கோபாலகிருஷ்ணன், திருக்காவளம் பாடி
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து 8 கி.மீ தொலையில் உள்ளது. சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் பாதையில் உள்ளது திருவெண்காட்டிலிருந்தும் பஸ்ஸில் வந்து 1 கி.மீ. நடைபயணத்தின் மூலம் இத்தலத்தை அடையலாம். திருநாங்கூரிலிருந்து 3 கி.மீ தொலைவிலும் திருநகரியிலிருந்து நடக்கும் தொலைவிலேயே உள்ளது.
மூலவர் : கோபாலகிருஷ்ணன் (ராஜகோபாலன்)
தாயார் : மடவரல் மங்கை, செங்கமல நாச்சியார்
தீர்த்தம் : தடமலர்ப்பொய்கை
விமானம் : சுவயம்பு விமானம்
மங்களாசாசனம் : 10 பாசுரங்கள்
தலச் சிறப்புகள் : மங்களசாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 27வது திவ்யதேசம். இங்கு மூலவர் ருக்மணி ஸத்யபாமாவுடன் நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு காட்சியளிக்கிறார். துவாரகாபுரியிலிருந்து கண்ணபிரான் சத்தியபாமாவுடன் இங்கு வந்ததால் இது துவாரகைக்குச் சமமான தலமாகிறது.
தல வரலாறு : கண்ணன் சத்தியபாமாவுடன் சேர்ந்து நரகாசுரனை அழித்தான். இந்திரன் வருணன் ஆகியோரிடமிருந்து நரகாசுரன் அபகரித்த பொருட்களை அவர்களுக்கே மீட்டுக் கொடுத்தான். வெகுநாளைக்குப் பின்பு இந்திரனின் தோட்டத்தில் உள்ள பாரிஜாத மலரைச் சத்தியபாமா கேட்க கண்ணன் இந்திரனிடம் இம்மலரைக் கேட்டான் இந்திரன் கொடுக்க மறுத்தான். எனவே சினங்கொண்ட கண்ணன் அவனோடு போர் செய்து அவனது காவளத்தை அளித்தான் 11 எம்பெருமான்களில் ஒருவனாக துவாரகாவிலிருந்து வந்த கண்ணபிரான் தான் இருக்க காவளம் போன்ற சோலையை தேடினான். அந்த இடம் இக்காவளம்பாடி என்பதை அறிந்து இத்தலத்தில் கண்ணன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
இறைவிக்குத் தனிக் கோயில் இல்லை. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களில் பாடல் பெற்றது. திருமங்கையாழ்வாரின் பிறந்த இடமான குறையலூர் மற்றும் அவர் வைணவ அடியார்க்கு அன்னதானம் நடத்திய மங்கை மடம் இந்த தலத்திற்கு மிகவும் அருகாமையிலேயே அமைந்துள்ளது. புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் ரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் திருமால் விரும்பி பள்ளி கொண்ட திருத்தலம். இதற்கு மற்றொரு பெயர் திருநாங்கூர். சீர்காழி, திருவெண்காட்டிலிருந்தும் பேருந்து வசதிகள் உண்டு. சீர்காழி, திருவெண்காட்டிலிருந்தும் பேருந்து வசதிகள் உண்டு. புகழ்பெற்ற ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது என்பதும் ஆழ்வார்களில் முக்கியமான ஆழ்வாரான திருமங்கையாழ்வார் அவதரித்த மங்கை மடம், திருக்குறையனூர் ஊருக்கு அருகேயும் இந்த கோயில் இருப்பது பெருமை.
ருக்மணி சத்யபாமாவுடன் நின்ற திருக்கோலம், தாயார் மடவரல் செங்கமல நாச்சியார். எனினும் மற்ற கோயிலைப் போல தாயாருக்கு இங்கு தனியாக சன்னதி இல்லை. பகவான், ருத்ரனுக்கும், சேனைத் தலைவர்க்கும் அவர்களது தவத்தினை மெச்சி நேரடியாக தரிசனம் கொடுத்த இடம், தை அமாவாசைக்கு மறுநாள் இந்த ஊரில் நடக்கும் கருடசேவை மிகவும் பிரசித்திப் பெற்றது.
கோபத்தால் தவறு செய்பவர்கள், சொந்தக்காரர்களால் பாதிக்கப்பட்டவர்கள், முன்விரோதம் காரணமாக கொண்டு நிம்மதி இல்லாமல் தவிப்பவர்கள், வறுமையினால் மிகவும் கஷ்டப்படுகிறவர்கள் வெளியூர் பயணத் தடையால் வாழ்க்கையில் திசை மாறிக் கொண்டிருப்பவர்கள், தொழிலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனையால் பணத்ததைத் தொலைத்துக் கொண்டிருப்பவர்கள், ஒப்பந்தம் செய்துவிட்டு திருமணம் நடத்த இயலாமல் பரிதவித்துக் கொண்டிருப்பவர்கள் ஆகிய அனைவரும் இங்கு வந்து பெருமாளை சேவித்தால் வியத்தகு நல்ல மாற்றங்களை அடைவார்கள். இங்கு வசதிகள் ஒன்றும் இல்லை. அர்ச்சகருடன் சேவைக்கு செல்ல வேண்டும்.
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : மயிலாடுதுறை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை