ஓங்காரேஸ்வரர் - இந்தூர் (மத்திய பிரதேசம்)
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் நர்மதை ஆற்றில் உள்ள சிவபுரி அல்லது மாண்டாத்தா எனும் தீவு ஒன்றில் ஓங்காரேஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. இத் தீவின் வடிவத்தை இந்துக் குறியீடான ஓம் என்பதுடன் இந்துக்கள் ஒப்பிட்டுக் காண்கிறார்கள்.
இறைவன் : ஓம்காரேஷ்வரர், ஓங்காரேஸ்வரர்
இறைவி : அமலஈஸ்வரி
தீர்த்தம் : கோடி தீர்த்தம், கபில தீர்த்தம், நர்மத தீர்த்தம்
ஜோதிர்லிங்கம் என்பது இந்து மதத்தில் சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்று. 12 ஜோதிர்லிங்கத் திருத்தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை சோதிலிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக இந்துக்கள், திருவாதிரை நாள் ஜோதிர்லிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. மத்திய பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா 2 கோயில்கள் அமைந்துள்ளன. எஞ்சியுள்ள 6 ஜோதிர்லிங்க கோயில்கள் தமிழ்நாடு, ஜார்கண்ட், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஆந்திர பிரதேசம், குஜராத் மாநிலங்களில் அமைந்துள்ளன. இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள காண்ட்வா மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். நர்மதை ஆற்றின் வடகரையில் நர்மதையும் காவிரி ஆறும் கலக்கும் சங்கமத்துறையில் உள்ள சிவபுரி அல்லது மாண்டாத்தா என்னும் தீவில் அமைக்கப்பட்டுள்ளது.
தல சிறப்புகள் : யமுனையில் 15 நாள் நீராடிய பயன், கங்கையில் ஏழு நாள் நீராடிய பயன் நர்மதையைப் பார்த்தாலே கிடைக்கும் என்பர். அத்தகைய நர்மதையில் "ஓம்' போன்ற வடிவில் ஒரு தீவுப்பகுதி உள்ளது. இது மந்தாதா, சிவபுரி என்று அழைக்கப்படுகிறது. இங்கேதான் ஓங்காரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மந்தாதா என்னும் மன்னன் நர்மதைக் கரையில் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான்.அவனுக்குக் காட்சிகொடுத்த சிவன், அவன் கோரிக்கையையேற்று இங்கே எழுந்தருளினாராம். அந்த மன்னன் பெயரால் இப்பகுதி மந்தாதா எனப்படுகிறது. இக்கோயிலின் குவிமாடத்திற்கு மேல் திசை காட்டும் இருப்பது தனிச்சிறப்பு. இந்த தீவில் ஜோதிர்லிங்க கோயிலான ஓங்காரேஸ்வரர் கோயிலை போலவே அமரேஸ்வரர் கோயில் என்ற மற்றொரு ஆலயமும் அமையப்பெற்றுள்ளது.
ஒரு காலத்தில் விந்தியமலையானது ஓங்கார ரூபமான யந்திரம் ஒன்றை வரைந்து அதில் மண்ணைப் பிடித்த சிவலிங்கத்தை வைத்து சிவனின் அருளை வேண்டி கடுந்தவம் மேற்கொண்டது. சிவபெருமான் அதன் தவத்தைக் கண்டு மகிழ்ந்து அதன்முன்பு ஓம்காரேஷ்வரர் மற்றும் அமரேஸ்வரர் ஆகிய இரு வடிவங்களில் தோன்றியதாக நம்பப்படுகிறது. இத்தலத்தில் பார்வதிக்கும் ஐந்து முகமுடைய பிள்ளையாருக்கும் சிற்றாலயங்கள் உள்ளன.
