103. திருமோகூர்





	


	



























	




 




	








 




12:35:51 AM         Friday, April 17, 2026

103. திருமோகூர்

103. திருமோகூர்
103. திருமோகூர் 103. திருமோகூர் 103. திருமோகூர் 103. திருமோகூர் 103. திருமோகூர் 103. திருமோகூர் 103. திருமோகூர் 103. திருமோகூர்
Product Code: 103. திருமோகூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                 காளமேகப்பெருமாள், திருமோகூர்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள மதுரை மாவட்டத்தின் தலைநகரான மதுரையிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் ஒத்தகடை சந்திப்பிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. இதனை மோகன சேத்திரம் என்றும் அழைப்பர்.  அருகில் மாணிக்கவாசகர் அவதரித்த திருவாதவூர் (திருமறைநாதர்) என்னுமிடம் உள்ளது.

மூலவர்  :  காளமேகப்பெருமாள்

உற்சவர்  :  திருமோகூர் ஆப்தன்

தாயார்  :  மோகனவல்லி

தல விருட்சம்  :   வில்வம்

தீர்த்தம்  :  தாளதாமரை புஷ்கரிணி, பாற்கடல் தீர்த்தம்

விமானம்    :    சதுர்முக விமானம்

மங்களாசாசனம்:    திருமங்கையாழ்வார் - 1 பாசுரம்,  நம்மாழ்வார் - 11 பாசுரங்கள்

தலச் சிறப்புகள்: மூலவர் நின்ற கோலத்தில் வலது கையில் வரதஹஸ்தம், இடது கையில் கதையுடன் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். உற்சவர் திருமோகூர் ஆப்தன் (பஞ்ச ஆயுதங்களுடன்) இங்கு தெற்கு நோக்கி பள்ளி கொண்ட பெருமாள் தனிச் சந்நிதியில் சேவை சாதிக்கிறார். ஆதிசேடனுக்கு தங்க கவசங்கள் உள்ளன. இங்கு சக்கரத்தாழ்வார் தனி சன்னிதியில் சேவை சாதிக்கிறார். இது மிகவும் விசேஷம். இவருக்கான உற்சவர் சிலையில் 154 மந்திரங்களும், மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பதினாறு கைகளில் ஆயுதங்களுடன் காட்சி தரும் இவர், அக்னி கிரீடத்துடன், ஓடி வரும் நிலையில் காட்சி தருகிறார்.

தல வரலாறு : ஒரு சமயம் தேவர்கள் அனைவரும் சென்று மகாவிஷ்ணுவை வணங்கி சாகாவரமளிக்கும் அமிர்தம் வேண்டி பெருமாளிடம் கூற அனைவரும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்து அமுதமெடுக்க முற்பட்டனர். மிகவும் வேகமாகக் கடைய வாசுகி பாம்பு விஷத்தை கக்கியது, அதனைச் சிவபெருமான் ஏற்றுக்கொள்ள, இறுதியில் அமிர்தம் கிடைக்க அதனைப்பெற தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போர் நடைபெற பெருமாள் மோகினிவேடங்கொண்டு அமிர்தத்தை தேவர்களிடம் கொடுத்தார். இங்கு பெருமாள் மோகினி அவதாரம் எடுத்ததால் இத்தலம் 'மோகன சேத்திரம்' என்றாயிற்று. தூய தமிழில் திருமோகூர் என வழங்கப்பெற்றது. புலஸ்தியர் என்னும் முனிவர் துவாபரயுகத்தில் பெருமாள் இங்கு பள்ளி எழுந்தருள வேண்டும் என்று வேண்டியதால், இங்கு அவருக்கு தனிச் சந்நிதி உள்ளது. திருப்பாற்கடலைக் கடையும் பொழுது இங்கே ஒரு துளி அமிர்தம் விழுந்தது.

இத்தலத்தில் புராதனமான சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. இவருக்கான உற்சவர் சிலையில் 154 மந்திரங்களும், மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பதினாறு கைகளில் ஆயுதங்களுடன் காட்சி தரும் இவர், அக்னி கிரீடத்துடன், ஓடி வரும் நிலையில் காட்சி தருகிறார்.

காளமேகம் (கருமேகம்) நீரை தனக்குள் வைத்துக்கொண்டு, அதை மக்களுக்கு மழையாக பெய்விப்பதுபோல இத்தலத்தில் மகாவிஷ்ணு, அருள் என்னும் மழையை தருகிறார். எனவே இவர், “காளமேகப்பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். பஞ்சாயுதங்களுடன் காட்சி தரும் இவர், மார்பில் சாளக்ராம மாலை அணிந்து, வலது கையால் தன் திருவடியைக் காட்டியபடி இருக்கிறார். இங்குள்ள உற்சவர், “ஆப்தன்’ என்று அழைக்கப்படுகிறார். “நண்பன்’ என்பது இதன் பொருள். தன்னை வழிபடுபவர்களுக்கு உற்ற நண்பனாகவும், அவர்களது இறுதிக்காலத்திற்கு பிறகு வழித்துணைவனாகவும் அருளுவதவால், இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது.

தூங்கிக்கொண்டிருப்பவரை எழுப்பலாம். ஆனால் தூங்குவது போல நடிப்பவரை எழுப்ப முடியாது’ என்பர். இவ்வாறு தூங்குவது போல நடிப்பதை, “கள்ளத்தூக்கம்’ என்பர். இத்தலத்தில் கள்ளத்தூக்க கோலத்தில், பெருமாளுக்கு சன்னதி இருக்கிறது.தேவர்கள், தங்களைக் காக்க மகாவிஷ்ணுவிடம் முறையிடச் சென்றபோது அவர், ஏதுமறியாதவர் போல சயனித்திருந்தாராம். தேவர்களுக்கு, சுவாமியின் நித்திரைக்கு இடையூறு இன்றியும், அதே சமயம் தங்களது குறையையும் சொல்ல வேண்டும் என்ற நிலையில், அவரை எழுப்ப விரும்பாத அவர்கள், ஸ்ரீதேவி, பூதேவியிடம் தாங்கள் வந்த நோக்கத்தைச் சொல்லிவிட்டு திரும்பிவிட்டனர்.இப்போது தாயார்கள் இருவருக்கும், தேவர்களின் வேண்டுதலை சுவாமியிடம் சொல்ல வேண்டும், அதேசமயம் அவரது நித்திரையைக் கலைக்கக்கூடாது என்ற நிலை! எனவே, அவர்களிருவரும் மனதிற்குள் வேண்டிக்கொள்ளவே, மகாவிஷ்ணு கருணையுடன் கண்திறந்து, மோகினி வடிவில் சென்று தேவர்களுக்கு அருள்புரிந்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கு பெருமாளுக்கு சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது.இவர் வலது கையை தலைக்கு வைத்து சயனித்திருக்கிறார். பாதத்திற்கு அருகில் தாயார்கள் இருவரும் கைகளை தாழ்த்தி வைத்து, பிரார்த்தனை செய்யும் கோலத்தில் காட்சி தருகின்றனர். இவருக்கு, “பிரார்த்தனை சயனப்பெருமாள்’ என்று பெயர். இந்த சன்னதிக்கு கீழே திருப்பாற்கடல் தீர்த்தம் இருப்பதாக ஐதீகம். பாற்கடலின் ஒரு துளி இதில் விழுந்ததால் இப்பெயரில் அழைக்கப்படுகிறது.

நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்களும் இத்தல பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளனர். அழகர்கோவில் கள்ளழகரையும், திருமோகூர் பெருமாளையும் இணைத்து, “சீராறும் மாலிருஞ்சோலை திருமோகூர்’ என்று திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். நம்மாழ்வார், இறைவனை சரணாகதியடைய வேண்டி பாடிய திருவாய்மொழியில், இத்தலம் பற்றி பாடியுள்ளார். இங்கு வேண்டிக்கொள்ள மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே சுவாமிக்கு, “மோட்சம் தரும் பெருமாள்’ என்றும் பெயருண்டு. தாயாருடன் மூன்று மணிநேரம்!: பெருமாள், பெண் வடிவம் எடுத்த தலமென்பதால், அவருக்கு மரியாதை தரும்விதமாக தாயார் மோகனவல்லி, சன்னதியை விட்டு வெளியேறுவதில்லை. இவளுக்கென விழாவும் கிடையாது. இவளது சன்னதியில் சடாரி சேவை, தீர்த்த பிரசாதமும் தரப்படுவதில்லை. நவராத்திரியின்போது மட்டும் விசேஷ பூஜை செய்கின்றனர். பங்குனி உத்திரத்தன்று சுவாமி, தாயார் சன்னதிக்கு எழுந்தருளி, சேர்த்தியாகக் காட்சி தருகிறார். இந்த வைபவம் மூன்று மணி நேரம் மட்டுமே நடக்கும்.

மோகனவல்லி தாயார், சன்னதியை விட்டு வெளியேறுவதில்லை என்பதால், சுவாமியுடன் ஆண்டாள் பிரதானமாக புறப்பாடாகிறாள். வைகாசி பிரம்மோற்ஸவத்தில் காளமேகப்பெருமாள், ஆண்டாளின் மாலையை அணிந்தபடி, சேர்த்தியாக காட்சி தருவார். பங்குனி உத்திரம், அதற்கு மறுநாள் நடக்கும் தெப்பத்திருவிழா, மார்கழி 28 ஆகிய நாட்களிலும் சுவாமியுடன், ஆண்டாளை தரிசிக்கலாம்.வைகாசி பிரம்மோற்ஸவத்தின் எட்டாம் நாள், மாசி மகம் ஆகிய நாட்களில் மோகினி வடிவில் சுவாமி காட்சி தருவார். மாசி மகத்தன்று சுவாமி, ஒத்தக்கடை நரசிம்மர் கோயிலுக்குச் செல்கிறார். அங்கு அவருக்கு மோகினி வடிவில் அலங்காரம் செய்து, சடை பின்னி, எண்ணெய் தடவி தைலக்காப்பு செய்கின்றனர். அன்று நள்ளிரவில் சுவாமி, கருட வாகனத்தில் எழுந்தருளி, கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுக்கும் வைபவம் நடக்கும். மோட்ச தீபம்: சிவ பூஜைக்கு உகந்த வில்வம், அவருக்கான தலங்களில் பிரதான விருட்சமாக இருக்கும். ஆனால், பெருமாள் தலமான இங்கும் வில்வமே, தல விருட்சமாக இருக்கிறது. இத்தலத்து தாயார் மோகனவல்லிக்கும், வில்வ இலை அர்ச்சனை செய்யப்படுகிறது. பித்ருக் களுக்கு திதி, தர்ப்பணம் செய்பவர்கள், செய்ய மறந்தவர்கள் காளமேகப்பெருமாளை வேண்டி, அரிசி மாவில் செய்த தீபத்தில், நெய் விட்டு தீபமேற்றி வழிபடுகின்றனர். இதை “மோட்ச தீபம்’ என்பர். 3, 5, 9 என்ற எண்ணிக்கையில் இந்த தீபம் ஏற்றலாம். சுவாமி சன்னதியில் தரும் தீர்த்தத்தைப் பெற்றுச்சென்று, உயிர் பிரியும் நிலையில் இருப்பவர்களுக்கு புகட்டுகிறார்கள். இதனால், அவர்கள் அமைதியான மரணத்தைச் சந்திப்பர் என்பதுடன், மோட்சமும் பெறுவர் என்பது நம்பிக்கை. நான்கு சக்கர நரசிம்மர்: சக்கரத்தாழ்வார் சிலையின் மேல் பகுதியில், மடியில் இரணியனை கிடத்தி சம்ஹாரம் செய்யும் நரசிம்மரும், கீழ் பகுதியில் லட்சுமி வராகரும் காட்சி தருகின்றனர். இவரது திருநட்சத்திர தினமான ஆனி சித்திரையில், விசேஷ ஹோமம் செய்து, எண்ணெய் காப்பிடுகின்றனர். சக்கரத்தாழ்வாருக்கு பின்புறமுள்ள நரசிம்மர், நான்கு கரங்களிலும் சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு இல்லை. தற்போது சக்கரத்தாழ்வார் சன்னதியில் தங்க விமானம் அமைக்கும் திருப்பணி நடந்து வருகிறது. இத்திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம்.

கோயில் முன்மண்டபத்தில் எதிரெதிரே மன்மதன், ரதி சிற்பங்கள் தூண்களில் வடிக்கப்பட்டுள்ளன. அழகில்லாத காரணத்தால் திருமணம் தடைபடுபவர்களும், அழகில்லை என வருந்துபவர்களும் இவர்களிடம் வேண்டிக்கொள்கிறார்கள். ஆண்கள் மன்மதனுக்கும், பெண்கள் ரதிக்கும் சந்தனம் பூசி, நெய் தீபம் ஏற்றி, கல்கண்டு படைத்து வழிபடுகிறார்கள். மகாவிஷ்ணு, மோகினி வடிவில் காட்சி தந்த தலமென்பதால் இதற்கு, “மோகன க்ஷேத்ரம்’ என்றும், சுவாமிக்கு, “பெண்ணாகி இன்னமுதன்’ என்றும் பெயர் உண்டு. திருமோகூர் ஆப்தன், சுடர்கொள்ஜோதி, மரகதமணித்தடன், குடமாடுகூத்தன் என்பது பிற திருநாமங்கள். வைகாசி பிரம்மோற்ஸவத்தில் தினமும் சுவாமியுடன், நம்மாழ்வார் காட்சி தருகிறார். ராகு, கேது தோஷ நிவர்த்திக்கு, பிரகாரத்திலுள்ள விநாயகர் சன்னதியில், ராகு காலத்தில் தீபமேற்றி வழிபடுகிறார்கள்.

காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும். சனிக்கிழமைகளில் காலை 5.30 மணிக்கு திறக்கப்படும்.

அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை

அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை

பேருந்து வசதி    :    உண்டு

தங்கும் வசதி        :    இல்லை

உணவு வசதி          :    இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×