30. திருவண் புருடோத்தமம்





	


	



























	




 




	








 




2:36:44 PM         Sunday, May 03, 2026

30. திருவண் புருடோத்தமம்

30. திருவண் புருடோத்தமம்
30. திருவண் புருடோத்தமம் 30. திருவண் புருடோத்தமம் 30. திருவண் புருடோத்தமம் 30. திருவண் புருடோத்தமம் 30. திருவண் புருடோத்தமம் 30. திருவண் புருடோத்தமம் 30. திருவண் புருடோத்தமம்
Product Code: 30. திருவண் புருடோத்தமம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                           புருஷோத்தமர், திருவண்புருசோத்தமம்                                                                                                                   

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி நாகப்பட்டினம் ரோட்டில் அண்ணன் பெருமாள் கோவில் ஸ்டாப்பில் இறங்கி கிழக்கே 2 கி.மீ. செல்ல வேண்டும். சீர்காழியிலிருந்து 9 கி.மீ., தூரத்திலுள்ள இக்கோயிலுக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது

மூலவர் : புருஷோத்தமர் 

தாயார் : புருஷோத்தம நாயகி

தல விருட்சம் : பலா, வாழை மரம்

தீர்த்தம் : திருப்பாற்கடல் தீர்த்தம்(பாசிபடியாத தீர்த்தம்)

விமானம் : ஸஞ்ஜீவிவிக்ரஹ விமானம்

மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்

தலச் சிறப்புகள் : இங்கு மூலவர் நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம் குழந்தைக்கு வரும் துன்பத்தைத் தாய்தந்தை போக்குவர். அதுபோல் தம்மிடம் தோன்றிய பிரம்மா முதலிய தேவாதி தேவர்களுக்கு ஏற்படும் துன்பத்தைப் போக்கித் தம்மை எதிர்ப்பவர்களை அழித்து உலகத்தைக் காக்கும் புருடோத்தமன் இவனே வள்ளல் தன்மையை உயர்வுபடுத்திக் காட்ட தன் அருளை வாரி வழங்குதலால் வண்புருடோத்தமன் என்ற பெயர் இந்தப் பெருமாளுக்கு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள திவ்ய தேசங்களில் புருஷோத்தமன் என்ற பெயரில் பெருமாள் எழுந்தருளியிருப்பது இங்குமட்டும்தான். திருநாங்கூர் பதிகளில் மிக முக்கியமான திவ்ய தேசம் இது. உத்ஸவ பெருமாளின் திருவுருவம் மிக அழகாக காணப்படுகிறது. தை அமாவாசைக்கு மறுநாள் நடக்கும் கருடஸேவை மிக விசேஷம். ஸ்ரீ மணவாள மாமுனிகள், பிரதிவாதி பயங்கரம் அண்ணன் மங்களாசாஸனம் செய்த இடம்.

108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. இத்தல பெருமாளை திருமங்கையாழ்வார் அயோத்தி ராமராக மங்களாசாசனம் செய்துள்ளார். இத்தல பெருமாளைப் பற்றி பாடுபவர் மட்டுமல்லாது, கேட்பவருக்கும் எல்லா நலனும் கிடைக்கும் என கூறியுள்ளார். 48 நாட்கள் தொடர்ந்து விஷ்ணு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து, கடைசி நாளன்று விசேஷ அர்ச்சனை செய்து வழிபட்டால் எப்படிப்பட்ட பிரச்னை இருந்தாலும் பெருமாள் தீர்த்து விடுவார்.  திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியறிவிற்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.

மூலவர் புருஷோத்தமன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார். தாயார் புருஷோத்தம நாயகி தென்மேற்கு மூலையில் தனி சன்னதியில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். உள்பிரகாரத்தில் ஆண்டாள், ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர், நம்மாழ்வார், உடையவர், சேனை முதலியார் சன்னதிகள் உள்ளன. இத்தல இறைவனை காட்சி கண்டவர்கள் உபமன்பு, வியாக்ரபாத முனிவர். இங்கு பெருமாளை ராமனாகக் கருதி வழிபடுகின்றனர். திருச்சி அருகே திருக்கரமனூர். அதேபோல் இந்த திருநாங்கூர் வன் புருஷோத்தமன். வேறு எங்கும் புருஷோத்தமனுக்கு தனி சன்னதி இல்லை. மணவாள மாமுனிகள் இங்கு தங்கி வன்புருஷோத்தம பெருமாளுக்கு இரண்டு வருடம் சேவை புரிந்துள்ளார். இங்கு மூன்று ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. அதில் ராமர் சன்னதியில் உள்ள ஆஞ்சநேயர் கைகட்டி வாய்பொத்திய நிலையில் உள்ளார். பாசிபடியாத திருப்பாற்கடல் இத்தலத்திலிருந்து வடக்கே அமைந்துள்ளது. செண்பகப்பூ என்றால் இந்த பெருமாளுக்கு மிகவும் விருப்பம்.

தல வரலாறு : சைவ சமயத்தில் ஞான சம்பந்தருக்கு பார்வதி ஞானப்பாலை ஒரு கிண்ணத்தில் வைத்து ஊட்டி விட்டாள். அதே போல வைணவத்தில், மகா விஷ்ணு பசியால் அழும் குழந்தைக்கு ஒரு பாற்கடலையே உருவாக்கி பால் அமுது தந்திருக்கிறார். அவர் தான் சீர்காழி வன் புருஷோத்தமர். வியாக்ரபாதர் என்ற மகரிஷி, தன் குழந்தை உபமன்யுவை அழைத்துக்கொண்டு இந்த பெருமாள் கோயிலில் உள்ள நந்தவனத்தில் பூப்பறித்து இறைவனுக்கு சார்த்த வந்தார். குழந்தையை நந்தவனத்தின் வாசலில் அமர செய்து விட்டு பூப்பறிக்க செல்கிறார். குழந்தை தந்தையை காணாததாலும், பசியாலும் அழுதது. குழந்தையின் அழுகுரல் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமனுக்கு கேட்டது. உடனே இத்தலத்தில் ஒரு பாற்கடலையே உண்டு பண்ணி குழந்தைக்கு ஊட்டினார். அழும் குழந்தைக்கு தாயார் புருஷோத்தம நாயகி பால் அமுது படைத்தாள். மணவாள மாமுனிகளும் இங்கு எழுந்தருளினார். பங்குனி மாதம் 10 நாள் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் பவுர்ணமியில் பவித்ர உற்சவம் நடக்கிறது.

இவ்வூரின் பெண்கள் பந்து விளையாட்டில் சிறப்புற்றுத் திகழ்ந்தனர். இவ்வூரில் பந்தடிக்கும் பெண்களின் கால்களில் உள்ள சிலம்போசையும், கைவளையல்களின் ஓசையும் எந்நேரமும் மல்கியிருக்குமாம், திவ்யதேசங்களின், மருங்கமைந்த இயற்கைச் சூழ்நிலைகளையும், பிற நிகழ்வுகளையும் தம் பாடல்களில் விரித்துரைக்கும் திருமங்கை இதை விட்டுவிடுவாரா என்ன. இதோ இதைப் பற்றித் திருமங்கை கூறுகிறார். வ்யாக்ர பாத முனிவர் என்பவர் எம்பெருமானுக்கு பூமாலை கட்டிச் சூட்டும் கைங்கர்யத்தை மேற்கொண்டிருந்தார். இக்கோவிலில் எம் பெருமானுக்கு மாலை கட்ட வந்தவர் தனது குழந்தை உபமன்யூவை உட்கார வைத்துவிட்டுப் பூப்பறிக்கச் சென்றார். குழந்தை பசியால் அழுதது. புருடோத்தம நாயகி தூண்ட வண்புருடோத்தமன் திருப்பாற்கடலை வரவழைத்து. குழந்தைக்குப் பாலைப் புகட்டி அனுக்கிரஹம் புரிந்து வ்யாக்ர பாத முனிவருக்கும் காட்சி தந்தார்.

அயோத்தி எம்பெருமான் கடலடைத்த பெருமாள் இங்கு பதினொரு பேரில் ஒருவராக எழுந்தருளினார். அயோத்தி ராமன் புருடோத்தமனல்லவா அவனே இத்தலத்தில் எழுந்தருளியுள்ள புருடோத்தமன் என்று திருமங்கையாழ்வார் கூறுகிறார். இத்தலத்தின் தாயார் புருடோத்தம நாயகி வண்புருடோத்தமனைப் பார்க்க திருப்பாற்கடலை வரவழைத்துக் குழந்தைக்குப் பாலைப் புகட்டி உபமன்யுவுக்கும் வியாக்ரபாத முனிவருக்கும் இத்தலத்தில் பெருமாள் காட்சி அளித்து அனுக்கிரகம் செய்ததாக இத்தலத்து வரலாற்றில் கூறப்படுகிறது.ஒவ்வொரு தைஅமாவாசைக்கு அடுத்த நாள் கருடசேவை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருமணிமாடக் கோயில் திருஅரிய விண்ணகரம் திருத்தெற்றியம்பலம் திருவண்புருடோத்தமம் இந்நான்கும் திருநாங்கூரின் ஒரே தெருவின் பக்கங்களில் உள்ளன.

காலை 08.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

அருகிலுள்ள ரயில் நிலையம் :  சீர்காழி

பேருந்து  வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×