வானமாமலை (நாங்குநேரி)





	


	



























	




 




	








 




7:15:10 AM         Monday, May 25, 2026

வானமாமலை (நாங்குநேரி)

வானமாமலை (நாங்குநேரி)
வானமாமலை (நாங்குநேரி) வானமாமலை (நாங்குநேரி) வானமாமலை (நாங்குநேரி) வானமாமலை (நாங்குநேரி) வானமாமலை (நாங்குநேரி) வானமாமலை (நாங்குநேரி) வானமாமலை (நாங்குநேரி) வானமாமலை (நாங்குநேரி) வானமாமலை (நாங்குநேரி) வானமாமலை (நாங்குநேரி) வானமாமலை (நாங்குநேரி) வானமாமலை (நாங்குநேரி) வானமாமலை (நாங்குநேரி) வானமாமலை (நாங்குநேரி) வானமாமலை (நாங்குநேரி) வானமாமலை (நாங்குநேரி)
Product Code: வானமாமலை (நாங்குநேரி)
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                  வானமாமலை பெருமாள் கோவில் ( நாங்குநேரி )

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், நாங்குனேரி திருநெல்வேலி மாவட்டத் தலைநகரான திருநெல்வேலியில் இருந்து 32 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

மூலவர் பெயர்: ஸ்ரீ வானமாமலை பெருமாள் ( தோதாத்திரி நாதர்) 

உற்சவர் பெயர் : ஸ்ரீ தெய்வ நாயக பெருமாள்

தாயார் : ஸ்ரீ வரகுணமங்கை நாச்சியார் 

தல தீர்த்தம் : சேற்றுத் தாமரை புஷ்கரணி, இந்திர தீர்த்தம்

தல விருட்சம் : மா மரம்

இறைவன் தானாகவே விக்கிரக வடிவில் ஓர் இடத்தில் தோன்றினால், அதை ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம் என்று சொல்வார்கள். வியக்தம் என்றால் வெளிப்படுதல் என்று பொருள். ஸ்வயம் வியக்தம் என்றால் இறைவன் சுயமாகவே வெளிப்பட்ட திருத்தலம் என்று பொருள். நாங்குநேரி, திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய எட்டுத் திருத்தலங்களும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களாகும். 

திருத்தல சிறப்புகள்  : தோத்தாத்ரிநாதர் எனும் பெயரில் அழைக்கப்படும் வானமாமலை பெருமாள், வரமங்கை தாயாருடன் வீற்றிருக்கும் தலம். நம்மாழ்வாரால் பாடப்பட்ட தளம் இது என்பது கூடுதல் சிறப்பாகும். பெரும்பாலும் கோவில்களில் ஒரு சுயம்பு மூர்த்தி இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் இந்த கோவிலில் 11 சுயம்பு மூர்த்திகள் காட்சி தருகிறார்கள். தோத்தரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவி, சூரியன், சந்திரன், பிருகுரிஷி, மார்க்கண்டேயர், ஊர்வதி, திலோத்தமை, கருடாழ்வார், விஷ்வக்சேனர் என 11 பேர் சுயம்பு மூர்த்திகளாக உள்ளனர். ஆண்டு முழுவதும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வார்கள். இதை ஒரு கிணற்றில் ஊற்றி வைப்பார்களாம். அந்த எண்ணெய் உடலில் தேய்த்து சில சொட்டுக்கள் சாப்பிட்டால் தோல்வியாதிகள் குணமாகும் என்கிறார்கள். திருவரமங்கை என்னும் வானமாமலை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். 108 திவ்ய தேசங்களில் சுயம்பு மூர்த்தியாக பெருமாள் உள்ள எட்டு தலங்களில் இதுவும் ஒன்றாகும். 

