கூழைய கவுண்டபுதூர்





	


	



























	




 




	








 




12:55:42 PM         Tuesday, April 21, 2026

கூழைய கவுண்டபுதூர்

கூழைய கவுண்டபுதூர்
கூழைய கவுண்டபுதூர் கூழைய கவுண்டபுதூர் கூழைய கவுண்டபுதூர் கூழைய கவுண்டபுதூர்
Product Code: கூழைய கவுண்டபுதூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
                                                          கூழைய கவுண்டன்புதூர், மொக்கணீஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில்  கோயம்புத்தூர் மாவட்டத்தில் அவிநாசியிலிருந்து சேவூர் 9 கி.மீ. செல்லும் வழியில் 8வது கி.மீ தொலைவில் கூழையகவுண்டன்புதூர் பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே ஆலயம் அமைந்துள்ளது.
 
இறைவன் : மொக்கணீஸ்வரர்
 
இறைவி :  மீனாட்சி
 
தல விருட்சம் : வில்வம், கரு நொச்சி
 
தல சிறப்புகள் : பக்தனின் பக்தியைக் கண்டு இறைவனே மெச்சி சுயம்புவாய் தோன்றி காட்சியளித்துக் கொண்டிருக்கும்  தலங்களில் கூழைய கவுண்டன்புதூர் தலமும் ஒன்று.
 
தல வரலாறு :  சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு வணிக குலத்தைச் சார்ந்த மாப்பிள்ளையும், மைத்துனரும் மதுரையிலிருந்து புறப்பட்டு அவினாசி, சேவூர் வழியாக மைசூருக்கு வியாபார விஷயமாக குதிரையில் செல்கின்றனர். இரவு நெருங்கி விட்டதாலும், கூடவே பயணக் களைப்பும் சேர மாப்பிள்ளையும், மைத்துனரும் கூழையகவுண்டன்புதூரில் தங்கி ஓய்வெடுக்கின்றனர். இதில் மாப்பிள்ளை அதீத சிவபக்தர். தினமும் சிவவழிபாடு செய்யாமல் எந்தச் செயலையும் துவங்க மாட்டார். இரவில் தங்கிவிட்டு மறுநாள் காலை இருவரும் நீராடிய பின்னர் மாப்பிள்ளையான சிவபக்தர், சிவ வழிபாடு செய்ய எண்ணினார்.
 
தனது மைத்துனரிடம் அருகில் சிவாலயம் ஏதேனும் உள்ளதா என பார்த்து வரச் சொல்கிறார். ஊர் முழுக்கத் தேடி சிவாலயம் இல்லாததை தனது மாப்பிள்ளையிடம் கூற எனக்கு ஏன் இந்தச் சோதனை என சிவபெருமானை தன் இதயத்தில் நிறுத்தி மனமுருக பிரார்த்திக்கிறார். அப்போது மைத்துனர் கவலைப்படாதீர்கள். இப்போதுதான் முனிவர் ஒருவர் சிவவழிபாடு செய்துவிட்டு போன இடத்தில் சிவலிங்கம் இருப்பதாகக் கூறி அழைத்துச் சென்றார். நிம்மதி அடைந்த மாப்பிள்ளை தனது மைத்துனர் அழைத்துச் சென்ற இடத்திலுள்ள சிவலிங்கத்தை வழிபட்டார். வழிபட்ட பின்னர் தன் சிவபக்த மாப்பிள்ளையிடம் நீங்கள் இன்று நன்றாக ஏமாந்தீர்கள்.
 
