சிறுவாபுரி





	


	



























	




 




	








 




10:52:29 PM         Friday, May 15, 2026

சிறுவாபுரி

சிறுவாபுரி
சிறுவாபுரி சிறுவாபுரி சிறுவாபுரி சிறுவாபுரி சிறுவாபுரி சிறுவாபுரி சிறுவாபுரி சிறுவாபுரி
Product Code: சிறுவாபுரி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                       சிறுவாபுரி, வரதராஜ பெருமாள் 

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான  சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்தில் சென்னை கொல்கத்தா சாலையில் தச்சூர் கூட் ரோடு சந்திப்புக்கு அடுத்து சிறுவாபுரி அமைந்திருக்கிறது.
சுவாமி : வரதராஜ பெருமாள்
தாயார் :  ஸ்ரீதேவி, பூதேவி

தலச் சிறப்புகள் :  சிறுவாபுரியில் அமைந்திருக்கும் தீண்டா திருமேனி ஊரக வரதராஜ ஸ்வாமி திருக்கோயிலில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஸ்ரீனிவாசன் கோலத்திலும், மகாலக்ஷ்மியுடன் லக்ஷ்மி நாராயணராகவும், தலைமை மூலவராக ஸ்ரீதேவி, பூதேவி தயார்களுடன் நின்ற கோலத்தில் வரதநான ஸ்வாமியாகவும் கம்பீரமாக காட்சி தருகிறார்.  இவருக்கு திருமஞ்சனம் கிடையாதாம். வருடத்துக்கு ஒருமுறை சாம்பிராணித் தைலம் மட்டுமே. இத்தலத்தில் மூலபெருமாளான வரதராஜர் திருவுருவம் முழுவதும் சாளகிராமத்தால் ஆனது. அவர் உக்ரமூர்த்தியாகக் கருதப்படுவதால் பட்டாச்சாரியார்கள்கூட அவரை தொட்டு வழிபாடுகள் நடத்துவதில்லை. சிறுமரக்கோல்களைக் கொண்டே பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்படுகின்றன. இத்தலம் ரிஷிகளால் பூஜிக்கப்பட்டதால் ரிஷி தலம் என்றும் போற்றப்படுகிறது. ராமரது மகன்களான லவனும் குசனும் இங்குதான் வால்மீகி முனிவரிடம் கல்வி, கலைகளை கற்றுணர்ந்ததாக தலபுராண வரலாறு தெரிவிக்கிறது.

சிறுவாபுரி குசஸ்தலை ஆற்றுக்கு அருகில் ஒரு மகரிஷியின் ஆசிரமத்தில் ஸ்ரீராமனும் சீதாபிராட்டியாரும் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அதை நிரூபிக்கும் வகையில் அருகில் சிறிய குன்றின் மீது ஸ்ரீராமபிரான், சீதா தேவி, ஆஞ்சநேயர், இளையப்பெருமாள் கோயில் கொண்டிருக்கும் கோதண்டராமர் திருக்கோயில் அமைந்திருக்கிறது.

தல வரலாறு : ஸூச்வாஸ முனிவர் ஒருநாள் ஆரண்ய நதியில் நீராடி, காலை அனுஷ்டானங்களை முடித்து, குடிலுக்குத் திரும்பிய வர்களுக்கு அதிர்ச்சி நந்தவனம் நாசமாகியிருந்தது. வேள்விச் சாலை எங்கும் ரத்த மாமிசங்கள் அதிர்ச்சியில் உறைந்த ஸூச்வாஸர், தனது யோக திருஷ்டியால் இது தண்டகாரண்யத்தில் இருந்து வந்த சிரவணாசுரனின் வேலை என்பதை அறிந்து அதிர்ந்தார். மீண்டும் தவச் சாலையை ஏற்படுத்தி அக்னிஷ்டோம யாகத்தைத் தொடங்கினார். அப்போது, பலத்த காற்றுடன் மண்மாரி பெய்தது. பெருத்த உடலுடன், கோரைப் பற்களைக் காட்டி, தீச்சுடரைக் கக்கியபடி வந்தான் சிரவணாசுரன். இளம் முனிவர்கள் பயத்தில் அலறி ஓடினர். அப்போது, அந்த முனிவர்களில் தலைவராக இருந்த ரிஷி மணிகர், கோபாவேசம் பொங்க ஹூங்காரம் செய்தபடியே முன் நின்றார். அவரின் கோலத்தைக் கண்ட சிரவணாசுரன் பயந்து பின்வாங்கினான்.

நாட்கள் சென்றன. ஒருநாள் ஸூச்வாஸர் பிருந்தாரண்யத்தில் இருந்த கண்வ ரிஷியிடம், சிரவணாசுரனைப் பற்றிச் சொன்னார். உடனே கண்வர், தான் நைமிசாரண்யத்தில் காச்யப முனிவரிடம் பெற்ற உபதேசத்தை ஸூச்வாஸருக்கு உபதேசித்தார். ஸ்ரீமந் நாராயணனை விக்ரக ரூபத்தில் வழிபடுமாறு பணித்தார். அதன்படி, தனது ஆஸ்ரமத்தில் யாகசாலை அமைத்தார் ஸூச்வாஸர். மணிக முனிவர் தன்னுடைய பத்தினி சந்தியாதேவியுடன் மேற்கு வாயிலைக் காத்தார். ஸூச்வாஸர் கிழக்கு வாசலில் அமர்ந்து, ஸ்ரீமந் நாராயணனைக் குறித்து தவம் செய்தார். காலம் சென்றது. அவருடைய நாபி வரையில் மண் மூடியது. அதிலிருந்து தர்ப்பைப் புல் முளைத்தது. அதனால் இவருக்கு ‘குசநாபர்’ என்ற பெயர் ஏற்பட்டது.

குசநாபரின் தவத்துக்கு இணங்க, ஸ்ரீமந் நாராய ணனின் அருளால் விஸ்வகர்மா தோன்றி ஒரு சிலையை வடித்துக் கொடுக்க முனைந்தார். அப்போது ஸ்ரீபூமிப்பிராட்டி சகிதராக, சங்கு- சக்ர கடிக அபய கரங்களுடன் ஸ்ரீதேவாதி ராஜராக பெருமாள் காட்சி அளித்தார். அந்த வரதராஜ ஸ்வாமியை பலவாறு போற்றித் துதித்த குசநாபர், மணிக முனிவர் உள்ளிட்ட எல்லோருக்கும் அருள் வழங்கினார். அங்கே வரதராஜருக்கு சந்நிதி எழுந்தது. விஸ்வகர்மாவின் கைவண்ணத்தில் ஆஸ்ரமம் ஆலயமானது.
மீண்டும் அங்கே யாகங்கள் தொடர ஏற்பாடாயின. அதை அறிந்த சிரவணா சுரன், சக அசுரர்களுடன் இவர்களைத் தாக்க வந்தான். குசநாபர் உள்ளிட்டோர், தங்களைக் காக்குமாறு பெருமாளிடம் சரணாகதி செய்தனர். அடுத்த நொடி, சுதர்ஸனச் சக்கரத்தில் இருந்து கிளம்பிய ஜ்வாலை, சிரவணாசுரன் உள்ளிட்ட அரக்கர்களை அழித்து மீண்டது. முனிவர்கள் பெருமாளை போற்றிக் கொண்டாடி, யாகங்களைத் தொடர்ந்தனர். ஸ்ரீராமனின் புத்திரர்களான குசன்-லவனுடன் நாடு முழுதும் யாத்திரை செய்தார் வால்மீகி. ஒரு சித்ரா பௌர்ணமியன்று, இந்த அரண்ய நதிக்கரையில் அவர்கள் பர்ணசாலை அமைத்துத் தங்கினர். அன்று நித்திய கர்மாக்களைச் செய்ய, லவனும் குசனும் நதியில் மூழ்கினர். நதியின் நடுவில், ஆதிசேஷன் குடைபிடிக்க சங்கு-சக்ரதாரியாக காட்சி தரும் தேவாதிராஜரை, முனிவர் ஒருவர் பூஜிப்பதைக் கண்டனர். ஆச்சரியம் மேலிட, இதை வால்மீகியிடம் தெரிவித்தனர். அவர் ஞான திருஷ்டியால், அருகில் ஸ்ரீவரதராஜ பெருமாளை வணங்கி வரும் குசநாப முனிவரைக் கண்டார். பின்னர், குசநாபர் ஆஸ்ரமத்துக்கு மூவரும் சென்றனர். அங்கே பெருமாளைக் கண்டு, ஸ்ரீராமாயண ஸ்லோகங்களால் போற்றினர். அந்த ஆஸ்ரமமே ராமாயண பாராயண தலமாயிற்று.

ஒருநாள், வால்மீகி முனிவரின் கனவில் தோன்றிய பகவான், குச-லவருக்கு வில்வித்தை கற்றுத் தரும்படி கூற, அவர்களுக்கு அங்கேயே வில்வித்தை முதலான அனைத்துக் கல்வியும் வால்மீகி முனிவரால் அளிக்கப்பட்டது. சிறுவரான லவனும் குசனும் அம்பு எடுத்து பயிற்சி செய்த இடம் ஆதலால், ‘சிறுவர் அம்பு எடு’ எனப்பட்டது. பின்னாளில் சிறுவரம்பேடு, சின்னம்பேடு என மருவியது.

இந்தக் கானகத்துக்கு நடுவே குடியிருப்புகள் தோன்றின. அங்கே அடிக்கடி கலகம், திடீர் திடீரென குடியிருப்புகள் தீக்கிரையாவது, மிகப் பெரிய குளவிப் படை பறந்து வந்து மனிதர்களையும் விலங்குகளையும் தாக்குவது என ஒரே களேபரம்தான்., பசியால் வாடிய மக்கள், ஒரு தபஸ்வியை சரணடைந்து, தங்களைக் காக்க வேண்டினர். அவரும் தேவராஜஸ்வாமியை வணங்கி தியானத்தில் ஆழ்ந்தார். தியானத்தில் ஒரு காட்சியைக் கண்டார். விஷ்ணுவின் மாயா சக்தியான வைஷ்ணவி தேவி, விந்திய மலையில் இருந்து இறங்கி பெருமாளின் சந்நிதியை அடைந்தாள். பெருமாளின் வலது கண்ணில் இருந்து தோன்றிய கோடி சூரியப் பிரகாச ஒளி, வைஷ்ணவி தேவியின் இதயத்தில் புகுந்தது. அவள், பெருமாளை நேராக தரிசித்தபடியே வண்டுகளாகத் திரிந்து நாசம் ஏற்படுத்திய சிராவண அரக்கர்களை தன் காலால் பூமிக்குள் அழுத்திக் கொன்றாள். பின், வைஷ்ணவியாக கோலம் கொண்டு அங்கே எழுந்தருளினாள். இதை யோகத்தில் கண்ட தபஸ்வி, அனைவரிடமும் இதுகுறித்து விவரித்து, பயத்தைப் போக்கினார். இங்கே கோயிலுக்கு பின்புறம், வரதராஜரை நோக்கி கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீவைஷ்ணவி.

கோவில் அமைப்பு :மூலவர் சுதைத் திருமேனி உற்ஸவர் திருமேனிகள் கொள்ளை அழகுடன் திகழ்கின்றன. காளிங்கநர்த்தனரும் சுதர்ஸனாழ்வாரும் தனித்துத் தெரிகிறார்கள். தூண் சிற்பங்கள், பழைமையை பறைசாற்றுகின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இவ்வாலயம் சோழர், பாண்டியர், பல்லவர் காலத்து மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. மேலும் சாளுக்கிய மன்னர்களின் சின்னங்களும் ஸ்ரீனிவாசன் சன்னதிக்கு முன்பாக அமைந்துள்ள தூண்களில் காணப்படுகிறது. ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்ததும், கிழக்கு பார்த்து ஸ்ரீனிவாசன் சன்னதி அமைந்துள்ளது. முன்புறம் பெருமாள் அவதார திருவுருவங்களை தாங்கி நிற்கும் தூண்கள் கொண்ட வெளிமண்டபம், தாண்டி உள்ளே சென்றால் அர்த்த மண்டபத்தில் பன்னிரண்டு ஆழ்வார்கள் வரிசையாக கொலுவீற்றிருக்க, அவர்களுக்கு முன்பாக ராதையுடன் கிருஷ்ணன் புல்லாங்குழல் ஊதும் கோலத்தில் அற்புதமாக காட்சியளிக்கிறார்.

மூலவருக்குப் பின்புறம் இரண்டு ஆதிசேஷன் சிலைகள் காணப்படுகிறது. இங்கு கருவறைக்கு முன்பாக உள்ள கிருஷ்ணனுக்கு 11 வாரம் பால் (சனிக்கிழமையில் உத்தமம்) திருமஞ்சனம் செய்து அந்தப் பாலை சிறிது பருகிவந்தால் புத்திர பாக்கியம் விரைவில் கிட்டும் என்று சொல்லப்படுகிறது. லஷ்மி நாராயணர் தனி சன்னதி கொண்டு தெற்கு பார்த்து அருள்பாலிக்கின்றார். அவரை தரிசித்துவிட்டு வலது பக்கம் திரும்பினால், மிக பிரமாண்டமாக வரதராஜ ஸ்வாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஆஜானுபாகுவாக காட்சிக் கொடுத்து நம்மை மலைக்க வைக்கிறார். எல்லா பூஜைகளும் உற்சவமூர்த்தி "கேட்டதைக் கொடுக்கும் பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். மண்டபத் தூண்களில் வரதராஜரோடு ராமனையும், ஹயக்ரீவரையும் யோக நரசிம்மரையும் தரிசிக்கலாம். வெளிப் பிராகாரத்தில்  ஸ்ரீநிவாசன் சன்னதிக்கு வலது புறமாக கிழக்கே பார்த்த சன்னதியில் பெருந்தேவி தாயார் மலர்ந்த முகத்தோடு காட்சி தந்து நம்மை பரவசத்தில் ஆழ்த்துகிறாள். இக்கோயிலில் முதல் தரிசனமே தாயாருடையதுதான். இந்தப் பெருந்தேவி தாயாரிடம் நமது கஷ்ட நஷ்டங்களை சொல்லி மனதார வேண்டிக் கொண்டால், அதை அவள் தனது மணாளனிடம் நாசூக்காகச் சொல்லி, நம்மை கரைத்தேற்றுவாள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தாயாரை தரிசித்துவிட்டு சிறிது தூரம் வந்தால் சக்கரத்தாழ்வார் சன்னதி. இங்கு சக்கரத்தாழ்வாரை நான்கு புறத்திலும் தரிசிக்கலாம் என்பது விசேஷம். ஆண்டாளுக்கும் ஆஞ்சநேயருக்கும் கருடனுக்கும் தனித் தனி சன்னதிகள் அமைந்துள்ளன. ஆஞ்சநேயருக்கு கிரீடம் இல்லை. அவரது இடுப்பில் வாள் ஒன்று காணப்படுகிறது. இங்கு ஆஞ்சநேயர் லவன் குசனுக்கு காவலாக இருந்து வந்ததே அதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது.

இங்கே குசலவர்களுக்கு வால்மீகி முனிவர் சகல கலைகளையும் கற்றுத் தந்தார். ஆதலால், இங்கே வந்து பெருமாளை வணங்கி, விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்துகொள்ள, கல்வியில் சிறப்பான நிலையை மாணவர்கள் அடைவார்களாம். இங்கே சுதர்ஸன பெருமாள் மிக விசேஷம். நல்லவர்களைக் காக்க நெருப்பாகப் புறப்பட்டு தீயவர்களை அழித்தவர் என்பதால், மனதினுள் தேவையற்ற பயம் இருப்பவர்கள், சுதர்ஸன பெருமாளை சனிக்கிழமைகளில் பூஜித்து வணங்க பயம் தொலையும். வரதராஜ பெருமாள் சந்நிதி விமானத்தில் குச-லவர்கள் அம்பெடுத்து நிற்க, சுதர்ஸனர் உக்கிர ரூபத்தில் காட்சிதர, குசநாப முனிவர் தொழுத கோலத்தில் இருக்கும் காட்சியை தரிசித்தாலே பாவம் தொலையும், பயம் விலகும் என்கின்றனர்.

காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை  5.00 மணி முதல்  7.00 மணி வரை நடை திறந்து இருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம் : சென்ட்ரல் 

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×