101. திருக்கூடல்





	


	



























	




 




	








 




12:33:15 AM         Friday, April 17, 2026

101. திருக்கூடல்

101. திருக்கூடல்
101. திருக்கூடல் 101. திருக்கூடல் 101. திருக்கூடல் 101. திருக்கூடல் 101. திருக்கூடல் 101. திருக்கூடல்
Product Code: 101. திருக்கூடல்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                         கூடலழகர், திருக்கூடல் (மதுரை)

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் திருக்கூடல், கூடலழகர் சந்நிதி தென் மதுரையிலே அமைந்திருக்கிறது. மதுரை நகருக்குள்ளேயே ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது.

மூலவர்     :    கூடலழகர், கிழக்கே திருமுக மண்டலம்
 
தாயார்        :    மதுரவல்லி, வகுளவல்லி, வரகுணவல்லி, மரகதவல்லி

தீர்த்தம்       :    ஹேம புஷ்கரிணி, சக்ர தீர்த்;தம், க்ருதமாலா நதி, வைகை நதி

விமானம்    :    அஷ்டாங்க விமானம்

மங்களாசாசனம் :    திருமங்கையாழ்வார் - 1 பாசுரம், திருமழிசையாழ்வார் - 1 பாசுரம்

தலச் சிறப்புகள் : ஆதிசேஷன் கீழே வீற்றிருந்த கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். உற்சவர் வ்யூஹ சுந்தரராஜன் இரண்டு மாடித் தளங்களில் முதலில் புஜங்க சயனத்தில் ரெங்கநாதனும், இரண்டாவதில் சூரிய நாராயணப் பெருமாள் நின்ற கோலத்திலும் எழுந்தருளியிருக்கிறார்கள். ஒரே இடத்தில் நின்ற ,அமர்ந்த ,கிடந்த கோலத்தில் பெருமாளை கண்டு ரசிக்கலாம்,

தல வரலாறு : பெருமாளின் திரிவிக்ரம அவதாரத்தில் சத்தியலோகத்துக்கு வந்து பாதங்களை பிரம்மன் கழுவிய போது, இங்கு விழுந்த நீர்த்துளிகளே வைகை ஆனது. ஒரு பிரிவு வைகையாகவும், மற்றொரு பிரிவு கிருதமாலாவாகவும் மாறியதாகக் கூறப்பட்டுள்ளது. தேவர்கள் கூட்டமாக கூடி இங்கு வருவதால் இந்நகருக்கு கூடல் என்றும், இங்கு எழுந்த பெருமாளே கூடலழகர் என்று பெயர் பெற்றார். இத்தலம் நான்கு யுகங்களிலும் போற்றப்பட்டு வந்துள்ளது. கிரேதாயுகத்தில் பிரம்ம தேவனின் மைந்தன் பெருமாளை அர்ச்சா ரூபத்தில் வழிபட விரும்பியதால் இங்கு பெருமாளும் பிராட்டியும் சகல பரிவாரங்களுடன் எழுந்தருளினர். கிரேதாயுகத்தில் பிருது என்னும் மன்னன் இத்தலத்தின் மீது விமானத்தில் பறக்கும் போது அஷ்டாங்க விமானச் சக்தியால் பறக்க இயலாமல் இத்தலத்தில் இறங்கி பெருமாளை வணங்கி பின்பு பரமபதம் அடைந்தார் எனக் கூறப்படுகிறது.

இத்திருக்கோயிலின் ப்ரகாரங்களில் இருக்கும் சுவர்களில் 108 திவ்ய தேசத்துப் பெருமாள்களின் சித்திரங்கள் வரையப்பட்டிருப்பது விசேஷம். வைகை நதி இரண்டாக பிரிந்து மதுரையை அரண்போல் சுற்றி மீண்டும் இணைகிறது ஆதலால் திருக்கூடல் என்று அழைக்கப்படுகிறது அதனால் இக்கரையில் அமைந்துள்ள இக்கோயில் இறைவனுக்கு கூடலழகர் என்ற திருப்பெயர் அமையபெற்றது.

நான்கு யுகங்களாக கோயில் கொண்டு இறைவன் நாராயணன் அருள் புரிவதாக கூறப்படுகிறது. கிருதயுகத்தில் பிரம்மனின் மைந்தன் அர்ச்சா வழிபட்டதாகவும், திரேதாயுகத்தில் பிருது என்ற மன்னன் வழிபட்டதாகவும் ,துவாபரயுகத்தில் அம்பரீசன் வழிபட்டதாகவும், கலியுகத்தில் புரூரவசு அவரது மகன் இந்திரத்தியும் வழிபட்டதாக கூறப்படுகிறது . உலகில் உள்ள அனைத்து கோயில்களிலும் காலையில் பாடுகின்ற பெரியாழ்வார் பாடிய பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்ற பாடல் முதன் முதலில் பாடப்பெற்ற தலம் இதுவாகும் .

பெருமாள் கோயில்களில் 96 விதமான விமானகங்கள் அமைக்கப்படுகின்றன. அதில் அஷ்டாங்க விமானம் மிகவும் புனிதமான சிறப்பு வாய்ந்ததாகவும். 108 திவ்ய தேசங்களில் திருக்கோஷ்டியூர் மற்றும் இத்தலத்தில் மட்டுமே அமைந்துள்ளது . இந்த விமானம் 125 அடி உயரம் கொண்டது இதில் உள்ள கலசங்கள் 10 அடி உயரம் கொண்டது. இவ் கோபுரத்தின் நிழல் கிழே விழாது. இது மூன்று அடுக்கு நிலையுடன் 8 பகுதிகளாக உயர்ந்து நிற்கின்றது. இதன் அமைப்பு ‘ஓம் நமோ நாராயணா‘ என்ற மந்திரத்தின் அமைப்பாகும்.

சூரியன் அஷ்டாங்க விமானத்தை கூடிய ரதத்தில் வலம் வருவார். இவ் ரதத்தின் சிற்பம் கோயிலின் சுவற்றில் செதுக்கப்பட்டுள்ளது. பெருமாள் கோயில்களில் நவகிரஹ சன்னதி பெரும்பாலும் இருக்காது. ஆனால் இக்கோயில் நவகிரஹ சன்னதி தனியாக உள்ளது. இக்கோயிலின் சிற்பவேலைப்பாடுகள் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன .

 

காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை

அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை

பேருந்து வசதி    :    உண்டு

தங்கும் வசதி       :    உண்டு

உணவு வசதி        :    உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×