது. பிரதோஷம், சிவராத்திரி, ஆருத்திரா தரிசனம், மார்கழி மாத திருக்கல்யாணம், அமாவாசை போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 1/2 கிலோ மீட்டர் தொலைவில் கிரிவலம் வருகின்றனர். சதுர்த்தி, சஷ்டி, தேய்பிறை அஷ்டமி,கிருத்திகை சிறப்பு நாட்களில் வழிபாடு நடைபெறுகிறது. தை பொங்கல் நாட்களில் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். மகா சிவராத்திரியின் போது காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள், பஜனை, சொற்பொழிவு  நடைபெறுகிறது.

காலை 6.00 மணி முதல் 1.00 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் :  கோயம்புத்தூர் 

அருகிலுள்ள ரயில் நிலையம் :  கோயம்புத்தூர் 

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : இல்லை 

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×