48. திருப்பாடகம் (பாண்டவ தூதர் கோயில்)





	


	



























	




 




	








 




5:35:04 PM         Friday, May 01, 2026

48. திருப்பாடகம் (பாண்டவ தூதர் கோயில்)

48. திருப்பாடகம் (பாண்டவ தூதர் கோயில்)
48. திருப்பாடகம் (பாண்டவ தூதர் கோயில்) 48. திருப்பாடகம் (பாண்டவ தூதர் கோயில்) 48. திருப்பாடகம் (பாண்டவ தூதர் கோயில்) 48. திருப்பாடகம் (பாண்டவ தூதர் கோயில்) 48. திருப்பாடகம் (பாண்டவ தூதர் கோயில்) 48. திருப்பாடகம் (பாண்டவ தூதர் கோயில்)
Product Code: 48. திருப்பாடகம் (பாண்டவ தூதர் கோயில்)
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                  பாண்டவதூதப் பெருமாள், திருப்பாடகம்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள கங்கை கொண்டான் மண்டபத்தின் அருகில் இருக்கிறது. பாடு - மிகப் பெரிய, அகம்-கோயில் என்ற பொருளில் பாடகம் ஆயிற்று. கங்கைக் கொண்டான் மண்டபத்தின் அருகில் இந்த சந்நிதி உள்ளது.

மூலவர்    :    பாண்டவ தூதர் திருக்கோலம் (கிழக்கே திருமுக மண்டலம்).

அம்பாள் : ருக்மணி, சத்யபாமா.

தீர்த்தம் : மத்ஸ்ய தீர்த்தம்.

விமானம் : சக்கர விமானம், வேத கோடி விமானம். 

தாயார்    :    ருக்மிணி, சத்யபாமா

தீர்த்தம்    :    மத்ஸ்ய தீர்த்தம் 

விமானம்    :    சக்கரவிமானம், வேத கோடி விமானம்.

மங்களாசாசனம்:    திருமழிசையாழ்வார் - 2 , திருமங்கையாழ்வார் - 2 பாசுரங்கள், பூத்தாழ்வார்    - 1 பாசுரம்,பேயாழ்வார்    - 1 பாசுரம்

தலச் சிறப்புகள்: ஜனமேஸயமஹாராஜன் வைசம்பாயனரிடம் பாரத கதையைக் கேட்டு, ஸ்ரீகிருஷ்ணன் பாண்டவர்களுக்காக ஹஸ்தினாபுரம் தூது சென்று விச்வரூபம் எடுத்ததைக் கேள்விப்பட்டு, அதை நேரில் சேவிக்க விரும்பிக் காஞ்சி வந்து, அச்வமேதயாகம் செய்து பூர்ணாஹதி ஆனதும் பகவான் பாண்டவதூத வேஷத்துடன் ஆவிர்பவித்ததாக புராண வரலாறு. முதலாம் குலோத்துங்க சோழனால் புதுப்பிக்கப்பட்டதாக இங்கே உள்ள கல்வெட்டுகள் மூலம் தெரிகிறது.

இத்தலத்தில் திருமழிசையாழ்வாரும், திருமங்கையாழ்வாரும், பூதத்தாழ்வாரும், பேயாழ்வாரும் பாசுரங்கள் பாடியுள்ளனர். மணவாள மாமுனிகள் இங்கு மங்களாசாசனம் செய்துள்ளார். அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள எம்பெருமான்களின் 25 அடி உயரத்தில் பிரம்மாண்டமான ரூபத்தில் அழகுத் திருமேனியுடன் காட்சியளிக்கும் தலம் 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே உள்ளது. 108 தலங்களில் நின்ற, அமர்ந்த, கிடந்த திருக்கோலங்களுக்கு தொண்டை நாட்டில் உள்ள திருஊரகம், திருப்பாடகம், திருவெஃகா ஆகிய தலங்களையே சிறப்பித்து ஆழ்வார்கள் கூறுகிறார்கள். மூலவரின் திருமுகத்தின் புன்சிரிப்பு விசேஷம்.

