நாமக்கல்





	


	



























	




 




	








 




6:21:18 AM         Tuesday, May 26, 2026

நாமக்கல்

நாமக்கல்
நாமக்கல் நாமக்கல் நாமக்கல் நாமக்கல் நாமக்கல் நாமக்கல் நாமக்கல் நாமக்கல் நாமக்கல் நாமக்கல் நாமக்கல் நாமக்கல்
Product Code: நாமக்கல்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                ஆஞ்சநேயர் திருக்கோவில், நாமக்கல்

திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில், நாமக்கல் மாவட்டம் மலைக்கோட்டையின் கீழ் நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் வழியில் அமைந்துள்ளது.  

இந்து சமயக் கோயில்களில் அனுமருக்கு தனிச்சன்னதிகளும், சிற்பங்களும் அமைந்துள்ளன. வைணவக் கோயில்களில் இராமர் சன்னதி முன்பு வணங்கியபடி இவரது உருவச்சிலைகள் அமைக்கப்படுகின்றன. தனிக்கோயில்கள் பெருமளவு அனுமருக்காக உருவாக்கப்பட்டுள்ளன. இவர் இராமாயணத்தில் விஸ்வரூபம் எடுத்தமையால், பல கோயில்கள் பெரிய சிலைகள் வைக்கப்படுகின்றன. அனுமர் உருவச் சிலைகள் பல்வேறு உருவங்களில் வணங்கப்படுகிறார். வீரகோலம், நின்றக் கோலம், யோகக் கோலம் போன்ற உருவங்களில் அனுமர் சிலைகள் வைக்கப்படுகின்றன.

தல  சிறப்புக்கள் : இக்கோயிலில் தட்டையான நுழைவாயில் கோபுரம் உள்ளது. கருவறைக்கு மேலே கோபுரம் கிடையாது. வெட்ட வெளியில் மழை, வெயில் பட அமைந்துள்ளது. 18 அடி உயர ஸ்ரீ ஆஞ்சநேயர் திறந்த  வெளியில் நின்று தொழுத கைகளுடனும், இடுப்பில் கத்தியுடனும் சாலிகிராமத்தால் ஆன மாலையும் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். புராண காலத்தில் இந்த ஊருக்கு ஸ்ரீசைலஷேத்ரம் என பெயர். 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நாமக்கல் கோட்டைக்கு கீழே உள்ளது.  ஆஞ்சநேயர் சிலை ஒரே கல்லினால் ஆனது என்பது சிறப்பு.  இந்தியாவில் வேறு எந்த கோயிலிலும் இத்தனை வித அலங்காரத்தில் ஆஞ்சநேயரை தரிசிக்க முடியாது. சிறப்பு பூசை நாட்களில் அனுமாருக்கு லட்சம் வடைகள் கொண்ட மாலை சாற்றப்படுகிறது.

இந்நகருக்கு சுமார் 10 மைல்  தொலைவில் அநேக மூலிகைகளும், பல மரங்களும், தானிய வகைகளும் கொண்ட "சதுரகிரி"  என்னும் பெருமை வாய்ந்த "கொல்லி மலை" இருக்கிறது.  இங்கு ஆஞ்சநேயருக்கு வெற்றிலை  மாலை சாத்துதல், எலுமிச்சம் பழம் மாலை சாத்துதல், துளசி மாலை சாத்துதல், வடை மாலை  சாத்துதல், பூ மாலை சாத்துதல் ஆகியவை நேர்த்திக் கடனாக செலுத்தப்படுகின்றன.  தவிர  வெண்ணெய் காப்பு போன்ற சிறப்பு அபிஷேகங்களும் இங்கு செய்யப்படுவது வழக்கம்.

முன்பு ஒரு சமயம் நவகிரகங்களில் அதிக குரூரமான  ராகுவும், சனியும் ஸ்ரீ ஆஞ்சநேயரிடம் தோல்வியுற்றதனால் ஆஞ்சநேயருக்கு  கீழ்ப்படிந்தார்கள்.  பூவுலகில் மாந்தர்களுக்கு சனியாலும் ராகுவாலும் ஏதேனும் இடையூறு ஏற்படின் அவர்களை  திருப்தி படுத்துவதின் பொருட்டு ராகுவுக்கு பிடித்த உளுந்தும் சனிக்கு பிடித்த எள்எண்ணெய்யாலும்  செய்த வடைமாலையை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சாத்தி வழிபட்டால் சனி ராகு இவர்களுடைய  இடையூறில் இருந்து மனிதர்கள் விடுபடுகிறார்கள் என்பதற்காகவே தான் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு  வடைமாலை சாத்துகிறார்கள்.

தல வரலாறு : முன்னொரு காலத்தில் மகாலட்சுமி பெருமாளைப் பிரிந்து ஒரு நீர் நிலை அருகே பர்ணசாலை அமைத்து பகவானை நோக்கி கடும் தவம் இயற்றினாள்.  திரேதா யுகத்தில்  இராமவதாரத்தில் இராவணனால் வாரை சேனைகளும், இராமரும் மூர்ச்சையடைந்தனர். அப்பொழுது சாம்பவானால் அறிவுறுத்தப்பட்டு ஸ்ரீ ஆஞ்சநேயர் இமயமலையை வாயு பகவானின்  உதவியுடன் சிரஞ்சீவி மலையை பெயர்த்து வந்து சஞ்சீவி மூலிகைகளால் எழுப்பி விட்டு  பழையபடி சஞ்சீவி மலையை வைத்து விட்டு திரும்பினார்.  அப்போது நேபாளத்தில் கண்டகி  நதியில் ஓர் சாலிக்கிராம மலையை பார்த்தார், அதில் ஸ்ரீ நரசிம்மர் ஆவிர் பவித்திருப்பதை கண்ட  அனுமான் சாலிக்கிராம மலையை வழிபாட்டிற்காக பெயர்த்தெடுத்து ஆகாய மார்க்கமாக இலங்கை  நோக்கி பயனித்தார்.  சூர்யோதய காலம் நெருங்குவதை கண்ட அனுமான் அனுஷ்டானம் செய்ய  தீர்மானித்து மகாலட்சுமி தவம் செய்யும் நீர் நிலைகள் அடங்கிய அந்த இடத்தில் வைத்து விட்டு  அனுஷ்டானம் செய்தார்.  திரும்பி வந்து எடுக்க முயன்ற அனுமன் அதை அசைக்கக் கூட  முடியவில்லை. அப்பொழுது ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி ஆஞ்சநேயருக்கு அருள் பாவித்து ராமர் கைங்கரியத்தை முடித்து ராமாவதாரத்திற்கு பின்பு இங்கு பணியாற்றுமாறு உத்தரவிட்டார்.  பின்பு திரேதா யுகத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயரும், கார்கோடகனும் ஆவிர் பவித்து ஸ்ரீ நரசிம்மர் தூணிலும் சாலிக்கிராமத்திலும்  இருந்து ஸ்ரீ மகாலட்சுமியின் தவத்திற்காக சாலிக்கிராமகிரி ரூபத்தில் இங்கு எடுத்து வந்து  ஸ்தாபிக்கப்பட்டார்.

மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இக் கோயில் திராவிடக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டதாகும். இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். மேலும் இது இந்தியாவிலேயே மிக உயரமான ஆஞ்சநேயர் சிலையாக உள்ளது. இக் கோயில் விஷ்ணுவின் ஒரு அவதாரமான நரசிம்மர், அனுமன் மற்றும் லட்சுமி தேவிக்கு காட்சியளித்த இடமாக உள்ளது. இங்கு "ஸ்ரீ வைகானச" ஆகம முறை பின்பற்றப்படுகிறது.

இங்கு ஒரு தினத்தில் நான்கு வேளை பூசை நடக்கிறது. "கால சந்தி" காலை 8மணிக்கும், "உச்சிகால பூசை" பகல் 12 மணிக்கும், "சாய ரக்‌ஷை" மாலை 6 மணிக்கும், "அர்த்தஜாம பூசை" இரவு 8.45 மணிக்கும் நடைபெறுகிறது. ஒவ்வொரு பூசை முறையும் மூன்று படிகளைக் கொண்டது. அவை "அலங்காரம், நைவேத்தியம் மற்றும் தீபாராதனை" போன்றவை ஆகும்.

மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மரும், நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரில் உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.

இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை மிகவும் பிரம்மாண்டமானது. பீடத்திலிருந்து 22 அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் முகம் மிகவும் அழகாக தேஜஸ் உள்ளதாக இருப்பது மிக முக்கியமான சிறப்பம்சம்.  எதிரே உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தின் உப கோவில்தான் இந்த ஆஞ்சநேயர் சன்னதி என்றாலும் இச்சன்னதியில்தான் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இச்சா சக்தி- நாமகிரி அம்மன், கிரியாசக்தி- நரசிம்மர், ஞானசக்தி- ஆஞ்சநேயர் ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற கோவில்.

நாமகிரி தாயார் கோவிலுக்கு பின்னால் உள்ள குடைவரைக் கோவில்தான் நரசிம்மர் கோவில் ஆகும். மலையின் மேற்கு புறம் உள்ள மலைக்கோவிலில் இந்த நரசிம்மர் - நாமகிரி தாயார் கோவில் உள்ளது.  நரசிம்மரின் சிலை மலையைக் குடைந்து வடிக்கப்பட்டு உள்ளது. நாமகிரி தாயாரின் கோவில் மலையைக் குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது. இது ஒரு குடைவரைக் கோவில் ஆகும். பல்லவர் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டது. மலையின் கிழக்கு புறம் அரங்கநாதன் கோவில் உள்ளது. இங்கு 5 தலையுடைய பாம்பரசன் கார்கோடகன் மீது படுத்தவாறு திருவரங்கன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இதன்மீது ஏறுவதற்கு மலையின் தென்மேற்கு பகுதியில் சிறிய படிக்கட்டு உள்ளது. பாறையை செதுக்கி இந்த படிகள் உருவாக்கப்பட்டு உள்ளது. புராணங்களின் கூற்றுப்படி, இத்திருக்கோவில் தேவசிற்பி விஸ்வகர்மாவால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் நரசிம்ம அவதார ரூபத்தில் வீற்றிருக்கும் விஷ்ணு பகவானை தற்போதிருக்கும் இடத்தில் இருந்து அனுமன் வழிபட்டதாக சொல்லப்படுகிறது:

இக்கோயில் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும்,  மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும். பங்குனி உத்திர திருவிழா 15 நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது. புனிதப் பயணிகளும், சுற்றுலாப் பயணிகளும் பார்க்க வேண்டிய முக்கிய இடம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலாகும். 

அருகிலுள்ள விமான நிலையம் :  சேலம், திருச்சி 

அருகிலுள்ள ரயில் நிலையம் :  நாமக்கல்

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×