09. திருக்கவித்தலம் (கபிஸ்தலம்)





	


	



























	




 




	








 




6:22:11 AM         Saturday, May 02, 2026

09. திருக்கவித்தலம் (கபிஸ்தலம்)

09. திருக்கவித்தலம் (கபிஸ்தலம்)
09. திருக்கவித்தலம் (கபிஸ்தலம்) 09. திருக்கவித்தலம் (கபிஸ்தலம்) 09. திருக்கவித்தலம் (கபிஸ்தலம்) 09. திருக்கவித்தலம் (கபிஸ்தலம்) 09. திருக்கவித்தலம் (கபிஸ்தலம்) 09. திருக்கவித்தலம் (கபிஸ்தலம்) 09. திருக்கவித்தலம் (கபிஸ்தலம்)
Product Code: 09. திருக்கவித்தலம் (கபிஸ்தலம்)
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                  கஜேந்திர வரதன், திருக்கவித்தலம் (கபிஸ்தலம்)

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசத்திற்கு வடக்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது. குடந்தையிலிருந்து திருவையாறு வழியாக 15 கி.மீ பயணம் செய்ய இந்த திவ்ய தேசத்திற்கு வரலாம்.

மூலவர் : கஜேந்திரவரதர்
 
தாயார் : ரமாமணிவல்லி

தீர்த்தம் : கஜேந்தர புஷ்கரிணி கபில தீர்த்தம்

விமானம் : ககநாக்ருதி விமானம்

ப்ரத்யக்ஷம் : சிறிய திருவடி கஜேந்த்ரன்

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் - 1

தலச் சிறப்புகள் : இத்தலம் பஞ்ச கிருஷ்ணாரண்யதலங்களுள் ஒன்று. ஆதிமூலமே என்று அழைத்தபோது கஜேந்திரனுக்கு அபயம் அளித்த தலம். காவிரிக்கரையில் இருப்பதால் இப்பெருமானை ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் என்பர். 108 திவ்ய தேசங்களில் இரண்டு விலங்குகளுக்கு காட்சி கொடுத்தது இந்த ஒரு தலத்தில் தான். ஆஞ்சநேயருக்கு பிரத்தியட்ச தலமாகும். கபி என்ற சொல்லுக்கு குரங்கு என்று பொருள். ராமபக்தனான அனுமனுக்கு, திருமால் இத்தலத்தில் ராமபிரானாக காட்சி அளித்ததால் ‘கபிஸ்தலம்’ என பெயர் ஏற்பட்டது.

தல வரலாறு :  தூய்மையான பக்தி கொண்டு வணங்குவோருக்கு இத்தலத்து பெருமாள் மோட்சம் அளிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இந்திராதயும்னன் என்ற பாண்டிய மன்னன் ஏகாதசி தோறும் விரதம் இருப்பது வழக்கம். எப்போதும் நாராயணனை நினைத்து தவமிருப்பார். அச்சமயத்தில் ஒருமுறை அகத்திய முனிவர் தன் சீடர்களுடன் மன்னனை காண வந்தார். பகவானை நினைத்து தியானத்தில் இருந்த மன்னன், அகத்தியரை கவனிக்கவில்லை. ஆணவத்தில் தன்னை அவமரியாதை செய்வதாக கருதிய அகத்தியர், மன்னனை யானையாக போகும்படி சபித்தார். சாபம் உடனே பலித்தது. மன்னன் கஜேந்திரனாக பிறந்தான். ஒரு குளத்தில் தாமரை மலர் எடுத்து வந்து தினமும் பகவானை அர்ச்சித்து வழிபட்டு வந்தான்.

