066. திருநைமிசாரண்யம்





	


	



























	




 




	








 




10:59:40 PM         Friday, May 01, 2026

066. திருநைமிசாரண்யம்

066. திருநைமிசாரண்யம்
066. திருநைமிசாரண்யம் 066. திருநைமிசாரண்யம் 066. திருநைமிசாரண்யம் 066. திருநைமிசாரண்யம் 066. திருநைமிசாரண்யம் 066. திருநைமிசாரண்யம் 066. திருநைமிசாரண்யம் 066. திருநைமிசாரண்யம் 066. திருநைமிசாரண்யம் 066. திருநைமிசாரண்யம் 066. திருநைமிசாரண்யம் 066. திருநைமிசாரண்யம் 066. திருநைமிசாரண்யம் 066. திருநைமிசாரண்யம் 066. திருநைமிசாரண்யம் 066. திருநைமிசாரண்யம்
Product Code: 066. திருநைமிசாரண்யம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                  தேவராஜன், நைமிசாரண்யம்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உத்திரபிரதேசம் மாநிலத்தில்  தலைநகரான லக்னோ ரயில் நிலையத்திலிருந்து பாலமோவ் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து நைமிசாரண்யம் ரயில் நிலையத்தை அடையலாம். அல்லது லக்னோவிலிருந்து சீதாபூர் சென்று அங்கிருந்து பஸ்ஸில் நைமிசாரண்யம் செல்லலாம்.இங்கு அஹோபில மடமும், ஒரு ராமானுஜ மடமும் தங்க வசதியளிக்கின்றன. 

மூலவர் : தேவராஜன், ஸ்ரீஹரி (நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார் : ஸ்ரீஹரிலட்சுமி, புண்டரீகவல்லி
தீர்த்தம் : சக்ர தீர்த்தம், கோமுகி நதி, நேமி தீர்த்தம், திவ்ய தீர்த்தம், விச்ராந்த தீர்த்தம்
விமானம்  :  ஸ்ரீஹரி விமானம்
தல விருட்சம்  :  தபோவனம்

மங்களாசாசனம்:    திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்

தலச் சிறப்புகள் : மூலவர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். ஆறு கோண வடிவம் கொண்டது. கோமுகி நதிக்குப் போகும் வழியில் வியாஸகட்டீ என்ற இடத்தில் வேதவ்யாஸர் ஆலயம் உள்ளது. இதுதான் வ்யாஸ பகவானும், சுகப்ரஹ்மமும் ப்ரவசனங்கள் செய்து பாரதம், பாகவதம் முதலிய இதிகாச புராணங்களை இயற்றிய புண்யபூமி. விகானாஸாசாரியார் வேதரித்த ஸ்தலம், அவருக்கு ஒரு சந்நிதியும் இருக்கிறது.

தல வரலாறு : முனிவர்கள் தாங்கள் ஒரு வேள்வியைத் தொடங்குவதற்கு ஏற்ற இடத்தைக் காட்டுமாறு பிரம்மதேவனிடம் சென்று வேண்டினர். பிரம்மா ஒரு விமானத்தைக் கொடுத்து அதன் சக்கரம் (நேமி) எங்கு விழுகின்றதோ அங்கு சென்று வேள்வி செய்யுமாறு கூறினார். சக்கரம் இந்த ஸ்தலத்தில் விழுந்ததால், முனிவர்கள் இங்கு வேள்வியைத் தொடங்கி அதன் அவிர்பாகத்தை திருமாலுக்கு அளித்தனர். பகவான் காட்சிக் கொடுத்து அவிர்பாகத்தை ஏற்றுக் கொண்டு முனிவர்களுக்கு அருள்புரிந்தார். காடாக இருந்த இந்த இடத்தில் நேமி விழுந்ததால் 'நேமிசாரண்யம்' என்று பெயர் பெற்றது. பின்னர் மருவி 'நைமிசாரண்யம்' என்று அழைக்கப்படுகிறது.
 
கோமுகி நதிக்குச் செல்லும் வழியில் 'வியாஸகட்டீ' என்னும் இடத்தில் வியாச முனிவருக்கு கோயில் உள்ளது. இங்குதான் வியாசரும், சுகப்பிரம்ம மகரிஷியும் பாரதம், பாகவதம் முதலிய இதிகாசங்களை இயற்றியதாகக் கூறப்படுகிறது. விகானாஸாசாரியார் அவதரித்த ஸ்தலம். அவருக்கு ஒரு சந்நிதியும் இருக்கிறது. ஊரின் மற்றொரு பகுதியில், சுகமுனிவருக்கு ஒரு கோயிலும், பாலாஜி மந்திர் என்று ஒரு பெருமாள் கோயிலும் உள்ளது. 'ஹனுமன்கட்டீ' என்னும் இடத்தில் சிறு குன்றின் மீது ஹனுமன் ஆலயம் ஒன்றும் உள்ளது.

ஊரின் மற்றொரு புறத்தில் புராண மந்தர் என்ற சுகபகவான் ஆலயத்தில் அவருடைய வெண்கலச்சிலை (கிளிமூக்குடன்) பெரியதாக வைக்கப்பட்டுள்ளது. இதற்குச் சற்று அப்பால் ஒரு சிறிய குன்றின் மேல் ஹனுமான்சட்டீ என்ற ஆலயத்தில் மிகப் பிரம்மாண்டமான உருவுள்ள ஹனுமார், ஸ்ரீ ராமலக்ஷ்மணர்களை இரு தோள்களிலும் எழுந்தருளிப் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். பாலாஜி மந்திர் என்று அழைக்கப்படும் பூசமேத வெங்கடேஸ்வர் சுவாமி கோயில் ஒன்றும் நைமிசாரண்யத்தில் உள்ளது. இங்கு தங்குமிடம் உண்டு. தென்னிந்திய உணவும் கிடைக்கிறது.

காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் :  லக்னோ

அருகிலுள்ள ரயில் நிலையம் :  நைமிசாரண்யம்

பேருந்து  வசதி : உண்டு

தங்கும் வசதி :  உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×