46. திருவேளுக்கை





	


	



























	




 




	








 




4:14:32 PM         Friday, May 01, 2026

46. திருவேளுக்கை

46. திருவேளுக்கை
46. திருவேளுக்கை 46. திருவேளுக்கை 46. திருவேளுக்கை 46. திருவேளுக்கை 46. திருவேளுக்கை 46. திருவேளுக்கை 46. திருவேளுக்கை
Product Code: 46. திருவேளுக்கை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                அழகிய சிங்க பெருமாள்,   திருவேளுக்கை

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் அஷ்டபுயகரத்திலிருந்து தென் மேற்குத் திசையில் 2 கி.மீ தொலைவில் உள்ளது.

மூலவர்    :    அழகியசிங்கர், நரசிம்மன், முகுந்த நாயகன்
        
தாயார்        :    வேளுக்கைவல்லி, அமிருதவல்லி

தீர்த்தம்    :    கனக ஸரஸ், ஹேம ஸரஸ், ப்ரகலாத தீர்த்தம்

விமானம்    :    கனக விமானம்

மங்களாசாசனம்    :    பேயாழ்வார் - 3 பாசுரங்கள், திருமங்கையாழ்வார் -1 பாசுரம்

தலச் சிறப்புகள் : நரசிம்மரின் மேல் உள்ள விமானம் கனக விமானம். இந்த பெருமாளை பிருகு முனிவர் தரிசனம் செய்துள்ளார். கோயில் சுற்றுப்பிரகாரத்தில் சுதர்சன சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். நரசிம்மருக்கு எதிரில் உள்ள கருடாழ்வார் நரசிம்மரின் உக்கிரம் தாளாது சற்றே தலை சாய்த்து பயத்துடன் இருப்பது மிகவும் அதிசய அமைப்பாகும்.

பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஒன்று. புராண வரலாற்றின் படி பிருகு முனிவருக்கு கனக விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுத்ததாக ஐதீகம். பேயாழ்வார் இத்தலத்தினை, உப்பிலியப்பன் கோயில், கும்பகோணம், திருப்பதி போன்ற தலங்களுக்கு இணையாகப் பாடியுள்ளார். இதிலிருந்து இத்தலத்தின் சிறப்பை அறியலாம். ஆழ்வார்களைத் தவிர சுவாமி தேசிகனும் இப்பெருமாளை “காமாஸீகாஷ்டகம்’ என்ற ஸ்லோகத்தால் போற்றியுள்ளார். இதை தினமும் பாராயணம் செய்தால் நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைக்கும். இதனை “காமாஷிகா நரசிம்ம சன்னதி’ என்றும் அழைப்பார்கள்.

இங்கு மூலவர் பத்மாசன திருக்கோலம் கொண்டு மேற்கு நோக்கி சேவை சாதிக்கிறார். எம்பெருமான் நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனது மாளிகையின் தூணிலிருந்து வெளிப்பட இரண்யன் அழிந்தான் பின்பு அங்கிருந்த அசுரர்களை விரட்டிக் கொண்டே சென்றார். இவ்விடத்திற்கு வந்ததும் அசுரக் கூட்டங்கள் காணாமல் ஓடி ஒளிந்து கொண்டன. இனி அசுரர்கள் மீண்டும் வந்தால் அவர்களை எதிர்ப்பதற்கு ஏற்ற இடம் இதுதான் என்று எண்ணி இங்கேயே இருக்க ஆசைப்பட்டார். அதனால் இவ்விடத்திலேயே யோக நரசிம்மராக எழுந்தருளியுள்ளார். நரசிம்ம மூர்த்தி இவ்விடத்தில் ஆசையுடன் இருக்க எண்ணியதால் இது 'வேளுக்கை' என்றாயிற்று. யோக நரசிம்மராக எழுந்தருளியிருக்கும் இவர் சிறந்த வரங்களைக் கொடுப்பவராவார்.

எல்லாமே தனக்குரியது என்று எண்ணி ஆணவம் கொண்ட மன்னன் இரண்யனைப் பெருமாள் அழித்தார். எல்லாமே பெருமாளுக்கு உரியது என்று எண்ணிய பிரகலாதனை ஆட்கொண்டார். இந்த வேளுக்கையில் எழுந்தருளியிருக்கும் ஆளரியே உன் திருவடி எண்ணாதவர்க்கு வேறு யார் உதவி கிடைக்க முடியும் என்று நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் பிள்ளைப் பெருமாளயங்கார் பாடியுள்ளார். 12 ஆண்டுகட்கு முன் இந்த சந்நிதி ஜீர்ணோத்தாரணம்  செய்யப்பட்டுள்ளது.

தல வரலாறு : திருமாலின் அவதாரங்களில் மிகவும் போற்றப்படுகிற அவதாரம் நரசிம்ம அவதாரம். பெருமாளின் காக்கும் குணம் உடனே வெளிப்பட்ட அவதாரம். பக்தனின் வார்த்தையை பகவான் உடனே காப்பாற்றிய அவதாரம். “வேள்’ என்ற சொல்லுக்கு “ஆசை’ என்று பொருள். இரணியனை வதம் செய்த பின் பகவான் நரசிம்மர் அமைதியை விரும்பினார். அவர் இவ்விடத்தில் ஆசையுடன் இருக்க எண்ணியதால் “வேளிருக்கை’ என்றாகி, காலப்போக்கில் “வேளுக்கை’ என்றாகி விட்டது. ஒருமுறை பிரம்மா யாகம் செய்த போது யாகத்தை அழிக்க அரக்கர்கள் வந்தனர். பிரம்மா பெருமாளிடம் இந்த யாகம் சிறப்பாக நடக்க அருள்புரியுமாறு வேண்டினார். பிரம்மாவின் வேண்டுதலை ஏற்றார் பெருமாள். முன்பு பிரகலாதனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்த அதே திருக்கோலத்துடன் “ஹஸ்திசைலம்’ என்ற குகையிலிருந்து புறப்பட்டு வேள்வியை அழிக்க வந்த அசுரர்களை விரட்டினார். அவர்கள் காஞ்சியில் இந்த இடத்தில் காணாமல் போய்விட்டார்கள். அங்கேயே மேற்கு நோக்கி அமர்ந்து யோக நரசிம்மராகி விட்டார். இவருக்கு ஆள் அரி, முகுந்த நாயகன் என்ற திருநாமங்களும் உண்டு.

காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை

அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்

தங்கும் வசதி :  உண்டு

பேருந்து   வசதி    :    உண்டு

தங்கும் வசதி    :    உண்டு

உணவு வசதி     :    உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×