இத்தலம் ஏறத்தாழ 2000 வருடம் தொன்மை வாய்ந்தது என்று கூறப்படுகிறது.   இந்த இடம் முன்பு திருப்பாடகம் என்று அழைக்கப்பட்டது.  கண்ணன்  பஞ்சபாண்டவர்களுக்குத் தூதுவராக சென்றதால் பாண்டவ தூதப்பெருமாள் என  அழைக்கப்படுகிறார்.   இத்தலம் ரோகிணி நட்சத்திரக் கோவில் ஆகும்.  ரோஹிணி தேவி இந்த தலத்து பெருமாளை  வணங்கி வழிபட்டு, சந்திரனை மணவாளனாக அடையும் பேறு பெற்றாள்.  சந்திரன், தனது 27  நட்சத்திர தேவியர்களில் முதன் முதலில் ஞான சக்தி பெற்ற ரோஹிணியையும், அக்னி சக்தி  பெற்ற கார்த்திகையையும், மணமுடித்த பின்பே ஏனைய நட்சத்திர தேவியர்களை மணந்ததாக  வரலாறு.  தனக்கு ஞான சக்தியையும், விஸ்வரூப தரிசனமும் காட்டிய பெருமாளுக்கு வழிபாடு  செய்ய, தினமும் சூட்சும வடிவில் வருவதாக ஐதீகம்.  எனவே, ரோகிணி நட்சத்திரக்காரர்கள் புதன்,  சனிக்கிழமைகளிலும், அஷ்டமி திதி எட்டாம் தேதிகளில் இங்கு வந்து அர்ச்சனை செய்தால்,  அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.

தல வரலாறு : மஹாபாரத காலத்தில், பாண்டவர்களில் மூத்தவரான தருமர் சூதாட்டத்தில்  கௌரவர்கள் சூழ்ச்சியால் தன் செல்வங்களையும் நாட்டையும் இழந்தார்.  அவர்களுக்கு ஒரு  வீடாவது தர வேண்டும் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், துரியோதனனிடம் கேட்டு வாங்க தூது  சென்றார்.  துரியோதனன் ஸ்ரீ கிருஷ்ணரை அவமானப்படுத்த ஒரு யுக்தி செய்தான்.  பகவான் அமர  உள்ள ஆசனத்தின் கீழே ஒரு பெரிய பாதாளத்தை உண்டாக்கி, அதன் மேல் பசுந்தழைகளைப்  போட்டு, அவர் அமர்ந்தவுடன் கீழே விழும்படி செய்தான்.  அவன் சூழ்ச்சிப்படியே, பகவான் ஸ்ரீ  கிருஷ்ணரும் ஆசனத்தில் அமர்ந்தவுடன், பாதாளத்தில் விழுந்தார்.  அப்பொழுது அவரைத் தாக்க  சில வீரர்களை அங்கு துரியோதனன் ஏற்பாடு செய்திருந்தான்.

ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களை வீழ்த்தி, அழித்து, தன் விஸ்வரூப தரிசனம் காட்டினாராம்.   பாண்டவர்களுக்காக தூது சென்றதால் அவரை பாண்டவதூத பெருமாள் என அழைக்கப்படுகிறார்.  பாரதப் போர்  முடிந்த பின்பு பல ஆண்டுகள் சென்ற பிறகு, ஜனமேஜயர் என்ற அரசன், வைசம்பாயனர் என்ற பெரிய  மகரிஷியிடம் பாரதக் கதைகளை கேட்டு வந்தார். அப்பொழுது அரசனுக்கு ஸ்ரீ  கிருஷ்ண பகவானின் விஸ்வரூப தரிசனம் காண வேண்டும் என்ற ஆவல் வந்தது.  அவர்  மஹரிஷியிடம், தன்னால் கிருஷ்ண பகவானின் விஸ்வரூபத்தை காண வேண்டும் என்று  அதற்கான வழிமுறைகளை  கூறும்படி வேண்டினார்.

அந்த மகரிஷியின் அறிவுரையின்படி, காஞ்சிபுரம் வந்து தவம் செய்தார் அரசர்.  தவத்தின் பயனாக  இங்கு பெருமாள் தன் பாரத தூது கோலத்தை இத்தலத்தில் அருளினார்.  மேலும்,  திருதராஷ்டிரனுக்கும்  கண் பார்வை தந்து தனது விஸ்வரூப தரிசனத்தை இத்தலத்தில் காட்டி  அருளியதாக கருதப்படுகிறது.  இந்த தலத்தில் ஸ்ரீ கிருஷ்ணர், தன் பாதங்களை  பூமியில் அழுத்தி  தனது விஸ்வபாத யோக சக்திகளை செலுத்தியதால், இத்தலம் மிகவும் சக்தி  வாய்ந்ததாக  கருதப்படுறது.  ஆகவே, இங்கு அங்கபிரதட்சணம் செய்வோருக்கு சகல  துன்பங்களும் நீங்கும், பாவ விமோசனம் கிட்டும் என்பது நம்பிக்கை.

காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை

அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்

தங்கும் வசதி :  உண்டு

பேருந்து   வசதி    :    உண்டு

தங்கும் வசதி    :    உண்டு

உணவு வசதி     :    உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×