உடையம்பாளையம், விஸ்வநாத ஈஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரயில் நிலையத்திலிருந்து 7 கி.மீ தொலைவிலும், விமான நிலையத்திலிருந்து 18 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
இறைவன் : விஸ்வநாத ஈஸ்வரர்
இறைவி : விசாலாட்சி
தல விருட்சம் : வில்வம்
தல சிறப்புகள் : இங்கு பொன்னர் சங்கர் வழிபட்டதால் அண்ணமார் கோவில் என்று அழைக்கப்படுகிறது. அண்ணமார் திருவிழா 5 வருடத்திற்கு ஒருமுறை நடைபெறுகிறது. அரசமரமும் வேம்பு மரமும் சேர்ந்து இருப்பது மிக சிறப்பு.
கோயில் அமைப்பு : 300 வருடங்கள் முன்பு கட்டப்பட்டதாகவும், சுற்றிலும் 6 ஏக்கர் நிலம் உள்ளது. திருச்சி, கரூர் அண்ணமார் கோவிலில் தீர்த்தம் கொண்டு வந்து இங்கு சிவாலயம் அமைக்கப்பட்டது. கோவிலினுள் விநாயகர், முருகன், பெருமாள் ஆண்டாள், லிகோத்பவர், துர்க்கை, கன்னிமார், சண்டிகேஸ்வரர், அனுமன், யானை மீது கருப்பராயர், முனியப்ப சாமி ஆகிய தெய்வங்களுக்கு தனி சன்னதி உள்ளது. நவகிரகங்கள் தம்பதியராக காட்சி தருவது கூடுதல் சிறப்பாகும். மேலும் குன்றுடையான், தாமரை அரியநாயகி, பொன்னர், சங்கர், அருக்காணி நல்லதங்காள் ஆகியோருக்கு இங்கு விக்கிரங்கள் உள்ளன.
திருமண தடை, குழந்தை பாக்கியம், தொழில் வளர்ச்சி வேண்டி பிராத்திகின்றனர். பிரதோஷம், அமாவாசை, கார்த்திகை, அன்னபிஷகம், சிவராத்திரி, மார்கழி, புரட்டாசி சனி திருவீதி ஊர்வலம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : கோயம்புத்தூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை