சேரன் மாநகர்





	


	



























	




 




	








 




3:48:09 PM         Tuesday, April 21, 2026

சேரன் மாநகர்

சேரன் மாநகர்
சேரன் மாநகர் சேரன் மாநகர் சேரன் மாநகர் சேரன் மாநகர் சேரன் மாநகர் சேரன் மாநகர் சேரன் மாநகர் சேரன் மாநகர் சேரன் மாநகர்
Product Code: சேரன் மாநகர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                  சேரன் மாநகர், சுந்தரேஸ்வரர்

திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சேரன் மாநகர் எனும் ஊரில் அமைந்துள்ளது.

இறைவன் : சுந்தரேஸ்வரர்

இறைவி :  மீனாட்சி

தல மரம் : வில்வம், வன்னி மரம் 

தல சிறப்புகள் : இக்கோவிலில் வந்து வழிபடும்போது பாத சனி, ஜென்ம சனி, அஷ்டமச்சனி, ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்பு விலகுகிறது.


கோயில் அமைப்பு : சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் விநாயகர் சன்னதி கொண்டு விளங்கிய இக்கோவில் தற்போது அனைத்து கோவில் அடங்கிய சிவன் கோவிலாக உள்ளது. மூலவர் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி தருகிறார். இடதுபுறம் தெற்கு நோக்கி மீனாட்சி சன்னதி உள்ளது. வள்ளி தெய்வானையடன் சண்முகர் தனி சன்னத்திலுள்ளார். வன்னி மரத்தடியில் வன்னி விநாயகர் உள்ளார். மேலும் தட்சணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்ம, துர்கை, சண்டிகேஸ்வரர், கால பைரவர், நவக்கிரக சன்னதி போன்றவை உள்ளது. சனிஸ்வர பகவான் காக வாகனத்துடன் நின்ற கோலத்தில் தனி சன்னதிக்கொண்டு சிவன் நோக்கி உள்ளார். இங்குள்ள விஷ்ணு துர்கை மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருமணமாகாத பெண்கள் 11 வெள்ளிக்கிழமை இந்த அன்னையை வழிபட திருமணம் நடை பெறுகிறது. சுந்தரேஸ்வரக்கு புதன் கிழமைகளில் அபிஷேகம் செய்ய நல்ல குரல் வளம் பெருகும். சந்தன அபிஷேகம் செய்து வழிபட்டால் குடும்ப பிரச்சனை தீரும். மன பயம், குழந்தை பாக்கியம், பில்லிசூனியம், ஏவல் போன்ற தீங்குகள் விலகுகிறது.

இங்குள்ள பைரவர் கல்வி, அழகு, செல்வாக்கு போன்றவற்றை தருபவர். தேய்பிறை அஷ்டமி நாட்களில் வழிபட பிரிந்த தம்பதினர் ஒன்று சேருகின்றனர்.   சனிப்பெயர்ச்சியின் போது சனீஸ்வரனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தைப்பூசத்தன்று முருகனுக்கு அலகு குத்துதல், பால் காவடி எடுத்தல், சித்திரை திருவிழா, பிரதோஷம், சிவராத்திரி போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

காலை 5.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் :  கோயம்புத்தூர் 

அருகிலுள்ள ரயில் நிலையம் :  கோயம்புத்தூர் வடக்கு, இருகூர்

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : இல்லை 

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×