34. திருவாலியும் திருநகரியும்





	


	



























	




 




	








 




6:39:03 AM         Sunday, May 03, 2026

34. திருவாலியும் திருநகரியும்

34. திருவாலியும் திருநகரியும்
34. திருவாலியும் திருநகரியும் 34. திருவாலியும் திருநகரியும் 34. திருவாலியும் திருநகரியும் 34. திருவாலியும் திருநகரியும் 34. திருவாலியும் திருநகரியும் 34. திருவாலியும் திருநகரியும்
Product Code: 34. திருவாலியும் திருநகரியும்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                    அழகியசிங்கர், திருவாலியும் திருநகரியும்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள தஞ்சை மாவட்டத்தில்  திருவாலி, திருநகரி என்று இரண்டு கோயில்கள் உள்ளன. சீர்காழியில் இருந்து திருவெண்காடு செல்லும் சாலையில் சுமார் 4.5 கி.மீ. தொலைவு சென்று இடதுபுறம் திரும்பி வேதராஜபுரம் திருவாலி சாலையில் சுமார் 1 கி.மீ. தொலைவு சென்றால் திருவாலி கோயிலை அடையலாம். அங்கிருந்து நெப்பத்தூர் சாலை வழியாக திருநகரி மங்கைமடம் சாலை அடைந்து இடதுபுறம் திரும்பி சென்றால் திருநகரி கோயிலை அடையலாம். திருவாலியில் இருந்து சுமார் 5.5 கி.மீ. தொலைவு கோயிலை அடையலாம்.

திருவாலி மூலவர்    :    லட்சுமி நரசிம்மர், வயலாளி

உத்ஸவர்    :    கல்யான ரங்கநாதன்

தாயார்    :    அமிர்தகடவல்லி

திருநகரி மூலவர்    :    வேதராஜன் (வயலாளி மணவாளன்) வீற்றிருந்த கோலம்

தாயார்    :    அமிர்தவல்லி

தீர்த்தம் : இலாட்சணி, புஷ்கரிணி

தலவிருட்சம் : வில்வம்

மங்களாசாசனம்    :    குலசேகராழ்வார் - 1 பாசுரம், திருமங்கையாழ்வார் - 41 பாசுரங்கள்

தலச்சிறப்பு : இத்தலத்தை சுற்றி குறையலூர் உக்கிர நரசிம்மன், மங்கைமடம் வீர நரசிம்மன்.  திருநகரி யோக நரசிம்மன் மற்றும்  மற்றொரு நரசிம்ம தலமான ஹிரண்ய நரசிம்மன் ஆகிய தலங்களும் உள்ளன. இத்தலத்தில் மூலவர் சன்னதியின் மேல் உள்ள  விமானம் அஷ்டாட்சர விமானம் எனப்படுக்கிறது. திருமங்கையாழ்வார் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளார்.   பத்ரிகாசிரமத்திற்கு அடுத்ததாக இத்தலத்தில் தான் பெருமாள் திருமந்திரத்தை தானே உபதேசம் செய்தார்.  எனவே இத்தலம்  பத்ரிக்கு இணையானது ஆகும்.  லட்சுமியுடன் பெருமாள் நரசிம்ம கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு "லட்சுமி நரசிம்ம  க்ஷேத்திரம்” என்ற பெயரும் வழக்கத்தில் உள்ளது.  இங்கே திருவாலியையும் தரிசிப்பதால் பஞ்ச நரசிம்ம தலங்களைத் தரிசித்த  புண்ணியம் கிடைக்கும்.  இத்தலத்தில் ஆண்டுதோறும் தேவராஜபுரத்தில் திருமங்கை மன்னன் பெருமாளை வழிப்பறி நடத்தி,  திருமந்திர உபதேசம் பெறும் விழா சிறப்பாக நடைபெறும்.
 
திருமங்கையாழ்வார், நீலன் என்னும் பெயருடன் அவதாரம் செய்த ஸ்தலம். குமுதவல்லி நாச்சியார் என்பவரை மணந்துக் கொள்ள எண்ணியபோது, அவள், "ஓராண்டிற்கு தினமும் ஆயிரம் வைஷ்ணவர்களுக்கு அன்னதானம் செய்தால் திருமணம் செய்துக் கொள்கிறேன்" என்று கூற, நீலனும் அவ்வாறே அன்னதானம் செய்ய துவங்கினான். தன்னிடம் இருந்த பொருள் தீர்ந்தபிறகு வழிப்பறி செய்து அதைக் கொண்டு அன்னதானம் செய்தான். ஒருநாள் பெருமாள் மாறுவேடத்தில் வர, அவரிடம் வழிப்பறி செய்ய, பெருமாள் நீலனுக்கு அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார்.
 
திருவாலி மூலவர் லக்ஷ்மி நரசிம்ஹர் என்ற திருநாமத்துடன் லக்ஷ்மி தேவியை தமது மடியில் அமர்த்திய நிலையில் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உற்சவர் திருநாமம் திருவாலி நகராளன். தாயார் அம்ருதகடவல்லி என்றும், பூர்ணவல்லி நாச்சியார் என்றும் வணங்கப்படுகின்றார். திருமங்கையாழ்வார், அலாதி நிகஞ்சம ப்ரஜாபதி ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம். திருநகரி மூலவர் வேதராஜன் என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீற்றிருந்த திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். இவரே ஆழ்வார் பாசுரத்தில் பாடப்பட்டுள்ள வயலாளி மணவாளன். 
 
தல வரலாறு : திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்த போது இரண்யனை வதம் செய்த சீற்றம் அடங்காமல் இருந்தார்.  இதனால்  பயந்து போன தேவர்களும், ரிஷிகளும் லட்சுமி தேவியை வேண்டினார்கள். இவர்களின் வேண்டுதலை ஏற்ற தாயார் பெருமாளின்  வலது தொடையில் வந்து அமர்ந்தாள்.  தேவியை பெருமாள் ஆலிங்கனம் (அணைத்தல்) செய்தார்.  எனவே இவ்வூர்  திருஆலிங்கனம் என்ற பெயர் பெற்று திருவாலி (திருவாகிய லட்சுமியை ஆலிங்கனம் செய்தல்) என்று அழைக்கப்படுகிறது.   குலசேகர ஆழ்வார் இத்தல பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார்.  இந்த பகுதியில் (ஆலிநாடு) திருமங்கை ஆழ்வார் குறுநில மன்னனாக திகழ்ந்தார். எனவே அவருக்கு "ஆலிநாடன்” என்ற பெயரும் ஏற்ப்பட்டது.

திருமங்கையாழ்வாருக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டும் என்று லட்சுமி தேவி பெருமாளை இடைவிடாது வேண்டினாள்.   பெருமாள் கூறியபடி லட்சுமி பூமியில் திருவாலியில் தவம் செய்யும் பூர்ண மகரிஷியின் மகளாக பிறந்தாள்.  திருமண வயது  வந்ததும் லட்சுமி பெருமாளை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு  வந்துகொண்டிருக்கும் போது திருமங்கை மன்னன் பெருமாளை வழிமறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் திருமங்கையின் காதில்  அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார்.  திருமங்கை வழிப்பறி செய்த இடத்தில் இருந்த மண்டபத்தை இன்றும்  காணலாம்.

பத்ரிகாசிரமத்திற்கு அடுத்ததாக பெருமாள் திருமந்திரத்தை தானே உபதேசம் செய்த இடமாதலால் இத்தலம் பத்ரிக்கு இணையானது. லட்சுமியுடன் பெருமாள் நரசிம்ம கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு “லட்சுமி நரசிம்ம க்ஷேத்திரம்’ என்ற பெயரும் உண்டு. திருவாலியையும் தரிசிப்பதால் இங்கே பஞ்ச நரசிம்ம தலங்களைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும். திருமங்கையாழ்வாருக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டும் என லட்சுமி தேவி பெருமாளை இடைவிடாது வேண்டினாள். பெருமாள் கூறியபடி லட்சுமி திருவாலியில் தவம் செய்யும் பூர்ண மகரிஷியின் மகளாக பிறந்தாள். பெருமாளை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது திருமங்கை மன்னன் வழிமறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் திருமங்கையின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார். திருமங்கை வழிப்பறி செய்த இடத்தில் இருந்த மண்டபத்தை இன்றும் காணலாம். இதை முன்னிட்டு ஆண்டுதோறும் தேவராஜபுரத்தில் திருமங்கை மன்னன் பெருமாளை வழிப்பறி நடத்தி, திருமந்திர உபதேசம் பெறும் விழா சிறப்பாக நடக்கிறது.        

திருநகரியில் வேதராஜப் பெருமாள் திருமணக்கோலத்தில் மணவாளனாக இத்தலத்திற்கு எழுந்தருளி (ஆலி மணவாளனாக) பூர்ண மகரிஷியிடம் வளர்ந்த திருமகளை மணம் புரிந்துகொண்டு திருவாலிக்கும், திருநகரிக்கும் இடைப்பட்ட தேவராஜபுரம் என்ற இடத்தில் வரும்போது திருமங்கையாழ்வார் மறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் திருமங்கையின் செவிகளில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்தார். இன்றும் இச்செய்தியை உணர்த்தும் வேடுபறி உற்சவம், இங்கு நடைபெறுகிறது. கல்யாணக் கோலத்தில் பெருமாள், ஆழ்வாருக்குக் காட்சி கொடுத்ததால் கல்யாண ரெங்கநாதர் என்ற பெயராயிற்று.

தை மாதம் அமாவாசை தினத்திற்கு மறுநாள் நடக்கும் கருடசேவை மிக விசேஷம். திருமணிமாடக் கோயில் வாசலில் 11 திவ்யதேசப் பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி, அங்கு திருமங்கையாழ்வாருக்கும்,  குமுதவல்லிக்கும் மரியாதைகள் நடந்து பின்னர் வீதி புறப்பாடு நடக்கும் நிகழ்வு கண்கொள்ளாக் காட்சியாகும். ஞானம், செல்வம் வேண்டுவோர் இத்தலத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செய்கின்றனர்.
 
காலை 8.00 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
 
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

அருகிலுள்ள ரயில் நிலையம் :  சீர்காழி

பேருந்து  வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×