புகூ என்ற கந்தர்வன் தேவலோகத்தில் இருந்து பூமிக்கு வந்து கபிஸ்தலத்தில் உள்ள குளத்தில் குளிப்பது வழக்கம். ஒருநாள் அந்தக்குளத்தில் குளித்துக் கொண்டு இருந்த காசிப முனிவரின் காலை கந்தர்வன் பிடித்து இழுத்தான். உடனே கோபம் கொண்ட முனிவர் அவனை முதலையாக போகும் படி சாபமிட்டார். கந்தர்வன் முதலையாக மாறி பெருமாளிடம் சாபவிமோசனம் வேண்டி இந்த குளத்தில் இருந்து பிரார்த்தனை செய்து வந்தான். முதலையாக மாறி இருந்த கந்தர்வன், ஒரு நாள் மலர் பறிக்க வந்த கஜேந்திரனின் காலை பிடித்துக் கொண்டான். முதலையின் பிடியில் இருந்து யானை தனது காலை விடுவிக்க முயல, யானையை முதலை தண்ணீருக்குள் இழுக்க, ஓராயிரம் வருட காலங்கள் இந்த போராட்டம் நீடித்தது. கடைசியாக கஜேந்திரன், பகவானின் பாதத்தை சரணடைந்து ‘ஆதிமூலமே’ என்றழைத்து பிரார்த்தனை செய்தான். கருணா மூர்த்தியான பகவான் ஸ்ரீமன் நாராயணன் சங்கு, சக்கரதாரியாக கருடன் மீது விரைந்து வந்து தன் சக்கராயுதத்தால் முதலையை சம்ஹாரம் செய்தார். முனிவரின் சாபம் நீங்கப் பெற்ற முதலை, கந்தர்வனாக ஆனது. கஜேந்திரனுக்கு பெருமாள் மோட்சம் அளித்து தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

கோவில் அமைப்பு : ஆஞ்சநேயர் கஜேந்திர வரதன் மற்றும் இங்கு சக்கரத்தாழ்வார், நரசிம்மருக்கு தனி சன்னிதிகள் உள்ளன. இத்தலத்தில் மூலவர் கஜேந்திர வரதராஜ பெருமாள் கிழக்கு நோக்கியபடி புஜங்க சயனராக ஆணைக்கருளியவராக பாம்பணையில் பள்ளி கொண்டபடி காட்சி தருகிறார். தாயார் ரமாமணி வல்லிக்கு தனி சன்னிதி உள்ளது. வலது கரத்தில் சின் முத்திரையுடன் ஆதிமூல பெருமாள் பள்ளி கொண்ட திருக்கோலத்துடன் காட்சியளிக்கிறார். நாபிக் கமலத்தில் பிரம்மன் அமர்ந்திருக்கிறார். பொற்றாமரை வல்லி தாயார், கனகவல்லி தாயார் உடனிருக்கின்றனர்.

கஜேந்திர வரதா பெருமாள் கோயில் திராவிட பாணி கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. இது அதன் அனைத்து சிவாலயங்களையும் நீர்நிலைகளையும் உள்ளடக்கியது. இந்த கோவிலில் ஐந்து அடுக்குகளைக் கொண்ட ராஜகோபுரம், மற்றும் ஒரு நிலப்பரப்பு உள்ளது.  புனுமரலை “அட்ரங்கரை கிடக்கம் கண்ணன்  கண்ணன் நீரின் கரையில் சாய்ந்து கொண்டிருக்கிறார்” என்று புனித திருமாஷை அஸ்வர் பாராட்டினார். அப்போதிருந்து, பக்தர்கள் அவர் கண்ணனை அன்பாகக் கண்டுபிடித்தனர், இந்த வார்த்தை அப்படியே வந்தது. பஞ்சா கிருஷ்ண க்ஷேத்திரங்கள் என புகழ்பெற்ற ஐந்து பெருமாள் கோயில்களில் கபிஸ்தலம் ஒன்றாகும். 

வருடந்தோறும் ஆடி மாதம் கஜேந்திர மோட்சம் உற்சவம் 3 நாட்கள் நடைபெறுகிறது. சித்திரை மாதம் உற்சவம், ஆடிப்பூரம், புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவம், மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி, இராபத்து, பகல்பத்து உற்சவம் நடைபெறும். அர்ச்சகர் வரும் நேரம் தெரிந்து செல்வது நல்லது.

காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் கோவில் நடை திறந்து இருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

அருகிலுள்ள ரயில் நிலையம் : தஞ்சாவூர்

பேருந்து  வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×