095. திருக்குளந்தை (பெருங்குளம்)





	


	



























	




 




	








 




12:35:19 AM         Friday, April 17, 2026

095. திருக்குளந்தை (பெருங்குளம்)

095. திருக்குளந்தை (பெருங்குளம்)
095. திருக்குளந்தை (பெருங்குளம்) 095. திருக்குளந்தை (பெருங்குளம்) 095. திருக்குளந்தை (பெருங்குளம்) 095. திருக்குளந்தை (பெருங்குளம்) 095. திருக்குளந்தை (பெருங்குளம்) 095. திருக்குளந்தை (பெருங்குளம்) 095. திருக்குளந்தை (பெருங்குளம்) 095. திருக்குளந்தை (பெருங்குளம்) 095. திருக்குளந்தை (பெருங்குளம்) 095. திருக்குளந்தை (பெருங்குளம்) 095. திருக்குளந்தை (பெருங்குளம்) 095. திருக்குளந்தை (பெருங்குளம்) 095. திருக்குளந்தை (பெருங்குளம்) 095. திருக்குளந்தை (பெருங்குளம்) 095. திருக்குளந்தை (பெருங்குளம்)
Product Code: 095. திருக்குளந்தை (பெருங்குளம்)
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                  வேங்கட வாணன், திருக்குளந்தை (பெருங்குளம்)

திருத்தலஇருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பெருங்குளம் என்ற பெயரில் உள்ளது ஸ்ரீவைகுண்டத்திலிருந்து வடகிழக்கு திசையில் சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு தீரத்தமாக பெரிய குளம் என்ற ஏரி இருக்கிறது. எனவே பெருங்குளம் என்று அழைக்கப்படுகின்றது. 

மூலவர் : வேங்கட வாணன், ஸ்ரீநிவாசன்

உற்சவர் :   மாயக் கூத்தர்

தாயார் : அலமேலு மங்கைத் தாயார்,கமலாவதி, குழந்தைவல்லித் தாயார்.

தீர்த்தம் : பெருங்குளத்தீர்த்தம்

விமானம்   :    ஆநந்தநிலய விமானம்

மங்களாசாசனம்    :    நம்மாழ்வார் - 1 பாசுரம்
 
தலச் சிறப்புகள்: இத்தலம் நவதிருப்பதிகளில் ஒன்றாகும். இங்கு மூலவர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். கருடனும் உற்சவராகப் பெருமாள் பக்கத்தில் எழுந்தருளியிருக்கிறார். வேதசாரன் என்ற அந்தணனுக்கு கமலாவதி என்று ஒரு கன்னிகை பிறந்து, அவள் கடவுளையே கணவனாக அடைய தவம் புரிந்து மகாவிஷ்ணு ப்ரத்யமாகி, தம் கௌஸ்துபமணியுடன் அவளைச் சேர்த்து ஆவிங்கனம் செய்து, விவாஹம் செய்து கொண்டதாகவும், பாலிகை தவம் செய்த இடமாதலால் 'பாலிகைவனம்' என்று பெயரடைந்ததாகவும் புராண வரலாறு கூறுகிறது.

தல வரலாறு : வேதாசரன் என்ற அந்தணருக்குப் பிறந்த கமலாவதி என்ற பெண் பகவானைக் குறித்து தவம் செய்ய, பகவான் காட்சி கொடுத்து விவாகம் செய்து கொண்டதாக ஸ்தல வரலாறு. பாலிகை தவம் செய்த இடம் என்பதால் பாலிகை வனம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு அச்மஸாரன் என்னும் அசுரன் பகவானுடன் யுத்தம் செய்ததாகவும் பகவான் அ‌‌வனை வீழ்த்தி அவன் மேல் நாட்டியமாடி அழித்ததாகவும் சொல்வார்கள். தேவர்கள் பிரார்த்தனைப்படி மாயக்கூத்தன் என்ற திருநாமம் பெற்றார். இத்தலத்தில் கருடன் பெருமாளுடன் உற்ஸவராக பக்கத்தில் எழுந்தருளியுள்ளார்.

இத்தலத்தில் அச்மஸாரன் என்ற அசுரனை பாலிகாவனத்தில் மாயாயுத்தம் செய்து அவன் காலைப் பிடித்து தரையில் மோதி, பகவான் அவன்மேல் நாட்டியமாடி ஸம்ஹரித்து தேவர்கள் பிரார்த்தனைப்படி மாயக்கூத்தன் என்ற திருநாமம் பெற்றதாக ஐதீகம். சோரனான அஸ்மசாரன் மீது நர்த்தனம் புரிந்ததால் இங்குள்ள பெருமாளுக்கு சோரநாதன் தமிழில் மாயக்கூத்தன் என்றாயிற்று.

சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரகங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங்‌களாக செயல்படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சன்னதி அமைக்கப்படுவதில்லை .அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும். இவற்றை தரிசிக்க ஒவ்வொரு ஊருக்கும் பஸ் ஏறிச் சென்று வருவது சிரமம். நாள் பிடிக்கும். அ‌தைவிட கார் ஒன்று அமர்த்தி சென்று வந்தால் ஒ‌‌ரே நாளில் அனைத்துத் தலங்களையும் தரிசித்து விடலாம். சென்னையில் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்து தருகிறது. மாதம் இருமுறை சென்னையிலிருந்து நடத்தப்படும் இச்சுற்றுலா முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் புறப்படுகிறது. புதன் விடிகாலையில திரும்பிவிடலாம்.

காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை

அருகிலுள்ள ரயில் நிலையம் : ஸ்ரீவைகுண்டம்

பேருந்து வசதி    :    உண்டு

தங்கும் வசதி    :    இல்லை

உணவு வசதி     :    இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×