19. திருநாகை





	


	



























	




 




	








 




7:32:19 PM         Saturday, May 02, 2026

19. திருநாகை

19. திருநாகை
19. திருநாகை 19. திருநாகை 19. திருநாகை 19. திருநாகை
Product Code: 19. திருநாகை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                            சௌந்தர்யராஜன், திருநாகை

திருத்தல இருப்பிடம் :  இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைநகரான நாகப்பட்டினம் ரயில்நிலையத்திலிருந்து  2 கி.மீ தொலைவில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் இந்தக் கோயிலின் அருகாமையிலேயே செல்கின்றன.

மூலவர் : சௌந்தரராஜ பெருமாள்

உற்சவர் :சவுந்தரராஜன்

தாயார் : சவுந்தரவல்லி

உற்சவர் :  கஜலட்சுமி

தலவிருட்சம் : மாமரம்

தீர்த்தம் : சார புஷ்கரணி

விமானம் : ஸௌந்தர்ய விமானம்

மங்களாசாசனம்: 10 பாசுரங்கள்

தலச் சிறப்புகள்: 108 வைணவத் திருத்தலங்களில் 19வது திவ்யதேசம். நின்ற, இருந்த, கிடந்த என்ற மூன்று திருக்கோலச் சேவையும் இத்தலத்தில் உண்டு. மூலவர் நின்ற திருக்கோலம். “வீற்றிருந்த பெருமாள்” என்று அமர்ந்த திருக்கோலமும், பள்ளி கொண்ட திருக்கோலத்தில் அரங்கநாதனும் இங்கு காட்சி தருகின்றனர்.  நாகராஜனுக்கு மூன்று திருக்கோலங்களிலும் எம்பெருமான் சேவை சாதித்ததாக ஐதீகம். நாகராஜனுக்குப் பிரத்தியக்ஷ்ம் ஆன பதியாதலால் நாகை என நாமம் பெற்றது. இக்கோவிலுக்குத் திருப்பணி செய்தவர்களில் முதலிடம் வகித்தவர்கள் நாகர்கள்.

தலவரலாறு : உத்தானபாத மகராஜனின் குமாரன் துருவன் சிறுவனாய் இருந்த போது, நாரதர் மூலம் இத்தலத்தின் பெருமையை அறிந்தான்.உலகமே தனக்கு அடிமையாக வேண்டும் என பெருமாளை தரிசித்து தவம் செய்தான்.பெருமாள் கருடன் மீது அமர்ந்து பேரழகுடன் அவனுக்குத் தரிசனம் தந்தார்.பெருமாளின் அழகில் மயங்கிய துருவன் தான் கேட்க இருந்த வரத்தை மறந்தான். இறைவனது அழகே பெரும் சுகம். எப்போதும் அதை தரிசிக்கும் பாக்கியம் வேண்டும் என்று கேட்டான்.பெருமாள் தனது சௌந்தர்யமான கோலத்தை துருவனுக்குக் காட்டி அவன் தங்கியிருந்த தலத்திலேயே தங்கினார்.சௌந்தரராஜ பெருமாள் ஆனார். 

நான்கு யுகங்களிலும் வழிபடப்படும் தலம். ஆதிசேஷன் தவம் புரிந்து பெருமாளின் சயனமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தலம்.. திரேதாயுகத்தில் பூமாதேவி தவமிருந்த திருத்தலம், துவாபரயுகத்தில் மார்க்கண்டேயர் தவமிருந்த திருத்தலம். பிரம்மாண்ட புராணத்தின் உத்தர பாகத்தில் 10 அத்தியாங்களில்  இந்த சௌந்தாரண்யத்தின் மகிமை கூறப்பட்டுள்ளது.  கிருதயுகத்தில் ஆதி சேஷன் இந்த சௌந்தாரண்யத்தில் தவம் செய்துஎப்போதும் பெருமாளுக்கு சயனமாக இருக்க வரம் பெற்றான். ஆதிசேஷன் என்னும் நாகராஜன்  ஒருசமயம் இங்கே வந்து  ஒரு  திருக்குளத்தைத் தன் வாலால் தோண்டி, அதன் கரையில் உக்கார்ந்து  பெருமாளைக்குறிச்சு தவம் செய்யறான்.  சாரபுஷ்கரணின்னு  அந்தக் குளத்துக்குப் பெயர். தவத்தை மெச்சிய பெருமாள் காட்சி கொடுத்ததும், அவருடைய  அழகைக் கண்டு மெய்மறந்த சேஷன்,  'எப்பவும்  தேவரீர் உங்ககூடவே இருக்கணும் , என்னை  படுக்கையாக ஆக்கிக்    கொள்ளுங்கோ'ன்னு வேண்டியதும், அன்றுமுதல்  ஆதிசேஷன் பெருமாளுக்குப் படுக்கை ஆனார்.  நாகம் தவம் செய்த இடமுன்னுதான் ஊருக்கே நாகப்பட்டினம் என்ற பெயர் வந்ததாம்.