கோயில் கருவறையில் ஆதிசேடன் குடையாய் இருக்க, வானமாமலைப் பெருமாள் வைகுண்டபதியாக அமர்ந்த திருக்கோலத்தில் இருக்கிறார். அவருக்கு இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி தாயார்கள் காட்சி தருகிறனர். இவர்களுக்கு ஊர்வசியும் திலோத்தமையும் சாமரம் வீசுகின்றனர். பிருகு முனிவர், மார்க்கண்டேய முனிவர், சூரியன், சந்திரன் ஆகியோர் பெருமாளை சேவித்தபடி, கருவறையில் வீற்றிருக்கின்றனர். அர்த்த மண்டபத்தில் கருடாழ்வார், விஷ்வக்சேனர் இருக்கிறார். இந்த 13 விக்கிரகங்களும் சுயம்புகள் என்றும். வைகுண்டத்தில் பெருமாள் எப்படி வீற்றிருப்பாரோ அத்தகைய கோலத்திலேயே சுவாமி இங்கு இருப்பதாக நம்பிக்கை உள்ளது.

மேலும் கோயிலில் ஞானப்பிரான், லட்சுமி நாராயணர், வேணுகோபாலன், தசாவதார மூர்த்திகள், ராமர், கண்ண பிரான், சக்கரத்தாழ்வார் ஆகியோர் தனிச் சன்னிகளில் உள்ளனர். குலசேகர மண்டபத்தில் நம்மாழ்வாரைத் தவிர 11 ஆழ்வார்களும், கருவறைப் பிரகாரத்தில் 32 ரிஷிகள், தும்பிக்கை ஆழ்வார் ஆகியோரும் உள்ளனர். இத்தலத்தில் உள்ள சேற்றுத் தாமரை தீர்த்தமானது திருப்பாற்கடலின் அம்சமாகவும் சாபம் நீக்கக்கூடியதாகவும் கருதப்படுகிறது.

இக்கோவிலின் உற்சவராக தெய்வநாயகன் காட்சி அளிக்கிறார். ஸ்ரீவரமங்கை தாயார் வட வேங்கடத்தில் வீற்றிருந்தார். வெங்கடேசப் பெருமாளுக்கு திருமண உற்சவம் செய்ய வேண்டும் என்று எண்ணிய போது, ஸ்ரீ ராமானுஜ ஜீயரின் கனவில் ஸ்ரீவரமங்கைக் காட்சி அளித்து, தான்  இறைவனைக் கைபிடித்து விட்டதாகத் தெரிவித்தார். அதன் படியே இங்கு தெய்வநாயகனுக்கும் ஸ்ரீவரமங்கைக்கும் திருமண உத்சவம் நடக்கின்றது.

இத்திருக்கோவிலில் அமைந்துள்ள ஒவ்வொரு தூண் களிலும் நான்கைந்து சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சிறப்பானவை, அனுமனை அணைத்து நிற்கும் ராமபிரானின் திருக்கோலமும், பீமனை எட்டிப்பிடிக்கும் புருஷாமிருகத்தின் சிற்பமும் ஆகும். கருவறையில் தோத்தாத்திரி நாதர், பட்டாபிஷேக கோலத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அவரது அருகில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருமருங்கிலும் இருக்க, ஊர்வசியும், திலோத்தமையும் சாமரம் வீசிக்கொண்டு இருக்கின்றனர். தங்கமயமான ஆதிசேஷன் குடைபிடிக்க வைகுண்டத்தில் மகாவிஷ்ணு இருக்கும் கோலத்தை இங்கே காணலாம். பிருகு, மார்க்கண்டேயர், சந்திரர், சூரியர் ஆகியோரும் வெளியே விஸ்வக்சேனர் ஆக 11 பேர் ஏகாசனத்தில் இருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

கோயில் அமைப்பு : இந்த கோவிலின் முகப்பில் ஏழு நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரம் கட்டப்பட்டுள்ளது. கிழக்கு வாசல் பந்தல் மண்டபம் வழியே உள்ளே நுழைந்தால் ராஜ கோபுர வாயிலுக்கு முன்புறம் வடக்கே வானமாமலை மடம் அமையப் பெற்றுள்ளது. கோயிலுக்கு உள்ளே இரண்டு பிரகாரங்களை கொண்டு இந்த திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த திருக்கோவிலிலுக்குள்  நுழைந்தவுடன் வலது புறம் மணவாள மாமுனிகள் சன்னதி அமையப் பெற்றுள்ளது. அதனை தாண்டி உள்ளே சென்றால் பிரம்மாண்டமான நாயக்கர் மண்டபமும், அதனை தொடர்ந்து கொடிமரம் மற்றும் பலி பீடம் ஆகியவை அமையப் பெற்றுள்ளது.
அதனை தாண்டி உள்ளே சென்றால் வானமாமலை பெருமாள் சேவை சாதிக்கும் கருவறையும், உள் பிரகாரத்தில் ஸ்ரீ வரமங்கை நாச்சியார், தல விருட்சம் மா மரம், ஆண்டாள் நாச்சியார் , ஸ்ரீ ராமர், பரமபத வாசல், ஆழ்வார்கள், கருடன் , இராமானுஜர், லோகாச்சாரியார், லட்சுமி நரசிம்மர், வேணு கோபாலர், சக்கரத்தாழ்வார், லட்சுமி வராகர், விஷ்வக் சேனர் ஆகியோர் சன்னதிகள் அமையப் பெற்றுள்ளது.
இத் திருக்கோவில் வெளி பிரகாரம் முழுவதும் வரிசையான தூண்களால் மிக நீளமாகவும், அகலமாகவும் கட்டப்பட்டுள்ளது. இந்த பிரகாரத்தின் வட கிழக்கு முனையில் தான் பிரசித்தி பெற்ற எண்ணெய் கிணறும் இருக்கிறது. எண்ணெய்க் கிணறு அருகில் அகத்தியர் சிலை உள்ளது. வைணவ கோவில்களில் நம்மாழ்வாருக்கு பிரதானமாக சன்னதி இருக்கும். ஆனால் இங்கு காரி மாறன் வழிபட்ட பின்னரே நம்மாழ்வார் அவதாரம் நிகழ்ந்ததால், இங்கு நம்மாழ்வாருக்கு தனி சன்னதி இல்லை. இங்குள்ள பெருமாளின் சடாரியில் நம்மாழ்வார் எழுந்தருளி நித்ய வாசம் புரிகிறார் என்பது சிறப்பம்சம் ஆகும். 

தல வரலாறு : முற்காலத்தில் ஆழ்வார்திருநகரியை ஆட்சி செய்த காரி மாற பாண்டியன் என்ற மன்னன் சிறந்த விஷ்ணு பக்தனாக விளங்கினான். அந்த மன்னனுக்கு திருமணம் ஆகி நீண்ட காலம் ஆகியும் பிள்ளை பேறு கிட்ட வில்லை. தனக்கு பிள்ளை பேறு கிட்ட வேண்டி மன்னன் பல்வேறு தானங்கள், தர்மங்கள் மற்றும் யாகங்களை செய்து வந்தான். ஒரு நாள் அந்தணர் ஒருவர் காரி மாற பாண்டியனை சந்திக்க, அவரிடம் தன் குறையை மன்னன் கூறினான். அதற்கு அந்த அந்தணர் திருக்குறுங்குடி சென்று நம்பி பெருமாளை தரிசனம் செய்து வழிபட்டால் வழி பிறக்கும் என கூறினார்.

அந்தணரின் ஆலோசனைப் படி மன்னனும், தன் மனைவியை அழைத்துக் கொண்டு திருக்குறுங்குடி தலத்திற்கு சென்று நம்பிராயரை மனமுறுகி வணங்கி தனக்கு ஒரு ஆண் மகவு பிறக்க அருள் செய்யும் படி வேண்டிக் கொள்கிறார். அன்று இரவு காரி மாற பாண்டிய மன்னரின் கனவில் தோன்றிய நம்பிராயர் பெருமாள்,  திருக்குறுங்குடி நகரில் இருந்து கிழக்கே நான்கு ஏரிகள் சூழ்ந்த இடத்தின் மத்தியில் எனது சகோதரனான வானமாமலை பெருமாள் தனது பரிவாரங்கள் சகிதமாக பூமிக்கு அடியில் புதையுண்டு கிடக்கிறார் எனவும் நீ அங்கு சென்று காணும் போது அந்த இடத்தை ஏறும்புகள் சாரை சாரையாக ஊர்ந்து செல்லும், வானில் அதற்கு நேராக கருடன் வட்டமிட்டுக் கொண்டிருக்கும் எனவும் கூறி, அந்த இடத்தை தோண்டி அங்கு புதையுண்டு கிடக்கும் சுயம்பு மூர்த்தங்களை பிரதிஷ்டை செய்து திருக்கோவில் கட்டி வழிபட்டால் உன் விருப்பம் நிறைவேறும் எனவும் கூறி அருளுகிறார்.

அதன் படி காரி மாற பாண்டியனும் அந்த இடத்திற்கு சென்று அடையாளம் கண்டு, பூமியை தோண்டிட அங்கிருந்து குருதி பெருக்கிட பதினொரு சுயம்பு திருமேனிகள் கிடைக்கிறது. அந்த சுயம்பு திருமேனிகளை பிரதிஷ்டை செய்து திருக்கோவில் எழுப்பி முறைப்படி கும்பாபிஷேகம் செய்து வைத்திட, அவனுக்கு அவனது விருப்பப்படி நம்மாழ்வாரே ஆண் மகனாக அவதரித்தார். 

முற்காலத்தில் மது, கைடபர் என்ற இரண்டு அசுரர்கள் இருந்தார்கள். இவர்கள் இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்ததோடு மட்டுமல்லாமல் படைக்கும் கடவுளான பிரம்மனிடம் இருந்த வேதங்களையும் கவர்ந்து சென்றார்கள். வேதங்களை இழந்த பிரம்மன் படைப்பு தொழிலை செய்வதில் சிரமப்பட, தேவர்களும் துன்புறுத்தப்பட இறுதியில் மகா விஷ்ணு அந்த இரண்டு அசுரர்களோடு போர்க்களத்தில் போர் புரிந்து தன் கதாயுதத்தால் இருவரையும் சம்காரம் செய்கிறார். மது, கைடபர் இருவர் உடம்பிலும் இருந்த இரத்தமானது இப் பூமி முழுவதும் பரவி கடும் துர் நாற்றம் வீசியது. இதனால் பூமா தேவி நிலை குலைந்து போனாள். தன் நிலை மாற பூலோகத்தில் மகா விஷ்ணு சுயம்புவாக தோன்றிய தோதாத்திரி தலத்தை அடைந்து தவம் இயற்றுகிறாள். அவளின் தவத்தை மெச்சிய பெருமாள் அவளுக்கு காட்சி கொடுத்து, தனது சக்ர ஆயுதத்தை வானில் உள்ள மேகக் கூட்டங்களுக்கு நடுவே பிரயோகித்து, அமிர்த மழை பொழிய வைக்கிறார். வானில் இருந்து அமிர்த மழை பொழிந்த மாத்திரத்தில் பூமி எங்கும் அந்த அமிர்த நீர் பரவி பூமியை சுத்தப்படுத்திட பூமா தேவி புதுப் பொலிவை பெற்றாள். 

முற்காலத்தில் சிந்து தேசத்து மன்னன் தன் பரிவாரங்களுடன் தென் பகுதிக்கு வேட்டையாட வருகின்றான். அப்போது யானை ஒன்று காட்டில் மன்னனை துரத்திட, மன்னன் அந்த யானையிடம் இருந்து தப்பிக்க ஓடியதால் தன் உடன் வந்த பரிவாரங்களை விட்டு வழி தவறி நீண்ட தூரம் சென்று விட்டான். அடர்ந்த காட்டிற்குள் ஓடி வந்த மன்னன் அங்கு ஒரு குடிசையை கண்டான். அதற்குள் சென்ற மன்னன் பசி மற்றும் களைப்பினால் அங்கிருந்த உணவை எடுத்து உண்டு பசி தீர்த்துக் கொண்டான்.

அந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த அக் குடிசையில் தங்கியிருந்த முனிவர் தன் இருப்பிடம் திரும்பி வருகிறார். அங்கு தனது குடிசைக்குள் வேறு ஒருவர் இருப்பதையும், விஷ்ணுவிற்கு படைப்பதற்காகத் தான் வைத்து இருந்த பிரசாத உணவை அவர் உண்டு விட்டதையும் பார்த்து கடும் கோபங் கொண்டு, அந்த மன்னனை ‘நாயாக மாறக் கடவாய்’ என சாபமிட்டு விட்டார். அந்த சாபத்தை கேட்டு வேதனை அடைந்த மன்னன், தனது நிலையை எடுத்துக் கூறி வருந்திட, மனம் இறங்கிய முனிவர், இந்த உலகத்தின் மிகச் சிறந்த தீர்த்தத்தில் நீ நீராடும் போது உன் சாபம் நீங்கி சுய உருவம் பெறுவாய் என்று கூறி  விமோசனம் வழங்கினார். தான் பெற்ற சாபத்தின் படி நாயாக மாறிய மன்னன் காட்டில் அலைந்து திரிந்து, இறுதியில் வேடர்களால் பிடிக்கப்பட்டு, தோதாத்திரி நாதர் கோவில்  அமைந்துள்ள தலத்திற்கு வந்து சேர்ந்தான். பின்னர் அந்த வேடர்கள் ஒரு நாள் இங்குள்ள சேற்றுத் தாமரை தீர்த்த்தில் நீராடிய போது தன்னையும் அறியாமல் நாயாக மாறிய மன்னனும் அந்த தீர்த்தத்தில் நீராடிட, அக் கணமே அவனது சாபம் நீங்கி விமோசனம் பெற்றான். இதன் பின் தன் சுய உருவை பெற்ற மன்னன் இங்கு பெருமாளை வணங்கி முக்தி அடைந்தான் என்றும் கூறப்படுகிறது. 

முற்காலத்தில் காஷ்யப முனிவர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு கத்ரு என்ற மனைவியும், விநதை என்ற மனைவியும் இருந்தார்கள். கத்ருவிற்கு ஆதிசேஷன் உட்பட ஆயிரம் நாகங்கள் குழந்தைகளாகவும்,  விநதைக்கு அருணன் மற்றும் கருடன் ஆகிய இரண்டு குழந்தைகளும் இருந்தார்கள். ஒருமுறை கருடன் பாதாள உலகத்திற்கு சென்று தன் பெரியம்மாவின் புதல்வர்களான நாகர்களைப் பார்ப்பதற்காக செல்கிறார். அங்கு அவர்களோ அவர் வேற்று அன்னையின் புதல்வர் என்ற வேறுபாடு காட்டி பழித்தார்கள். அதைக் கேட்டு கோபமடைந்த கருடன், அவர்களைத் தாக்க ஆரம்பிக்கிறார். அப்போது ஆதிசேஷன் அங்கே வந்து, நாம் இருவரும் மகா விஷ்ணுவுக்கு சேவை செய்கிறவர்கள் அப்படி இருக்க  நீ இவர்களுடன் சண்டையிட்டால் அது விஷ்ணுவின் பெயரைக் கெடுக்கும் அல்லவா என்று கூறி கருடனைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். அப்போது கருடன், உனக்கென்ன ஆதிசேஷா நீ எப்போதுமே உன் தலைகளால் திருமாலுக்குக் குடை பிடிக்கிறாய், உன் உடலே அவருக்கு படுக்கையாகிறது, எனக்கு அத்தகைய பேறு இல்லையே என்று ஏக்கமாகச் சொல்கிறார் கருடர். 
அதனைக் கேட்ட ஆதிசேஷன், உனக்கு அப்படி ஒரு மனக்குறை இருந்தால் நீ பூலோகம் சென்று அங்குள்ள தோதாத்திரி நாதரை வழிபடு, அவர் உன் மனக் குறையை போக்கி அருள்வார் எனக் கூறுகிறார். அதன்படி கருடரும் பூலோகம் அடைந்து இந்த தலத்திற்கு வந்து தோத்தாத்ரி நாதரை வணங்கி பணிந்திட, பெருமாள் கருடர் முன் தோன்றி, எனக்கு வாகனமாக இருந்து சேவை சாதிக்கும் உனக்கு குறை ஏதும் உண்டோ எனக் கேட்க, அதற்கு கருடர், தான் ஆதிசேஷனைப் போல எப்போதும் தங்களை பிரியாமல் இருக்க வேண்டும் என வேண்டுகிறார். உடனே பெருமாளும் கருடனின் மனக் குறையை போக்கி வைகுண்டத்தில் என் வாசலில் எப்போதும் என்னைச் சுமந்து புறப்பட தயாரான நிலையில் நீ என் அருகிலேயே இருக்கலாம் என்று கூறி அருள்புரிந்தார். 

