காசி (வாரணாசி) – உத்திரப்பிரதேசம்





	


	



























	




 




	








 




4:55:29 AM         Thursday, April 16, 2026

காசி (வாரணாசி) – உத்திரப்பிரதேசம்

காசி (வாரணாசி) – உத்திரப்பிரதேசம்
காசி (வாரணாசி) – உத்திரப்பிரதேசம் காசி (வாரணாசி) – உத்திரப்பிரதேசம் காசி (வாரணாசி) – உத்திரப்பிரதேசம் காசி (வாரணாசி) – உத்திரப்பிரதேசம் காசி (வாரணாசி) – உத்திரப்பிரதேசம் காசி (வாரணாசி) – உத்திரப்பிரதேசம் காசி (வாரணாசி) – உத்திரப்பிரதேசம் காசி (வாரணாசி) – உத்திரப்பிரதேசம் காசி (வாரணாசி) – உத்திரப்பிரதேசம் காசி (வாரணாசி) – உத்திரப்பிரதேசம்
Product Code: காசி (வாரணாசி) – உத்திரப்பிரதேசம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                               காசி (வாரணாசி )

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசி மாவட்டத்தில் கங்கை ஆற்றின் மீர்காட் படித்துறையில் உள்ளன. இவ்வூருக்கு வாரணாசி, பனாரஸ், ஆனந்த பவனம், அபிக்தம்,மகாமயானம் ஆகிய பெயர்களும் உள்ளன. இந்து சமயத்தினரின் ஆன்மிகத் தலைநகராகவும், அனைத்து இந்துக் கலைகளின் காப்பகமாகவும் விளங்குகிறது. முக்தி தரும் ஏழு நகரங்களில் வாரணாசியும் ஒன்று. இங்குள்ள காசி விசுவநாதர் ஆலயத்திலுள்ள லிங்கம், சைவ சமயத்தினரின் புகழ் பெற்ற பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாகும். 

இறைவர்  : காசி விசுவநாதர்

இறைவியார்  : விசாலாட்சி

தீர்த்தம் : 64 தீர்த்தங்கள் 

ஜோதிர்லிங்கம் என்பது இந்து மதத்தில் சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்று. 12 ஜோதிர்லிங்கத் திருத்தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை சோதிலிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக இந்துக்கள், திருவாதிரை நாள் ஜோதிர்லிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. மத்திய பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா 2 கோயில்கள் அமைந்துள்ளன. எஞ்சியுள்ள 6 ஜோதிர்லிங்க கோயில்கள் தமிழ்நாடு, ஜார்கண்ட், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஆந்திர பிரதேசம், குஜராத் மாநிலங்களில் அமைந்துள்ளன.

தல சிறப்புகள் : காசி விஸ்வநாதர் கோயில் இந்துக்களின் புனித நகரமாக கருதப்படும் வாரணாசியில் கங்கை நதியின் மேற்கு கரையோரத்தில் அமைந்திருக்கிறது.  3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரமாக அறியப்படும் காசியின்  பெயராலேயே இக்கோயில் காசி விஸ்வநாதர் கோயில் என்று அழைகப்படுகிறது.  சிவன் கோயில்களிலே இதுதான் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. காசி நகரத்தில் உள்ள மணிகர்ணிகா தீர்த்தம், மிகப் புனிதமானது. இங்குள்ள மயானம் மிகப் புனிதமானதாகப் போற்றப்படுகிறது. இங்கு தகனம் செய்வது மோட்சத்தைத் தரும் என்பது நம்பிக்கை. இங்கு நீராடி மணிகர்ணிகேஸ்வரரை தரிசித்த பின்தான், காசியின் பிற தெய்வங்களை வணங்கச் செல்ல வேண்டும் என்ற நியதியும் உள்ளது. காசியில் மரிப்போரின் காதுகளில் ஈசன் குனிந்து ராம நாமத்தை ஓதும் போது, அவர் காதுகளில் அணிந்துள்ள குண்டலங்கள் தரையில் படுவதால் இறைவனுக்கு இப்பெயர். மணிகர்ணிகையில் குளித்து மணிகர்ணிகேஸ்வரரைத் தியானிப்பவர்களுக்கு, மீண்டும் பிறவி இல்லை. இந்தத் தீர்த்தத்தில் ஒருமுறை மூழ்கி எழுந்தால் அது அனைத்துப் புண்ணிய நதிகளிலும் நீராடிய பலனைத் தரும். மணிகர்ணிகைக்குச் சமமான தீர்த்தம் எந்த லோகத்திலும் இல்லை’ என்கிறது கந்த புராணம்.

மூலவர் மரகதத்தால் ஆனவர் என்பது சிறப்பு. அமாவாசை நாட்களில் நாள் முழுவதும் திறந்து இருக்கும். விசாலாட்சி அம்மன் கோவில் நமது தென்னாட்டு பாணியில் அமைந்து உள்ளது. தேவியின் கண்களும், காது வளையங்களும் விழுந்ததாக கருதப்படுகிறது. முற்காலத்தில் அன்னபூரணியும் விசாலாட்சி தேவியர்கள் ஒன்றாகவே கருதப்பட்டு வந்ததது. பின்னர் இரு தேவியர்களுக்கும் தனித் தனித் கோயில்கள் அமைக்கப்பட்டதால், இருதேவியர்களும் வேறுபட்டு காட்சியளிக்கின்றனர்.

தல வரலாறு : சூரிய வம்சத்தில் தோன்றிய மன்னன் சகரன். அவன் அசுவமேத யாகம் செய்தான். இதனால் இந்திரன் தனது பதவி பறிபோய்விடும் எனப் பயந்து அசுவமேத யாகக் குதிரையைத் திருடி, இமாலயத்தில் கடும் தவமியற்றி வந்த கபிலர் என்ற மகாமுனியின் ஆசிரமத்தில் கட்டிவைத்து விட்டான். குதிரையைத் தேடிவந்த சகரனின் புதல்வர்கள் முனிவரைத் துன்புறுத்தினர். இதனால் கோபம் கொண்ட முனிவர், ராசகுமாரர்களையும் அவர்களுடன் வந்த அனைவரையும் தனது கோபப்பார்வையால் எரித்துச் சாம்பல் ஆக்கிவிட்டார். தனது பிள்ளைகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இறந்துவிட்டதனால் மனமுடைந்த சகர மன்னன் தனது பேரன் அம்சுமான் என்பவனுக்கு முடிசூட்டிவிட்டு கானகம் சென்று தவம் செய்து முத்தியடைந்தான். ஆனால் முனிவரின் கோபப்பார்வையால் இறந்த இளவரசர்கள் யாரும் முத்தி அடைய வில்லை. அம்சுமானின் அரண்மனைக்கு வந்த மகான்கள் அனைவரும் சகரனின் புத்திரர்கள் நற்கதி அடைய வேண்டுமானால் எரிந்து போன அவர்களின் சாம்பல் மீது தேவர்களின் உலகில் பாய்ந்து செல்லும் கங்கையின் நீரைத் தெளித்தால் மட்டுமே சாபவிமோசனம் பெற்று நற்கதி அடைய முடியும் என்று கருத்துத் தெரிவித்தார்கள்.

கங்கையை பூமிக்குக் கொண்டுவர அம்சுமானால் முடியவில்லை. அவனது மகன் அசமஞ்சனாலும் முடியவில்லை, ஆனால் அசமஞ்சனின் மைந்தன் பகீரதன் தனது முன்னோர்களின் ஆன்மாக்கள் முத்தியடையக் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவரவேண்டித் கடுந்தவம் செய்தான். அவனது தவத்தை ஏற்று கங்கா தேவியும் பூமிக்கு வரச் சம்மதித்தாள். சிவபெருமான் தனது திருமுடியில் கங்கையை விழச்செய்து பின் பூமியில் நதியாக ஓடச் செய்தார். இவ்வாறு ஓடிய கங்கை நதியில் பகீரதனின் முன்னோர்களின் அஸ்திகள் கரைக்கப்பட்டன, இதனால் அவர்கள் முத்தி பெற்றனர். அன்றிலிருந்து கங்கையில் அஸ்தியைக் கரைத்து முன்னோர்களின் ஆன்மாக்களை முத்தியடையச் செய்து வருகின்றனர். 

