நாகநாதம் (அவுண்டா) - மஹாராஷ்டிரா





	


	



























	




 




	








 




3:17:55 AM         Saturday, May 16, 2026

நாகநாதம் (அவுண்டா) - மஹாராஷ்டிரா

நாகநாதம் (அவுண்டா) - மஹாராஷ்டிரா
நாகநாதம் (அவுண்டா) - மஹாராஷ்டிரா நாகநாதம் (அவுண்டா) - மஹாராஷ்டிரா நாகநாதம் (அவுண்டா) - மஹாராஷ்டிரா நாகநாதம் (அவுண்டா) - மஹாராஷ்டிரா நாகநாதம் (அவுண்டா) - மஹாராஷ்டிரா நாகநாதம் (அவுண்டா) - மஹாராஷ்டிரா நாகநாதம் (அவுண்டா) - மஹாராஷ்டிரா நாகநாதம் (அவுண்டா) - மஹாராஷ்டிரா
Product Code: நாகநாதம் (அவுண்டா) - மஹாராஷ்டிரா
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                   நாகேஸ்வரர் கோயில், மகாராஷ்டிரா

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் ஓளண்டா நகரத்தில் உள்ள துவாரகையின் அருகே உள்ளது நாகநாதேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் ஒரு காட்டுக் கோவிலாகும். தாருகாவனம் என்று சொல்லப்படும் காட்டின் பகுதியில் அமைந்திருக்கிறது. அல்மோரா மாவட்டத்தில் ஜாகேஷ்வர் எனுமிடத்தில்  கற்கோயில்களின் மத்தியில் நாகேஸ்வரர் கோயில் குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகைக்கு அருகில் 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 

இறைவன் :   நாகேஸ்வரர்

இறைவி :   நாகேஸ்வரி

தீர்த்தம் :  பீம தீர்த்தம், கோடி தீர்த்தம், நாக தீர்த்தம்

ஜோதிர்லிங்கம் என்பது இந்து மதத்தில் சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்று. 12 ஜோதிர்லிங்கத் திருத்தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை சோதிலிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக இந்துக்கள், திருவாதிரை நாள் ஜோதிர்லிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. மத்திய பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா 2 கோயில்கள் அமைந்துள்ளன. எஞ்சியுள்ள 6 ஜோதிர்லிங்க கோயில்கள் தமிழ்நாடு, ஜார்கண்ட், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஆந்திர பிரதேசம், குஜராத் மாநிலங்களில் அமைந்துள்ளன.

தல சிறப்புகள் : வாமதேவர் வழிபாடு செய்ய வேண்டும் என்பதற்காக இத்தல இறைவன் திரும்பிய திருக்கோலத்தில் தெற்கு நோக்கிய படி லிங்க உருவில் காட்சியளிக்கிறார். நாகேஸ்வரர் கோவில் ஜோதிர்லிங்களில் முதலாவதாகத் தோன்றியது.  பிரம்மா மற்றும் விஷ்ணு இடையே யார் பெரியவர் என்ற விவாதம் எழுந்த போது, சிவன் ஆரம்பம் முடிவு இல்லாத ஒளிப்பிழம்பாக மாறினார். அவ்வொளி 64 மற்றும் 12 என்று மாறியதாகவும், அவ்வாறே லிங்கங்களாக மாறின என்றும் புராணம் கூறுகிறது. 108 லிங்களில் ஒன்று என்ரும் கூறப்படுகிறது. இது உண்மையில் 12 துவாதச லிங்களில் அல்மோராவில் உள்ள ஜேகேஸ்வர கோவில்தான், நாகேஸ்வர ஜோதி லிங்கம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
 
தாருகா அசுரன் இறக்கும் முன்பாக, இந்த இடம் தன்னுடைய பெயரில் வழங்கப்பட வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டிக்கொண்டான். அதன்படி நாகர்களின் அரசனாக விளங்கிய அவனது பெயராலேயே ‘நாகநாத்’ என்று இந்த இடம் வழங்கப்படுகிறது. ஆலயமும் நாகநாதர் கோவில் என்று பெயர் பெற்றுள்ளது. இது மிகவும் பழமையான ஆலயங்களில் ஒன்றாகும். பன்னிரு ஜோதிர் லிங்கத் தலங்களில் இதுவே மிக தொன்மையானது. 
 
தல வரலாறு : சுப்பிரியா என்னும் சிவ பக்தையை, தாருகா என்ற அசுரன் பிடித்துச் சென்றான். அவளை, தாருகாவனம் என்ற இடத்தில் மேலும் பலருடன் சேர்த்து அடைத்து வைத்திருந்தான். பாம்புகளின் நகரமாக விளங்கிய அந்த இடத்திற்கு, தாருகா அசுரன் தான் மன்னனாக இருந்தான். சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுப்பிரியா, சிவபெருமானை நினைத்து அவரது மந்திரங்களை உச்சரித்தாள். மேலும் அங்கிருந்தவர்களையும் சிவனின் மந்திரங்களை உச்சரித்து வணங்கும்படி செய்தாள். இதையடுத்து அங்கு தோன்றிய சிவபெருமான், தாருகா அசுரனைக் கொன்று, அங்கிருந்த கைதிகள் அனைவரையும் விடுவித்தார். அவரே இந்த ஆலயத்தில் ஜோதிர் லிங்கமாக இருப்பதாக பக்தர்களின் நம்பிக்கை.
 
தாருகாவனம் என்று அழைக்கப்பட்ட இந்த இடத்தில் பல ரிஷிகள் தங்களின் மனைவியுடன் வாழ்ந்து வந்தனர். அந்த ரிஷிகள் அனைவரும், இறைவனைப் பற்றிய சிந்தனை இல்லாமல், இந்த உலகமே தங்களால் தான் இயங்குகிறது என்று நினைத்துக் கொண்டனர். அவர்களின் கர்வத்தை அடக்க நினைத்த சிவ பெருமான், பிட்சாடன மூர்த்தியாக, தாருகாவனத்திற்கு வந்தார். அவரது அழகில் மயங்கிய ரிஷிகளின் மனைவிகள், தங்களின் சுய நினைவை இழந்து, சிவபெருமானின் பின்னால் சென்றனர். இதைக் கண்ட ரிஷிகள் கோபம் கொண்டு, சிவபெருமானை கொல்ல முயன்றனர். உடனே சிவபெருமான் அங்கிருந்த பாம்பு புற்றுக்குள் சென்று மறைந்தார். ரிஷிகள் புற்றுக்குள் பார்த்தபோது, அங்கு ஜோதிர் லிங்கமாக இறைவன் காட்சி கொடுத்தார். தங்களது தவறை உணர்ந்த ரிஷிகள், இறைவனிடம் மன்னிப்பு கேட்டனர். லிங்கமாக இருந்த சிவபெருமானுக்கு, நாகப்பாம்பு ஒன்று குடைப்பிடித்தது. இதனால் அவருக்கு நாகநாதர் என்று பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
 
கோ‌யி‌ல் அமைப்பு : முகமதியர்களின் தாக்குதல்களினால், இடிந்த நிலையில் இருந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு, புனர்நிர்மானம் செய்யப்பட்டுக் கட்டப்பட்டது மற்றும் சமீப காலங்களில் இது பிரசித்தி பெற்று வருகின்றது.  இக்கோவில் வாஸ்து சாஸ்திரத்தின் படி அமைக்கப்பட்டு, கட்டப்பட்டது. ரங்க மண்டபம், நந்தி மற்றும் கர்ப்பகிருகம் மூன்று நிலைகளில் அமைக்கப்பட்டிருக்கின்றன. சுபாஷ் போட்டே என்ற கட்டிட வல்லுனரால் வடிவமைத்துக் கட்டப்பட்ட கோவில் ஆகும்.  இவ்வளாகத்தில், ஒரு சனீஸ்வரர் கோவிலும் உள்ளது. நான்கு பக்கமும் உயர்ந்த மதில் சுவர்கள் கொண்டு, விசாலமாக அமைந்திருக்கிறது. நாமதேவர் என்னும் சிவபக்தர், ஊர் மக்களால் விரட்டப்பட்டு ஊரின் தென் திசையில் சென்று இறைவனைக் குறித்துப் பாடினார். நாமதேவரின் பாடல் களைக் கேட்கும் பொருட்டு மூலவர் தென்திசை நோக்கித் திரும்பினார் என்று சொல்லப்படுகிறது. எனவே மூலவர் கருவறை தென்திசை நோக்கியும், கோபுரம் கிழக்கு திசை நோக்கியும் உள்ளன. சிறந்த சிற்ப வேலைகளுடன் கூடிய நீண்ட, கூம்பு வடிவ கோபுரம் இந்த கோவிலில் காணப்படுகிறது. மேலும் ஆலயத்திற்கு வெளியே மிகவும் உயரமான, யோக நிலையில் இருக்கும் சிவனின் சிலை ஒன்றும் உள்ளது. நாகேஸ்வரர் கோயிலில் ஜாகேஷ்வர் மழைக்கால திருவிழா, மஹாசிவராத்திரி மேளா ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. அப்போது இங்கு அதிகமான அளவில் பக்தர்கள் கூடுவார்கள்.

காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும்  திறந்து இருக்கும். 

அருகிலுள்ள விமான நிலையம் :  துவாரகா, மும்பை 

அருகிலுள்ள ரயில் நிலையம் :  துவாரகா  

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 
 
Mail this page Printable view
×
×
×
×
×
×
×