முற்காலத்தில் தேவலோகத்தில் ஆடல், பாடல்கள் புரியும் தேவ கன்னியர்களாகவும், பேரழகில் தலை சிறந்தவர்களாகவும் விளங்கியவர்கள் ஊர்வசி மற்றும் திலோத்தமை. இவர்களின் வாழ்க்கையானது இந்திரனின் சபையில் ஆடுவதும் பாடுவதும் அவற்றால் தேவர்களை மகிழ்விப்பதுமாக சென்று கொண்டிருந்தது. அவர்கள் இருவருக்கும் தம்மாலும் ஓர் உயர்நிலை அடைய முடியுமா என்ற ஏக்கம் படர்ந்தது. தங்களுக்கு  இனி பிறவியில்லா பெரு வாழ்வு கிட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. உடனே படைக்கும் கடவுளான பிரம்மாவை சந்தித்து தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தார்கள். 

பிரம்ம தேவனோ  பூலோகத்தில் உள்ள சுயம்வக்த சேத்திரமான தோதாத்திரி சென்று மகா விஷ்ணுவை குறித்து தவம் இயற்றுங்கள் உங்கள் விருப்பம் நிறைவேறும் என கூறுகிறார். உடனே இருவரும்  பூலோகத்தை அடைந்து தோத்திரி நாதரை குறித்து தவம் இயற்றினார்கள். அவர்களின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள் அவர்களுக்கு காட்சியளித்து அவர்களின் விருப்பப்படியே பிறவி இல்லா பெரு வாழ்வு வழங்கி அருள்பாலித்தார். இதனால் தான் இங்கு கருவறையில் மகா விஷ்ணுவுக்கு அவர்கள் இருவரும் சாமரம் வீசி கைங்கர்யம் செய்கிறார்கள் என கூறப்படுகிறது.

இங்கு பெருமாளுக்கு காப்பிடப்படும் எண்ணெய் முழுவதும் சேகரிக்கப்படப்பட்டு வருகிறது. பல வருடங்களாக பெருமாளுக்கு சாத்தப்பட்ட எண்ணெய் இந்த கிணற்றில் நிரம்பி காணப்படுகிறது. பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட எண்ணெய் இங்கு வெயிலுக்கும், மழைக்கும் திறந்த வெளியாக இருந்தாலும், எந்த விதமான பாதிப்பும் இன்றி காணப்படும் இந்த எண்ணெய் பிணி தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது. இந்த எண்ணெய் பிரசாதத்தின் மகத்துவத்தை அகத்தியர் தன் சித்த மருத்துவத்தில் குறிப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பங்குனி மற்றும் சித்திரை மாத பிரம்மோற்சவம் இந்த கோவிலின் திருவிழாக்கள் ஆகும்.

காலை 7.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம்  : தூத்துக்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம் :  நாங்குனேரி,  திருநெல்வேலி

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×