பூலோகக் கைலாசம் என்று போற்றும் தலம். காசிக்கு நிகரான தலம் மூவுலகிலும் இல்லை. ஈசன் காக்கும் மகாமயானம் இங்கே உள்ளது. காசியில் இறப்போர் உடனே மோட்சம் அடைவார்கள். காசி என்று சொன்னாலே புண்ணியம் கிடைக்கும். காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் நுழைவாயிலின் வழியே காசி விசாலாட்சியம்மன் கோயிலுக்குச் செல்லலாம். முகலாய சக்ரவர்த்தி அக்பர் தனது வருவாய்துறை அமைச்சர் தோடர்மால் மூலமாக கட்டினார். தோடர்மால் தனது குருவான நாராயண் பட் உதவியுடன் ஷகி கஜானா நிதியிலிருந்து இந்தப் பணியைச் செய்துள்ளார். ஆனால் காசி விஸ்வநாதர் கோயிலின் பழங்கால வரலாற்றிலும் கல்வெட்டுகளிலும் இதுபற்றிய தகவல்கள் ஏதுமில்லை. கி.பி 1034ம் ஆண்டு முதல் காசி விஸ்வநாதர் கோயில் பலமுறை முகலாய பேரரசர்களால் இடித்து தள்ளப் பட்டுள்ளது. இதை இந்துக்கள் திரும்பத் திரும்ப கட்டி வந்துள்ளனர். 1669-ல் அக்பரின் பேரன் அவுரங்கசீப் விஸ்வநாதர் கோயிலில் உள்ள சிருங்கர் மண்டபத்தின் சுவரை ஆதாரமாகக் கொண்டு கோயில் அருகில் ஒரு மசூதியையும் கட்டினார். இப்போதும் இந்த மசூதி இருக்கிறது. சிருங்கர் மண்டப சுவரை ஆதாரமாகக் கொண்டு மசூதி கட்டப்பட்டுள்ளதை கண்கூடாகப் பார்க்கலாம். 

கல்வி கிரகமான புதன் காசிவிஸ்வநாதரைப் பூஜித்ததன் பயனாக நவக்கிரக பதவி பெற்றார். மாணவர்கள் காசிவிஸ்வநாதரை வழிபாடு செய்வது சிறப்பாகும். சூரியனின் புத்திரர்கள் எமனும், சனி பகவானும் சிவபெருமானை நோக்கி இப்பதியில் தவம் செய்து, எமன் தென்திசைக் காவலனாகவும், எமலோகத்திற்கு அதிபதியாகவும், சனிதேவன் நவக்கிரகங்களில் கிரகமாகப் பதவி பெற்றார். பிரம்மா இங்கு யாகம், தவம் செய்து பிரம்ம பதவியைப் பெற்றார். சப்தரிஷிகள் இங்கு தவம் செய்து, நட்சத்திரப் பதவியடைந்துள்ளார்கள். இரவு பூஜை சப்த ரிஷிகள் பூஜை என மிகவும் சிறப்பாக, தினசரி நடைபெறுகின்றது. காசியில் இறந்து போவது சொர்க்கத்தைத் தரும். இங்கே சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் ராம-நாமத்தை சிவனே ஓதுகிறார் என்பது ஐதீகம். ஓம் என்ற பிரணவத்தை ஓதுவதாகவும் சொல்லப்படுவதுண்டு.

