பஞ்சரங்கம் - இந்தளூர்





	


	



























	




 




	








 




8:23:09 PM         Saturday, May 16, 2026

பஞ்சரங்கம் - இந்தளூர்

பஞ்சரங்கம் - இந்தளூர்
பஞ்சரங்கம் - இந்தளூர் பஞ்சரங்கம் - இந்தளூர் பஞ்சரங்கம் - இந்தளூர் பஞ்சரங்கம் - இந்தளூர் பஞ்சரங்கம் - இந்தளூர் பஞ்சரங்கம் - இந்தளூர் பஞ்சரங்கம் - இந்தளூர் பஞ்சரங்கம் - இந்தளூர் பஞ்சரங்கம் - இந்தளூர் பஞ்சரங்கம் - இந்தளூர் பஞ்சரங்கம் - இந்தளூர் பஞ்சரங்கம் - இந்தளூர்
Product Code: பஞ்சரங்கம் - இந்தளூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                     பரிமள ரங்கநாதர் கோவில் - திருஇந்தளூர்

திருக்கோயில் இருப்பிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம்நாகை மாவட்டதில் மனித வடிவில் மட்டுமல்ல, மயில் வடிவிலும் இறைவனை வழிபட்ட பரிமள ரங்கநாதர் திருத்தலம்  மயிலாடுதுறையில் உள்ளது.

சுவாமி  : பரிமள ரங்கநாதர் 

தாயார் : பரிமள ரங்கநாயகி, புண்டரீகவல்லி, சந்திர சாபவிமோசனவல்லி, சுகந்தவனநாயகி 

தல தீர்த்தம் : இந்து புஷ்கரணி

மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார்

பஞ்சரங்க தலங்கள் அல்லது பஞ்சரங்க ஷேத்திரங்கள் என்பன காவிரி பாயும் பரப்பின் கரையில் அரங்கநாதரின் (திருமால்) கோவில்கள் அமைந்துள்ள ஐந்து மேடான நதித்தீவு அல்லது நதித்திட்டு ஆகும்.

காவிரியின் வடகரையில் அமைந்துள்ள திருஇந்தளூர்,  பஞ்ச அரங்க தலங்களில் ‘பஞ்சரங்கம்’ மற்றும் ‘அந்தரங்கம்’ என்று சொல்லப்படுகிறது. இத்தலத்தில் அருளும் பரிமள ரங்கநாதர், வேதசக்ர விமானத்தின் கீழ் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார். பெருமாள் சன்னிதியின் இருபுறங்களிலும் ஸ்ரீதேவி கங்கையாகவும், பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது சிறப்புக்குரியதாகும். பரிமளரங்கநாதர் திருவடிகளில் எமதர்மராஜரும், அம்பரீஷ சக்ரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். சந்திரன், சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் நீராடி, தன் சாபம் நீங்கப் பெற்றமையால் இவ்வூர் ‘திருஇந்தளூர்’ எனப்பெயர் பெற்றது.

சிறப்புகள் : ஆழ்வார்களால் பாடல்பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் திருஇந்தளூரும் ஒன்று. புராதன காலத்தில் இத்திருத்தலம் இருந்த இடத்தில் நறுமணம் வீசும் புஷ்ப காடுகள் நிறைந்திருந்ததால் சுகந்தவனம் எனப் பிரசித்திபெற்று விளங்கியது. சந்திரன் சாப விமோசனம் பெற்ற திருத்தலம்.இத்தல பெருமாள் கிழக்கு பார்த்து வீர சயன கோலத்தில் காட்சி தருகிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் வேதச் சக்கர விமானம் என அழைக்கப்படுகிறது.

