சேர்ந்தபூமங்கலம்





	


	



























	




 




	








 




7:08:12 PM         Saturday, May 16, 2026

சேர்ந்தபூமங்கலம்

சேர்ந்தபூமங்கலம்
சேர்ந்தபூமங்கலம் சேர்ந்தபூமங்கலம் சேர்ந்தபூமங்கலம் சேர்ந்தபூமங்கலம் சேர்ந்தபூமங்கலம் சேர்ந்தபூமங்கலம் சேர்ந்தபூமங்கலம் சேர்ந்தபூமங்கலம் சேர்ந்தபூமங்கலம் சேர்ந்தபூமங்கலம்
Product Code: சேர்ந்தபூமங்கலம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                       கைலாசநாதர் திருக்கோவில், சேர்ந்த பூமங்கலம்  (சுக்கிரன்)

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரிலிருந்து வடக்கில் சுமார் 15கி.மீ தொலைவிலும், தூத்துக்குடியிலிருந்து தெற்கே 20 கி.மீ தொலைவிலும் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் உள்ளது. திருச்செந்தூரில் இருந்து புன்னைக்காயல் செல்லும் சாலையில் ஆத்தூரில் இருந்து 3 கி.மீ.தொலைவில்அமைந்துள்ளது.

மூலவர்: ஸ்ரீகைலாசநாதர்

அம்பாள்: ஸ்ரீசௌந்தர்யா நாயகி

நட்சத்திரம்: பரணி, பூராடம், பூரம்

தலவிருட்சம் : வில்வம்

தீர்த்தம் : தாமிரபுஷ்கரணி

சிறப்புகள் : இத்தலத்திற்கு அருகில் தான் தாமிரபரணியாறு கடலில் கலக்கும் சங்குமுகம் என்ற இடம் உள்ளது. தாமிரபரணியாறு மூன்று வாய்க்கால்களாகப் பிரிந்து வந்து இவ்விடத்தில் ஒரே இடத்தில் சங்கமம் ஆகிறது. இவ்விடத்தில் அகஸ்தியர் போன்ற முனிவர்களும் , தவசிகளும் நீராடி சிவனை வழிபட்டுள்ளனர். அகத்திய முனிவர் தாமிரபரணியாற்றில் விட்ட 9 மலர்களில் கடைசி மலர் வந்து நின்ற இடமே சேர்ந்த திருமங்கலம் ஆகும். திருத்தலச் சிறப்புகள்: நவகயிலாயத்தில் ஒன்பதாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் சுக்கிர அம்சமாக விளங்குகிறார்.   அகத்தியர் தனது சீடர் உரோமச முனிவருக்காகத் தாமிரபரணி ஆற்றில் விட்ட ஒன்பது மலர்களில் ஒன்பதாவது மலர் சேர்ந்த இடம். இதனால் இவ்வூருக்குச் சேர்ந்த பூமங்கலம் என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது தாமிரபரணி ஆறு கடலோடு சங்கமிக்கும் இடம் என்பதால் சேர்ந்தமங்கலம் என்ற பெயர் வந்ததாகவும் ஒரு சிலர் கூறுகிறார்கள்.

அடிக்கடி தாமிரபரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் இப்பகுதி மிகவும் பாதிக்கப்பட்டாலும் இத்திருக்கோவில் எவ்வித பாதிப்புமின்றி கம்பிரமாக நிற்கிறது.   சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியும் , அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியும் உள்ளது. கோவிலில் கொடிமரமும் , கருவறைகளின் மீது அழகிய விமானங்களும் அமைந்துள்ளன. இக்கோவில் கல்வெட்டில் குடநாட்டு ஆத்தூர் சேர்ந்த திருமங்கலம் என்று உள்ளது.  சுவாமி அம்பாள் திருச்சுற்றில் , சூரியன், சந்திரன், தட்சிணாமூர்த்தி , கன்னி விநாயகர் , வள்ளி தெய்வானையுடன் முருகன் , நவக்கிரகங்கள் , சனீஸ்வரர் மற்றும் பைரவர் ஆகியோர் உள்ளனர். சுக்கிர பகவானின் முழுமையான அருள்பெற்ற தலமாகும். இக்கோவிலுக்கு அடிக்கடி சென்று இறைவனை தரிசித்துவந்தால் , சுக்கிர திசை யோகம் வரும் என்பர். வாழ்வில் எல்லாச் சிறப்புகளையும் பெற்று, பெரும் புகழும், செல்வமும் பெற்று வாழலாம்.