கோவில் அமைப்பு : இந்த கோயிலை முதன் முதலில் கட்டியது முகலாய சக்ரவர்த்திஅக்பர் கட்டினார். அக்பரின் பேரன் அவுரங்கசீப் விஸ்வநாதர் கோயிலில் உள்ள சிருங்கர் மண்டபத்தின் சுவரை ஆதாரமாகக் கொண்டு கோயில் அருகில் ஒரு மசூதியையும் கட்டினார். காசிக்கு செல்பவர்கள் துண்டிவிநாயகரை வணங்கினால் தான் காசி யாத்திரையின் பலன் முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. இவரது உருவ அமைப்பு சற்று மாறுபட்டு இருக்கும். முடிவடையாத சிலை போல, துண்டிவிநாயகர் காட்சி தருகிறார். இங்கு வந்து கருமங்களை தொலைத்து விட்டு என்னை வணங்காமல் சென்றால் உங்கள் யாத்திரையின் பலனும் என்னைப் போல் அரைகுறையாகத் தான் இருக்கும் என்று சொல்லாமல் சொல்வதைப் போல இந்த விநாயகரின் வடிவமைப்பு அமைந்துள்ளது. எனவே காசிக்கு செல்பவர்கள் கண்டிப்பாக இந்த விநாயகரையும் வழிபடவேண்டும். மும்மூர்த்திகளும், தேவர்களும், விசுவநாதரைப் பூஜித்த தலம் காசி ஆகும்.

முதலில் ராமேஸ்வரம் சென்று அக்னி தீர்த்த கரையில் மண் எடுத்துக் கொண்டு அலஹாபாத் சென்று சங்கல்பம் செய்துக் கொண்டு ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு வந்த மண்ணில் சிவலிங்கம் பிடித்து பூஜை செய்து அதை திரிவேணி சங்கமத்தில் விட்டு அங்கே கங்கை நீரை எடுத்துக் கொண்டு காசி சென்று விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்யவேண்டும்.  மீதம் இருக்கும் நீரை எடுத்துக்கொண்டு அதை மறுமுறை ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். ராமேஸ்வரம்ஸ்ரீ ராமநாத சுவாமிக்கு கங்கை நீர் மட்டும் தான் அபிஷேகம் செய்யப்படும். காசி நகருக்கு திரிவேணி சங்கம நீர் வடக்கு நோக்கி பாய்ந்து நம் பாவங்களைப் போக்குகிறது. காசிக்குச் சென்று கங்கையில் மூழ்கி ஸ்ரீவிஸ்வநாதர், ஸ்ரீவிசாலாக்ஷி, அன்னப்பூரணி, மற்றும் பைரவரை வழிபடலாம்.

தீபாவளி நாட்களில் சென்றால் தங்க அன்னப்பூரணி, தங்க விசாலாக்ஷி ஸ்வர்ண லிங்கேஸ்வரர், அன்னக்கூடு  எல்லா விதமான உணவு பொருட்களும் கொண்டு அலங்கரிக்கப் பட்டு வைத்திருப்பார்கள். காசிவிசுவநாதர் கோயில் வடநாட்டுப்பாணியில் உயரமாகவும், கொடியுடனும் காணப்படுகிறது. மூலவர் விசுவநாத லிங்கம் சிறியதாக பூமி மட்டத்திலிருந்து ஒரு பள்ளத்தில் உள்ளார். பக்தர்கள் மண்டிபோட்டுக் குனிந்து விசுவநாதரைத் தொட்டு வழிபடுகின்றனர். விசுவநாதருக்குத் தங்க விமானம் சுவர்ண பந்தனம், மரகத மூர்த்தி, அவரவர் விருப்பப்படி தேன், பால், தயிர், தண்ணீர், வில்வம், விபூதி கொண்டு அபிஷேகம் செய்து தொட்டுக் கும்பிட்டு வழிபடலாம். லிங்கத்தின் தலையில் தங்கமுலாம் பூசப்பட்ட தாமிரத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. லிங்கத்தைச் சுற்றிலும் வெள்ளித் தகடுக்கட்டு அமைத்துள்ளார்கள். லிங்கத்தின் மேல் ஒரு பாத்திரம் கட்டித் தொங்க விட்டுள்ளார்கள். அதிலிருந்து கங்காதீர்த்தம் சொட்டுச் சொட்டாக லிங்கத்தின் மீது விழுந்து அபிஷேகம் செய்கிறது. மூலவர் அவிமுகேஸ்வரர் என்றும் விஸ்ஹேஸ்வர் என்றும் அழைக்கப்பட்டார். ராமேஸ்வர அக்னி கோடி திர்த்தங்கள், பால், வில்வம், எருக்கம் பூமாலை, ஊமத்தங்காய் போன்றவைகள் சமர்பணம் செய்யப்படுகிறது. விஸ்வநாதர் பக்கத்தில், ஆதி விஸ்வநாதர் ஒரு கிணரில் இருப்பதையும் உணரலாம்.

கோயிலின் பின்பக்கம் ஒரு தனி நந்தி, ஆதி நந்தி சுவற்றைப் பார்த்துள்ளார். ஞானவாவி என்ற தீர்த்தக் கிணறு உள்ளது. இப்போதுள்ள காசி விஸ்வநாதர் கோயில் 1777ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தூர் ராணி அகல்யாபாய் இக்கோயிலைக் கட்டினார். இந்த கோயில் மிகவும் சிறிய கோயில் தான். குறுகலான பாதையில் சென்று கோயிலை அடைய வேண்டும். பூஜை பொருட்களைக் கொண்டு பக்தர்களே ஆராதனைகள் அனைத்தையும் செய்யலாம்.  அன்னபூரணி, விசாலாட்சி கோயில்கள் தனியே சிறிது தொலைவில் உள்ளன. விசாலாட்சி கோயில் தென்னாட்டுப் பாணியில் உள்ளது. இங்கே நவக்கிரகங்களும் உள்ளன. அன்னபூரணி அம்பாள் கோயிலில் தீபாவளி அன்று அன்னக்கொடி உற்சவம் நடக்கும். அப்போது, அம்பாள் லட்டுத்தேரில் பவனி வருவாள்.

விசாலாஷி கோவில் விஸ்வநாதர் சன்னதிக்கு சிறிது தொலைவில் ஒரு குறுகிய சந்தில் உள்ளது, மிகவும் அழகிய கோவில். காசியில் அம்மன் விசாலாஷியாகவும், அன்னபூர்ணியாகவும்எழுந்தருளியுள்ளாள். காசி விசாலாட்சி அம்பாள் சக்தி பீடங்களில்பெரும் பெருமை கொண்ட பீடம். விசாலாஷி கோவில் தென்னாட்டு பாணியில் அமைந்துள்ளது. சுற்றிலும் சிவ லிங்கங்கள். மூலவர் சந்நதிலேயே அம்மன் பின்புறமாக ஆதி விசாலாஷி அம்மனையும் தரிசிக்கலாம்.  அம்மனுக்கு விளக்கு பூஜை மகாமேரு பூஜை, பிரகாரத்தில் சிவலிங்க பூஜையும் மிகவும் விசேஷம். வியாச காசியில், வியாசர் வழிபட்ட சிவலிங்கத்தை வழிப்பட்டால் தான், காசிக்கு வந்த முழுப் பலனையும் அடையலாம். 

காசி, தற்போது வாரணாசி என்றே அழைக்கப்படுகிறது. வாரணா, ஹசி என்ற நதிகளுக்கு இடையில் இவ்வூர் அமைந்துள்ளதால் வாரணாசி என்ற பெயர் வந்தது. இவ்வூரை பனாரஸ் என்றும் சொல்வார்கள். பனாரன் என்ற அசுரன் இத்தலத்தைப் புதுப்பித்து ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இத்தலத்திற்கு பனாரஸ் என்ற பெயர் ஏற்பட்டது.  இங்கு விஸ்வநாதர் மகிழ்ச்சி பெருக்குடன் எழுந்தருளி உள்ளார். எனவே, இவ்வூரை ஆனந்த பவனம் என்கின்றனர். வெள்ளித்தகடு பதித்த தொட்டியில், தங்க ஆவுடையார் மீது இவர் காட்சியளிக்கிறார். விசாலாட்சி அம்மைக்கு தனி சன்னதி உள்ளது. கங்கை நதியின் மேற்குக்கரையில்காசி அமைந்துள்ளது. காசியிலிருந்து வடக்காக 30கி.மீ. தொலைவு வரை கங்கைநதி ஓடுகிறது. இங்கே வடமுகமாக கங்கை ஓடுவதால் உத்தரவாகினி என்று அழைக்கின்றனர். சிவபெருமான் சுடலையை விரும்பி வாழ்பவன் ஆனதால் இத்தலத்திற்கு மகாமயானம் என்ற பெயர் உண்டாகியது. இறப்பவர்களுக்குச் சிவபெருமான் ராம் என்று உபதேசம் செய்து மோட்சம் வழங்குவதால் மகாமயானம் எனப்பட்டது. கங்கை நதியின் ஓரத்தில் 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. அஸ்சங்கம், தசாஸ்வமேதம், வரணசங்கம், பஞ்சகங்கா, மணிகர்ணிகா ஆகிய படித்துறைகளில் ஒரே நாளில் நீராடி மகிழ்வது மிகவும் புனிதமானதாகும்.இதற்கு பஞ்சதீர்த்த யாத்திரை என்று பெயராகும்.

அஸ் நதி கங்கையில் கலக்கும் பகுதியில் அஸ்சங்கம கட்டம் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் காசி தலம் ஆரம்பமாகிறது. இக்கட்டத்தை காசியின் நுழைவுவாயில் என்று சொல்வர். இக்கரையில் அமைந்துள்ள சிவலிங்கம் அஸ்சங்கமேஸ்வரர் எனப்படுகிறார். முதலில் அஸ்சங்கமத்தில் நீராடி சங்கமேஸ்வரரை வணங்க வேண்டும். துளசி ராமாயணத்தை எழுதிய துளசிதாசர் இந்த கட்டத்தில் இறங்கி கங்கையில் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். இங்கு பிரம்மன் பத்து அசுவமேத யாகங்களை செய்ததால் தசாஸ்வமேத கட்டம் என பெயர் பெற்றது. இந்த தீர்த்தக்கரையில் சூலடங்கேஸ்வரர் என்ற சிவலிங்கம் உள்ளது. வரணசங்கத்திலிருந்து யமுனை, சரஸ்வதி, சிரணா, தூதபாய் ஆகிய நதிகளும் கங்கையில் கலக்கும் பஞ்சகங்கா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி விட்டு கரையிலுள்ள பிந்துமாதவர் மற்றும் கங்கேஸ்வரரை வணங்க வேண்டும். பஞ்ச தீர்த்தக்கட்டங்களில் ஐந்தாவதாக அமைந்துள்ள மணிகர்ணிகா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி பித்ருக்களுக்காக தர்ப்பணம்செய்ய வேண்டும். இந்த கரையிலுள்ள மணிகர்ணிகேஸ்வரரையும், அம்பாளையும் வழிபட வேண்டும். 

ராமர், ராவணவதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டுவரும்படி தெரிவித்தார். அனுமன் காசியை அடைந்தார். எங்கும் லிங்கங்கள். எது சுயம்புலிங்கம் என்று தெரியாமல் விழித்தார். அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான். பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புக்களினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமன் அந்தச் சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துப் புறப்பட்டார். காசியின் காவலாகிய காலபைரவர் அது கண்டு கோபித்தார். என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம் என்று கூறித் தடுத்தார். பைரவருக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது.

அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி உலக நன்மைக்காக இந்த சிவலிங்கம் தென்னாடு போகிறது அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். பைரவர் சாந்தியடைந்து, சிவலிங்கத்தைக் கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனாலும் தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்குத் துணை புரிந்த கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும், பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக் கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார். அந்தச் சாபத்தின்படி இன்னும் காசி நகர எல்லைக்குள் கருடன் பறப்பதில்லை பல்லிகள் ஒலிப்பதில்லை. 

அருகில் உள்ள விமான நிலையம்:  வாரணாசி 

அருகிலுள்ள ரயில் நிலையம் :  வாரணாசி 

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×