041. திருவயிந்திரபுரம் (அயிந்தை)





	


	



























	




 




	








 




10:59:59 PM         Friday, May 01, 2026

041. திருவயிந்திரபுரம் (அயிந்தை)

041. திருவயிந்திரபுரம் (அயிந்தை)
041. திருவயிந்திரபுரம் (அயிந்தை) 041. திருவயிந்திரபுரம் (அயிந்தை) 041. திருவயிந்திரபுரம் (அயிந்தை) 041. திருவயிந்திரபுரம் (அயிந்தை) 041. திருவயிந்திரபுரம் (அயிந்தை) 041. திருவயிந்திரபுரம் (அயிந்தை) 041. திருவயிந்திரபுரம் (அயிந்தை) 041. திருவயிந்திரபுரம் (அயிந்தை) 041. திருவயிந்திரபுரம் (அயிந்தை) 041. திருவயிந்திரபுரம் (அயிந்தை) 041. திருவயிந்திரபுரம் (அயிந்தை)
Product Code: 041. திருவயிந்திரபுரம் (அயிந்தை)
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                             தேவநாத பெருமாள், திருவகிந்திபுரம்  (அயிந்தை)
 
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள கடலூர் மாவட்டத்திலிருந்து மேற்கே 5 கி.மீ தொலைவில் உள்ளது. அஹீந்திரன் என்று அழைக்கப்படும் திருவனந்தாழ்வான் பூசித்த தலமாதலால், இது 'அயிந்திரபுரம்' என்னும் பெயர் பெற்றது. 

மூலவர்           :    தெய்வநாயகன் 

உற்சவர்        :    மூவராகிய ஒருவன், தேவநாதன், திவிஷந்நாதன்,   விபுதநாதன், தாஸஸத்தயன், அடியவர்க்கு மெய்யன்

தாயார்             :    ஹேமாம்புஜவல்லி (வைகுந்த நாயகி)
 
தீர்த்தம்            :    கருடநதி, சந்திர தீர்த்தம் சேஷ தீரத்தம் (பூதீர்த்தம்)

விமானம்         :    சந்த்ர விமானம், சுத்தஸத்வ விமானம்

மங்களாசாசனம்  :    திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்

தலச் சிறப்புகள்: மூலவர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். உற்சவர் மூலவராகிய ஒருவன் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரின் சின்னங்களையும் காணலாம். உற்சவரின் திருமேனியில் வலது உள்ளங்கையில் பிரம்மனின் தாமரை மலரும், நெற்றியில் சிவன் சின்னமான சங்கு சக்கரங்களும் காணப்படுகின்றன. சந்நிதியில் மார்க்கண்டேயர், பூமிதேவி, பிருகுமுனி உள்ளனர். கோயிலுக்குள் சீதாலட்சுமண ஹனுமானுடன் கோதண்டராமர் மற்றும் தேசிகர் சந்நிதிகள் விசேஷம். இக்கோயிலுக்கு அருகில் உள்ள ஒளஷதகிரி என்ற குன்றின் மேல் ஹயக்ரீவர் சந்நிதி இருக்கிறது. அருகில் கருடநதி பாய்கிறது.

தல வரலாறு : ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்ய பெற்ற திவ்யதேசங்கள் 108-ல் இந்த கோவிலும் ஒன்றாகும். இந்த திருக்கோவில் பல்வேறு காலங்களில் அரசர்கள் பலரால் அவ்வப்போது கட்டப்பெற்று புதுப்பிக்கப் பட்டுள்ளது. ஒரு காலத்தில் தேவர்கட்கும், அசுரர்கட்கும் போர் ஏற்பட்டு அசுரர்கள் வெற்றி பெற்றனர். தேவர்கள் திருமாலிடம் விண்ணப்பிக்க அவர்களுக்கு தேவ ஸ்ரீமந்நாராயணன் கருட வாகனத்தின் மேலிருந்து போரிட்டு, இறுதியில் அவர் சக்ராயுதத்தை ஏவ, அது சகல அசுரர்களையும் அழித்தது. இந்நிலையில் அசுரர்களுக்கு உதவ சிவன் சூலாயுதத்தை ஏவ அதுவும் அச்சக்கரத்தையே சார்ந்து நிற்க அந்நிலையில் சிவன் ஞான திருஷ்டியால் யார் என்று காண, ஸ்ரீமந்நாரயணன் தன் மும்மூர்த்தி வடிவத்தை சிவனுக்கு காண்பித்தார். சிவன் அவ்வடிவை துதித்து நிற்க சக்ராயுதத்தை ஏற்றுக் கொண்டு சூலாயுதத்தையும் சிவனிடமே சேர்ப்பித்து, ரிஷிகள், தேவர்களின் வேண்டுகோளின்படி அவ்விடத்திலேயே கோயில் கொண்டார்.

கருடனால் கொண்டு வரப்பெற்ற கெடிலம் நதிக்கும், ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை இலங்கைக்கு கொண்டு செல்கையில் அதன் ஒரு பாகம் வீழ்ந்து உருவாகிய அவுசதமலைக்கும் இடையே அமைந்துள்ளது இந்த தேவநாதசாமி கோவில். இந்த கோவில் நடுநாட்டு திருப்பதிகளில் ஒன்றாகும். கோவிலின் பிரதான மூர்த்தியான தேவநாத பெருமாள் நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் காட்சி தருகிறார். இந்த கோவிலில் கருட பகவானால் கொண்டு வரப்பெற்ற கெடில நதியும், ஸ்ரீஆதிசேஷன் தன் வாலினால் அமைத்த சேஷக்கிணறும், பிரம்ம தீர்த்தம், பூ தீர்த்தம் மற்றும் லட்சுமி தீர்த்தம் என 5 வகை தீர்த்தங்கள் உள்ளன.

திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சித்திரை மாதம் 10 நாட்கள் தேவநாதசாமிக்கும், புரட்டாசி மாதம் 10 நாட்கள் தேசிகருக்கும் பிரம்மோற்சவங்கள் நடைபெற்று வருகிறது. இதுதவிர ஆடிப்பூரம், பகல் பத்து, ராப்பத்து, வைகுண்ட ஏகாதசி முதலிய உற்சவங்களும் நடைபெற்று வருகிறது. மொத்தத்தில் இந்த கோவிலில் 12 மாதமும் ஏதாவது ஒரு திருவிழா நடந்து கொண்டே இருக்கிறது. திருமண தடை நீக்கும் தலமாக இந்த கோவில் விளங்குகிறது. பெரும்பாலான பக்தர்கள் தங்களது மகன் மற்றும் மகளின் திருமணத்தை இந்த கோவிலில் வந்து நடத்துவது என்று வேண்டிக்கொள்வார்கள். திருமணங்கள் கைகூடியதும் இங்கு வைத்து திருமணத்தை நடத்துகிறார்கள். இதனால் ஒவ்வொரு முகூர்த்த நாட்களிலும் குறைந்தது 100 திருமணமாவது நடக்கிறது. இதில் அதிகப்பட்சமாக 222 திருமணம் வரை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருமண நிகழ்ச்சிக்காக மண்டபமும் கோவில் சார்பாக உள்ளது. 

திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி மாதம் 4 சனிக்கிழமைகளிலும் வெகுவிமர்சையாக விழா நடந்து வருகிறது. அதிகாலையில் 2 மணிக்கு பெருமாள் விஷ்வரூப தரிசனம் நடக்கிறது. சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிக்கப்படுவார்கள். இதனை தொடர்ந்து மாலையில் சாமி வீதி உலா நடைபெறும். மேலும் புரட்டாசி மாதத்தில் முக்கிய விழாவாக தேவநாதசாமியின் பக்தராக இருந்து தியானம் செய்து முக்தி அடைந்த தேசிகர் மகா உற்சவம் நடக்கிறது. தினமும் காலை மற்றும் மாலையில் பல்லக்கு, தங்க விமானம், சூரிய பிரபை, யாளி வாகனம், பிள்ளைகிளை வாகனம், சந்திர பிரபை, மோகன அவதாரம், வெள்ளி சிம்ம வாகனம், வெண்ணைத்தாழி சேவை, யானை வாகனம், சூர்ணாஅபிஷேகம், தங்க விமானம், பேட்டை உற்சவம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தேசிகர் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெறுகிறது.  

திருவந்திபுரம் தேவநாதசாமி திருப்பதி பெருமாளுக்கு அண்ணன் என்று கருதப்படுகிறார். எனவே திருப்பதியில் நேர்த்திக்கடன் செலுத்த முடியாவிட்டால் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினால் போதுமானது என கூறப்படுகிறது. அதன்படி பக்தர்கள் திருப்பதிக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தாவிட்டாலும் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி மாதத்தில் தங்கள் நேர்த்திக்கடனாக மொட்டையடித்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதுமட்டுமன்றி புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அனைத்து சனிக்கிழமைகளிலும் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகிறார்கள். இரவு கோவில் வளாகம் அருகே தங்கி விட்டு அதிகாலையில் பெருமாளை தரிசித்து செல்கின்றனர். புரட்டாசி மாதம் வரக்கூடிய அனைத்து சனிக்கிழமைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

இந்த கோவிலில் புரட்டாசி மாதம் அதிகாலை 5.00 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு 9.00 மணிக்கு நடை சாற்றப்படும். மற்ற மாதங்களில் காலை 6.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12.00 மணிக்கு சாற்றப்படும். பின்னர் மாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9.00 மணிக்கு நடை சாற்றப்படும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை

அருகிலுள்ள ரயில் நிலையம் :  கடலூர்

பேருந்து  வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×