39. திருப்பார்த்தன் பள்ளி





	


	



























	




 




	








 




6:13:31 PM         Saturday, May 02, 2026

39. திருப்பார்த்தன் பள்ளி

39. திருப்பார்த்தன் பள்ளி
39. திருப்பார்த்தன் பள்ளி 39. திருப்பார்த்தன் பள்ளி 39. திருப்பார்த்தன் பள்ளி 39. திருப்பார்த்தன் பள்ளி 39. திருப்பார்த்தன் பள்ளி
Product Code: 39. திருப்பார்த்தன் பள்ளி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                       தாமரையாள் கேள்வன், திருப்பார்த்தன் பள்ளி

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில், உள்ள தஞ்சை மாவட்டத்தில் சீர்காழியிலிருந்து தென்கிழக்கே 11 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. திருவெண்காட்டிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

மூலவர் : தாமரையாள் கேள்வன், பார்த்தசாரதி

உற்சவர் :பார்த்தசாரதி

தாயார் : தாமரை நாயகி

தீர்த்தம் : கட்க புஷ்கரிணி

விமானம்    :    நாராயண விமானம்.

மங்களாசாசனம்    :    திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்

தலச் சிறப்புகள் :     உற்சவர் கோலவல்லி ராமன் சங்கு, சக்கரம், கதை, வில்லு அம்பு ஏந்திய வண்ணம் அழகாய்மிளிருகிறார். இங்கு மூலவர் நின்ற திருக்கோலத்தில், மேற்கே திருமுக மண்டலம் கொண்டு காட்சி தருகிறார். பார்த்தன் பள்ளி. ராமர் யாககுண்டத்திலிருந்து காலைத்தூக்கி எழுந்து வருவது போல இரு தேவியருடன் காட்சிதருவது அதிசயத்திலும் அதிசயம்.  மூலவர், உற்சவர் இருவருக்குமே ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்று மூன்று தேவிகள் உண்டு.

இங்கு பெருமாள் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள விமானம் நாராயண விமானம் எனப்படுகிறது. அர்ஜுனனர், இந்திரன், பதினோரு ருத்திரர்கள் ஆகியோர் பெருமாளின் தரிசனம் கண்டுள்ளனர். மூன்றுநிலை ராஜகோபுரம் 75 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக உள்ளது. குழந்தைபாக்கியம் வேண்டி இத்தல இறைவனிடம் பிரார்த்திக்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, துளசிமாலை சாற்றி வழிபடுகின்றனர். தசரதர் குழந்தை பாக்கியம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். அப்போது நாராயணன் ராமனாக தனக்கு குழந்தையாக அவதரிக்க போகிறார் என்பது இவருக்கு தெரிந்தது. தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள நாராயணனை அவர் வேண்டினார். அப்போது யாக குண்டத்திலிருந்து நாராயணன் தன் இரு தேவியருடன் தோன்றி, தான் எப்படி இருப்பேன் என்பதை தசரதருக்கு காட்டினார். இருதேவியரும் ராமாவதார காலத்தில் அவருடன் வாழ முடியாது என்பதால், தங்கள் கண்குளிர ராமனை தரிசித்தனர். இந்தக் காட்சி சிலையாக வடிக்கப்பட்டு இத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளது. ராமர் யாககுண்டத்திலிருந்து காலைத்தூக்கி எழுந்து வருவது போல இரு தேவியருடன் காட்சிதருவது அதிசயத்திலும் அதிசயம். அர்ஜுனனுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது.

தல வரலாறு : கவுரவர்களிடம் நாடிழந்து, வனவாசம் சென்ற போது, அர்ஜுனன் தாகத்திற்கு தண்ணீர் தேடி அலைந்தான். ஓரிடத்தில் அகத்தியர் கமண்டலத்தை அருகில் வைத்து தியானத்தில் இருப்பதை பார்த்தான். தியானம் முடிந்து கண்திறக்கும் வரை தன்னால் தாகத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்பதால் அகத்தியரின் தியானத்தை கலைத்து தனக்கு தண்ணீர் தருமாறு கேட்டான். அவரது அனுமதியுடன் கமண்டலத்தை திறந்தான். அதில் ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்லை. கேள்விக்குறியுடன் அகத்தியரின் முகத்தை பார்த்த அர்ஜூனனிடம், “”அர்ஜுனா! நீ எப்போதும் எது வேண்டினாலும் கொடுக்கும் கடவுளான கிருஷ்ணனிடம் அல்லவா கேட்டிருக்க வேண்டும்,’என்றார். தன் தவறை உணர்ந்த அர்ஜுனன்,””கிருஷ்ணா! கிருஷ்ணா!’என அழைத்தான். கிருஷ்ணனும் அர்ஜுனன் முன் தோன்றி தன்னிடமிருந்த கத்தியை அவனிடம் கொடுத்து,””இந்த கத்தியை வைத்து நீ எந்த இடத்தில் தோண்டினாலும் தண்ணீர் வரும்,’என்று கூறி மறைந்தார். அர்ஜுனனும் அந்த கத்தியால் தரையில் கீறி கங்கையை வரவழைத்து தன் தாகத்தை தணித்து கொண்டான். இந்நிகழ்ச்சி நடந்த இடம் பார்த்தன்பள்ளி என புராணம் கூறுகிறது. பார்த்தனுக்காக அருளிச் செய்த தலமாதலால் பார்த்தன் பள்ளி ஆயிற்று. இங்கே கார்த்தனுக்கு (அர்ச்சுணன்) தனிச் சந்நிதி உள்ளது. பார்த்தசாரதி என்ற பெயரில் திருவல்லிக்கேணியில் எழுந்தருளியுள்ள பெருமாள் இரண்டு கைகளுடன் வீரம் ததும்பும் முகத்துடன் உள்ளார். இங்கு சங்கு சக்கரங்களுடன் நான்கு புஜங்களுடன் சாந்தம் தவழும் திருமுகத்துடன் காட்சியளிக்கிறார்.

காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும். வசதிகள் ஒன்றுமில்லாத ஊர் எனினும் அர்ச்சகர் கோயில் அருகிலேயே குடியிருக்கிறார்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

அருகிலுள்ள ரயில் நிலையம் :  சீர்காழி

பேருந்து  வசதி : உண்டு

தங்கும் வசதி   :   இல்லை

உணவு வசதி   :   உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×