092. திருவரகுணமங்கை (நத்தம்)





	


	



























	




 




	








 




12:37:37 AM         Friday, April 17, 2026

092. திருவரகுணமங்கை (நத்தம்)

092. திருவரகுணமங்கை (நத்தம்)
092. திருவரகுணமங்கை (நத்தம்) 092. திருவரகுணமங்கை (நத்தம்) 092. திருவரகுணமங்கை (நத்தம்) 092. திருவரகுணமங்கை (நத்தம்) 092. திருவரகுணமங்கை (நத்தம்) 092. திருவரகுணமங்கை (நத்தம்) 092. திருவரகுணமங்கை (நத்தம்) 092. திருவரகுணமங்கை (நத்தம்)
Product Code: 092. திருவரகுணமங்கை (நத்தம்)
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                        விஜயஸனப் பெருமாள், திருவரகுணமங்கை (நத்தம்)

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டத்திலிருந்து கிழக்கே 2 கி.மீ தொலைவில் உள்ளது. இன்று இந்த ஊரை நத்தம் என்று அழைக்கின்றனர்.

மூலவர்        :    விஜயஸனப் பெருமாள்
 
தாயார்         :    வரகுணவல்லி, வரகுணமங்கை

தீர்த்தம்        :    அக்னி தீர்த்தம், தேவ புஷ்கரிணி

விமானம்     :    விஜயகோடி விமானம்

மங்களாசாசனம்    :    நம்மாழ்வார் - 1 பாசுரம்

தலச் சிறப்புகள் : இத்தலம் நவதிருப்பதிகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இங்கு மூலவர் ஆதிசேஷன் குடைப்பிடிக்க வீற்றிருந்த கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். நாச்சியாருக்கு தனிக் கோயில் இல்லை. வரகுணவல்லி, வரகுணமங்கை என்ற இரு தாயார்கள் பெருமாளுடன் உள்ள தலம் இதுவாகும். அவர் பெயராலேயே ஸ்ரீ வரகுண மங்கை என்று ஊருக்கு பெயர் அமைந்துள்ளது. நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டத் தலம் இது. அதுவும் ஒரே ஒரு சொல்லால் மங்களாசாசனம் செய்துள்ளார். அக்னிக்கு இந்தப் பெருமாள் காட்சி தந்து அருள் புரிந்த தலம். இந்தத் தலத்தில் பெருமாள் விஜயகோடி விமானத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் ‘விஜயாசனர்’ என்ற திருநாமத்தோடு அமர்ந்து அருள்புரிகிறார்.

தல வரலாறு :  நவக்கிரகங்களில் சந்திரனுக்கு உரிய தலம் ஆகும். வரகுணமங்கை என்று சொல்லுவதை விட, ‘நத்தம் கோவில்’ என்று கேட்டாலே பொதுமக்கள் எளிதில் அடையாளம். ஒரு சமயம் ரோமச முனிவர் என்பவர், இந்த தலம் அமைந்துள்ள இடத்தில் தவம் செய்து கொண்டிருந்தார். அவரின் சீடன் சத்தியவான் என்பவன், இங்குள்ள அகநாச தீர்த்தத்தில் நீராடிக் கொண்டிருந்தான். தீர்த்தக் கரையின் மறு பகுதியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவன் ஒருவன், மீன்களைப் பிடித்து உலர்த்திக் கொண்டிருந்தான். சத்தியவானுக்கு அந்த மீனவனின் செயல் பாவமாக தென்பட்டது. ‘இவ்வளவு கொடூரமாக உயிர்களைக் கொலை செய்கிறானே. இவனுக்கு நரகமே கிடைக்கும்’ என்று சத்தியவான் எண்ணிக்கொண்டிருந்தான்.

அப்போது மீன்களைப் பிடிப்பதற்காக மீண்டும் குளத்தில் வலையை வீசினான் அந்த மீனவன். அந்த சமயத்தில் அவனுக்கு பின்னால் இருந்து நாகம் ஒன்று தீண்டியதில், அவன் அந்த இடத்திலேயே இறந்து போனான். சில நிமிடங்களிலேயே விண்ணிலிருந்து வந்த ஒரு தேவ விமானம், மீனவனை ஏற்றிக் கொண்டு சொர்க்கத்திற்குச் சென்றது. இதனைக் கண்டு சத்தியவான் மிகுந்த ஆச்சரியம் அடைந்தான். அவன் உடனடியாக கரையேறி, ரோமச முனிவரை நோக்கிச் சென்றான். அவரிடம் தான் கண்ட அனைத்தையும் ஒன்றுவிடாமல் விளக்கினான். அத்தோடு ‘உயிர்களை ஈவு இரக்கமின்றி கொலை செய்யும் ஒருவனுக்கு எப்படி சொர்க்க பதவி கிடைத்தது’ என்றும் முனிவரிடம் கேட்டான்.

தன் ஞான திருஷ்டியால் அனைத்தையும் கண்டுணர்ந்தார் ரோமசர். பின்னர் சத்தியவானிடம் கூறத் தொடங்கினார். ‘இந்தப் பிறவியில் மீனவனாய் இருந்தவன், போன ஜென்மத்தில் விதர்ப்ப நாட்டை ஆண்ட விசுவ சகன் என்ற மன்னனின் மகன் ஆவான். அவன் தர்மத்தின் வழியில் பற்றும், அநேக நல்ல காரியங்களையும் செய்திருந்தான். இருப்பினும் அவனுக்கு கூடாத நட்பு காரணமாக தவறான செய்கையும் இருந்தது. சென்ற பிறவியில் செய்த தவறான செய்கையால் நரகத்தை அடைந்தான். அவன் செய்த நற் செயல்களால் இந்தப் பிறவியில் வரகுணமங்கை என்னும் இத்தலத்தில் பிறந்து முக்தி அடையும் பேறு பெற்றான்.’ இத்தலத்தில் உயிர் நீத்ததால் மோட்சம் செல்லலாம் என்று இத்தலத்தின் மேன்மையை எடுத்துரைத்தார்.

ரேவா நதிக்கரையில் புண்ணிய கோசம் அக்ரகாரத்தில், வேதவித் என்ற அந்தணன் வாழ்ந்து வந்தான். அவன் தன் தாய், தந்தை, குரு ஆகியோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்து விட்டு, ‘ஆஸனதை’ என்னும் மந்திரத்தை உச்சரித்து திருமாலை நோக்கி தவம் இயற்ற முடிவு செய்திருந்தான். அப்போது திருமால், வயோதிக வடிவம் கொண்டு வேதவித்தை தேடி வந்தார். ‘சக்யம், மகேந்திரம் என்னும் இரு மலைகளுக்கு இடையில் உள்ள வரகுணமங்கை என்னும் பதியில் சென்று தவம் இயற்று. அதுவே ஆஸனதை மந்திரத்தை ஜபிப்பதற்கு ஏற்ற இடம்’ என்று கூறினார்.

வேதவித்தும் ஆஸனதை மந்திரத்தை வரகுணமங்கையில் இருந்து ஜபித்து, திருமாலை நோக்கி கடும் தவம் இருந்தான். அதன் பயனாக திருமாலின் தரிசனம் கிடைத்து வைகுண்டம் சென்றடைந்தான். வெற்றியைத் தரக்கூடிய ‘ஆஸனதை’ என்னும் மந்திர ஜபத்திற்கு கட்டுப்பட்டு, அனைத்து நலன்களையும் நல்கும் பெருமாளாக ‘விஜயாசனப் பெருமாள்’ இங்கு அருளாட்சி செய்து வருகிறார். இத்தல பெருமாள், ஆதிசேஷன் குடை பிடிக்க, கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். பகவான் பள்ளிகொண்ட கோலத்தை விட, நிற்கின்ற கோலத்தை விட, வீற்றிருக்கின்ற திருக்கோலம் சிறப்பானது. 

இத்தலத்தில் பிரம்மாவின் கர்வத்தை அழித்த ரோமச ரிஷிக்கும், எமனிடம் போராடி கணவனை மீட்ட சாவித்திரிக்கும், அதர்மத்தை சுட்டுப் பொசுக்கும் அக்னிக்கும் பெருமாள் காட்சி கொடுத்துள்ளார். மனிதர்கள் இந்த தலத்தில் உள்ள பெருமாளை வேண்டி வழிபட்டால், பூலோகத்தில் வாழும் காலம் வரை சவுகரியமான வாழ்க்கையைப் பெறலாம். வைகுண்டத்திலும் பெருமாளின் கருணைக்கு பாத்திரமாகலாம். மேலும் ஒரு சிறப்பாக இங்குள்ள மகா மண்டபத்தில் நரசிம்ம மூர்த்தி இருந்த கோலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ஐந்து நிலை ராஜ கோபுரம் சுதைச் சிற்பங்களோடு அழகுற அமைக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளே நுழைந்தால் கொடி மரம், பலிபீடம் காட்சியளிக்கின்றன.

தினமும் மூன்று கால பூஜை நடைபெறும் இந்த ஆலயத்தில், வைகானச ஆகமப்படி பூஜைகள் நடத்தப்படுகிறது. திங்கட்கிழமை தோறும் சந்திரன் வழிபாடும், செவ்வாய்க்கிழமையில் நரசிம்மர் வழிபாடும், சனிக் கிழமை, பவுர்ணமி, பிரதோஷங்களில் பெருமாள் வழிபாடும் சிறப்புக்குரியதாக உள்ளது. பெருமாளுக்கும், நரசிம்மருக்கும் ஏலக்காய் மாலை சமர்ப்பித்து வழிபட்டால் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும்.

சித்திரை வருடப்பிறப்பு, ஆடி மாதப்பிறப்பு, புரட்டாசி சனிக்கிழமைகள், தீபாவளி, ஐப்பசியில் 5 நாள் தெப்ப உற்சவம், திருக்கார்த்திகை, தனுர் மாதம், வைகுண்ட ஏகாதசி, தை மாதப் பிறப்பு, மாசியில் நடைபெறும் 11 நாள் பிரம்மோற்சவம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் இந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இங்கு எந்தவிதமான வசதிகளும் கிடையாது. மேலும், முன்கூட்டியே ஏற்பாடு செய்து கொண்டு சேவிப்பதற்கு செல்வது நல்லது.

காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை

அருகிலுள்ள ரயில் நிலையம் : ஸ்ரீவைகுண்டம்

பேருந்து வசதி    :    உண்டு

தங்கும் வசதி    :    இல்லை

உணவு வசதி     :    இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×