63. திருக்கடல்மல்லை





	


	



























	




 




	








 




4:03:51 AM         Saturday, May 02, 2026

63. திருக்கடல்மல்லை

63. திருக்கடல்மல்லை
63. திருக்கடல்மல்லை 63. திருக்கடல்மல்லை 63. திருக்கடல்மல்லை 63. திருக்கடல்மல்லை 63. திருக்கடல்மல்லை 63. திருக்கடல்மல்லை 63. திருக்கடல்மல்லை 63. திருக்கடல்மல்லை 63. திருக்கடல்மல்லை 63. திருக்கடல்மல்லை 63. திருக்கடல்மல்லை
Product Code: 63. திருக்கடல்மல்லை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                          ஸ்தலசயனப் பெருமாள், மகாபலிபுரம் ( திருக்கடல்மல்லை) 

திருத்தல இருப்பிடம்    :    இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கடல்மல்லை என்னும் மகாபலிபுரம் சென்னைக்கு தெற்கே 64 கி.மீ. தொலைவில் உள்ளது.

மூலவர் : ஸ்தலசயனப்பெருமாள்

உற்சவர் : உலகுய்ய நின்றான்

தாயார் : நிலமங்கைத் தாயார்

தல விருட்சம்:புன்னை மரம்

தீர்த்தம்:புண்டரீக புஷ்கரணி

விமானம்;    :    ககனாக்ருதி விமானம், (அனந்த நிலை விமானம்)

மங்களாசாசனம்:    திருமங்கையாழ்வார் 26 பாசுரங்கள், பூதத்தாழ்வார் - 1 பாசுரம்

தலச் சிறப்புகள் : இங்கு மூலவர் புஜங்கசயனம், கிழக்கே திருமுகமண்டலம், வலது திருக்கரத்தை திருமார்பின் மீது உபதேசமுத்திரையாக வைத்து “ஞானத்தமிழ் புரிந்த நான்” என்பதை விளக்குகிறார்) உற்சவர் கையில் ஒரு சிறு தாமரை மொட்டுடன் காண, அதை அவரே மூலவரின் பாதங்களில் சேர்ப்பதாக ஐதீகம். பூதத்தாழ்வாரின் அவதார தலம் இது. லட்சுமி, நரசிம்மர், ஸ்ரீராமர், ஆண்டாள் சந்நிதிகள் உள்ளன.

இங்கு பல்லவர் கால சிற்பங்கள் மிகவும் அற்புதமாக உள்ளது. இங்கு மூலவர் சன்னதியின் கீழ் உள்ள விமானம் கனகாகிருதி விமானம் எனப்படுகிறது. புண்டரீக மகரிஷி இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளார். பூதத்தாழ்வார் அவதார தலம், பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று.  108 திருப்பதியில் கையில் தாமரை மொட்டுடன் நிற்கும் உற்சவர் இவர் மட்டும் தான். தன் கையில் உள்ள தாமரையை மூலவரின் பாதங்களில் சேர்ப்பிப்பதாக ஐதீகம்.

ஒரு காலத்தில் இங்கு ஏழு கோயில்கள் இருந்தன. அப்போது இத்தலத்திற்கு “ஏழு கோயில் நகரம்’ என்ற பெயர் இருந்தது. இவை கடல் சீற்றத்தினால் முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டன. அதன் பின் பல்லவ மன்னன் ராஜசிம்மன் 3 கோயில் கட்டினான். அதில் இரண்டு கடல் சீற்றத்தால் அழிக்கப்பட்டு விட்டன. மிஞ்சிய ஒன்று தான் தற்போதுள்ள கோயில். இதுவும் கடல் அலைகளால் தாக்கப்பட்டு வருகிறது.இதை மனதில் கொண்டோ என்னவோ, 14ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களில் ஒருவரான பராங்குசன் மாமல்லபுரம் நகருக்குள் ஆகமவிதிப்படி கோயில் கட்டி, இங்கிருந்த பெருமாளை பிரதிஷ்டை செய்தார். இவருக்கே தற்போது வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள பெருமாள் தன் வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இத்தல பெருமாளை தரிசித்தால் திருப்பாற்கடல் வைகுண்டநாதனை தரிசித்த பலன் கிடைக்கும்.

தல வரலாறு : இன்றைய மாமல்லபுரம் கடற்கரைப்பகுதியில் ஒரு காலத்தில் அடர்ந்த காடுகள் இருந்தன. இதில் புண்டரீக மகரிஷி என்பவர் தவம் செய்து வந்தார். இவர் அருகிலுள்ள குளத்தில் மலர்ந்திருந்த தாமரை மலர்களை பறித்து திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள நாராயணனின் திருவடிகளில் சமர்ப்பிக்க நினைத்தார். பறித்த பூக்களை கூடையில் கொண்டு செல்லும் போது, குறுக்கே கடல் இருந்தது. பக்திபெருக்கால் கடலில் வழி ஏற்படுத்த தன் கைகளால் கடல் நீரை இரவு பகலாக வெளியே இறைக்க ஆரம்பித்தார். பல ஆண்டுகளாக இதை செய்தார். “”பரந்தாமா! நான் கொண்ட பக்தி உண்மையானால், இந்த கடல் நீர் வற்றட்டும். எனக்கு பாதை கிடைக்கட்டும். இந்தப்பூக்கள் அதுவரை வாடாமல் இருக்கட்டும்,”என்றார். கடல் நீரை இறைப்பதென்ன சாத்தியமா? ஒரே இரவில் கைசோர்ந்தார். ஒரே மனதோடு இறைவனை நினைத்தபடியே நீரை இறைத்த முனிவர் முன்பு ஒரு முதியவர் வடிவில் பெருமாள் வந்தார்.முனிவரை மேலும் சோதிக்கும் வகையில், “”கடல்நீரை இறைக்கிறீரே! இது சாத்தியமா? உருப்படியாக ஏதாவது செய்யலாம் இல்லையா? எனக்கு பசிக்கிறது. சோறு கொடும்,”என்றார். “”முதியவரே! உமக்கு சோறு அளிக்கிறேன். அப்பணி முடிந்ததும், இப்பணியை தொடர்வேன். பெருமாளை நான் பார்த்தே தீர வேண்டும். என் பெருமாள், இந்தக்கடல் வற்றியே தீரும்,”என்றார். மலர்க்கூடையை முதியவரிடம் கொடுத்து,”” இதை வைத்திருங்கள். நான் சென்று உணவு கொண்டு வருகிறேன்”என்று கூறி சென்றார். மகரிஷி வருவதற்குள் அவர் கொடுத்து சென்ற பூக்களையெல்லாம் சூடி இந்த கடலிலேயே “ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் கோலத்தில்’ காட்சியளித்தார். இதைக்கண்டு ஆனந்தமடைந்த மகரிஷி, “”பெருமாளே! இந்த சிறியேனின் பக்திக்காக தாங்களே நேரில் வந்தீர்களா! உங்களையா பூக்கூடையை சுமக்கச்செய்தேன். என்னை மன்னித்து, நான் என்றென்றும் தங்கள் பாதத்தருகில் அமரும் பாக்கியம் தந்தருள வேண்டும்”என வேண்டினார். பெருமாளும் அவ்வாறே வரம் தந்தார். சயன திருக்கோலத்தில் காட்சி தந்ததால் “தலசயனப்பெருமாள்’ என அழைக்கப்படுகிறார். புண்டரீக மஹரிஷி கை கூப்பிய வண்ணம் அருகில் உள்ளார்.

இது அனைத்து வசதிகளும் கொண்ட இடம் ஆகும். இது கலைச் சிறபங்கள் நிறைந்த ஸ்தலமாகும். கடற்கரையிலிலுள்ள பூஜையில்லாத கோயிலிலும் ஸ்தலசயனப் பெருமாள் அழகாகச் சயனித்திருக்கிறார்.

காலை 7.00மணி முதல் 12.00 மணி வரை, மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை

அருகிலுள்ள ரயில் நிலையம் : செங்கல்பட்டு

தங்கும் வசதி :  உண்டு

பேருந்து   வசதி    :     உண்டு

தங்கும் வசதி    :    உண்டு

உணவு வசதி     :    உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×