மானசரோவர்





	


	



























	




 




	








 




9:47:59 PM         Friday, May 01, 2026

மானசரோவர்

மானசரோவர்
மானசரோவர் மானசரோவர் மானசரோவர் மானசரோவர் மானசரோவர் மானசரோவர் மானசரோவர் மானசரோவர் மானசரோவர் மானசரோவர் மானசரோவர் மானசரோவர்
Product Code: மானசரோவர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

மானசரோவர் ஏரி

அமைவிடம் : இந்தியா- சீனா எல்லையான  இமயமலைத் தொடரில் அமைந்துள்ள கைலாச மலைக்கு செல்லும் வழியில் மானசரோவர் ஏரி கடல் மட்டத்திலிருந்து  4590மீ உயரத்தில் அமைந்துள்ளது.
இமய மலைத்தொடரில் இருந்துதான் சிந்து, சட்லெச்சு, பிரம்மபுத்திரா ஆறும் உற்பத்தியாகிறது. இதனருகே புகழ் மிக்க இரு ஏரிகள் உள்ளன. மானசரோவர்  நன்னீர் ஏரியும், உவர் நீர் கொண்ட இராட்சதலம் ஏரியும் ஆகும். மானசரோவர் ஏரி உலகிலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரியாகும்.
மானசரோவர் கடல் போல விரிந்து கிடக்கிறது அதில் நீராடினாலே பிறவி நீங்கி முக்தி கிடைத்துவிடும் என்று பல மத நூல்களும் கூறுகின்றன. 32கி.மீ. சுற்றளவுள்ள மானசரோவரைச் சுற்றிவருவதை பரிக்ரமா என்கிறார்கள். நடக்க முடியாதவர்கள் குதிரைமேல் ஏறிச் சுற்றுகிறார்கள். பிரம்மாவின் மனதிலிருந்து உண்டானது என்று கருதப்படும் மானசரோவர் அருகில் உள்ள மந்ததா மலை விநாயகரும், முருகனும் அவதரித்த இடமாகும். முட்டை வடிவிலான மானசரோவர் ஆவுடையார் போன்றதென்றும், கைலாயம் லிங்கம் போன்றதென்றும், இரண்டும் சேர்ந்து சிவலிங்கவடிவம் என்றும் கருதப்படுகிறது. மானசரோவர் தேவி உமையின் வடிவம் என்றும் கூறப்படுவதுண்டு. ஜெய்தி மானசரோவர் என்ற இடத்தில் மூதாதையர்களை வழிபடுவது விசேஷமாகும். 
மானசரோவர் பரிக்ரமம் வரும்போது சுகு, ஜெய்தி ஆகிய இரண்டு இடங்களிலும் கயிலைமலையின் பிரதிபிம்பத்தை மானசரோவரில் காண முடியும். இக்குளம் 51 சக்தி பீடங்களில் தேவியின் வலது உள்ளங்கைவிழுந்த பீடமாகும். இதன் அருகே இராட்சதலம் ஏரியும் உள்ளது. இந்த இராட்சதலம் ஏரியின் தீவில் இராவணன் தவம் புரிந்ததாக மேற்கில் சுமார் 10 கி.மீ தூரத்தில் தொலைவில் உள்ளது. கைலாச யாத்திரை செல்லும் யாத்திரிகர்கள் இந்த ராட்சதலம் ஏரியில் நீராடும் வழக்கம் கிடையாது. சூகொம்பா புத்தர் கோயிலை தரிசித்துவிட்டு, மானசரோவரின் ஒரு பகுதியான கங்காசூவில் மாயாதேவி கோவில் உள்ளது. கைலாயத்தின் வாயிலுக்கு 17000 அடி உயரத்திலிருக்கும் தார்ச்சன் என்ற ஊர், இங்கிருந்து கைலாயத்தின் மிக நெருங்கிய இடமான அஷ்டபத் என்ற இடம் உள்ளது. இங்குதான் முதல் ஜைன தீர்த்தங்கரரான ரிஷபதேவர் முக்தி பெற்றார். யமத்வார் வழியாக நடந்து, அதிசய நீர்வீழ்ச்சிகளைக் கடந்து, கைலாயம் சிதம்பரம் நடராஜர் கோயிலை நினைவூட்டுவதாக உள்ளது. 
மானசரோவர் ஏரி வட்ட வடிவில் அமைந்துள்ளது. இதன் சுற்றளவு 88 மீட்டர் ஆகும். இதன் ஆழம் மிக அதிக அளவான 90 மீ ஆழம். இதன் அடிப்பரப்பளவு 123.6 சதுர மைல்கள். மானசரோவர் ஏரியானது, இராட்சதலம் ஏரியுடன் கங்கா கால்வாயால் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியின் நீரைப் பருகினால் பருகுபவர் இறப்பிற்குப் பின் சிவபெருமானைச் சென்றடைவர் என்றும், அவர் 100 ஜென்மத்தில் செய்த பாவத்தைப் போக்குவர் என்றும் நம்பப்படுகிறது. கைலாயமலையைப் போலவே, மானசரோவர் ஏரியும் புனிதத் தலமாக கருதப்படுகிறது. சாம்டோ போருக்குப்பின், இப்பகுதியானது யாத்ரீகர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. 1951-லிருந்து 1981- வரை வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஏரியின் கரையில் துறவிகளின் மடங்கள் அமைந்துள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்கது பழமையான ஜியு மடம், இது மலை உச்சியில் கட்டப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு மலையிலிருந்து செதுக்கப்பட்டதைப் போன்று தோற்றமளிக்கிறது. புத்தர் பல்வேறு தருணங்களி்ல் இங்கு சென்று தங்கி தியானத்தில் ஈடுபடுவார். 
மானசரோவரத்தை 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் கருதுகின்றனர். இங்கே மானஸாதேவியாக எழுந்தருளி அருள்பாலிப்பதாக ஐதீகம். சக்தி தேவியின் இடது குதிகால்பாகம் விழுந்த பீடமே மானசரோவர். ஒரு சிலர் அம்மையின் இடது கை இங்கு விழுந்ததாகவும், அக்கரம் விழுந்த வேகத்தில் அங்கு பெரிய பள்ளம் ஏற்பட்டதாகவும், பின்னர் பிரம்ம தேவர் அந்த பள்ளத்தை மானசரோவர் ஏரி ஆக்கினார் என்றும் நம்புகின்றனர்.
சிறப்புகள்: ஸ்படிகம் போன்ற நீர் நிறைந்த இந்த மானசரோவர் ஏரியின்நீர் லேசான வெதுவெதுப்பாக இருக்கும். கங்கோத்திரில் கங்கை, கேதார்நாத்தில் மந்தாகினி, பத்ரிநாத்தில் அலக் தந்தா நதிகளின் நீரைவிட மானசரோவர் ஏரி நீர் வெதுவெதுப்பாக இருக்க காரணம் சூரிய ஒளி பட்டு கொண்டு இருப்பது. இதை சுற்றிலும் பனி மூடிய மலைகள். நடுவில் ஒரு பெரிய கண்ணாடி பளிச்சிடுவது போன்ற அமைப்பு.  
தல வரலாறு : ஒரு சமயம் பிரம்மாவின் புத்திரனான முனிவர் மற்றும் பல முனிவர்கள் இம்மலையில் சிவ பெருமானை குறித்து தவமியற்றினர். 12 வருடங்கள் கழித்து சிவபெருமானும் பார்வதியும் காட்சி கொடுத்தனர். அப்போது அவர்களுக்கு பூஜை செய்ய அந்த மலையில் தண்ணீர்  இல்லாததால் முனிவர்கள் அனைவரும் பிரம்மாவை வேண்ட அவரும் தனது மனதின் சக்தியினால் மானசரோவர் தடாகத்தை ஏற்படுத்தினார். அப்போது அந்த நீரிலிருந்து ஒரு சொர்ணலிங்கம் தோன்றியது என்பது ஒரு ஐதீகம். பின் முனிவர்கள் இந்த சொர்ணலிங்கத்தை வழிபட்டனர் என்பது ஐதீகம்.
மானசரோவரை சுற்றி 8 புத்த விகாரங்கள் உள்ளன. வலம் வரும் போது வண்ண மணலையும், பலவிதமான கற்களையும் நாம் காணலாம். இக்கரையில் கிடைக்கின்ற கல் ஒவ்வொன்றும் சிவலிங்கம் என்பது ஐதீகம். கணேசர், கைலாயமலை, மானசரோவர், ஓம் பொறித்த கற்கள், சங்கு வடிவம் என்று அவரவர்கள் கர்ம பலனுக்கேற்ப பலவகையில் கற்கள் கிடைக்கின்றன. இயற்கை அளித்த ஒரு அற்புத அன்பளிப்பு இந்த மானசரோவர் தீர்த்தம், இதில் நீராடுவது மிகவும் புண்யமானது. உடலும் மனமும் பவித்ரமடைகின்றது. பித்ருகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் மானசரோவரில் செய்வது மிகவும் விசேஷமானது. இந்துக்கள் வசந்த காலத்தில் மட்டுமே மானசரோவரை கிரி வலம் வருகின்றனர், ஆனால் திபெத்தியர்கள் குளிர் காலத்திலும் தடாகம் உறைந்துள்ள பனியாக இருக்கும் போதும் கிரிவலம் வருகின்றனர். ஆனால் திபெத்தியர்கள் இத்தடாகத்தில் குளிப்பதில்லை, ஏனென்றால் இதன் தண்ணீர் தேவர்களுக்கு ஏற்பட்டது என்பது இவர்கள் நம்பிக்கை, ஆனால் தண்ணீர் இவர்கள் அருந்துகின்றனர். திபெத்திய புராணங்களின் படி பூமியாகிய விராட புருஷனின் தொப்புள் கொடி இந்த மானசரோவர் தடாகம். இந்த தாடாகத்திலிருந்து நான்கு திசைகளிலும் நான்கு ஆறுகள் பாய்கின்றன. வடக்கிலிருந்து சிங்கமுக நதி. கிழக்கிலிருந்து குதிரைமுக நதி, தெற்கிலிருந்து மயில்அலகு நதி, மற்றும் மேற்கிலிருந்து யானைவாய் நதி, நமது விஷ்ணு புராணத்திலும் திருக்கைலாயத்திலிருந்து நான்கு நதிகள் நான்கு திசைகளில் பாய்வதாக கூறியுள்ளதை அறியலாம்.
கைலாஷ்-மானசரோவர் யாத்திரை செல்ல இரண்டு வழிகள் மட்டுமே உண்டு. ஒன்று நேபாளத் தலைநகர் காட்மாண்டு வரை விமானத்தில் சென்று விட்டு அங்கிருந்து தரைமார்க்கமாக சீன எல்லையைக் கடந்து கைலாய மலையை அடைவது. இது சற்று எளிதானப் பயணம். மற்றொரு வழி, டெல்லியில் இருந்து சாலை வசதி உள்ளவரைக்கும் வாகனத்தில் போய், பிறகு காட்டிலும் மலையிலும் நடந்து திபெத் பகுதியை அடைந்து பிறகு மீண்டும் வாகனத்தில் சென்று பின்னர் மீண்டும் நடந்து கைலாசமலையை வலம் வருவது. மானசரோவர் வலம் வர பேருந்தில் இரண்டு நாட்கள் ஆகின்றன.  நடப்பது சிரமம் என்பதால் குதிரைகளையும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
பயணிக்க உகந்த காலம் : ஆண்டு முழுவதும் மே மாதம்  முதல் அக்டோபர் வரை 
அருகிலுள்ள விமான நிலையம் : டேராடூன் 
அருகிலுள்ள ரயில் நிலையம் : லக்னோ, ராம்நகர், ரிஷிகேஷ்,கொத்வாரா, ஹரித்வார் 
பேருந்து வசதி  : உண்டு 
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×