ருத்ரநாத்





	


	



























	




 




	








 




8:12:24 AM         Saturday, May 16, 2026

ருத்ரநாத்

ருத்ரநாத்
ருத்ரநாத் ருத்ரநாத் ருத்ரநாத் ருத்ரநாத் ருத்ரநாத் ருத்ரநாத் ருத்ரநாத் ருத்ரநாத் ருத்ரநாத்
Product Code: ருத்ரநாத்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                                             ருத்திரநாத்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் சிவாலிக் மலையில், கார்வால் கோட்டத்தில், சமோலி மற்றும் ருத்திரபிரயாக் மாவட்டங்களின் எல்லைப் பகுதியில், கல்பேஷ்வரர் கோயில் மற்றும் மத்தியமகேஷ்வர் கோயில் அருகே அமைந்த பஞ்ச கேதார தலங்களில் மூன்றாவதாகும். 

இந்தியாவில் கேதார்நாத், துங்கநாத், ருத்ரநாத், மத்தியமகேஷ்வர் மற்றும் கல்பேஷ்வரர் ஆகிய ஐந்து இடங்கள் பஞ்ச கேதார தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த தலங்களில் சிவபெருமானின் உடல் பாகங்கள், கேதார்நாத்தில் இறைவனின் உடல் பகுதி, துங்கநாத்தில் கைகள், ருத்ரநாத்தில் முகம், மத்தியமகேஷ்வரில் தொப்புள் மற்றும் கல்பேஷ்வரில் தலைமுடியும் தோன்றியதாக நம்பிக்கை உள்ளது. ஐந்து கேதாரங்களும் இமயமலையின் கொடுமுடியான  பனி மூடிய சிகரங்களான நந்தா தேவி, சௌகம்பா, கேதர்நாத், நீலகண்ட்  ஆகியவற்றில் அடிவாரத்தில் அமைந்துள்ளன. திருக்கேதாரம் மந்தாங்கினி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது மற்ற கேதாரங்கள்  அலக்நந்தா மற்றும் மந்தாங்கினி பள்ளத்தாக்கிதிற்கு மேற்கு பகுதியில் அமைந்துள்ளன.

தல சிறப்புகள் : இக்கோயில் மூலவரை நீலகண்ட மகாதேவர் என்பர். ருத்திரநாத் கோயில் கடல் மட்டத்திலிருந்து 3600 மீட்டர் உயரத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. சிவபெருமானின் திருமுகம் ருத்ரநாத்தில் தோன்றியது. எனவே எம்பெருமான் அழகிய திருமுகத்துடன் அருட்காட்சி தருகின்றார். இவ்வாலயத்திலும் ஆலமுண்ட நீலகண்ட சுயம்பு லிங்கமாக அருள் பாலிக்கின்றார். இடப்புறத்தில் ஐந்து சிறு லிங்கங்கள் உள்ளன. வலப்புறத்தில் சரஸ்வதி தேவிக்கு தனி சந்நிதி உள்ளது . ருத்ரநாத கோவிலின் அருகிலே சூர்ய குளம், சந்திர குளம், நட்சத்திர குளம், மனக்குளம் என்னும் குளங்கள் உள்ளன, இவ்வாலயத்தின் அருகிலே வைதாரிணி என்னும் ஆறு ஓடுகின்றது, இறந்த ஆத்மாக்கள் பூலோகத்திலிருந்து தேவலோகம் செல்லும் போது இந்த ஆற்றைக்கடந்து செல்கிறார்கள். இந்த முக்தியாற்றின் கரையில் பித்ருகளுக்கு பிண்டபிரதானம் அளிப்பது மிகவும் விசேஷமானது. இங்கிருந்து நந்தா தேவி, திரிசூலம், நந்தா குண்டி ஆகிய மலைச் சிகரங்களை காணலாம். இவ்வாலயம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது மலையின் மேல் ஏறி பின்னர்  கீழே இறங்கவேண்டும். இந்திரியங்களை அடக்கி வென்று யோகத்தில் அமர்ந்து காமனை கண்ணால் எரித்த மஹேஸ்வரன்தான் ருத்ரன். இத்தலம் அந்த ருத்ர மூர்த்தியின் திருநாமத்தால் ருத்ரநாத் என்று அழைக்கப்படுகின்றது.

கார்வால் ஸ்ரீமாலயன் மலைத்தொடரில் ருத்ரநாத் அமைந்துள்ளது. உயர்ந்த மலைப்பகுதிகளில் காணப்படும் குட்டை மற்றும் வித்தியாசமான அமைப்புகளுக்கு இடையே அடர்ந்த காட்டிற்குள் இந்த கோயில் அமைந்துள்ளது. இங்கு சிவன் நீலகாந்த் மகாதேவ் என அழைக்கப்படுகிறார். குளிர்காலத்தில் சிவன் கீழே இறங்கி கோபேஸ்வரருக்கு வந்துவிடுவார். இங்கிருந்து ஸ்வாமி ருத்ரநாத்துக்குத் திரும்புவதை டோலி யாத்திரை என சிறப்பாக கொண்டாடப்படும். ஆடி மாத பௌர்ணமியன்று நடக்கும். அப்போது சிறப்பு கண்காட்சிகள் நடக்கும். ஏகப்பட்ட பக்தர்கள் கூடுவர். முதலில் உள்ளூர் வனதேவதைக்கு வழிபாடு நடத்தி, பிறகு ருத்ரநாத்தை பூஜிப்பர். வனதேவதை இந்த பகுதி மக்களை கடும்பனி மற்றும் துஷ்ட மிருகம் மற்றும் துஷ்ட தேவதைகளிடமிருந்து காப்பதாக நம்பிக்கை. இதன் அருகில் ருத்ர கங்கை ஓடுகிறது. இங்கு கயாவுக்கு சமமாக, மக்கள் பிண்டம் போடுகின்றனர். பஞ்ச கேதார் பயணங்களிலேயே இதுதான் மிகவும் கடினமானது. டெராடூன்வரை விமானத்தில் சென்று அங்கிருந்து ருத்ரநாத்துக்கு பயணிக்கலாம். அல்லது ரயிலில் ரிஷிகேஷ் வரை சென்று அங்கிருந்து ருத்ரநாத்துக்குச் செல்லலாம். ருத்ரநாத், டெராடூனிலிருந்து 258 கி.மீ. ரிஷிகேசத்திலிருந்து 240 கி.மீ. கோபேஸ்வரர் என்ற இடம்வரை சென்று அங்கிருந்து 20 கி.மீ. ஏறியும் செல்லலாம். ஆனால், தகுந்த வழிகாட்டிகளோடு செல்ல வேண்டும். ருத்ர பிரயாகையில் ஒரு ருத்ரநாத் கோயில் உள்ளது. அது வேறு, இது வேறு.

மகாபாரதப் போருக்குப் பிறகு சிவபெருமானிடம் பாவமன்னிப்பு வேண்டி பாண்டவர்கள் இமயமலைக்கு வந்தனர். அவர்களை சந்திக்க விரும்பாத சிவபெருமான் நந்தி எருதின் உருவத்தை எடுத்துக் கொண்டு மறைந்துவிட்டார். குப்தகாஷியில் அந்த எருதினை பார்த்த பாண்டவர்கள் அதனை பிடிக்க முயன்று தோற்றனர். அதன் பிறகு, சிவபெருமானின் உடல் பகுதிகள் ஐந்து துண்டுகளாக வேறு வேறு பகுதிகளில் கார்வாலை சுற்றிலும் கிடைத்தன. அந்த உடல் பகுதிகள் கண்டெடுக்கப்பட்ட பகுதிதான் இன்றைய பஞ்ச கேதார் என்ற புனிதப்பகுதியாகும். சிவபெருமானின் முகம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தான் ருத்ரநாத் கோவில் கட்டப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் சாகர் மற்றும் ஜோசிமாத் கிராமங்களில் இருந்து மலையேற்றம் செய்வதன் மூலம் ருத்ரநாத் கோவிலை அடைய முடியும். இந்த கோவிலுக்கு அருகிலேயே புனிதமான குளங்களான சூரிய குந்த், சந்திர குந்த், தாரா குந்த் மற்றும் மனா குந்த் ஆகியவை அமைந்துள்ளன.

