புண்டரீகாட்சன், திருவெள்ளறை (வேதகிரி. சுவேதகிரி)
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சி மாவட்டத்தில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துறையூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் திருவெள்ளரையில் நின்று செல்லும். பேருந்து நிறுத்தத்தில் இருந்து கோயில் 1 கி.மீ தொலைவில் உள்ளது. திருச்சியில் இருந்து 19 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
மூலவர் : புண்டரீதாக்ஷன்
உற்சவர் : செந்தாமரைக்கண்ணன்
தாயார் : செண்பகவல்லி. பங்கயச்செல்வி
தல மரம் : வில்வம்.
தீர்த்தம் : மணிகர்ணிகா, சக்ர, புஷ்கல, வராக, கந்த, பத்மப் பொய்கை
பாடியவர்கள் : திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார்
மங்களாசாசனம்: பெரியாழ்வார் - 11 பாசுரங்கள் , திருமங்கையாழ்வார் -13
விமானம் : விமலாக்குறுத்தி விமானம்
தலச் சிறப்புகள் : 108 திவ்யதரிசனங்களுள் நான்காவது உள்ள திருக்கோவில் திருவெள்ளறை. புண்டரீகாட்சன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். எங்குமில்லாத வகையில் இக்கோயிலில் உத்தராயண வாசல் என்றும் தட்சிணாயன வாசல் என்றும் இரண்டு வாசல்கள் உள்ளன. தை முதல் ஆனி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆனி முதல் மார்கழி வரை தட்சணாயன வாசல் வழியாகவும் கோயிலில் பெருமானைத் தரிசிக்கச் செல்ல வேண்டும். சிபிச்சக்கரவர்த்திக்கு ச்வேத வராகனாக (வெள்ளைப் பன்றி) பெருமாள் காட்சி தந்ததால் பெருமாளுக்கு ச்வேதபுரிநாதன் என்று பெயர் ஏற்பட்டதாக தலபுராண வரலாறு கூறுகிறது. இதன் காரணமாகவே இத்தலத்திற்கும் ஸ்வேதபுரி நட்சத்திரம் என்றும் பெயர் வந்தது.
கோயில் சுமார் 50 அடி உயரத்தில் வெண்மையான பாறையால் ஆன ஒரு குன்றின் மீது அமைந்துள்ளதால் வெள்ளறை என்ற பெயர் ஆனது. முன் கோபுரம் பூர்த்தியாகாத நிலையில் உள்ளது. புண்டரீகன் என்ற யோகி திருவெள்ளறையில் ஒரு நந்தவனம் அமைத்து அதில் வளர்ந்த துளசியால் பெருமாளையும் தாயாரையும் பூஜித்து வந்தார். இதில் மகிழ்ந்த பெருமாள் இவருக்கு தரிசனம் கொடுத்தார். இதனாலேயே இங்குள்ள பெருமாள் புண்டரீகாட்சப்பெருமாள் 'ஆனார். செண்பகவல்லி தாயாருக்குத் தனிச் சன்னிதி உண்டு. தாயாரின் உற்சவமூர்த்திக்கு பங்கஜவல்லி என்ற திருநாமம். திவ்யகந்த, க்ஷீரபுஷ்கரிணிகள், மணிகர்ணிகா என்று ஏழு தீர்த்தங்கள் மதிலுக்குள்ளாகவே அமைந்துள்ளன.
சக்கரத்தாழ்வார், ஆண்டாள், உடையவர் இவர்களுக்குத் தனிச்சன்னிதிகள் உள்ளன. ஸ்ரீதேவி, பூதேவி, சூர்ய சந்திரர்கள், ஆதிசேசன் முதலியவர்கள் மனித உருவில் வந்து பக்கத்தில் நின்று கைங்கர்யம் செய்வது தனிச்சிறப்பு. ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி மூன்று நாச்சியார்களுக்கு மூன்று திவ்ய தேசங்கள் பெருமை. இதில் ஸ்ரீதேவி நாச்சியாருக்கு ‘திருவெள்ளரை’. தாயாருக்கு சிறப்பம்சம் உள்ள இவ்விடத்தில் அவரை வணங்கிய பின்னே இறைவன் சந்நதிக்கு செல்ல இயலும்.பல்லக்கு புறப்பாடு ஆகும்பொழுதும் தாயார் பல்லக்கு முன்செல்ல, மூலவர் பல்லக்கு அதை தொடர்ந்து செல்லும். மற்ற இடங்களில் பெருமாள் முன் செல்ல தாயார் பின்தொடர்வார்.
பெருமாளைத் தரிசிக்க 18 படிகள் கடக்க வேண்டும். இவை பகவத் கீதையின் 18 அத்தியாயங்களைக் குறிப்பது. அடுத்த கோபுர வாயிலில் உள்ள நான்கு படிகள் நான்கு வேதங்களைக் குறிக்கின்றன. பலிபீடத்துக்கு அடுத்துள்ள ஐந்து படிகள் பஞ்சபூதங்கள்.
இரவில் நேரம் கழித்து வந்த பெருமாளைத் தாயார் ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்ட நாழி கேட்டான் வாசல் உண்டு.
ஸ்ரீரங்கத்தைக் காட்டிலும் தொன்மையான தலம் என்பதால், ஆதிவெள்ளறை என்று கூறப்படுவதுண்டு. வெண்மையான பாறையால் ஆன தொன்மையான மலை எனப் பொருள்படும். அயோத்திக்கு அதிபதியாய் விளங்கிய சிபி சக்ரவர்த்தி, தனது படை பரிவாரங்களுடன் திருவெள்ளறையில் தங்கியிருந்தார். அங்கு தோன்றிய வெள்ளைப் பன்றியை(ஸ்வேத வராஹம்) துரத்த, அது பக்கத்தில் உள்ள புற்றில் சென்று மறைந்தது. இதைக்கண்டு சிபி ஆச்சர்யமுற்றார். அங்கேயே தவமிருந்து மார்க்கண்டேயரை அணுகி வினவ, அவர் சொற்படி பன்றி மறைந்த அப்புற்றுக்குப் பாலால் திருமஞ்சனம் செய்து வழிபட்டார். உடனே பெருமாள் சிபி சக்ரவர்த்திக்கும், மார்க்கண்டேயருக்கும் நின்ற திருக்கோலத்தில் காட்சியளித்தார். இதனாலேயே ‘ஸ்வதே வராஹத் துருவாய் தோன்றினான் வாழியே’ என்ற திருப்பெயரும் இப்பெருமாளுக்கு உண்டாயிற்று.
செங்கமலவல்லித் தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. தசாவதாரம், பன்னிரு ஆழ்வார்கள், லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆஞ்சநேயர், மணவாளமாமுனிகள், ராமானுஜர், உய்யக்கொண்டார், எங்களாழ்வான் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. கோயிலைச் சுற்றி கமலம்(தாமரை), வராகம், மணிகர்ணிகா மற்றும் குசலவ தீர்த்தங்களும், கோயிலின் உள்ளே சந்திரபுஷ்கரணியும்( சுனை தீர்த்தம்) உள்ளது. சுனை தீர்த்தத்திலிருந்து அமுதுபடிகளுக்கு நீர் எடுத்துக் கொள்ளப்படுகிறது. கோயிலில் உத்தராயணம், தட்சணாயனம் என 2 வாசல்கள் உள்ளன. தை முதல் ஆனி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆனி முதல் மார்கழி வரை தட்சணாயன வாசல் வழியாகவும் கோயிலில் பெருமாளைத் தரிசிக்க வேண்டும். பெரியாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் இங்கு மங்களாசாசனம் செய்துள்ளனர். குறைகளைச் செவிமடுத்து, உடனடித் தீர்வு காணும் இப்பெருமாள் திருவடிகளை பக்தர்கள் பரவசம் பொங்க தரிசித்த வண்ணமாக உள்ளனர்.
வெள்ளறை என்பது வெண்மையான பாறைகளால் ஆன மலைகள் என்று பொருள். வெண்மையான பாறைகள் குன்றுகள் போல் குவிந்திருக்கின்றன சந்நிதியும் 30 மீட்டர் உயரத்தில் ஒரு குன்றின் மீதே கட்டப்பட்டிருக்கிறது. இக்கோயிலின் மதிலுள்ள ஏழு தீர்த்தங்கள் உண்டு. இங்கு ஸ்வஸ்திக் குளம் என்று சொல்லப்படும் சக்ரகுளம் ஒன்று உள்ளது. முன்னன் சிபிச்சக்கரவர்த்தி மார்க்கண்டேயரின் வேண்டுகோளின் படி வடநாட்டில் வாழ்ந்து வந்த 3700 ஸ்ரீவைஷ்ணவர்களை இங்கே கொண்டு வந்து குடியேற்றிக் கோயிலையும் கட்டிப் பெருமாளையும் பிரதிஷ்டை செய்தார்.
காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரை கோவில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருச்சி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை