பேட் துவாரகை





	


	



























	




 




	








 




7:50:13 AM         Thursday, April 30, 2026

பேட் துவாரகை

பேட் துவாரகை
பேட் துவாரகை பேட் துவாரகை பேட் துவாரகை பேட் துவாரகை பேட் துவாரகை பேட் துவாரகை பேட் துவாரகை பேட் துவாரகை பேட் துவாரகை பேட் துவாரகை பேட் துவாரகை
Product Code: பேட் துவாரகை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                                                 பேட் துவாரகை

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கட்சு வளைகுடாவில் உள்ள சிறு தீவு ஆகும். கோமதி துவாரகையில் இருந்து ஓகா துறைமுகம் வரை தரைவழியே சென்று, அங்கிருந்து படகில் சுமார் 35 நிமிடங்கள் பயணிக்க, பேட் துவாரகையை அடையலாம்.

பஞ்ச துவாரகை : துவாரகை குஜராத் மாநிலத்தின் தேவபூமி. ஸ்ரீகிருஷ்ணர் புதிதாக அமைத்தது. முக்தி தரும் ஏழு நகரங்களில் துவாரகை நகரம் ஒன்று. ஆதிசங்கரர் நிறுவிய நான்கு பீடங்களில் ஒன்றான துவாரகை மடம் இங்கு அமைந்துள்ளது. கோமதி ஆற்றின் கரையில் துவாரகை நகரம் அமைந்துள்ளது. துவாரகை என்றால், கோமதி, பேட் துவாரகையை குறிக்கும். எனினும், கிருஷ்ணர் பிறந்த இடம், வசித்த இடம், வளர்ந்த இடம், லீலைகள் புரிந்த இடம், ஆட்சி செய்த இடம் என்று பல இடங்கள் உள்ளன. ஸ்ரீ கிருஷ்ணரின் தொடர்புடைய இடங்களாக ஐந்து துவாரகைகள் விளங்குகின்றன.  துவாரகைக்கு நிகரான பெருமைகள் கொண்ட  டாகோர் துவாரகை, கோமதி துவாரகை, பேட் துவாரகை, மூலத் துவாரகை, மோட்ச துவாரகை, சேர்த்து ‘பஞ்ச துவாரகைகள்’ என்றழைக்கப்படுகின்றது. பிற்காலத்தில் ரிஷிகளின் சாபத்தினால் யாதவர்களின் வம்சமே அழிவுற்றது. துவாரகாவின் பெரும் பகுதி கடலின் எழுச்சியால் மூழ்கியது. தற்போது புனித யாத்ரீகத் தலமாக போற்றப்படும் ஆதி துவாரகையின் நிழலாக ஐந்து துவாரகைகள் விளங்குகின்றன.    

தலச் சிறப்புகள் : கிருஷ்ணபரமாத்மாவின் அந்தப்புரம் ஒரு தீவில் அமைந்திருந்தது அதுவே பேட் துவாரகை.  ராமந்த்விப தீவு என்றழைக்கின்றனர். இங்கே கிருஷ்ணர் தன் குடும்பத்தோடு தங்கியிருந்தார் என்று சொல்கிறார்கள். பாமா, ருக்மிணி, ராதைக்கு இங்கு தனித்தனியாக அறைகள் இருந்தன. கோபிதுலாப் என்கிற இடத்தில் புண்ணிய தீர்த்தமாடும் படித்துறை உள்ளது. இங்கு கிருஷ்ணர் பல கோபிகைகளுக்கு மோட்சம் அளித்தார். இங்கு மண் கோபி சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இங்கிருந்து 12 கி.மீ. தொலைவில் ருக்மிணி கோயில் அமைந்துள்ளது.

இங்கு கிருஷ்ணர் சங்கு சக்கரங்களுடன், சதுர்புஜனாக கருமை நிறத்தில் காட்சி தருகிறார். தினந்தோறும் கண்ணனுக்கு குழந்தைபோலவும், அரசனைப் போலவும் அலங்காரங்கள் நடைபெறும். ருக்மிணிதேவிதான் உற்சவர். இங்கு இங்கு ருக்மணி தேவிதான் உற்சவர். இங்கு கிருஷ்ணன், ஜாம்பவதி, லட்சுமி, நாராயணன் என மொத்தம் ஐந்து கோவில்களும் சங்க தீர்த்தம் என்னும் மிகப் புகழ்பெற்ற தீர்த்தமும் உண்டு. இங்கு நடக்கும் மஹாதேவர் திருவிழாவுக்கு யாதவர்கள் படகுகளில் துவாரகையிலிருந்து சங்கோதருக்குச் சென்றார்கள் என்று மஹாபாரதம் கூறுகிறது.

சன்னதியில் நின்ற கோலத்தில் அபய ஹஸ்தம் மற்றும் இதயத்தில் மற்றொரு கரத்தை வைத்த கோலத்தில், காலடியில் ஒரு அசுரனை அழிக்கும் கோலத்தில் மகரத்வஜனும், இடுப்பு மேல் மட்டும் உள்ளவாறு அனுமனும் அருள் பாலிக்கின்றனர். இருவர் கரத்திலும் எந்த வித ஆயுதமும் இல்லாமல் அனுக்கிரக மூர்த்திகளாக அருள் பாலிக்கின்றனர். இருவருக்கும் இடையில் கதை உள்ளது. தசராவின் போது துவாரகாதீசர் பல்லக்கில் இராமர் கோலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாராம்.

கோபி தலாவ் அதாவது கோபியர்களின் குளம். கரியபிரானாம் கண்ணனுடம் கன்னியர்களான கோபியர்கள் பிருந்தாவனத்தில் இராசலீலை செய்து களித்திருந்தனர். பின்னர் கோகுலம் விடுத்து வடமதுரைக்கு அரசனாகி பின்னர் துவாரகைக்கு ஓடி வந்து விட்டதால்,  கண்ணனின் பிரிவைத் தாங்க முடியாமல் விரஜ பூமியிலிருந்து துவாரகைக்கு வந்த கோபியர்கள் சரத் பூர்ணிமையன்றைக்கு இராச லீலைகளுக்குப்பின் இவ்விடத்தில் தங்களை அர்பணித்துக் கொண்டு கண்ணனுடன் ஒன்றாகக் கலந்தனர். அவர்கள் அனைவரும் வழுவழுப்பான  மஞ்சள் மண்ணாக மாறி விட்டனர். எனவே  இக்குளத்தின் மண்  இன்றும் மஞ்சள் நிறத்தில் வழுவழுப்பாக உள்ளதாம். இதையே வடநாட்டினர் நெற்றிக்கு  கோபி சந்தனமாக இட்டுக்கொள்கின்றனர்.  நாகேஸ்வரர் ஆலயத்திலிருந்து இக்குளம்  ஐந்து கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

தல வரலாறு : சிந்துவெளி நாகரீகத்தின்1980-களில் பேட் துவாரகையில் அகழாய்வு செய்த போது பிந்தைய ஹரப்பா காலத்து மட்பாண்டகள் கிடைக்கப்பெற்றது. இவ்விடத்தில் புதிய கோயில்கள் கிபி 18-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. சங்குகள் இங்கு அதிகமாகக் கிடைப்பதால் “சங்கோதார்” என்றே இவ்விடம் அழைக்கப்படுகிறது.  1988ல் பாலாபூர் வளைகுடா பகுதியில் கடலடியாய்வு மேற்கொண்ட போது  இந்த கருங்கற்களினால் கட்டப்பட்ட மதிற்சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு கதவுகள் கொண்ட வழிகள் போன்ற அமைப்புகள் கொண்ட நான்கு பெரிய அறைகள் போன்ற பகுதிகள், கோட்டை-கொத்தளம் போன்ற அமைப்பு, இவையெல்லாம் சாஞ்சி ஸ்தூபியில் சித்தரிக்கப்பட்ட குசிநகரம் மற்ரும் ஸ்ரவஸ்தி போன்ற வளைவுகள் கொண்ட நகரவாயில்கள் போன்றை அமைப்பைக் கொண்டது என்று தெரிய வருகின்றது. இரும்பு மற்றும் கல்லினால் ஆன நங்கூரங்கள், மணி, விக்கிரங்களின் பகுதிகள், முத்திரைகள் முதலியவைக் கண்டெடுக்கப் பட்டன. இவையெல்லாமே, மூழ்கிய ஒரு கோட்டை அல்லது அரண்மனை மற்றும் ஒரு நகரத்தின் பகுதி என்று உறுதியானது.

கோவில் அமைப்பு : கடலுக்கு நடுவில், ஸ்ரீகிருஷ்ணரின் ஆலயம் உள்ளது. முதலில், ப்ரத்யும் சந்நிதி. நடுவில் கண்ணனின் ஆலயம். தேவகி, மாதவன் ஆகியோருக்கும் சந்நிதி உள்ளது. நரகாசுரனிடம் இருந்து 16,000 பெண்களை மீட்டு, அவர்களுடன் ஸ்ரீகண்ணன் வாழ்ந்தது இங்குதான், இந்தத் தீர்த்தக்கரையில்தான், யாதவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மாண்டனர். இதை அடுத்து, ப்ராசீ த்ரிவேணி. இங்கு செல்லும் வழியில், பிரம்ம குண்டம் எனும் குளமும், பிரம்ம கமண்டலு எனும் கிணறும் உள்ளன. இவற்றுக்கு முன்னே ஆதிப்ரபாஸம், ஜலப் பிரபாஸம் என இரண்டு குண்டங்கள் உண்டு. ப்ரபாஸ தீர்த்தத்தில் ஹிரண்யா, சரஸ்வதி, கபிலா எனும் நதிகள் கடலில் கலக்கின்றன. இதனால் ‘ப்ராசி த்ரிவேணி’ எனப்படுகிறது.கோமதி துவாரகை, பேட் துவாரகை  துவாரகாபுரி இரண்டுக்கும் நடுவே கடல் அமைந்துள்ளது.

அருகிலுள்ள விமான நிலையம் : ஜாம்நகர், அகமதாபாத்

அருகிலுள்ள ரயில் நிலையம்   : துவாரகை

பேருந்து வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×