நான் தங்களுக்குத் தெரியாமல் குதிரைக்காக கொள்ளு வைத்திருந்த பையில் மணலை நிரப்பி, சிவலிங்கம்போல் தோற்றத்தை உருவாக்கி, மாலையிட்டு வைத்துவிட்டு தான், முனிவர் வழிபாடு செய்ததாக கூறி ஏமாற்றியதாக சொல்லி ஏளனமாக  மைத்துனர் சிரித்தார். அப்பாவியான மாப்பிள்ளை தனக்கு ஏன் இப்படி மீண்டும் மீண்டும் சோதனை என எண்ணி வேதனை அடைந்து கண்ணீர்விட்டார். சிவபெருமானை மனமுருக நினைத்து இன்று பூஜிக்க முடியவில்லையே இறைவா என்று உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்தார். அப்போது பக்தனின் பக்தியைக் கண்டு மெச்சிய சிவபெருமான் காட்சி தந்து நான் இங்கே லிங்க வடிவில் உள்ளேன். நீ கவலை கொள்ளாதே எனக் கூறி மறைந்தாராம். அதன் பின்னர் மணல் நிரப்பிய கோணிப்பையை எடுக்க மைத்துனர் முயன்றார். ஆனால், அதை அசைக்கக் கூட முடியவில்லை. அது நிஜ லிங்கமாகவே மாறியிருந்தது. பக்தனின் வேண்டுதலுக்காக சுயம்பு லிங்கமாக மாறிய சிவபெருமானின் அருள் மகிமையை உணர்ந்து மாப்பிள்ளை சிவபக்தர் ஆனந்தித்து பிரார்த்தனை செய்து மன நிம்மதியடைந்தார். இந்த அதிசயம் கண்டு தன் செய்கைக்கு வருந்திய மைத்துனர் மனம் திருந்தி தானும் சிவபக்தரானார். கொள்ளு வைக்கும் பைக்கு “மொக்கணி”என்று பெயர் உண்டு. ஆதலால் இறைவனின் திருநாமம் “மொக்கணீஸ்வரர்” என வழங்கப்பெற்றது. அதன் பின்னர் இருவரும் மைசூர் சென்று, வரும் வழியில் நடந்த இந்த இறை அனுபவத்தை மகாராஜாவிடம் கூற, அவர் இங்கு வந்து இறைவனை வழிபட்டு ஆலயம் எழுப்பியதாக கல்வெட்டுத் தகவல் கூறுகின்றது.
 
கோவில் அமைப்பு : திருவாசகத்தில் மாணிக்கவாசகர் “கீர்த்தி திருத்தாண்டகத்தில்” இத்தலம் பற்றி, ‘‘மொக்கணி அருளிய முழுத்தழல்மேனி சொக்கதாகக் காட்டிய தொன்மையும்” எனக் குறிப்பிட்டு பாடியுள்ளார். இப்பாடலை அடிப்படையாக வைத்து மீண்டும் இங்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிய ஆலயத்தின் முகப்பிலுள்ள சால விமானத்தில் குதிரையில் வந்த மாப்பிள்ளையும், மைத்துனரும் சிவபெருமானை பூஜித்த நிகழ்வை சுதை வடிவில் அமைத்துள்ளனர். பலிபீடம், நந்தியெம்பெருமான் சந்நதி கடந்து ஆலயத்தினுள் நுழைந்தால் மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறையை பார்க்கும் பொழுதே சுயம்பு வடிவான இறைவன் மொக்கணீஸ்வரரின் அருளொளி வேண்டுவோரின் துயர் துடைக்கும் அற்புதப் பேரொளியாய் காட்சி தருகின்றது. 
 
மகாமண்டபத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன், ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சிவ சூரியன், மாணிக்கவாசகர் ஆகியோர் குடி கொண்டுள்ளனர். தெற்கு நோக்கிய தனிச் சந்நதியில் இறைவி மீனாட்சியம்மை அழகு தரிசனம் தருகிறாள். பெண்களுக்கு இவள் மிகவும் இஷ்ட தேவி. கஷ்டங்களைக் களையும் நாயகி. பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், கால பைரவர் மற்றும் நவகிரக சந்நதிகள் உள்ளன. ஆலயத்தின் வடக்குப் பகுதியில் வேம்பும், அரசும் இணைந்து வளர்ந்துள்ள மரங்களுக்கு கீழ் நாகர் திருமேனிகளுக்கு மத்தியில் ஜல விநாயகர் அருள்பாலிக்கிறார். தல விருட்சங்களாக கரு நொச்சி மற்றும் வில்வ மரங்கள் உள்ளன. 
 
பிறரை அதீதமாய் நம்பி ஏமாந்தவர்கள், நம்பிக்கை துரோகத்திற்கு ஆளானவர்கள் இங்கு வந்து வேண்டி, மன அமைதி பெறுகிறார்கள். நம்பியவரால் ஏமாற்றமடைந்து, வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு இத்தல இறைவன் புது வாழ்வளிக்கிறார் என பக்தர்கள் சொல்லி சிலாகிக்கின்றனர்.  திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், சிவராத்திரி. 
 
காலை 11.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரை கோவில் திறந்திருக்கும்.
 
அருகிலுள்ள விமான நிலையம் :  கோயம்புத்தூர் 
 
அருகிலுள்ள ரயில் நிலையம் :   பீளமேடு, கோயம்புத்தூர் வடக்கு 
 
பேருந்து வசதி  : உண்டு 
 
தங்கும் வசதி : இல்லை 
 
உணவு வசதி : இல்லை 
Mail this page Printable view
×
×
×
×
×
×
×