கோயம்பேடு, வைகுண்ட வாசப்பெருமாள்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் தாண்டி பாலத்தின் இடது புறத்தில் குறுங்காலீஸ்வரர் கோவிலின் அருகிலேயே இக்கோயிலையும் நாம் காணலாம் .
சுவாமி : வைகுண்டவாசர்
உற்சவர் : பக்தவச்சலர்
தாயார் : கனகவல்லி தாயார்
விருச்சகம் : வில்வம் , வேம்பு
தீர்த்தம் : லவசதீர்த்தம்
தலச் சிறப்புகள் : வைகுண்ட பெருமாள் பெரும்பாலும் அமர்ந்த நிலையில் காட்சி தருவார் ஆனால் இங்கு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். வால்மீகி மற்றும் லவன் குசன் இங்கு காட்சிஅளிக்கின்றனர். இங்கு சீதை கற்பவதியாக அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இங்கு வால்மீகி வசித்ததற்கான அடையாளமாக புற்று ஒன்று உள்ளே இருக்கிறது.
கோவில் அமைப்பு : கோயிலின் கோபுரம் மொட்டை கோபுரமாக உள்ளது. 12 ஆம் நூற்றாண்டில் குலதுங்க சோழனால் கட்டப்பட்ட கோயிலாகும். உள்ளே நுழைந்தால் கொடிக்கம்பத்தை காணலாம். இடதுபுறம் இரண்டு வில்வ மரங்கள் ஒரு வேம்பு மரம் பிணைந்து காணப்படுகிறது இதை சிவா விஷ்ணு மற்றும் அம்பிகை அம்சமாக கருதப்படுகிறது . அதனால் இதை பார்வதி சுயவரம் விருச்சம் என்று பெயர் . கல்யாண தோஷம் நிவர்த்தி செய்ய ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் இவ் விருச்சகத்திற்கு பக்தர்கள் பூஜை செய்கின்றனர்.
கருவறை முன் மண்டபத்தில் வால்மீகி மகரிஷி லவன், குசன் உடன் சேர்ந்தார் போல் உள்ளார். வால்மீகி மகரிஷி அமர்ந்த நிலையில் அவருக்கு இருபுறம் லவன் , குசன் இருவரும் அவரை வணங்கியபடி இருக்கிறார்கள். இங்கு சீதை கற்பவதியாக அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இங்கு வால்மீகி வசித்ததற்கான அடையாளமாக புற்று ஒன்று உள்ளே இருக்கிறது. அனுமன்,லக்ஷ்மணன் இல்லாத ராமர் மற்றும் சீதா காட்சியளிக்கிறார் ஏனென்றால் சீதாவை காண ராமர் அரச கோலத்தில் வராமல் மரவுரி தரித்த கோலத்தில் காட்சிதருகிறார். இக்கோவிலின் வெளியே லவசதீர்த்ததில் பிற்காலத்தில் ஆஞ்சநேயருக்கு கோயில் எழுப்பப்பட்டது. இப்போது சாயா விமானத்தின் கீழ் வீற்றியிருக்கும் வைகுண்டவாசரை தரிசிக்கலாம் . வைகுண்ட பெருமாள் பெரும்பாலும் அமர்ந்த நிலையில் காட்சி தருவார் ஆனால் இங்கு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். ஸ்ரீதேவி , பூதேவி தாயாரும் நின்றபடியே காட்சிதருகிறார்.இப்போது நாம் கோயிலை வலம் வந்தால் கனகவல்லி தாயார் சன்னதியை அடையலாம். தாயாரை வணங்கிவிட்டு நாம் வலம் வந்தால் ஆண்டாள் நாச்சியார் சன்னதியை அடையலாம். கோவில் வளாகத்தில் இரண்டு வில்வ மரங்கள் ஒரு வேம்பு மரம் பிணைந்து காணப்படுகிறது இதை சிவா விஷ்ணு மற்றும் அம்பிகை அம்சமாக கருதப்படுகிறது. அதனால் இதை பார்வதி சுயவரம் விருச்சம் என்று பெயர். கல்யாண தோஷம் நிவர்த்தி செய்ய ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் இவ் விருச்சகத்திற்கு பக்தர்கள் பூஜை செய்கின்றனர்.
கோயிலின் எதிர் பக்கத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஒரு தனி ஆலயம் உள்ளது, அங்கு ஸ்ரீ அஞ்சநேயர் கோயிலை நோக்கி மேற்கு நோக்கி காணப்படுகிறார். இந்த கோயிலின் தீர்த்தம் 'லாவா குசா தீர்த்தம்' ஆகும், இது ஸ்ரீ ராமரின் இரண்டு மகன்களால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அதே தொட்டி ஸ்ரீ குருங்கலீஸ்வரர் கோயிலுக்கு தீர்த்தமாக செயல்படுகிறது, இது இந்த கோயிலுக்கு அருகில் உள்ளது. கோயிலைச் சுற்றி பல அழகான சிற்பங்கள் உள்ளன.
காலை 6.30 மணி முதல் மதியம் 11.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரை நடை திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : சென்ட்ரல்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு