31. திருச்செம்பொன்செய்கோயில்





	


	



























	




 




	








 




9:08:23 AM         Saturday, May 02, 2026

31. திருச்செம்பொன்செய்கோயில்

31. திருச்செம்பொன்செய்கோயில்
31. திருச்செம்பொன்செய்கோயில் 31. திருச்செம்பொன்செய்கோயில் 31. திருச்செம்பொன்செய்கோயில் 31. திருச்செம்பொன்செய்கோயில் 31. திருச்செம்பொன்செய்கோயில் 31. திருச்செம்பொன்செய்கோயில் 31. திருச்செம்பொன்செய்கோயில்
Product Code: 31. திருச்செம்பொன்செய்கோயில்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                   பேரருளாளன், திருச்செம்பொன் செய்கோயில்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழியில் 8 கி.மீ. தொலைவில் திருநாங்கூரில் நடுவில் அமைந்துள்ள தலமாகும்.

மூலவர் : செம்பொன் ரங்கர், ஹேமரங்கர்,பேரருளாளன்

உற்சவர் : நான்கு தோள்களுடன் கிழக்கு நோக்கிய சயனத் திருக்கோலத்தில் காட்சியளிக்கும் செங்கண்மால் ரங்கநாதர், லட்சுமிரங்கர்

தாயார் : அல்லிமாமலர் நாச்சியார்

தீர்த்தம் : நித்ய புஷ்கரிணி கனக தீர்த்தம்

விமானம் : கனக விமானம்

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்

தலச் சிறப்புகள் : பெருமாள் பரமபதத்தில் இருப்பதால் அருளாளன் என்றும் இங்கு வந்து நம்மோடு இருப்பதால் பேரருளாளன் எனவும் பெயர் பெற்றார்.  108 வைணவ திருத் தலங்களில் இத்தலம் ஒன்றிற்கு மட்டுமே அம்பலம் என்னும் சொல் வழங்கப்படுகிறது.  திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் பாடல்பெற்றது இக்கோயில். மணவாள மாமுனிகள் இங்கு வந்து சென்றுள்ளார். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் எழுந்தருளும் தை அமாவாசைக்கு மறுநாளான திருநாங்கூர் கருடசேவைத் திருவிழாவுக்கு இவ்விறைவனும் எழுந்தருளுவார்.

திருநாங்கூர் வந்த 11 பெருமாள்களில், இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆவார். இவரை வணங்கினால் ஸ்ரீரங்கம் பெருமாளை வணங்கியதற்கு சமம். கிழக்கு பார்த்த இத்தலத்தில் பெருமாள் ஆதிசேஷன் மீது நான்கு புஜங்களுடன் பள்ளி கொண்ட பெருமாளாக அருள்பாலிக்கிறார். தலையும், வலது கையும் மரக்கால் மேல் வைத்து கொண்டு, இடது கரத்தை இடுப்பின் மீது வைத்து கீழே தொங்கவிட்ட நிலையில் காட்சியளிக்கிறார். இவரது தலைப்பக்கம் ஸ்ரீதேவியும், பாதத்தில் பூமாதேவியும் வீற்றிருக்கின்றனர்.

தல வரலாறு : இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியை தூக்கி கொண்டு பாதாள உலகத்தில் மறைத்து வைத்து விட்டான். தேவர்கள், முனிவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவரும் பூமியை காப்பாற்றுவதற்கு வராக அவதாரம் எடுக்க சம்மதித்தார். இதை கேட்டவுடன் மகாலட்சுமி,””பகவானே! நான் ஒரு நொடி கூட உங்களை விட்டு பிரியாமல் தங்களது மார்பில் குடியிருப்பவள். நீங்களோ என்னை விட்டு வராக அவதாரம் எடுக்கபோவதாக கூறுகிறீர்கள். நான் எப்படி தனியாக இருப்பது,”என வருத்தப்பட்டாள். இதே போல் ஆதிசேஷனும், “”பரந்தாமா! நீங்கள் பூமியை காக்க பாதாள உலகம் சென்று விட்டால் என் கதி என்னாவது?” என வருத்தப்பட்டார். இதைக்கேட்ட பெருமாள், “”பயப்படாதீர்கள். எல்லாம் நன்மைக்கு தான். நீங்கள் இருவரும் “பலாசவனம்’ சென்று என்னை தியானம் செய்ய புறப்படுங்கள். அங்கே சிவபெருமானும் வருவார். நான் இரண்யாட்சனை வதம் செய்து விட்டு உங்களுக்கு அனுக்கிரகம் செய்ய அங்கு வந்து விடுகிறேன்,” என்றார்.

