பூந்தமல்லி





	


	



























	




 




	








 




6:36:37 AM         Saturday, May 16, 2026

பூந்தமல்லி

பூந்தமல்லி
பூந்தமல்லி பூந்தமல்லி பூந்தமல்லி பூந்தமல்லி
Product Code: பூந்தமல்லி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
                                                               பூந்தமல்லி, வரதராஜர் பெருமாள் ( திருக்கச்சி நம்பிகள் )
 
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான  சென்னை அருகில் பூந்தமல்லி பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது. அருகில் வைத்தியநாத திருக்கோயில் (செவ்வாய் தலம் ) உள்ளது .
 
சுவாமி : வரதராஜர் பெருமாள்
தாயார் :  புஷ்பவல்லி
 

தலச் சிறப்புகள் : இக்கோயிலுக்குள் மூன்று பெருமாள்களான ஸ்ரீ ரங்கம் ரெங்கநாதர் , காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் மற்றும் திருப்பதி ஸ்ரீனிவாசர் ஆகியோரை ஒரே இடத்தில தனி தனி சன்னதியில் தரிசிக்கலாம்.  ஒவ்வொரு வருடத்திலும் மார்ச் மாதம் 21 தேதியிலிருந்து 25 வரை சூரிய ஒளி மூலவர் வரதராஜர் மேல் படும். திருக்கச்சி நம்பிகள் பிறந்த நட்சத்திரம் ஆன மாசி மிருகசீஷம் நட்சத்திரம் அன்று அதாவது பிப்ரவரி மாதம் மிருகசீஷம் நட்சத்திரம் ஒட்டி 10 நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. இக்கோயிலின் தாயார் மஹாலக்ஷ்மி பூவில் அவதரித்தார் ஆதலால் பூவில் இருந்தவள் என்பதால் பூவிருந்தவல்லி என்ற பெயர் பெற்றது.

பூந்தமல்லியில் திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ரங்கநாதர், சீனிவாசர், வரதராஜபெருமாள் ஆகிய 3 பெருமாள்களுக்கும் தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் 3 கருட சேவைகள் நடைபெறுவது மிகவும் சிறப்பாகும்.
 
கோவில் அமைப்பு : 14 ஆம் நூற்றாண்டு மற்றும் 17 நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது. விஜய நகர காலத்தை சேர்ந்தது , மற்றும் இக்கோயிலின் ஊஞ்சல் மண்டபம் அச்சுதப்ப நாயக்கரால் நிர்மாணிக்கப்பட்டது . திருக்கச்சி நம்பிகள் பிறந்த தலம் இது , மற்றும் அவர் தினமும் காஞ்சிபுரம் வரதராஜரை வணங்கும் பொருட்டு இக்கோயிலை நிர்மாணித்தார்.
 
தல வரலாறு :  இந்தத்தலத்தில் கஜேந்திர தாசர் 1009 ம் ஆண்டு பிறந்தார்.  செல்வம் மிகுந்த குடும்பத்தில் நான்காவதாக பிறந்தார் , இவருக்கு கிடைத்த சொத்தில் நாட்டம் இல்லாமல் பெருமாளுக்கு கைங்கரியம் செய்வதில் ஆர்வம் ஏற்பட்டது ,ஒருநாள் காஞ்சி வரதர் அவர் கனவில் தோன்றி “ நீ நந்தவனம் அமைத்து அதில் பூக்கும் பூவை கோர்த்து நாளும் எனக்கு அணிவிப்பாயாக ” என்று கூறி மறைந்தார். அதென்படி நம்பிகள் தனக்கு சொந்தமான பூந்தமல்லி இடத்தில் நந்தவனம் அமைத்து காஞ்சி வரை நடந்து சென்று பூமாலை சாற்றினார் . பின்னர் சிறிது காலம் கழித்து அங்கேயே தங்கியிருந்து ஆலவட்டம் என்னும் விசிறி சேவையை செய்து வந்தார் ,இவ்வாறு செய்தவாறே இறைவனிடம் நேரடியாக பேச தொடங்கிவிட்டார், இதைக்கண்ட ஒரு பக்தர் நம்பிகளின் கால் தூசுவை வணங்கும் சிஸ்யராக மாறினார் . அவர் ஒரு நாள் நம்பிகளிடம் தனக்கு மோட்சம் கிட்டுமா என்று கேட்டார் அதர்க்கு அவர் உனக்கு மோட்சம் கிட்டும் என்று கூறினார் .
 
திருக்கச்சி அவர்கள் இறைவனிடம் தனக்கு மோட்சம் கிட்டுமா என்று கேட்டார் அதர்க்கு இறைவன் அது எப்படி கிட்டும் குருவுக்கு தூய மனதுடன் தொண்டு செய்தால் தான் கிட்டும் என்று கூறினார் , திருக்கச்சி அவர்கள் தனக்கு குரு வேண்டும் என்று எண்ணி திருச்சி ரெங்கநாதர் கோயிலுக்கு சென்று திருக்கோஷ்டியூர் நம்பியிடம் மாடு மேய்ப்பவனாக சேர்ந்துவிட்டார். ரெங்கநாதருக்கு ஆலவட்டம் செய்துவந்தார். ரெங்கநாதர் அவரிடம் எனக்கு காவேரி ஆற்றின் காற்று நன்றாக வருவதால் எனக்கு வீச வேண்டாம் நீ போய் திருப்பதி ஸ்ரீனிவாசனுக்கு போய் வீசு என்றார் , அவர் அங்கிருந்து கிளம்பி திருப்பதி சென்று அவருக்கு ஆலவட்டம் செய்து வந்தார். ஸ்ரீநிவாஸர் அவரிடம் எனக்கு இந்த மலையிலிருந்து நன்றாக காற்று வருவதால் நீ காஞ்சிக்கு சென்று வரதராஜருக்கு ஆலவட்டம் வீசு என்று கூறினார் . அவர் காஞ்சிக்கு வந்து அவருக்கு புஷ்பகைங்கரியம் செய்து வந்தார், அவருடைய வைராக்கியத்தை கண்ட வரதர் அவருக்கு காட்சி கொடுத்து அவரை தன்னுடன் ஐக்கியமாக்கிக்கொண்டார்.  வயதான காலத்தில் காஞ்சிபுரம் நடந்து சென்று கைங்கரியம் செய்யமுடியாமல் போகவே இக்கோயிலை அவர் நிர்மாணித்தார் .
 
காலை 6.30 மணி முதல் மதியம் 11.30 மணி வரை, மாலை  4.30 மணி முதல்  8.30 மணி வரை நடை திறந்து இருக்கும்.
 
அருகிலுள்ள விமானதளம் : சென்னை 
 
அருகிலுள்ள ரயில் நிலையம் : சென்ட்ரல், தாம்பரம் 
 
பேருந்து வசதி : உண்டு
 
தங்கும் வசதி : உண்டு
 
உணவு வசதி : உண்டு
Mail this page Printable view
×
×
×
×
×
×
×