25. திருத்தலைச் சங்க நாண்மதியம்





	


	



























	




 




	








 




3:50:49 PM         Saturday, May 02, 2026

25. திருத்தலைச் சங்க நாண்மதியம்

25. திருத்தலைச் சங்க நாண்மதியம்
25. திருத்தலைச் சங்க நாண்மதியம் 25. திருத்தலைச் சங்க நாண்மதியம் 25. திருத்தலைச் சங்க நாண்மதியம் 25. திருத்தலைச் சங்க நாண்மதியம் 25. திருத்தலைச் சங்க நாண்மதியம் 25. திருத்தலைச் சங்க நாண்மதியம் 25. திருத்தலைச் சங்க நாண்மதியம் 25. திருத்தலைச் சங்க நாண்மதியம் 25. திருத்தலைச் சங்க நாண்மதியம் 25. திருத்தலைச் சங்க நாண்மதியம்
Product Code: 25. திருத்தலைச் சங்க நாண்மதியம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                             நாண்மதியப்பெருமாள், தலைசங்காடு   

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழியிலிருந்து ஆக்கூர் வழியாக பேருந்தில் தலைச்சங்காடு இறங்கி அங்கிருந்து மண்சாலை வழியாக 1 கி.மீ. தொலைவில் வயலுக்கு நடுவே  உள்ளது.

மூலவர் : நாண்மதியப் பெருமாள், வெண்சுடர்ப் பெருமாள்

தாயார் : தலைசங்க நாச்சியார்

தீர்த்தம் : சந்தர புஷ்கரிணி

விமானம் : வேதசக்ர விமானம்

மங்களாசாசனம் :  திருமங்கையாழ்வார் - 2 பாசுரங்கள்

தலச் சிறப்புகள் : இத்தலத்தில் பெருமாளின் கையில் உள்ள சங்கு மிகுந்த விலை உயர்ந்ததாகும்.  இங்குள்ள ஆண்டாள் விக்கிரகம் பேரழகு பெற்றதாகும். இரவில் நமக்கு ஒளிதரும் நாண்மதியாகிய சந்திரனுக்கு ஏற்பட்ட சாபம் தீர்ந்தமையால் இங்குள்ள பெருமாளுக்கு நாண்மதியப் பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது. இங்கு மூலவர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். இத்தல பெருமாளை சந்திரன், தேவர்கள், ஆகியோர் தரிசித்துள்ளனர். பெருமாளின் 108 திருப்பதிகளுள் 25வது தலம் இது. இத்தலத்தின் பெருமாள் சிவனைப்போல் தலையில் சந்திரனை சூடிய நிலையில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சிதருகிறார். 

தல வரலாறு : தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து மகாலட்சுமிக்கு முன்னதாக தோன்றியவர் சந்திரன். இவர், லட்சுமியின் அண்ணன் ஆவார். நவகிரகத்தில் சூரியனுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர். அத்திரி முனிவருக்கும், அனுசுயா தேவிக்கும் பிறந்தவர்களில் சோமன் என்பவரே சந்திரன் என்றும் புராணங்கள் கூறுகிறது. சந்திரன் மிக அழகானவர். இவர் தேவகுருவிடம் கல்வி கற்று பல கலைகளில் தேர்ச்சி பெற்றவர்.

இவர் ஒரு முறை மகாவிஷ்ணுவை குறித்து “ராஜசூய யாகம்’ செய்தார். சகல வெற்றிகளையும் தரும் இந்த யாகத்திற்கு ஏராளமான முனிவர்கள் வந்திருந்தனர். இவர்களுடன் தேவகுருவின் மனைவி தாரையும் வந்தாள். சந்திரனும், தாரையும் நேருக்கு நேர் பார்த்ததும் இருவரும் விரும்பத் தொடங்கினர். அதிர்ச்சியடைந்த குரு, திருமாலிடம் முறையிட்டார். சீடன் செய்த குற்றத்தை மன்னிக்க முடியாதவராக அவனுக்கு குஷ்ட நோய் ஏற்பட சாபமிட்டார். இதற்கிடையில் சந்திரனுக்கும் தாரைக்கும் புதன் என்ற குழந்தை பிறந்தது. பின்னர் திருமால் கூறியபடி குருவிடம் மனைவியை ஒப்படைத்தான் சந்திரன். தந்தை மீது புதனுக்கு வெறுப்பு ஏற்பட்டு இமயமலையில் கடும் தவம் செய்து கிரக பதவியடைந்தான். இதைத்தவிர சந்திரன் இன்னொரு தவறும் செய்து விட்டான். தக்கனுக்கு 27 மகள்கள். இவர்கள் அனைவரும் சந்திரனை திருமணம் செய்து கொண்டார்கள். 27 பெண்களிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் சந்திரன் வாக்கு கொடுத்தான்.

ஆனால் ரோகிணியிடம் மட்டுமே மிகுந்த காதலுடன் இருந்தான். இதனால் மற்ற மனைவிகள் தங்களது தந்தையிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட தக்கன்,””உன் அழகும், ஒளியும் தினம் தினம் குறையட்டும்,”என சாபமிட்டான். சாபம் பலித்ததால், முழு சந்திரன் தேய தொடங்கினான். இரண்டு சாபங்களும் சந்திரனை வாட்டி வதைத்தது. வருத்தமடைந்த அவன் திருமாலிடம் சென்று தன் குறையை கூறினான்.

அதற்கு பெருமாள்,””சந்திரனே! நீ உடனே ஸ்ரீரங்கம், திருஇந்தளூர், தலைச்சங்கநாண்மதியம் ஆகிய மூன்று தலங்களுக்கு சென்று குளத்தில் நீராடி என்னை வழிபட்டால் உன் சாபம் நீங்கும்,”என்றார். அவர் கூறியபடி ஸ்ரீரங்கம், திருஇந்தளூர் சென்று வழிபட்ட சந்திரன் கடைசியாக தலைச்சங்காடு வந்து குளத்தில் நீராடி பெருமாளை வழிபட்டான். உடனே அவனுக்கு ஏற்பட்ட தோஷமும், நோயும் விலகியது. பெருமாள் அவனுக்கு காட்சி கொடுத்து அவனை அப்படியே தலையில் சூடிக்கொண்டார்.

இத்தலத்தில் எம்பெருமானுக்கு அமைந்துள்ள பெயர் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். எம்பெருமானின் திருமுகத்தை தண் (குளிர்) என்னும் சந்திர ஒளிக்கு உவமானமாக ஆழ்வார்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். இத்தலத்தில் பெருமானின் கையில் உள்ள சங்கு மிகவும் பேரழகு வாய்ந்தவை. வெண்சுடர்ப் பெருமாள் நீளா தேவியுடனும் நிலமகளுடனும் பேரழகுடன் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள செப்புச் சிலைகள் மிக்க கலை நுணுக்கம் வாய்ந்தவை. எம்பெருமானை முழுமதியாகவும் உதிக்கின்ற செங்கதிராகவும் ஒரு சேரக் காண்கிறார் ஆழ்வார். பகவான் அமுதைப் பொழியும் வெண்ணிலவு போலக் கருணையைப் பொழிபவன். செங்கதிரோ எல்லா உயிர்களும் இயங்க ஆராத சக்தியாகிறான். சங்கருணாகேஸ்வரர் கோயில் அருகில் உள்ளது.

சந்திர தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்ய நினைத்தால் இத்தலம் வந்து பெருமாளையும் தாயாரையும் வழிபட்டால் சிறந்த பலன் உண்டு என்பது ஐதீகம். பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, துளசியால் அர்ச்சனை செய்கிறார்கள்.

காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

அருகிலுள்ள ரயில் நிலையம் : சீர்காழி

பேருந்து  வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×