15. திருச்சேறை





	


	



























	




 




	








 




11:54:42 AM         Saturday, May 02, 2026

15. திருச்சேறை

15. திருச்சேறை
15. திருச்சேறை 15. திருச்சேறை 15. திருச்சேறை 15. திருச்சேறை 15. திருச்சேறை 15. திருச்சேறை 15. திருச்சேறை 15. திருச்சேறை 15. திருச்சேறை 15. திருச்சேறை 15. திருச்சேறை 15. திருச்சேறை
Product Code: 15. திருச்சேறை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                        சாரநாதபெருமாள், திருச்சேறை                                                                                                  

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் குடந்தைக்குத் தென்கிழக்கில் 11 கி.மீ தொலைவிலும் நாச்சியார் கோயிலிலிருந்து 4 கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்த இடத்திற்கு பேருந்துகள் மூலம் செல்லலாம். 

மூலவர் : சாரநாதன் 

உற்சவர்  : மாமதலைப் பிரான் தவழும் திருக்கோலமூர்த்தி

தாயார் : சாரநாயகி (சாரநாச்சியார்)

தல தீர்த்தம் : சாரபுஷ்கரணி

தல விருட்சம் : செண்பகம்

விமானம் : ஸார விமானம்

மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் - 13 பாசுரங்கள்                                                                                                                                                                                                                                                                                                                                                           

திருத்தலச் சிறப்புகள் :  108 திவ்ய தேசங்களில் இது 15வது திவ்ய தேசமாகும்.  மார்கண்டேயர் முக்தி அடைந்த  திருத்தலம். இங்கு மூலவர் நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். பெருமாள் நாச்சியார் விமானம் தீர்த்தம் நிலம் என்ற ஐந்து சாரமுள்ள பொருள்கள் ஒரு சேர இணைந்திருப்பதால் இந்தத் திவ்ய தேசம் பஞ்சஸார க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

தல வரலாறு : ஓரு காலத்தில் விந்திய மலையின் அடிவாரத்தில் கங்கை யமுனை சரஸ்வதி சிந்து காவேரி கோதாவரி ஆகிய நதிகள் கூடி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த கந்தர்வன் வணங்க இந்த வணக்கம் யாருக்கு என்று நதிகள் கேட்க உங்களில் யார் பெரியவரோ அவருக்கே இந்த வணக்கம் என்று கந்தர்வன் கூறினார். மற்றவர்கள் விலக காவேரியும் கங்கையும் தான்தான் பெரியவர் என்று போட்டிப் போட்டுக் கொண்டனர்.   யார் பெரியவர் என்கிற சர்ச்சை ஏற்பட்ட போது முடிவில் பிரம்மனிடம் விடைபெறச்  சென்றனர்.  திரிவிக்கிரம அவதாரம் எடுத்த போது சத்தியலோகம் வரை நீண்ட எம்பெருமானது பாதங்களை  நான் திருமஞ்சனம் செய்ய, அதுவே பெருக்கெடுத்து ஓடி கங்கை ஆகியது.  எனவே நானே  புனிதமானவள் என்று கங்கை கூறினார். இதனை கேட்டு வருத்தமுற்ற காவேரி  சாராபுஷ்கரணியில் உள்ள அரசமரத்தடியில் திருமாலைக் குறித்து  கடுந்தவம்  மேற்கொண்டார்.

மகாவிஷ்ணு தை மாசப் பூசம் நட்சத்திர தினத்தன்று குழந்தையாய் தோன்றி தவழ்ந்து வர, கோடி சூர்யபிரகாசத்தை கண்ட காவேரி, குழந்தையன்று எம்பெருமானே என்று தொழுது  நின்றாள்.  திருமால் கருட வாகனத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி, மகாலட்சுமி, சாரநாயகி ஆகிய ஐந்து  தேவிகள் புடை சூழ சங்கு சக்கர தாரியாக காட்சியளித்தார்.  ”கங்கையிற் புனிதமாய் காவேரி” என  அருள் புரிந்தார். இத்தலத்தில் காவிரிக்கு தனி சன்னதி உள்ளது.  பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி மகாலட்சுமி ஸார நாயகி ஆகிய ஐந்து நாச்சியார்களோடு சேவை சாதிக்கிறார்.

ஒரு பிரளய காலத்தில் பிரம்மனுக்கு வேதங்களையும், ஆகமங்களையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவர் மண்ணால்  ஒரு குடம் செய்து, அதனுள் வேதங்களையும், ஆகமங்களையும் வைக்க முயன்றார். ஆனால் குடம் உடைந்து போயிற்று. இருப்பினும் முயற்சியைக் கைவிடாத பிரம்மன், மீண்டும் மீண்டும் மண்ணெடுத்து குடம் செய்தாலும், அது உடைந்துகொண்டேதான் இருந்தது. பூவுலகின் பலத் திருத்தலங்களுக்கும் சென்று மண்ணெடுத்துக் குடம் செய்து பார்த்தார். எந்த மண்ணிலும் குடம் நிலையாய் இருக்கவில்லை. இதனால் வருந்திய பிரம்மன், மகாவிஷ்ணுவை வேண்டினார். அப்போது மகாவிஷ்ணு, “பிரம்மா தேவா! நான் பூலோகத்தில் மிகவும் விரும்பி உறையும் சாரச்சேத்திரம் எனும் திருத்தலத்தில் இருந்து மண்ணெடுத்து குடம் செய்திடுக. அது உடையாமல் நிலைத்திருக்கும். இத்தலத்து மண் மிகவும் சத்து மிக்கசாரம் நிறைந்தது” என்றருளினார்.

இதனால் மகிழ்ச்சியடைந்த பிரம்மன் சார சேத்திரம் வந்து, மகாவிஷ்ணுவை துதித்து அத்தல மண்ணெடுத்து குடம் செய்தார். அதில் வேதங்களையும், ஆகமங்களையும் வைத்துக் காப்பாற்றிப் பராமரித்தார். பிரம்மன் பாதுகாத்து பராமரித்த வேதங்கள் உள்ளடங்கிய அந்த மண்குடத்தை, உலக நன்மைக்காக இன்றும் பிருகு, சவுனகர், வியாசர், பராசரர், வயின தேவர், மார்க்கண்டேயர், பணீந்திரர் ஆகிய சப்த ரிஷிகளும், சார புஷ்கரணிக்கரையில் தவமியற்றியவாறு காப்பாற்றி வருவதாக நம்பிக்கை.

இப்படி தேவர்கள், பூவுலகினர் என அனைத்து வகை உயிரினங்களின் வாழ்வாதாரம் பொதிந்த வேதங்களையும், ஆகமங்களையும் அந்த சார சேத்திர மண்குடம் தாங்கிக் கொண்டிருப்பதால், அத்தலம் ‘திருச்சாரம்’ என்று அழைக்கப்பட்டது. அதுவே தற்போது மருவி ‘திருச்சேறை’ என்று வழங்கப்படுகிறது. ‘சாரம்’ என்றால் ‘சத்து’ எனப் பொருள்படும். பிரம்மன் குடம் செய்ய மண் கொடுத்த திருக்குளம் ‘சார புஷ்கரணி’ என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திருக்குளத்தில் சேறு போன்ற மண் கிடைத்து அதில் குடம் செய்யப்பட்டதால், இத் திருத்தலம் ‘திருச்சேறை’ என்றானதாகவும் கூறுகிறார்கள்.

இங்கு எழுந்தருளிய மகாவிஷ்ணு ‘சாரநாதப் பெருமாள்’ எனற திருநாமம் கொண்டுள்ளார். அவரது உடனுறையும் தாயாரும் ‘சார நாயகி’ என அழைக்கப்படுகிறாள். ஆலய விமானமும் ‘சார விமானம்’ என்றானது. இப்படி ‘சாரநாதப் பெருமாள்’, ‘சார நாயகித் தாயார்’, ‘திருச்சாரம் தலம்’, ‘சார புஷ்கரணி’, ‘சார விமானம்’ என முறையே மூர்த்தி, தாயார், தலம், தீர்த்தம், விமானம் என ஐந்து விதத்திலும் அழியாமல் நிலைத்து நிற்பதால், இத்தலம் ‘பஞ்சசார சேத்திரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

கோவில் அமைப்பு : கருவறையில் சாரநாதப் பெருமாள் கிழக்குப் பார்த்த வண்ணம் சேவை சாதிக்கிறார். பெருமாளுக்கு வலப்புறம் மார்க்கண்டேயரும், இடப்புறம் காவிரித் தாயும் எழுந்தருளி உள்ளனர். என்றும் பதினாறு வயது கொண்டவராய், சிரஞ்சீவியாய் இருக்கும் வரம் பெற்ற மார்க்கண்டேயர், ‘இறைவனின் திருவடிகளே சிரஞ்சீவத்துவத்தை விட மேன்மைதரும்’ என்பதை உணர்ந்து திருச்சேறையில் அருளும் சாரபரமேஸ்வரர், காலபைரவர் ஆகியோரை வழிபட்டு, பின்னர் சாரநாதப் பெருமாளின் திருவடியில் முக்திப் பெற்றார். இதனால்தான் இன்றளவும் பக்தர்கள் முதலில் திருச்சேறை சார புஷ்கரணியில் நீராடி, அதற்கு மிக அருகில் உள்ள சாரபரமேஸ்வரர் சிவாலயத்தை வழிபாடு செய்து, அங்குள்ள காலபைரவர் சன்னிதியில் தீபம் ஏற்றி வழிபட்ட பிறகுதான் சாரநாதப் பெருமாள் திருக்கோவில் வந்து வழிபாடு செய்கிறார்கள். புஷ்கரிணிக்கு மேற்குக் கரையில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இவர் மிகவும் வரப்ரஸாதி பெற்றவர் என்று வரலாறு கூறுகிறது. இந்த புஷ்கரிணியில் நீராடி பெருமாள் தாயாரை வணங்கினால் எல்லா அபீஷ்டங்களும் நிறைவேறும் என்பதாக ஐதீகம். நரசிம்மா ஸ்ரீநிவாசர் மணவாள மாமுனிகளுக்கும் தனி சந்நிதிகள் உள்ளன. ஈசான்யத்தில் செந்நெறியப்பர் என்ற பெயரில் சாரபரமேச்வரர் சந்நிதியும் உள்ளது.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் வியாழன் கிரகம் வரும்போது, இத்தல சார புஷ்கரணியில் நீராடி சார நாத பெருமாளை வழிபட்டால், சகல தோஷங்களும், முன்ஜென்ம வினைகளும், கிரக தோஷங்களும், தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களும் அகன்று, வாழ்வில் நல்வளம் பெருகும் என்று தல புராணம் சொல்கிறது. காவிரித்தாய் கண்ணனை மடியில் அணைத்த திருக்கோலத்தில் இருக்கும் திருக்கோவில், சார புஷ்கரணியின் மேற்குக்கரையில் அரசமரத்தடியில் அமைந்துள்ளது. சாரபுஷ்கரணியில் நீராடி காவிரித்தாய், சார நாதப் பெருமாளை முறைப்படி வலம் வந்து தீபமேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு என்கிறார்கள்.

காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

அருகிலுள்ள ரயில் நிலையம் :  கும்பகோணம்

பேருந்து  வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×