106. திருமெய்யம் (திருமயம்)





	


	



























	




 




	








 




6:02:27 AM         Friday, April 17, 2026

106. திருமெய்யம் (திருமயம்)

106. திருமெய்யம் (திருமயம்)
106. திருமெய்யம் (திருமயம்) 106. திருமெய்யம் (திருமயம்) 106. திருமெய்யம் (திருமயம்) 106. திருமெய்யம் (திருமயம்) 106. திருமெய்யம் (திருமயம்) 106. திருமெய்யம் (திருமயம்) 106. திருமெய்யம் (திருமயம்) 106. திருமெய்யம் (திருமயம்) 106. திருமெய்யம் (திருமயம்)
Product Code: 106. திருமெய்யம் (திருமயம்)
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                          சத்திய மூர்த்தி பெருமாள், திருமயம்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது, புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் இருக்கிறது. திருச்சி சந்திப்பிலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ளது. மேலும் புதுக்கோட்டையிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 

மூலவர்    :    மெய்யப்பன்

உத்ஸவர்    :    சத்திய மூர்த்தி பெருமாள்
 
தாயார்    :    உய்யவந்த நாச்சியார்
 
தீர்த்தம்    :    கதம்ப புஷ்கரிணி, ஸத்திய தீர்த்தம்

விமானம்    :    ஸத்யகிரி விமானம்

மங்களாசாசனம்:    திருமங்கையாழ்வார் -9 பாசுரங்கள்
 
தலச் சிறப்புகள்: பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று.  இது ஒரு குடைவரைக் கோயிலாகும். இத்தலத்தில் சத்திய மூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர்.  பல்லவர் காலத்தில்  சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரே சுற்றுச்சுவருடன் சிவன் கோவிலும்  பெருமாள் கோவிலும் அமைந்துள்ளது.  இந்த சத்திய மூர்த்தி பெருமாள் ஆலயத்தை தனியே சுற்றி  வரமுடியாது.  மூலவர் சந்நிதி குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது என்பது சிறப்பு.

திருவரங்கனை விட பெரிய திருமேனியோடு பெருமாள் சயனித்திருக்கும் கோலத்தையும், திருவடியில் பூமாதேவியும், சுவரில் பிரம்மா முதலிய தேவர்களின் உருவங்களையும் இக்கோயிலில் காணலாம். இங்கு மூலவர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார்.

தல வரலாறு : மது, கைடபர் என்னும் அரக்கர்கள் பெருமாள் பாம்பணையில் படுத்து  உறங்கிக்  கொண்டு இருக்கும் போது ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரை அபகரிக்க வருகின்றனர்.  அதை கண்டு  அஞ்சிய ஸ்ரீதேவி பெருமாளின் மார்பிலும், பூதேவி பெருமாளின் திருவடி அருகிலும்  ஒளிந்து  கொண்டனர்.  அப்போது பெருமாளின் உறக்கம் கலையக்கூடாது என்று ஐந்து தலை நாகம்  ஆதிஷேசன் தன் வாயிலிருந்து நஞ்சை கக்கி அரக்கர்களை விரட்டிவிடுகிறது.  பெருமாளின்  அனுமதி இல்லாமல் இப்படி செய்து விட்டோமே என்று நாகம் அஞ்சி இருக்கும் நேரத்தில் பெருமாள்  என் அனுமதியின்றி செய்தாலும் நல்லதே செய்திருக்கிறாய் பாராட்டுக்குரிய செயல் என்று  கூறியதாக வரலாறு.  இதை மெய்ப்பிக்கும் வகையில் இத்தலத்தில் ஆதிசேஷன் தன் தலையை  அஞ்சி சுருங்கியவாறு காட்சி தருவது சிறப்புக்குரியது.

இத்தலத்தில் ஆதிசேடன் தனக்கு ஸத்வ குணம் வேண்டி சத்திய புஷ்கரிணியில் நீராடினான், ஆதிசேடன் வந்த வழி ஸர்ப்ப நதியாயிற்று. ஆதிசேடன் பெருமாளை நோக்கி கடுந்தவஞ்செய்து திருப்பாற்கடலில் தன் மீது சயனத்திருப்பது போல இங்கும் சயனித்துக் காட்சியருள வேண்டும் என்று கேட்க, அவ்வண்ணமே எழுந்தருளினார். சந்திரன் பெருமாளை குறித்து கடுந்தவஞ்செய்தான் பெருமாள் தோன்றி என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். இங்கு காட்சி கொடுக்கும் பெருமாள் சந்திர மண்டலத்திலும் எழுந்தருள வேண்டும் என்று கேட்டார் பெருமாளும் உடன்படலானார். இமயத்தில் புஷ்பத்திரை நதிக்கரையில், சித்ரசிலை என்னும் பாறை அருகில், ஒரு ஆலமரத்தடியில் முனிவர் ஸத்தியதவர் பெருமாளை நோக்கி தவஞ்செய்ய பெருமாள் அவருக்கு காட்சி கொடுக்க நான் நினைக்கின்ற பொழுது தாங்கள் எழுந்தருள வேண்டும் என்று கூற பெருமாளும் ஒப்புக்கொண்டார். பின்னர் பெருமாள் அவரை இங்கு வரக் கூற அவ்வாறே அவரும் இமயத்திலிருந்த நதி, பாறை, மரம் இவற்றோடு இங்குவர, அந்த நதி புஷ்கரிணியாகவும், பாறை மலையாகவும், மரம் அரசமரமாகவும் காட்சி கொடுக்கிறது. கோட்டை அமைந்துள்ள குன்றின் தென்பகுதியில் சிவனும், நாராயணனும் ஒரே குன்றில் இரு பெருங்குடைவரைக் கோயில்களில் எழுந்தருளி இருப்பது திருமெய்யம் கோயிலின் தனிச்சிறப்பு ஆகும்.

ஆதிசேஷன் பாதுகாப்பிலிருந்த பெருமாளை திருட்டுத்தனமாக அசுரர்கள் தாக்க வந்ததகாவும், ஆதிசேஷன் விஷக்காற்றை விட்டு அசுரர்களைக் கொன்றதாகவும் ஸ்தல வரலாறு. ஆதிஷேசன் இத்தலத்தை பாதுகாப்பாக ஐதீகம். முத்தரையர்களால் கட் டப்பட்ட குடவரைக் கோவில். திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோவில்கள் மொத்தம் 46 ஆகும். அவற்றுள் இந்த கோவிலும் ஒன்று. இத்தலத்தில் சத்தியமூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். திருமயத்தின் விஷ்ணு கோவிலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இக்கோவில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலை விட மிகவும் பழமையானது. இதன் காரணமாக இதற்கு ‘ஆதிரங்கம்’ என்றும் பெயர் ஏற்பட்டதாக கூறப் படுகிறது. சத்ய மகரிஷி முன் தோன்றி பெருமாள் காட்சி தந்த தலம்.

இங்கு சோமச்சந்திர விமானத்தின் கீழ், நின்ற கோலத்தில் சத்தியமூர்த்தி எனும் நாமம் தாங்கி ஒரு கரத்தில் சங்குடனும், மற்றொரு கரத்தில் பிரயோகச் சக்கரத்துடனும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு என்றும் சத்திய மாக துணை நிற்பேன் என்று இத்தல இறைவன் வாக்குறுதி தந்ததால் இவருக்கு சத்திய மூர்த்தி’ என்ற திருப்பெயர் வந்தது.இக்குடவரைக் கோவிலின் மூலவர் யோக சயன மூர்த்தியான திருமெய்யர் உருவம் ஸ்ரீரங்கத்தை விட மிகப்பெரிய உருவம் தாங்கிய வர். திருமெய்யத்தின் பள்ளி கொண்ட பெருமாள் உரு வம் இந்தியாவிலேயே மிகப் பெரியது.

சுற்றிலும் தேவர் கள், ரிஷிகள், பெருமாளின் நாடிக் கமலத்திலிருந்து புறப்படும் தாமரை மலரில் பிரம்மாவும், மார்பில் குடி யிருக்கும் மகாலட்சுமியும் எழுந்தருளியுள்ளார்கள். மூலவரான பெருமாளுக்கு 12 வருடங்களுக்கு ஒருமுறை தைலக்காப்பு இடப்படுகிறது. ‘மது’ ‘கைடபர்’ என்னும் இரு அசுரர்களிடமிருந்து பூமி தேவியையும், தேவர்கள், கின்னரர்களையும் காப்பாற்றி அருள்கிறார் என்கிறது தல வரலாறு. இத்தலத்தின் தாயார் உஜ்ஜீ வனத்தாயார் (ஸ்ரீஉய்ய வந்த நாச்சியார்) எனும் திருநாமம் தாங்கி எழுந்தருளியுள்ளார். இத்தாயாரை வழிபட்டால் குழந்தைப்பேறு நிச்சயம். பேய், பிசாசு பிடித்தவர்கள், நரம்புத் தளர்ச்சி நோயில் துன்புறு பவர்கள் நன்மை பெறுவர் என்பது நம்பிக்கை. மேலும் மனநிலை பாதிப்புகளுக்கு உடன டியாக பலனளிக்கும் பரிகாரத்தலம். இவர் படி தாண்டா பத்தினி என்பதால், வீதிஉலா வருவது இல்லை. கோவிலுக்கு சென்றால் மட்டுமே இவரை தரிசனம் செய்ய முடியும்.

திருமயம் கோவிலின் பெருமை பிரமாண்ட புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. சிவபெருமானே நாரதருக்கு இத்திருத்தலப் பெருமைகளைக் கூறியதாகவும், சத்திய தேவதையும் தர்மதே வதையும் கலியுகத்தில் இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு கவலை இல்லா மனத்தையும் நீண்ட ஆயுளையும் அளிப்பதாகவும் புராண வரலாறு கூறுகிறது. சத்ய புஷ்கரணி அனைத் துப்பாவங்களையும் போக்கும் சக்தி வாய்ந்த திருக்குளமாக கூறப்படுகிறது. உஜ்ஜீவனத் தாயாருக்கு திருமஞ்சனம், புடவை சாத்துதல், வளையல், பொம்மை ஆகியவற்றை உபயம் அளித்தல், பெரு மாளுக்கு வெண்ணெய் பூசுதல், தூய உலர்ந்த ஆடை சாற்றுதல் ஆகியவை நேர்த்திக் கடனாக செலுத்தப்படுகிறது.

இக்கோவிலில் புரட்டாசி மாதம் எப்போதும் போல் சுவாமி- அம்பாளுக்கு வழிபாடு நடத்தப்படு கிறது. மற்ற பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாதம் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இக்கோவிலில் வைகாசி மற்றும் ஆடிப்பூர தேரோட்டம் மட்டுமே வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமை நடைபெறும் வழிபாட்டில் மட்டும் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். அன்றைய தினமும் எப்போதும் போல் சுவாமி- அம்பாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள், தீபாராதனை காட்டப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி

அருகிலுள்ள ரயில் நிலையம் :  புதுக்கோட்டை

பேருந்து வசதி    :    உண்டு

தங்கும் வசதி    :    உண்டு

உணவு வசதி     :    உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×