நரசிங்கபுரம்





	


	



























	




 




	








 




12:39:29 AM         Saturday, May 16, 2026

நரசிங்கபுரம்

நரசிங்கபுரம்
நரசிங்கபுரம் நரசிங்கபுரம் நரசிங்கபுரம் நரசிங்கபுரம்
Product Code: நரசிங்கபுரம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
                                                                        நரசிங்கபுரம், லட்சுமி நரசிம்மர் 
 
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரானசென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் வழியில் பெரும்பாக்கம் சாலையில் சென்றால் இக்கோயிலை அடையலாம்.
 
சுவாமி : லட்சுமி நரசிம்மர்
உத்சவர் : பிரஹலாத வரதர்
தாயார் : மரகதவல்லி
 
தலச் சிறப்புகள் : இறைவன் நரசிம்மர் இங்கு சாந்த முகத்துடன் 7 அடி உயரத்தில் தாயாரை இடது புறத்தில் அமர்த்தி அவரை கட்டி பிடித்த மாதிரி அமர்ந்துளார். மற்ற இடங்களில் உக்ரமாக இருப்பார் மற்றும் தாயார் வலது புறத்தில் இருப்பார். பரஸ்பர ஆலிங்கனம் அமைப்பில் உள்ளார். இதனால் கல்யாண லட்சுமி நரசிம்மர் என்ற பெயரும் உண்டு.தாயார் இறைவனை பார்க்காமல் நம்மை நோக்கி பார்க்கிறார் இது ஒரு அபூர்வ அமைப்பாகும்.
 
கோவில் அமைப்பு : 1400 வருடங்கள் பழமையான கோயிலாகும் , சுமார் 11 நூற்றாண்டை சார்ந்த கோயிலாக கருதப்படுகிறது .  கருடாழ்வார் 4 அடி உயரத்தில் கழுத்தில் 16 நாகங்களை அணிகலன்களாக அணிந்துள்ளார். ஆதலால் நாகா தோஷ பரிகார தலமாகும். செவ்வாய் தோஷம் ,குடும்பத்தில் பிரச்னை உள்ளவர்கள், கடன் பிரச்னை உள்ளவர்கள், நாக தோஷம் உள்ளவர்கள் சென்று தரிசிக்க வேண்டிய கோயில். மிக அழகான கிராமத்தில் பசுமையான சூழலில் அமைந்துள்ளது,  இந்த க்ஷேத்ரம் 16வது நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்திப் பொழுதில் ஸ்வாதி நக்ஷத்திரத்தில் அவதரித்த நரசிம்ஹரை, தொடர்ந்து 9 ஸ்வாதி நக்ஷத்திர தினத்தில் சேவித்து வர தீராத கடன், நோய் நொடி, கல்யாணத்தடை போன்றவை நிவர்த்தி ஆகும். சக்கரத்தாழ்வார், ஆண்டாள் மற்றும்  ராமருக்கும் தனித் தனியே ஸந்நிதிகள் அமைக்கப் பட்டுள்ளது. ஆஞ்சநேயர் ஸந்நிதி கோவிலுக்கு வெளியே பெருமாளைப் பார்த்தவாறு அமைந்துள்ளது.
 
காலை 8.00மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை  5.00 மணி முதல்  8.00 மணி வரை நடை திறந்து இருக்கும்.
 
அருகிலுள்ள விமானதளம் : சென்னை 
 
அருகிலுள்ள ரயில் நிலையம் : சென்ட்ரல்
 
பேருந்து வசதி : உண்டு
 
தங்கும் வசதி : உண்டு
 
உணவு வசதி : உண்டு
Mail this page Printable view
×
×
×
×
×
×
×