செல்வபுரம்





	


	



























	




 




	








 




10:06:45 AM         Friday, April 17, 2026

செல்வபுரம்

செல்வபுரம்
செல்வபுரம் செல்வபுரம் செல்வபுரம் செல்வபுரம் செல்வபுரம் செல்வபுரம் செல்வபுரம் செல்வபுரம் செல்வபுரம் செல்வபுரம்
Product Code: செல்வபுரம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                  செல்வபுரம், சுயம்பு ஜலகண்டேஸ்வரர்

திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்த சித்தர் பீடம் கோயம்புத்தூரில் சுண்டக்காமுத்தூர் பகுதியில் மஞ்ச கிணறு திட்டு பகுதில் அமைந்துள்ளது.

இறைவன் : சுயம்பு ஜலகண்டேஸ்வரர்

உற்சவர் : சிவன் 

இறைவி : சங்கர நாயகி 

தல விருட்சம் : ருத்ராட்ச மரம் 

தல தீர்த்தம் : அகத்திய தீர்த்தம் 

தல சிறப்புகள் :  இங்கு சிவன் மூலவராக அமைந்து இருக்கிறார். கிழக்கு பார்த்த கொவ்வில். இறைவனும் கிழக்கு நோக்கி இருக்கிறார். மூலவர் ஜலகண்டஸ்வரர். 27 நட்சத்திரங்களுக்கான மரங்கள் இங்கு உண்டு. குரு பகவானின் தல விருட்சமான கல்லால மரம் இங்கு அமைந்திருக்கிறது.

கோயில் அமைப்பு : கோவில் கிழக்கு நோக்கி உள்ளது. கோவிலில் அகிலாண்டேஸ்வரி, சர்ப்ப கணபதி, சந்தான கோபால கிருஷ்ணன், முருகன், தட்சணாமூர்த்தி, அகத்தியர்,அனுமன், துர்க்கை, முப்பெரும் தேவியர், நடராஜர், சிவகாமி, சமய குரவர்கள், பஞ்ச சித்த லிங்கேஸ்வரர், பிரத்தியங்கா, ராகு, கேது, சண்டிகேஸ்வரர், நந்தி, சப்த மாதாக்கள் போன்ற சன்னதிகள் உள்ளன.

குழந்தை வரம், கல்யாண தடை, தொழில், விவசாயம் வேண்டி பிராத்தனை செய்கின்றனர். பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு உள்ள அக்னி ஹோமத்தில் 9 முறை வளம் வந்து விறகுகளை போட்டால் நிவர்த்தி அடைகின்றனர். அகத்தியர் வழிபாடு வைகாசி மாதம் ரேவதி நட்சத்திரத்தன்று குருபூஜை நடைபெறுகிறது. வெள்ளயங்கிரி மலையில் இருந்து வந்த சித்தரால் அரவம் புற்றில் இருந்து அருள் மழை பெய்து காட்சி தந்தது. பிரதோஷ வழிபாடு, முன்னோர் பாவ சாப விமோசனம், பிதுர்கர்மம், பிரமத்திதோஷம்  முதலியன  அமாவசை நாளன்று சித்தர் அய்யாவின் அருளால் நடைபெறுகிறது. மகா சிவராத்திரி, அன்னபிஷகம், ஆனி திருமஞ்சனம் 10 நாட்கள் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.

காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் :  கோயம்புத்தூர் 

அருகிலுள்ள ரயில் நிலையம் :  கோயம்புத்தூர் 

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : இல்லை 

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×