நவகைலாயக் அனைத்துக் கோவில்கலும் தாமிரபரணியாற்றுக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளன. எல்லாக் கோவில்களிலும் சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியே அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதி பெரும்பாலானவற்றில் தெற்கு நோக்கியே அமைந்துள்ளது. அனைத்துக் கோவில்களிலும் கன்னி விநாயகர் வீற்றிருக்கிறார். உரோமச முனிவர் பிரதிஷ்டை செய்த சிவனைச் சுற்றி பாண்டிய மன்னர்கள் கோயில் கட்டி பராமரித்துள்ளனர். எல்லாக் கோவில்களிலும் பாண்டியர் காலத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. உரோமச முனிவரின் சிற்பங்களும் நவகைலாயம் பற்றிய குறிப்புகளும் உள்ளன. அனைத்துக் கோவில்களின் சுவாமி பெயர் கைலாசநாதர் என்றும் அம்பாள் பெயர் சிவகாமி என்றும் உள்ளது.

தாமிரபரணியாறு பொதிகை மலையில் தோன்றி சமவெளியை அடையும் பாபநாசமே முதல் தலமாகவும் , இந்த ஆறு, கடலில் சங்கமிக்கும் இடத்திலுள்ள சேர்ந்த பூமங்கலமே இறுதித்தலமாகவும் அமைந்துள்ளது சிறப்பாகும். இத்தலங்களிலுள்ள சிவன் , அந்தந்த தலத்து கிரகங்களின் தலைவராக இருந்து , அவர்கள் நற்பலன்களேயே அருள்பாலிக்கிறார். 

சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோயில் என்பது தூத்துக்குடி மாவட்டம் சேர்ந்தமங்கலத்தில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலம் நவக்கைலாயங்களுள் ஒன்றாகவும், நவக்கிரகங்களில்சுக்ரனுக்கு உரிய தலமாகவும் இருக்கிறது. 

கருவறை விமானத்தில் குபேரன் இரு மனைவியரோடு யானை மீது இருக்கிறார். கன்னி விநாயகர், சந்திரன், சூரியர், மீனாட்சி, சொக்கநாதர், சனீசுவரர், பைரவர் சந்நிதிகளும், முருப்பெருமான் சன்னதியில் வலப்புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் இருக்கிறார்.
இக்கோயில் 1000 வருடங்கள் தொன்மையானது. இதனை குலசேகரப் பாண்டியன் அல்லது முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோர் கட்டியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். 
தலவரலாறு : அகத்திய முனிவரின் சீடர்களில் முக்கியமானவரான உரோமச முனிவர் தன் குருவான அகத்தியரின் உதவியுடன் சிவபெருமானை நேரில் தரிசித்து, அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்று விரும்பி தனது குருவிடம் அதற்கான வழிமுறைகளைக் கேட்டதாகவும். அதற்கு அகத்திய முனிவரும் தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை மிதக்க விட்டு அவை ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு மூலம் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைக்கும் என்றும் அதன் மூலம் முக்தி அடையலாம் என்று சொல்லி 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டதாகவும் அந்த மலர்களை தொடர்ந்து சென்ற உரோமச முனிவரும் தனது குரு கூறியபடி வழிபட்டு முக்தி அடைந்தார் என்றும் அப்படி அம்மலர்கள் கரை ஒதுங்கிய இடங்கள் தான் இப்போது நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுவதாகவும் இத்தலங்களின் வரலாறு கூறுகின்றது. 

தனி சிறப்பு : இத்திருக்கோயிலை வழிபடுவது தஞ்சாவூர் அருகில் உள்ள கஞ்சனூர் திருக்கோயிலை வழிபடுவதற்கு சமமாகும் என கூறப்படுகிறது.

கோயிலுக்கு கோபுரம் கிடையாது. கொடிமரம் உள்ளது. இக்கோயில் கல்வெட்டில் குடநாட்டு ஆத்தூர் சேர்ந்தமங்கலம் என்றும் அவனிய சதுர்வேதிமங்கலம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது இக்கோயில் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் சிலர். சேந்தன் என்று குறிப்பிடப்பட்ட பாண்டியன் குலசேகரன் காலத்தில் கட்டப்பட்டது என்கிறார்கள் சிலர். நவகைலாயங்களுக்கும் சென்று வழிபட்டால் நவக்கிரக தலங்களுக்கும் சென்று வழிபட்ட பலன் உண்டு.

தினந்தோறும் காலை 7.30 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகில் உள்ள ரயில் நிலையம் : திருச்செந்தூர், தூத்துக்குடி

அருகில் உள்ள விமான நிலையம் : தூத்துக்குடி

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×