அத்துடன் கலியுகத்தில் இத்தலம் “திருத்தெற்றியம்பலம்’ என அழைக்கப்படும். என் தீவிர பக்தரான ஸ்ரீபாஷ்யகாரர், தீட்சை பெற்ற 108 வைஷ்ணவர்களை அழைத்து என்னை ஆராதனை செய்ய இருக்கிறார். நான் அங்கிருந்து உலகத்தை காத்து ரட்சிக்க போகிறேன். கலியுகம் முழுவதும் அங்கேயே நித்தியவாசம் செய்ய போகிறேன்,” என்றருளினார். வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, பாதாள உலகிற்கு சென்று இரண்யாட்சனை அழித்து பூமியை மீட்டு அது இருக்க வேண்டிய இடத்தில் மெல்ல சுழல விட்டார். இதையறிந்த மகாலட்சுமியும், ஆதிசேஷனும் பூமிக்கு வந்து மகாவிஷ்ணு குறித்து தவம் செய்ய ஆரம்பித்தனர். மகாவிஷ்ணு தான் கொடுத்த வாக்குப்படி பலாசவனம் (திருத்தெற்றியம்பலம்) சென்று அங்கிருந்த சிவன், மகாலட்சுமி, ஆதிசேஷனுக்கு அருள்புரிந்தார். பின் அங்கேயே போர்புரிந்த களைப்பு தீர, சிவந்திருந்த அழகான கண்களுடன் பள்ளி கொண்டார். இதனால் இத்தல பெருமாள் “செங்கண்மால் ரங்கநாதர்’ என்றழைக்கப்படுகிறார்.

இராவண சம்காரம் முடிந்தபின் இராமபிரான் இத்தலத்தில் இருந்த திருடநேத்திரர் என்ற முனிவரின் குடிலில் தங்கி அவர் கூறியவாறு தங்கத்தினால் ஒரு பசு செய்து அங்கு நான்கு நாட்கள் தங்கி பின்னர் அப்பசுவை ஒரு அந்தணருக்குத் தானம் செய்தார். அதைக் கொண்டு இத்தலம் கட்டியபடியால் இதற்கு செம்பொன்செய்கோயில் எனப் பெயராயிற்று. செம்பொன் அரங்கர் கோயில் என்று புகழ் வாய்ந்தது ருத்திரனின் பிரார்த்தனைப்படி விஷ்ணு பதினோரு ரூபத்துடன் ருத்திரனுடன் நித்யவாஸம் செய்து கொண்டு பக்தர்களின் அபீஷ்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் என்பது வரலாறு. இதை முன்னிட்டு தைமாதம் அம்மாவாசை கழிந்து மறுநாள் ராத்திரி 11 திவ்ய தேச எம்பெருமான்களும் திருமணிமாடத்திலிருந்து தொடங்கி 11 கருட வாகனங்களில் எழுந்தருளி திருநாங்கூரில் 11 கருடசேவை உத்ஸவம் மிகச் சிறப்பாக வருடாவருடம் நடைபெற்று வருகிறது. இந்த திவ்ய தேசம். இழந்த செல்வத்தைத் திரும்பப் பெற விரும்புவோருக்கு இத்தலத்தின் பெருமாளைச் சேவிப்பது மிக்க பயனும் வெற்றியும் தரும் என்பது ஐதீகம். திருநாங்கூர் வந்த எம்பெருமான்களில் இவர் உறையூரின் அழகிய மணவாளப் பெருமான் ஆவார். இவரே பேரருளான் என்னும் திருநாமத்தோடு இங்கே எழுந்தருளியுள்ளார்.

திருநாங்கூர் 11 திவ்ய தேசங்களும் ருத்திரன் பூஜிப்பதற்காக ஏற்பட்டவை. இங்கு காலை 9.00 மணிக்குள்ளும். மாலை 5.00 மணி முதல் 7.00 மணிக்குள்ளும் தரிசிக்கலாம்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

அருகிலுள்ள ரயில் நிலையம் : சீர்காழி

பேருந்து  வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×