அனைத்து கேதார்களிலும் ருத்ரநாத்தான் செல்வதுதான் மிகவும் கடினமானது. ருத்ரநாத் செல்ல  மொத்தம் மூன்று வழிகள் உள்ளன. முதல் வழி கோபேஷ்வரிலிருந்து சாகர் என்னும் கிராமம் வரை வண்டியில் சென்று அங்கிருந்து 20 கி.மீ நடைப்பயணம் செய்யலாம். இப்பாதை அடர்ந்த புல் வெளி மற்றும் ஒங்கி உயர்ந்த ஓக் மரங்கள் நிறைந்த பாதைகளின் வழியாக செல்லும் பாதையும் மிகவும் வழுக்கும் என்கின்றனர். இரண்டாவது வழி கோபேஷ்வரிலிருந்து கங்கோல்காம்வ் சென்று அங்கிருந்து பனார் மற்றும் நைலான் வழியாக 17 கி.மீ மலையேறி செல்லும் பாதை. மூன்றாவது வழி கோபேஷ்வரிலிருந்து மண்டல் அனுசுயாதேவி 19 கி.மீ வழியாகும்.  ஆவணி மாத பௌர்ணமி அன்று  மிகவும்  விசேஷம் .  ஆதி சங்கரர் தெற்குப்பகுதி பூசாரிகளை வடநாட்டு ஆலயங்களில் பூசை செய்யும் முறையை ஏற்படுத்தி கலாசார பரிவர்த்தனைக்கு அடிகோலினார் என்றால் மிகையாகாது. பனிக் காலத்தில்  ஐயன் கோபேஷ்வருக்கு எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். ரிஷிகேஷ் நகரத்திலிருந்து கோபேஷ்வர் எனுமிடம் வரை பேரூந்தில் செல்ல வேண்டும். பின்னர் கோபேஷ்வரிலிருந்துசாகர் எனும் கிராமத்திற்கு சிற்றுந்தில் சென்று, பின் கால்நடையாக 20 கி.மீ தொலைவில் உள்ள ருத்திரநாத் கோயிலை அடையலாம். 

ஐந்து கேதாரங்களையும் ஒரே தடவையில் தரிசனம் செய்வது என்பது மிகவும் கடினம். சுமார் 170 கி.மீ நடைப்பயணம் அவசியம் மேலும் சுமார் 16 நாட்கள் கடினமாக நடைப்பயணம் செய்ய வேண்டி வரும். மேலும் தங்குமிடங்களும் உணவும் நாம் நினைப்பது போல் கிடைக்காது. இந்த யாத்திரைகளை கோடைக்காலமான  மே-ஜூன் மாதங்கள் அல்லது பருவ மழை முடிந்த செப்டெம்பர் அக்டோபர் மாதங்களில் மேற்கொள்ளலாம் ஆனால் அப்போது  குளிருக்கு தகுந்து பாதுகாப்புடன் செல்ல வேண்டும். பஞ்ச கேதாரங்களையும் தரிசனம்   செய்தபின் பத்ரிநாதரை சாட்சிக்காக தரிசனம் செய்யவேண்டும்.

அருகிலுள்ள விமான நிலையம் : டேராடூன்

அருகிலுள்ள ரயில் நிலையம்   : ரிஷிகேஷ்

பேருந்து வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×