சொன்னவண்ணம் செய்த பெருமாள், திருவெஃகா (யதோக்தகாரி கோயில்)
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள காஞ்சிபுரம் மவாட்டத்தில் உள்ள சின்னக் காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் சந்நிதிக்கு மேற்கேயும் அஷ்டபுயகரப் பெருமாளின் சந்நிதிக்கு எதிரிலுமாக உள்ளது
தீர்த்தம் : பொய்கைப் புஷ்கரிணி
விமானம் : வேதார விமானம்
மங்களாசாசனம்: திருமழிசையாழ்வார் - 3, திருமங்கையாழ்வார் - 6, பொய்கையாழ்வார் - 1, பேயாழ்வார் - 4 ,நம்மாழ்வார் - 1 பாசுரம்
தலச் சிறப்புகள்: மூலவர் யதோத்தகாரி, சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்னும் திருநாமங்களுடன் கிடந்த திருக்கோலம், புஜங்க சயனம், மேற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். இங்கு மூலவர் கணிகண்ணன் என்ற சீடனுக்காக ஊரை விட்டே புறப்பட்ட திருமழிசையாழ்வார் பகவானை அழைக்க பாம்பணையைச் சுருட்டிக்கொண்டு புறப்பட்டு, பிறகு அவர் கிடக்கச் சொல்லி வேண்டிய போது, பாம்பணையை விரித்துப் படுத்ததால், இவருக்கு சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்று பெயர். மற்ற திவ்ய தேசங்களைப்போல் அல்லாமல் இங்கு பகவான் வலமிருந்து இடமாக சயனித்துள்ளார்.
தல வரலாறு : சத்யவரதசேத்திரத்தில் பிரம்மா எம்பெருமான் தரிசனத்திற்காக சரஸ்வதியில்லாமல் தனியயே வேள்வி செய்ய ஆரம்பித்ததாகவும் அப்போது சரஸ்வதி, வேகவதிநதியாக வந்து வேள்வியை அழிக்க ஓடி வந்ததாகவும், இவ்வெள்ளத்தைத் தடுக்க பெருமாள் அணையென குறுக்கே சயனித்தாராம். அதனாலேயே பெருமாளுக்கு 'வேகாஸேது" என்ற பெயர் ஏற்பட்டது. வேகவதியணை வெஃகணை வெஃகா என்று மருவியது. முதலாழ்வார்கள் மூவரால் முதல்வரான பொய்கையாழ்வார் இங்கேயுள்ள பொய்கை புஷ்கரிணியில் ஒரு பொற்றாமரையில் அவதரித்ததாகவும் அதனாலேயே ஆழ்வாருக்கு அப்பெயர் ஏற்பட்டதாகவும் வரலாறு. இங்கு எழுந்தருளி இருக்கும் பிள்ளைலோகாசாரியார் பெரும் புகழ் பெற்றவர். இந்த சந்நிதியில் ஸ்ரீபாஷ்ய காலஷேபம் சாதித்தார்.
ஆழ்வார்களின் முதன் மூவரில் ஒருவரான பொய்கை ஆழ்வார் அவதரித்த தலம். இக்கோயிலில் உள்ள பொய்கை திருக்குளத்தில் தாமரை மலரில் அவதரித்தார் . சங்ககால நூலான பெரும்பாணாற்றுப்படையில் இக்கோயிலை பற்றி குறிப்பு உள்ளது. ப்ரம்மா நடத்திய யாகத்தை அழிக்க அசுரர்கள் சரஸ்வதியை நாட சரஸ்வதியும் வேகவதியாக ஓடிவந்து யாகத்தை அழிக்க முற்படும்போது பிரம்மாவும் , தேவர்களும் மகா விஷுனுவிடம் சரணடைய வேகவதியின் வேகத்தை தடுக்க பெருமாள் அணையென்ன குறுக்கே சயனித்தார் ,அவரை தாண்டி செல்லமுடியாமல் சரஸ்வதி விஷ்ணுவிடம் தஞ்சம் அடைந்தார். அப்போது அவள் கர்வம் நீங்கியது .
கணிகண்ணன் என்னும் சீடனுக்காக ஊரைவிட்டே புறப்பட்ட திருமிசை ஆழ்வார் தன்னுடன் பெருமாளையும் அழைக்க பெருமாள் பாம்பனை சுருட்டிக்கொண்டு புறப்பட்ட பின்பு பல்லவ அரசன் தன் தவறை அறிந்து திரும்பிட கேட்டுக்கொண்டபோது அவர் மீண்டும் பெருமாளை இருக்க வேண்டினார் .பெருமாளும் அவ்வாறே செய்தார். ஆதலால் அவர் எந்த திவ்ய தேசத்திலும் இல்லாத வலது புறத்தில் தலை வைத்து சயனித்தார் .தமிழ் புலவன் சொல் கேட்டு பெருமாள் நடந்ததால் ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள் ‘ என்ற திருநாமம் பெற்றார் .
அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்
தங்கும் வசதி : உண்டு
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு