காஞ்சிபுரம்





	


	



























	




 




	








 




7:08:32 PM         Saturday, May 16, 2026

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
Product Code: காஞ்சிபுரம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                   ஸ்ரீ கர்ணகி அம்பாள் சமேத ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி,  காஞ்சிபுரம்

திருத்தல அமைவிடம் : இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வடக்கில், நெல்லுக்காரத் தெருவின் மையத்தில் சித்ரகுப்தருக்கு ஆலயம் உள்ளது. தமிழ்நாட்டில் சித்ரகுப்தருக்கு இங்கு மட்டுமே ஆலயம் உள்ளது.

மூலவர் : சித்ரகுப்தர்  

சிறப்புகள் : மூலவர் தெற்கு பார்த்த வண்ணம் எழுந்தருள்கிறார். இந்தத் தலத்தில் செல்வ விநாயகர் சன்னதி, இராமலிங்க அடிகள் சன்னதி, ஐயப்பன் சன்னதி, விஷ்ணு துர்கை சன்னதி, நவக்கிரகங்களின் தனிச்சன்னதி என அமைந்து உள்ளன.1907 ஆம் ஆண்டு கோவில் திருப்பணிக்காக தோண்டியபோது கிடைத்த அம்பாள் சமேத சித்ரகுப்த சுவாமியின் சிலையே இன்றும் கருவறையில் இருந்து அருள்கின்றார்.  கேது கிரகத்தின் அதிதேவதையான இவர் ஞானத்திற்கும் மோட்சத்திற்கும் காரகனாகின்றார். கேது பரிகாரத்தலமான இவ்வாலயத்தில் நவக்கிரகங்களும் உடன் இருந்து அருள்கின்றார்கள்.

சித்ரகுப்தரின் புராணக்கதை : எமனின் தந்தையான சூரியனுக்கும் நீளா தேவிக்கும் மகனாக இடக்கையில் ஏடும் வலக்கையில் எழுத்தாணியும் கொன்டு சித்ரா பௌர்ணமி நாளில் பிறந்தவர்தான் சித்ரகுப்தன். இவர் எமனின் உதவியாளன் ஆக வேண்டியே தோற்றுவிக்கப்பட்டவர் ஆவார். பிரபாவதி, நீலாவதி மற்றும் கர்ணகி இவரது துனைவியராவர்.

பார்வதி அம்பாள் சித்திரம் எழுதி உயிர் கொடுத்தார். சித்திரத்தில் உயிர் பெற்றதினால் சித்ரகுப்தர் எனப்பெயர் பெற்றார். காமதேனுவின் வயிற்றில் உதித்தார் என்றும் அதனால் பசும்பால், பசும் தயிர் இவருக்கு அபிஷேகம் நைவேத்யம் செய்யக்கூடாது. எருமைப்பால், எருமை தயிர் தான் அபிஷேகம் நைவேத்யம் செய்ய வேண்டும் என்று சிலர் கூறுகிறார். சித் என்றால் மனம் , அப்தம் என்றால் மறைவு. மனிதனுடைய மனதில் மறைவாக இருக்கக்கூடிய எண்ணங்களை எழுதி அதன் மூலம் அவர்களின் வாழ்க்கை முறைகளை அமைத்து தருகின்றார். அதனால் சித்ரகுப்தர் என்று பெயர். தனியொரு நபராக கோடிக் கணக்கான மக்களின் பாவ புண்ணியங்களை மேற்கொள்ளும் பணி கடினமாக இருக்கவே ஈசனிடம் எமதர்மன் வேண்டிக் கொள்ளும் பொருட்டு அருகில் நின்றிருந்த பிரம்மனிடம் எமதர்மனுக்கு ஒரு உதவியாளரை தர வேண்டியது உமது பொறுப்பு என்றார்.

இதனை எமனின் தந்தையான சூரிய பகவானுக்குத் தான் அச்செயலை ஈடேற்றும்படி செய்ய இயலும் என அறிந்த பிரம்மா சூரியனுக்குள்ளே ஓர் அக்னியை தோற்றுவித்தார். மனதுக்குள் புகுந்த மாயத்தால் காதல் ஏற்பட்டது. அதன் பொருட்டு சூரியன் வானில் சஞ்சரிக்கும் போது எதிர்ப்பட்ட வானவில்லை ஏழு வண்ணங்களை ஒருங்கிணைத்து ஒரு பெண்ணாக உருமாற்றி அப்பெண்ணை நீளா தேவி என்னும் பெயரிட்டு அவளுடன் வாழ்ந்து வந்தார். அதன் காரணமாக ஒரு சித்திரைத் திங்களில் பௌர்ணமி நாளில் பிறந்த புத்திரனுக்கு சித்திரபுத்திரன் என்று பெயரிட்டனர். அக்குழந்தையின் இடக்கையில் ஏடும் வலக்கையில் எழுத்தாணியுமாக தோன்றினார். பல வண்ணங்களை உணர்த்தும் பொருட்டுத்தான் சித்ரகுப்தருக்கு பல வண்ண துணியை சாற்றுவார்கள். சித்ர குப்தர் காஞ்சியில் சிவபெருமானை கடுமையாக பூஜை செய்தார். அதன் பயனாக அறிவாற்றலும், எல்லாசித்திகளும் கிடைத்தன. ஆகவே, தனது சக்தியினை சோதிக்க விரும்பியதால், படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் போது பிரம்மன் உட்பட அனைவரும் அதிர்ந்தனர். இதனை சூரியனிடம் தெரிவித்தனர். உடனே சூரியன் மகனிடம்; மக்களின் இரவு, பகல் என்று பொழுதினை கணக்கிட்டு மக்களின் வாழ்க்கையை நடைமுறைப்படுத்துபவன் நான். அதே போல நீயும் மக்களின் கணக்கினை அதிலும் பாவ புண்ணியத்தை கணக்கெடுப்பாயாக. படைப்புத் தொழில் உனக்கன்று அது பிரம்மனின் தொழில் என அறிவுறுத்தினார்.

மேலும் மகனுக்கு திருமணம் செய்தால் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வருவான் என்பதனை உணர்ந்த சூரியன் சித்ரகுப்தருக்கு மனைவியாக வரவேண்டி தவம் இயற்றிய கன்னியர்களான சிவாம்சத்தில் உதித்து சத்ரிய தர்மத்தை வகித்த மயப்பிரம்மனின் பெண் பிரபாவதி மனுப்பிரம்மனின் மகள் நீலாவதி அந்தனர் தர்மத்தை வகித்த விஸ்வப் பிரம்மாவின் அன்பு மகளான கர்ணகி ஆகிய மூவருமே தன் மகனுக்கு ஏற்ற மனைவியர் என்று திருமணம் செய்வித்தார். இந்தஆலயத்தில் கர்ணகி அம்பாள் மட்டும் தான் உள்ளார். சித்ரகுப்தன் பணியினை மறந்து சந்தோஷமாக குடும்பம் நடத்தியதில் கலவரம் அடைந்த எமதர்மன் நேராக தந்தை சூரியனிடம் சென்று தன் குறையை விளக்கினார். சித்ரகுப்தனின் பொறுப்புகளை விளக்கி எமதர்மனுக்கு உதவி புரிய அனுப்பி வைத்தார். தன் மனைவியருடன் எமபுரிக்கு புறப்பட்ட சித்ரகுப்தர் அங்கே அமர்ந்து மக்களின் பாவ புண்ணிய கணக்குகளை எந்த தவறும் வராதபடி இப்பொழுதும் கணக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்.

பிரம்மா மனிதர்களுள் பிராமணர், சத்திரியர்,வைசியர் மற்றும் சூத்திரர் என நான்கு பிரிவுகளினை ஏற்படுத்துகின்றார். பின்னர் யமன் தனக்குள்ள பணிச்சுமைகளினைப் பற்றி பிரம்மாவிடம் முறையிட மையினை உடைய கிண்ணத்தினை ஒரு கையிலும் சிறகால் ஆன எழுதுகோலினை மறு கையிலும் ஏந்தியவாறு தோன்றுகின்றார் சித்திரகுப்தனார். இவர் தோன்றியதன் பின்னரே கயஷ்தா என்ற ஜந்தாவது ஜாதியும் தோற்றம் பெற்றது. கடல் நீர்ப்பரப்பில் நீலாதேவி எனும் பெண் தோன்றி, சூரியனின் மீது ஆசைப்பட்டு சூரிய பகவானைத் தழுவினாள். இதனால் அவளுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் நீலாதேவி அந்த கடல் நீர் பரப்பினுள் மறைந்தாள். அந்தக் குழந்தை பிறந்த நேரம் -சித்திரை மாதம் பௌர்ணமி தினம். அதாவது சித்ரா பௌர்ணமி. சித்திரை நட்சத்திரத்தில் தோன்றிய அந்தக் குழந்தையே சித்ரகுப்தர் ஆவார். பிறக்கும் போதே அழகாகவும், இடக்கையில் ஓலைச்சுவடிகள், வலக்கையில் எழுத்தாணி கொண்டும் சித்ரகுப்தர் பிறந்தார். இவர் இமயமலையில் கடும் தவம் புரிந்து பல சக்திகளைப் பெற்றார். 

தல வரலாறு : 1907-ல் கோயில் திருப்பணி மேற்கொண்டபோது பூமிக்கடியில்தோண்டும் போது மதில்கள் மற்றும் கட்டிடங்கள் தெரிந்தது. அந்த கட்டிடத்தினுள்ளே ஒரே பீடத்தில் அமைந்த அம்பாள் சமேதராக சித்ரகுப்தர் சிலை ஒன்று கிடைத்தது. இதனுடைய காலம் சரியாக தெரியவில்லை. பூமியில் கண்டெடுக்கப்பட்ட சிலையினை கருவறையில் வைத்துள்ளனர். ஆனால் சென்னி வளவன் என்ற பிற்கால சோழ மன்னனின் காலத்தில் அமைச்சராக இருந்த துலாபாரமண்டபம் கனகராயரால் செய்யப்பட்ட உற்சவரும் அம்பாளும் தனித்தனியாக உள்ளது. இதுவே பூஜையில் இருந்து வீதியுலா வருகின்றது. சித்ரா பௌர்ணமியன்று நவகலச பூஜை திருக்கல்யாண உற்சவம், அன்னதானம் நடைபெற்று வருகின்றது.

நவக்கிரகங்களில் எட்டு கிரகங்கள் 1962-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிலவ வருடம் தை மாதம் இரண்டரை நாட்கள் 8 கிரகங்களும் ஒரே வீட்டில் அதாவது மகர ராசியில் இருந்தபோது லோகமத்திற்காக வெகு சிறப்பாக சிறப்பு பூஜைகள் நடந்துள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

ஞானத்திற்கும் மோட்சத்திற்கும் சித்ரகுப்தர் அதிபதி. நவக்கிரகத்தில் கேது கிரகம் ஞானத்திற்கும் மோட்சத்திற்கும் காரகத்துவம் பெறுகிறார். ஆதலால் கேது கிரகத்தின் அதிதேவதை சித்ரகுப்தர் ஆகிறார். கேதுதிசை, புத்தி, அந்தரம் மற்றும் கேதுவினால் வரும் தோஷங்கள், பூர்வ ஜென்ம பாவங்கள், தடைபடும் திருமணம், மக்கட்செல்வம் கிடைக்க மனக்குழப்பம் அகல இவர் துணை புரிகிறார். ஆயுள் பாவ தோஷங்கள், கடன்கள், வழக்குகள் போன்ற கெட்டபலன்கள் நீங்க இவரை வழிபடுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும். இத்தகைய சக்தி வாய்ந்த சித்ரகுப்தருக்கு என்று தனிக்கோயில் பழமை வாய்ந்த அற்புத திருக்கோயில் காஞ்சிபுரத்தில் மட்டுமே உள்ளது.  ஆருத்ரா உற்சவம் சித்ரா பௌர்ணமி திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

சித்திரை பௌர்ணமியில் சித்ர குப்தருக்கு விரதமிருந்தால் விசேஷம். அன்று சித்ரகுப்தரை தரிசித்து அருள் பெறுவது வெகு சிறப்பாகும் .7 தீபம் ஏற்றி, 7 பிரதட்சணம் செய்து வழிபடுவது சிறப்பாகும். மேலும் 200 கிராம் கொள்ளு, 200 கிராம் உளுந்து, 1 ½ மீட்டர் பூ போட்ட பல வர்ண சீட்டி துணி சித்ரகுப்தருக்கு சாற்றி அர்ச்சனை செய்து கொள்ளு, உளுந்தை வீட்டிற்கு எடுத்துச் சென்ற இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் பால் கறக்கும் பசுவிற்கு தானம்கொடுக்க அனைத்து தோஷங்களும் நீங்கும்.

திருக்கோவில் காலை 6.00 மணி முதல் மதியம் 10.00 வரையிலும்  மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம், அரக்கோணம் 

பேருந்து வசதி  : உண்டு 

உணவு வசதி :  உண்டு

தங்கும் வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×