தல வரலாறு: விரதங்களில் சிறப்பு வாய்ந்த விரதம் வைகுண்ட ஏகாதசி விரதம். அம்பரீசன் என்ற அரசன் பெருமாள் மேல் மிகுந்த பக்தி கொண்டவர். இவர் பல ஆண்டுகளாக ரங்கநாதரை மனதில் இருத்தி ஏகாதசி விரதம் மேற்கொண்டிருந்தார். ஏகாதசியன்று விரதம் இருந்து மறுநாள் துவாதசியன்று உணவு உண்டு விரதம் முடிப்பார். பல ஆண்டுகள் ஏகாதசி விரதம் இருந்ததின் பயனாக தேவலோகப் பதவி ஒரு மனிதப் பிறவிக்குக் கிடைத்து விட்டால் தேவர்களுக்கு மரியாதை குன்றிவிடும் என கலக்கம் கொண்டு தேவர்கள் அனைவரும் சென்று துர்வாச முனிவரை சந்தித்தனர். அவரும் தேவர்களுக்கு உதவுவதாகக் கூறி அம்பரீசனின் விரதத்தை முடிக்க விடாமல் தடுக்க பூலோகம் நோக்கி வந்தார். முனிவர் பூமி வந்து சேர்வதற்குள் மன்னன் ஏகாதசி விரதம் முடித்திருந்தார். ஆனாலும் துவாதசியன்று உணவு சாப்பிட்டால்தான் விரதம் முழுமையாக முடியும் என்பது ஐதீகம். இதன் காரணாமாக துவாதசியன்று மன்னனிடம் தான் நீராடிவிட்டு வருவதாகவும், வந்தபின் இருவரும் சேர்ந்து உணவருந்தலாம் எனவும் சொல்லிவிட்டு குளிக்கச் சென்றார் துர்வாச முனிவர். தான் நேரம் தாழ்த்திச் சென்றால் மன்னன் விரதம் முடிக்க முடியாது என்பதே முனிவரது திட்டம். இதனிடையே விரதம் முடிக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால், தன் அரசவை பெரியவர்களிடம் கேட்டுக் கொண்டு, மூன்று மடக்கு தீர்த்தத்தை குடித்தாலே விரதம் முடித்ததற்கு சமம் எனக் கூற அவ்வாறே செய்தார் அரசர். விரதத்தை இனிதே முடித்தார் அம்பரீசன்.

தான் இத்தனை திட்டமிட்டும் மன்னர் விரதத்தை நல்ல விதத்தில் முடித்து விட்டாரே என்று ஆத்திரம் கொண்ட துர்வாசர், மன்னர் மீது கோபம் கொண்டு சாபமிட எத்தனித்தார். மன்னர் பெருமாளை சரணடைந்தார். பெருமாள் மன்னரை முனிவரின் கோபத்திலிருந்து காத்து, அவருக்கு என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். தனக்கு தேவலோகப் பதவியெல்லாம் வேண்டாம், பெருமாள் இத்தலத்திலேயே இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் எனக் கேட்டார். துர்வாசரும் தனது தவறை எண்ணி பெருமாளிடம் மன்னிப்பு கேட்டார். பக்தியின் பெருமையையும், விரதத்தின் வலிமையையும் விளக்கும் திருத்தலம். 

கோயில் அமைப்பு : இக்கோயில் சிற்பங்களும் பேரழகு நிறைந்ததாய் விளங்குகின்றன. தசாவதாரச் சிற்பங்கள் நம்மை வரவேற்கின்றன. மீன் போன்ற சிறிய மச்ச வடிவத்தில் ஆரம்பித்து, அடுத்து சற்று பெரிய ஆமையாக கூர்ம வடிவத்தில், பின் அதனைவிட சற்று பெரிய பன்றி வடிவம் வராகமாய், பின்னர் மனிதனும் விலங்கும் சேர்ந்த அமைப்பு நரசிம்மராய், பிறகு சிறிய வடிவிலான வாமணனாக மனித வடிவம், பின்னர் காட்டுவாசி போல வாழ்ந்த பரசுராமன், அதன்பின் ராம அவதாரம், பலம் பொருந்திய வடிவில் பாலராமராக, கண்ணன், அநியாயங்களை அழிக்க பிறவி எடுக்கப் போகும் கல்கி அவதாரம் என தசாவதாரத்தின் வழியாக வெளிப்படுத்தியுள்ளார்கள். ராமர் சுக்ரீவனுக்கு முடிசூட்டி வைக்கும் சிற்பம் அழகு. தனது வாலில் நெருப்பு வைத்தவர்களுக்கு பாடம் கற்பிக்க இலங்கைக்கு நெருப்பு வைத்த அனுமனது பிரமிக்க வைக்கும் சிற்பம். பிரிதிவிராஜன், சம்யுக்தையை சிறைபிடிப்பது போன்றதொரு சிற்பவடிவம். காண்போரது கண்ணையும், கருத்தையும் கவரும் கிருஷ்ணரின் காளிங்க நர்த்தனம். மூவுலகத்தையும் அளந்த பெருமான் மூன்றாவது அடியை எங்கு வைக்க எனக் கேட்க, மகாபலிச் சர்க்கரவர்த்தி தனது தலையின் மேல் மூன்றாவது அடியை வைத்துக் கொள்ளச் சொன்ன காட்சி. ஸ்ரீதேவி, பூமாதேவி சமேதராய் காட்சி தரும் மகாவிஷ்ணு. ஐந்து தலை நாகத்தின் மேல் அமர்ந்த நிலை.

இத்திருத்தலத்திற்கு தட்சபிரஜாபதியின் சாபத்தினால் ஒரு சமயம் சந்திரனைக் கொடிய க்ஷயரோகம் பீடித்தது. அதனால் தனது ஒளியையும், அழகையும் இழந்து வருந்தினான் சந்திரன். பிரம்மதேவரின் உபதேசத்தில் திருஇந்தளூரை அடைந்து, அங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபரிமள ரங்கநாதனையும் ஸ்ரீசுகந்தவனநாயகி தாயாரையும் கடும் தவமியற்றி நோய் நீங்கப் பெற்று, இழந்த தனது தேஜஸைப் பெற்று மகிழ்ந்தான். 

பிரம்மதேவரிடம் இருந்த ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை மது, கைடபர் எனும் அரக்கர்கள் அபகரித்துச் சென்றுவிட்டனர். அதனால் பிரம்மதேவர் மிகவும் மனம் வருந்தி இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள அரங்கப் பெருமானைச் சரணடைந்து பிரார்த்தித்ததால் எம்பெருமானும் வேதங்களை அந்த அரக்கர்களிடமிருந்துமீட்டு பிரம்மதேவரிடம் மீண்டும் அளித்தார். அசுரர்களின் கைகளில் வேதங்கள் அகப்பட்டிருந்ததால், அவற்றிலிருந்து துர்நாற்றம் வீசியது. அந்த துர்நாற்றத்தைப் போக்கிக்கொள்வதற்காக நான்கு வேதங்களும் காவிரி நதித் தடத்தில் இந்தளூர் எம்பெருமானைக் குறித்து தவம் செய்தன. அதனால் திருவுள்ளம் மகிழ்ந்த பெருமானும், வேதங்களின் துர்நாற்றத்தைப் போக்கி சுகந்தத்தை அளித்து அருள்புரிந்தார். அதனால் இத்திருத்தலம் `சுகந்தாரண்யம்' என்ற பெயர் பெற்றது. வேதங்களைப் பரிமளிக்கச் செய்ததால், `பரிமள ரங்கநாதன்' என்ற திருநாமமும் எம்பெருமானுக்கு ஏற்பட்டது. நான்கு வேதங்களே இப்பெருமானின் திருச்சந்நிதி விமானமாக அமைந்திருப்பதால் இவ்விமானத்திற்கு வேதாமோத விமானம் என்ற பெயர் ஏற்பட்டது.

இந்தளூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானின் பேரழகைக் காண கண்கள் கோடி போதாது. மரகத திருமேனியனாக, நான்கு திருக்கரங்கள், வீரசயனமாக திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் அதே பேரழகுடன் காட்சியளிக்கிறார். எம்பெருமானின் மரகத திருமேனியின் அழகைப் பார்த்துப் பார்த்துப் பரவசமடைந்த தொண்டரடிப் பொடியாழ்வாரும், `பச்சை மாமலைபோல் மேனி...' என்று பெருமானின் மேனி நிற அழகை வர்ணித்திருக்கிறார். 

தாயார் பரிமள ரங்கநாயகி, பெருமானின் அழகிற்குத் தான் குன்றிமணி அழகிற்கும் குறைந்தவள் அல்ல என்று கூறும்படி அழகான திருமுக மண்டலம், நெற்றித் திலகம், புருவங்களின் மத்தியில் பெருமானின் பாத அடையாளங்கள், கமல மலர்விழிகளில் பொங்கிவரும் கருணை, அபயமளிக்கும் திருக்கரங்கள் என்று பேரழகு அன்னையாக சேவை சாதிக்கிறாள். 

இந்தத் திருத்தலத்தில் சித்திரை மாதத் தொடக்கம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிப்பூர விழா பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும். ஆவணி மாதத்தில் ஐந்து நாட்கள் கண்ணன் புறப்பாடு, இக்கோயில் தாயாருக்கு புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவம், ஐப்பசி மாதத்தில் நடைபெறும் துலா பிரம்மோற்சவம், மார்கழி மாதத்தில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி உற்சவம், பங்குனி மாதம் பத்துநாட்கள் பிரம்மோற்சவம்.

காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.00 மணி முதல்  இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள இரயில் நிலையம் :   மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்  : திருச்சி, சென்னை

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×