தல வரலாறு : பிரம்மாவும் விஷ்ணுவும் ஒரு காலத்தில் படைப்பில் யார் உயர்ந்தவர் என்பதில் வாக்குவாதம் செய்தனர். அவற்றைச் சோதிக்க, சிவன் மூன்று உலகங்களையும் முடிவில்லாத ஒளியின் தூணான ஜோதிர்லிங்கமாகத் துளைத்தார். விஷ்ணு மற்றும் பிரம்மா, பகவான் தூணில் முறையே கீழ்நோக்கி மற்றும் மேல் நோக்கி பயணிக்க முடிவு செய்கிறார்கள். ஒளியின் முடிவைக் கண்டுபிடிக்க, பிரம்மா தான் முடிவைக் கண்டுபிடித்ததாக பொய் சொன்னார். அதே நேரத்தில் விஷ்ணு தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். சிவன் ஒளியின் இரண்டாவது தூணாகத் தோன்றி, பூலோகச் சடங்குகளில் பிரம்மாவிற்கு இடமில்லை என்றும், நித்தியம் முடியும் வரை விஷ்ணு பூவுலகத்தாரால் வழிபடுவார் என்றும் பிரம்மாவை சபித்தார். சிவபெருமானிற்கு 64 வடிவங்கள் உள்ளன. பன்னிரண்டு ஜோதிர்லிங்க தலங்கள் ஒவ்வொன்றும் சிவனின் வெவ்வேறு வெளிப்பாடாக கருதப்படுகின்றன.
ஒரு காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஒரு பெரிய யுத்தம் நடந்தது. அதில் அசுரர்கள் வென்றனர். இது தேவர்களுக்கு ஒரு பெரிய பின்னடைவாக இருந்தது. எனவே தேவர்கள் சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தனர். அவர்களின் பிரார்த்தனையால் மகிழ்ச்சி அடைந்த சிவன், ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்க வடிவில் வெளிப்பட்டு தோற்கடித்தார். ஆதி சங்கரர் தன் குருவான கோவிந்த பகவத் பாதரை சந்தித்த குகையானது இப்பகுதியில் உள்ளது. இந்தக் குகையில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட லிங்கத்தைக் கொண்ட கோயில் உள்ளது.
இந்தக் கோயிலை 1820ல், மன்னன் லிங்க ராஜேந்திரன் கட்டினான். கொடுங்கோலனான அவன், தன் அரசியல் அபிலாஷைகளுக்காக, நேர்மை மிக்க ஒரு அந்தணரைக் கொன்றான். இன்னொரு கதை பிரகாரம் அவருடைய மகளை அடைய விரும்பினான். அவர் மறுத்ததால், அவரைக் கொன்றதாகவும் வரவில்லை. அந்தணரைக் கொன்றதால், அரசனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. கனவிலும் நனவிலும் வந்து மன்னனை உலுக்கி எடுத்தார் அந்தணர். சித்திரவதை தாங்காத அவன், ஆன்மிக பெரியவர்களின் யோசனைப்படி, சிவனுக்கு கோயில் கட்டினான். அங்கு காசியிலிருந்து லிங்கத்தை கொண்டு வந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்தான்.
கோயில் அமைப்பு : இக்கோயிலானது தரை மட்டத்தில் இருந்து சிலபடிகள் மேலேரிச் செல்லத்தக்கவகையில் உள்ளது. கோயிலின் முன்பு நந்தி மண்டபத்தில் பெரிய நந்தி அமைந்துள்ளது. கோயிலானது மூன்று அடுக்குகளாக அமைந்துள்ளது. முதல் தளத்தில் உள்ள குறுகலான கருவறையில் ஓங்காரேசுவரர் சிறிய லிங்கவடிவில் உள்ளார். இரண்டாவது தளத்துக்குப் படிக்கட்டுகள் வழியாகச் செல்லவேண்டும். இரண்டாவது தளத்தில் மாகாளர் லிங்கவடிவில் உள்ளார். அதன் எதிரே ஒரு மண்டபம் உள்ளது. அங்கே இராமனின் மூதாதையரான மாந்தாதா வழிப்பட்ட லிங்கமாகும் அவரின் சிலையும் உள்ளது. மூன்றாவது தளத்தில் சித்தீசுவர லிங்கம் உள்ளது. கோயில் மத்தியில் வசீகரமான குவி மாடமும், அதன் நான்கு முனைகளில் ஸ்தூபிகளும், அதைச் சுற்றி ரிஷபங்களும் உள்ளன. குவி மாடத்திற்கு மேல் முலாம் பூசிய உருண்டையும். திசைகாட்டும் கருவியும் இருக்கிறது. கோயில் வாசலில் குளம், சுற்றிலும் மதில் சுவர்கள் உள்ளன. கோயில் படிகளில் ஏறியதும் வளைந்த வாசல் உள்ளது. அதன் கீழே இரு மணிகள் முழக்கமிடுகின்றன. ஏறியவுடனேயே மூலவர் சன்னதி வந்து விடுகிறது. மற்ற கோயில்களை போல் பக்தர்கள் தரிசிப்பதற்கு என விஸ்தாரமான கூடமோ அல்லது தூண்கள் அடங்கிய மண்டபமோ இல்லை. கருவறை கதவின் சாளரங்கள் பஞ்சலோகத்தால் ஆனது. பிரகார சுவரில் புராண, இதிகாச சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன.
தேவி அகல்யாபாய் போல்கர் என்னும் சிவபக்தை, தினமும் களிமண்ணில் 18,000 சிவலிங்கங்கள் செய்து அதை நதியில் விடுவாராம். அவை மிதந்து செல்லுமாம். அத்தகைய சக்தி வாய்ந்த தலமாக இது விளங்குகிறது.நர்மதைக் கரையில் மல்லேஸ்வரர் ஆலயம் உள்ளது. அங்கிருந்து படகுகள் மூலமோ பாலத்தின் வழியாகவோ தீவுக்குச் செல்லலாம். அங்கே நர்மதையில் நீராடிவிட்டு ஆலய தரிசனம் செய்யலாம். ஆலய வாயில் சிறு குகைபோல இருக்கும். அதற்குள் சென்று ஓங்காரேஸ்வரரை வழிபடலாம். சிவலிங்கத்தின் நான்கு புறமும் அபிஷேக நீர் விழும் அமைப்புள்ளது. பார்வதிதேவி, பஞ்சமுக ஆஞ்சனேயர் விக்ரகங்களும் உள்ளன. முதல் தளத்தில் ஓங்காரேஸ்வரரை தரிசித்துவிட்டு இரண்டாவது தளத்துக்குச் சென்றால் மகாகாளேஸ்வர லிங்கத்தை தரிசிக்கலாம். மூன்றாவது தளத்தில் சித்தநாதேஸ்வரரும், நான்காவது தளத்தில் குப்தேஸ்வரரும், ஐந்தாவது தளத்தில் தவஜேஸ்வரரும் அருள்புரிகின்றனர்.இவ்வாலயத்தைச் சுற்றி மேலும் 12 லிங்கங்கள் உள்ளன. மேலும் மாதா காட் , சீதா வாடிகா , தாவடி குண்ட் , மார்க்கண்டேயர் சிற்பம்- ஆசிரமம், அன்னபூரணி ஆசிரமம், அறிவியல்கூடம், படே அனுமன், ஹேடாவதி அனுமன் கோவில்கள், ஓங்கார மடம், மாதா ஆனந்தமயி ஆசிரமம், ரிணமுக்தேஸ்வரர் ஆலயம், காயத்ரி மாதா, மகாவிஷ்ணு, வைஷ்ணவி தேவி, காசிவிஸ்வநாதர் ஆலயங்கள் உட்பட ஏராளமான புனிதத் தலங்களும் தீர்த்தங்களும் இப்பகுதியில் உள்ளன.
இங்கு குபேரன் சிவபெருமானை எண்ணித் தவமிருந்து நவநிதிகளுக்கும் தலைவனான். எனவே குபேரனுக்கும் இங்கு ஆலயம் உள்ளது. சிவனின் ஜடாமுடியிலிருந்து ஒருதுளி நீர் இங்கே -விழுந்ததாம்.அது சிற்றாறாக ஓடி நர்மதையுடன் கலக்கிறது. தீபாவளியின்போது குபேரனுக்கு இங்கு மிகச் சிறப்பாகப் பூஜைகள் நடக்கும்.பக்தர்கள் பல்வேறு புனித தீர்த்தங்களிலிருந்து நீர்கொண்டுவந்து ஓங்காரேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
காலை 5.00 மணி முதல் பகல் 9.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : இந்தோர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : இந்தோர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு