08. திருக்கூடலூர்





	


	



























	




 




	








 




1:33:21 AM         Saturday, May 02, 2026

08. திருக்கூடலூர்

08. திருக்கூடலூர்
08. திருக்கூடலூர் 08. திருக்கூடலூர் 08. திருக்கூடலூர் 08. திருக்கூடலூர் 08. திருக்கூடலூர் 08. திருக்கூடலூர்
Product Code: 08. திருக்கூடலூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                    
                                                                                            வையங்காத்த பெருமாள் , திருக்கூடலூர்
 
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் தலைநகரான தஞ்சையிலிருந்து திருவையாறு சென்று அங்கிருந்து கிழக்கே 12 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. மேலும் மதுரையைத் தென்திருக்கூடலூர் என்றும் இதனை வடதிருக்கூடலூர் என்றும் அழைப்பர். ஆடுதுறையில் பெருமாளை எழுந்தருளச் செய்ததால் ஆடுதுறைப் பெருமாள் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.  இந்த கோயிலுக்குத் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது. ஆறு கி.மீ தொலைவில் அய்யம்பேட்டை ரயில் நிலையம் அமைந்துள்ளது.

மூலவர் : வையங்காத்த பெருமாள், ஜகத்ரட்சகன் உய்யவந்தார்

உற்சவர் - வையம் காத்த பெருமாள்

தாயார் - பத்மாசினி தாயார் (புஷ்பவல்லி தாயார்)

தீர்த்தம் : சக்ர தீர்த்தம் காவிரி நதி

விமானம் : சுத்தஸ்த்வ விமானம்

மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்

தலச் சிறப்புகள்: நவக்கிரகங்கள் வரிசையில் கேதுவால் நாம் மேலும் பலன்கள் பெற செல்ல வேண்டிய தலம் திருக்கூடலூரில் உள்ள ஆடுதுறை பெருமாள் கோவிலாகும். அம்பரீசன்,திருமங்கையாழ்வார்,பிரம்மா, கங்கை,யமுனை, சரஸ்வதி ஆகியோர் பெருமாளின் தரிசனம் பெற்று வழிபட்ட புண்ணியத் தலம் இதுவாகும். இக்கோவிலின் மூலவரான வையம் காத்த பெருமாள் நின்று கோலத்துடன் கிழக்கு திசையை நோக்கியவாறு சேவை தருகின்றார். நந்தக மகரிஷிக்கு இம்மூலவர் பிரதியட்சம் ஆனவர். 

தல வரலாறு : ஒரு சமயம் புண்ணிய நதிகள் எல்லாம் தம்மில் பலரும் நீராடி பாவக்கறை மிகுந்து போயிருப்பதைப் போக்கும் பொருட்டு பிரம்ம லோகத்திற்குச் சென்று பிரம்மனிடம் முறையிட்டனர். காவேரியின் அலங்கோல நிலையைக் கண்டு அனைவரும் எள்ளி நகையாடப் பிரம்மனால் ஆற்றுப்படுத்தப்பட்டு இந்தப் புனித சேத்திரத்துக்கு வந்து இப்பெருமாளிடம் தவமிருந்து தன் ஒளியை தன் மகிமையை மீண்டும் பெற்றதாக ஐதீகம். இச்செய்திகள் பற்றி கேள்விப்பட்ட தேவர்களும் நந்தக முனிவரோடு கூட்டம் கூட்டமாக வந்து வழிபட்டதால் இதற்கு கூடலூர் எனப் பெயர் ஏற்பட்டதாக கூறுவர். சங்கம் சேத்திரம் என்ற பெயரும் உண்டு. இக்கோயிலில் உற்சவங்களில் ரத உற்சவம் (அம்பரீஷ ரதம்) சிறப்பாகக் கருதப்படுகிறது. 

நந்தக முனியும், தேவர்களும் ஒன்று கூடி ஹிரண்யாக்ஷணின் கொடுமையிலிருந்து பூவுலகை காக்க மகாவிஷ்ணுவை வேண்டிய காரணத்தால் இத்தலம் திருக்கூடலூர் என்ற பெயர் பெற்றது நந்தக முனியின் மகளான உஷை, தலப் பெருமாளுக்கு மலர்ச் சேவை செய்து வந்ததாகவும், அவள் மீது மையல் கொண்ட சோழ மன்னன் அவளை மணந்ததாகவும் அவனது அமைச்சர்களின் பொய்யான தகவல்களால், மன்னன் அவளைப் பிரிந்ததாகவும், பின் பெருமாளே அவர்கள் மீண்டும் கூடி வாழ காரணமாக இருந்ததாகவும், அதனால் கூடலூர் என பெயர் பெற்றதாகவும் கதையும் உண்டு காவிரி இவ்விடத்தில் திருமாலை வணங்கி பாப விமோசனம் பெற்று இழந்த பொலிவை திரும்பிப் பெற்றாள். 

ஏற்கனவே பொன்னியின் கரையிலிருந்து அழிந்து போன திருக்கோயில் இன்றைய ஆடுதுறைப் பெருமாள் கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் மண்மேடிட்டு உள்ளது. இப்பகுதியை பெருமாள் பெட்டல் என்றே இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். ஆஞ்சநேயர் ஒரு சமயம் விண்வெளியில் சென்று கொண்டிருக்கும் போது இக்கோயிலில் இருந்த ஜனத்திரளைக் கண்டு வியந்து இது என்னவென்று பார்க்க வந்தவர் தனது தெய்வம் ஸ்ரீராமமூர்த்திக்கே மக்கள் இங்கு வழிபாடு கொடுக்கிறார்கள் என்று தாமும் அவர்களுடன் கலந்து ஆனந்தக் கூத்தாடி மூச்சித்துக்கிடக்க ஒளிமயமாக பெருமாள் ஆஞ்சநேயருக்கு காட்சி கொடுத்தாராம். ஆதலால் இக்கோயிலின் முன் கூத்தாடும் பாவனையில் ஆஞ்சநேயருக்கு ஒரு சிறிய கோயில் உள்ளது.

கோவில் அமைப்பு : கோயிலுக்கு முன்னே உள்ள அழகான ராஜகோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது. கோயிலுக்கு உள்ளே இருக்கும் ஒரு மண்டபத்துத் தூண்களில் ராணி மங்கம்மா மற்றும் அவரது அமைச்சர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.  கோயிலில் வரதராஜ பெருமாள், ஆண்டாள் மற்றும் ஆழ்வார்களுக்கு தனிச் சந்நதிகள் உண்டு.ராஜ கோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது.கோயிலுக்கு உள்ளே ஒரு மண்டபத்துத் தூண்களில் ராணி மங்கம்மா மற்றும் அவரது அமைச்சர்கள் உருவங்கள் செதுக்கப் பட்டுள்ளன. கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் மூலவர் வையம் காத்த பெருமாள், உய்யவந்தார், ஜகத்ரட்சகன் என்றெல்லாம் அழைக்கப் படுகிறார்.கையில் செங்கோல் ஏந்தி காட்சி தரும் உற்சவருக்கும் அந்த பெயர்.

வருடாந்தர பிரம்மோத்சவம் வைகாசித் திங்களில் விமர்சையாக நடைபெறுகிறது. இங்கு தங்கும் வசதிகள் இல்லாத காரனத்தால் அர்ச்சகர் வரும் நேரம் தெரிந்து பெருமாள் சேவையை செய்து கொள்ளலாம்.

காலை 7.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை,  மாலை 4.00  மணி முதல் 7.30 மணி வரை கோவில் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

அருகிலுள்ள ரயில் நிலையம் : தஞ்சாவூர், அய்யம்பேட்டை

பேருந்து  வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×