கணபதி விஸ்வநாதசாமி





	


	



























	




 




	








 




11:45:54 AM         Thursday, June 25, 2026

கணபதி விஸ்வநாதசாமி

கணபதி விஸ்வநாதசாமி
கணபதி விஸ்வநாதசாமி கணபதி விஸ்வநாதசாமி கணபதி விஸ்வநாதசாமி கணபதி விஸ்வநாதசாமி கணபதி விஸ்வநாதசாமி கணபதி விஸ்வநாதசாமி
Product Code: கணபதி விஸ்வநாதசாமி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                               கணபதி விஸ்வநாதசாமி

திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் காந்திபுரத்தின் மையத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் கணபதி அமைந்துள்ளது. 

இறைவன் : கணபதி விஸ்வநாதசாமி

உற்சவர் : விஸ்வநாத சுவாமி

இறைவி : புவனேஸ்வரி அம்மன் 

தல விருட்சம் : வில்வம் 

தல சிறப்புகள் : காசியில் உள்ள விஸ்வநாதர் ஆலயத்தின் ஆகம விதியின் படி அமைக்கப்பட்ட கோவிலாகும். மூலவர் காசி விஸ்வநாதர், புவனேஸ்வரி, ஆலமர விநாயகர், செல்வ விநாயகர்,  முருகன் ஆகியோர் கிழக்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்பாளிக்கின்றனர். தெற்கு நோக்கி சண்டிகேஸ்வரர், வடக்கு நோக்கி துர்க்கை அம்மன், லிகோத்தபவர், கால பைரவர், நவ கிரக சன்னதிகள் உள்ளன. காசிக்கு சென்று வந்த பலனை இக்கோவில் சென்று வந்தால் கிடைக்கும் என்கின்றனர். 1990 களில் கணபதி பகுதி சக்தி சாலையில் தங்கள் வழிபட அரச மரத்தடியில் பிள்ளையார் சிலை வைத்து வழிபட்டுவந்தனர். நாளடைவில் மக்கள் தாங்கள் வயதான நாட்களில் காசி சென்று மோட்சம் பெற விருப்பம் உள்ளது என கருதி உடனே காசிக்கு சென்று அங்கு நடைபெறும் வழிபாட்டுமுறையை அறிந்து கொண்டு வந்து 1995 ம் ஆண்டு கோவில் காட்டினர். பிறகு கோவிலினுள் பிற சன்னதிகள் அமைத்து வழிபட துவங்கினர்.    

சிவராத்திரி மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி, அன்னபிஷகம், அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை, சஷ்டி, விசாகம், தைப்பூசம், சதுர்த்தி, ஆடி வெள்ளி, குரு வழிபாடு கொண்டாடப்படுகிறது.

காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் :  கோயம்புத்தூர் 

அருகிலுள்ள ரயில் நிலையம் :  கோயம்புத்தூர், காந்திபுரம்

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : இல்லை 

உணவு வசதி : இல்ல

Mail this page Printable view
×
×
×
×
×
×
×