கோவில் அமைப்பு : இத்தலத்தின் கோபுரம் 15 விமானங்களைக் கொண்டு மிக உயரமாக கம்பீரத்துடன் காட்சி அளிக்கிறது. இங்கு மூலவர் சந்நிதி 5 கலசங்களை கொண்டுள்ளது. இத்தலத்தில் பெருமாள் நின்று, கிடந்த இருந்த கோலத்தில் நரசிம்மராக அருள்பாலிக்கிறார். இங்கு ஆதிக்ஷேஷன், துருவன், திருமங்கையாழ்வார்ம்சாலிசுகசோழன் ஆகியோர் பெருமாளைத் தரிசித்துள்ளனர். தசாவதாரங்களை விளக்கக்கூடிய செம்பு தகட்டால் ஆன மாலை பெருமாளின் இடையை அலங்கரிக்கிறது. ஆதிக்ஷேஷனால் உருவாக்கப்பட்ட சாரபுஷ்கரணியில் நீராடி பெருமாளை வழிபட்டால் புண்ணியமாகக் கருதப்படுகிறது. கண்டன்,சுகண்டன் என்று இரு சகோதரர்கள் செருக்குடன் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.அவர்கள் சாரபுஷ்கரணியில் நீராட பாவம் தீர்ந்து வைகுண்டம் சென்றார்கள்.இவர்களது சிற்பங்கள் பெருமாள் சந்நிதியில் உள்ளன.

இங்கு வீற்றிருந்த கோலத்தில் கோவிந்தராஜரும் சயனக் கோலத்தில் ரங்கநாதனும் காட்சி தருகின்றனர். நாகராஜனுக்கு மூன்று திருக்கோலங்களிலும் எம்பெருமான் காட்சி அளித்திருக்கிறார். ரங்கநாதர் சந்நிதியில் அஷ்டபுஜ நரசிம்மரின் வெண்கலச் சிலை இருக்கிறது. ஒரு கரம் பிரகலாதனை ஆசீர்வாதம் செய்வது போலவும் இன்னொரு கரம் அபய முத்திரையாகவும் மற்ற எல்லாக் கைகளாலும் இரண்யனை வதம் செய்வது போலவும் காட்சி தருகிறார். சந்தான கிருஷ்ணனின் சிலையும் சந்நிதியில் உள்ளது. தாயார் ஆண்டாள் சந்நிதிகளுக்கு தவஜஸ்தம்பக்கள் தனியாக இருப்பது சிறப்பு.

ஸ்ரீசௌந்தர்யவல்லி தாயாருக்கு “கருடிவாகனம்” என்பது வேறெங்கிலும் இல்லாத தனிச்சிறப்பு. இத்திருக்கோயிலில் கருடபகவானை  ஸ்ரீசௌந்தரராஜ  பெருமாளே வீற்றிருக்கச் செய்ததால், இந்த சந்நிதியில் மட்டும் கருடபகவானுடன்  கருடியும் வாகனமாக சேர்ந்து எழுந்தருளி உள்ளார். ஆகையால், பெருமாள் கருடவாகனத்திலும், தாயார் கருடிவாகனத்திலும் சேர்ந்துஎழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதிப்பர்.  அதன் படி,ஸ்ரீசௌந்தர்யவல்லித் தாயாரின் ஆனி பிரம்மோற்சவத்தின் நான்காம்   திருநாள் காலை 10 மணிக்கு மூலவர் ஸ்ரீசௌந்தர்யவல்லித் தாயாருக்கு சிறப்பு அலங்காரத் திருமஞ்சனம் நடைபெறுகின்றது.  மாலை 6 மணிக்கு உற்சவர் ஸ்ரீசௌந்தர்யவல்லித் தாயார், வெள்ளி கருடி வாகனத்திலும்,ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் வெள்ளி கருட வாகனத்திலும் எழுந்தருளி , கோயில் நந்தவனத்தில் வலம் வந்து சேவை சாதிக்கின்றனர். கருட வாகனத்தின் சிறகுகள் மேல் நோக்கிய நிலையில் உள்ளன. கருடி வாகனத்தின் சிறகுகள் கீழ் நோக்கிய நிலையில் உள்ளன.

காலை 7.30 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

அருகிலுள்ள ரயில் நிலையம் : நாகப்பட்டினம்

பேருந்து  வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×