உஜ்ஜைனி
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உஜ்ஜைனி நகரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் சான்வெர் என்ற இடத்திற்கு அருகில் அனுமன் கோவில் இருக்கிறது.
இந்து சமயக் கோயில்களில் அனுமருக்கு தனிச்சன்னதிகளும், சிற்பங்களும் அமைந்துள்ளன. வைணவக் கோயில்களில் இராமர் சன்னதி முன்பு வணங்கியபடி இவரது உருவச்சிலைகள் அமைக்கப்படுகின்றன. தனிக்கோயில்கள் பெருமளவு அனுமருக்காக உருவாக்கப்பட்டுள்ளன. இவர் இராமாயணத்தில் விஸ்வரூபம் எடுத்தமையால், பல கோயில்கள் பெரிய சிலைகள் வைக்கப்படுகின்றன. அனுமர் உருவச் சிலைகள் பல்வேறு உருவங்களில் வணங்கப்படுகிறார். வீரகோலம், நின்றக் கோலம், யோகக் கோலம் போன்ற உருவங்களில் அனுமர் சிலைகள் வைக்கப்படுகின்றன.
தல சிறப்புக்கள் : இந்தக் கோவிலின் சிறப்பு அனுமன் சிலை தலை கீழாக இருப்பதுதான். இதனால் இந்த கோவில் உல்டா அனுமன் என்று சொல்லப்படுகிறது. மயில்ராவணன் இராமனையும் லட்சுமணையும் மயக்க நிலையில் பாதாள உலகத்திற்கு கடத்திச் சென்றபோது அனுமன் இந்த வழியாகத்தான், பாதாள உலகத்திற்குச் சென்று அவர்கள் இருவரையும் மீட்டு வந்தாராம். அப்படி அனுமன் தலைகீழாகப் பாதாள உலகத்திற்குப் புறப்பட்ட இடம் இதுதான் என சொல்லப்படுகிறது. கோவில் வளாகத்திற்குள் ஆல, வேப்பமரம், துளசி, பாரிஜாதம் மரங்கள் உள்ளன. இந்த கோவிலில் இருக்கும் இரண்டு பாரிஜாத மரங்கள் மிகவும் பழமையானவை. இந்த மரங்களில் அனுமன் குடியிருப்பதாக ஐதீகம் உண்டு. இங்கே அனுமனின் மகனாக கருதப்படும் மகரத்வஜனுக்கு ஒரு சந்நிதி இருக்கிறது. மேலும், இராமன், சீதை, லட்சுமணன், சிவன் மற்றும் பார்வதி ஆகியோரின் சிலைகளும் உள்ளன.
கோவில் வளாகத்திற்குள் ஏராளமான கிளிகள் உள்ளன. பிரம்மா ஒரு முறை கிளியின் உடலில் கூடு பாய்ந்ததாகவும் ஹனுமன் அந்த கிளியின் மூலம் ராமனை சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததாக கதைகள் கூறுகின்றன. ஹனுமஞ்சியும் துளசிதாஸ்ஜிக்கு ஒரு கிளி வடிவத்தை எடுத்து ஸ்ரீ ராமைப் பார்க்க வைத்தார். ஓவொரு செவ்வாய்க்கிழமை ஹனுமனுக்கு ஆரஞ்சு நிறம் பூசபடுகிறது. ஹனுமானை மூன்று அல்லது நான்கு வாரம் தரிசிப்பதன் மூலம் பக்தர்கள் வேண்டுதல் அனைத்தும் நிறைவேற்கிறது. இங்குள்ள சின்னமான சிலை மிகவும் அதிசயமாக கருதப்படுகிறது. இங்கு பல புனிதர்களின் சமாதிகள் உள்ளனர். 1200 ஆண்டுகள் வரையிலான வரலாறு காணப்படுகிறது. இது பாட்டல் விஜய் அனுமன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயிலின் கதை ராமாயண காலத்துடன் தொடர்புடையது.
இந்த கோவில் காலை 6.00 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 9.000 மணி வரையிலும் திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : இண்டோர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : உஜ்ஜைனி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு