இணுவில் கந்தசுவாமி கோயில் - யாழ்ப்பாணம்





	


	



























	




 




	








 




1:34:58 AM         Sunday, May 03, 2026

இணுவில் கந்தசுவாமி கோயில் - யாழ்ப்பாணம்

இணுவில் கந்தசுவாமி கோயில் - யாழ்ப்பாணம்
இணுவில் கந்தசுவாமி கோயில் - யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோயில் - யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோயில் - யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோயில் - யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோயில் - யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோயில் - யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோயில் - யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோயில் - யாழ்ப்பாணம்
Product Code: இணுவில் கந்தசுவாமி கோயில் - யாழ்ப்பாணம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                            இணுவில் (நல்லூர் )கந்தசுவாமி கோயில், யாழ்ப்பாணம்
திருத்தல அமைவிடம் : இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களிலே  கந்தசுவாமி கோயில் முக்கியமான ஒன்று. இது காங்கேசன்துறை வீதியின் மேற்கு புறமாக இணுவில் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ளது. நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ளது. 
மூலவர் :  ஆறுமுகப்பெருமான்
தலவிருட்சம் : நொச்சி மரம் 
தீர்த்தம் :  வைரவ தீர்த்தம், கந்தபுட்கரணி 
தல சிறப்புகள் : மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற ஆலயமாக இணுவில் மத்தியில் எழில் கொஞ்சும் இயற்கை வனப்புடன் திகழும் இணுவில் கந்தசுவாமி கோவில் காலத்தால் முற்பட்ட வரலாற்றுப் பெருமையைத் தன்னத்தே கொண்டது. இவ்வாலயத்தில் காணப்படும் விக்கிரகங்கள் இறையருள் ததும்பும் முகபாவனையும் உடல்வாகும் கொண்டு அமையப்பெற்றுள்ளன. முருகக்கடவுளுக்குரிய விக்கிரகங்களாகக் கருதப்படுபவை ஆறுமுகப்பெருமான், கல்யாணவேலர், முத்துக்குமாரசாமி, தண்டாயுதபாணி, சத்துருசங்கார வேற்பெருமான் ஆகிய திருவுருவங்களாகும். இவற்றில் சத்துருசங்கார வேற்பெருமானது உருவம் காலத்தால் முற்பட்டது. இரண்டு கைகளிலும் அபயவரத அம்சங்களைக் காட்டும் நாலு கைப்பதங்கள் காணப்படுகின்றன. இத்தகைய திருவுருவம் இந்தியாவிலும் எந்த ஆலயத்திலும் காணப்படவில்லை. தமிழ்நாட்டில் உள்ள திருப்பரங்குன்றத்தில் நின்றும் ஆறுமைல்கல் தொலைவில் “பாகை” என்னும் கிராமம் உள்ளது. அக்கிராமத்தில் வில்வமரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஆறடி உயரங்கொண்ட கற்சிலை ஒன்று இதே அமைப்பை எடுத்துக் காட்டுகிறது.
ஆலயத்தின் சிவமூர்த்தங்களாகச் சோமாஸ்கந்த முகூர்த்தம், சிவலிங்கம், நடேசர், சந்திரசேகரர், போன்றன காணப்படுகின்றன. இது இரண்டு கோமுகைகளைக் கொண்ட ஆவுடையாரும் லிங்கமும் ஐம்பொன்கலந்த தாமிர விக்கிரமாக உருவாக்கப் பட்டுள்ளது. பிரமாணத்திற்கு அப்பாற்பட்டது எனவும் பிராமணர் அல்லாத ஏனைய வருணத்தார் வணங்கிப் பூசிப்பதற்கு ஏற்றது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன. பரிவாரமூர்த்தங்களாகப் பிள்ளையார், சோமாஸ்கந்தர், வேணுகோபாலர், மகாலட்சுமி, வைரவர், நாகதம்பிரான், சூரியசந்திரர், நவக்கிரகம், சண்டேஸ்வரர் என்பன அமைக்கப்பட்டுள்ளன. இப் பரிவாரமூர்த்தங்களில் ஒன்றாகக் கருதப்படும் வைரவப்பெருமான் விளாத்தியடியான் என அழைக்கப்படும் இச்சந்நிதி தனிச்சிறப்புப் பெற்றது. 
தல வரலாறு : யாழ்ப்பாண இராச்சியத்தின் தொடக்க காலத்தில் இணுவில் பகுதியின் ஆட்சியாளனாகப் பேராயிரவன் என்பவன் நியமிக்கப்பட்டதாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இவனது வழி வந்த கனகராச முதலி என்பவன் பிற்காலத்தில் இப்பகுதியில் ஆட்சித் தலைவனாக விளங்கினான். இவன் காலத்திலேயே இணுவில் கந்தசாமி கோயில் தோற்றம் பெற்றதாகச் செவிவழிக் கதைகள் தெரிவிக்கின்றன. 
இணையிலி என அழைக்கப்பட்ட இணுவிற் கிராமம் மயிலங்காடு தொடக்கம் ஆனைக்கோட்டை வரை எல்லைகள் பரவியிருந்த காலம். முதலிக்குளம், காக்கைக்குளம் எனும் இரு குளங்கள் மூலம் நீர் பாய்ச்சி வடக்குப்புறத்தே பருத்தியும் கரும்பும், கமுகும், தெற்குப்புறத்தே செந்நெல்லும் தழைத்தோங்கிய காலம். கனகராச முதலியினால் ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் சீரும் சிறப்பும் பெற்ற இப்பொற்காலத்தில் ஒருநாள் இரவு ஓர் ஒளிப்பிழம்பு தெரிவதை மக்கள் கண்டனர். அதனைக் கண்ணுற்றவர்கள் ஒளிப்பிழம்பு தெரியும் இடம் முதலியாரின் வீடு இருந்த திசையே என உணர்ந்து முதலியார் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெற்போர் தீப்பிடித்து விட்டது எனக்கருதி நாலாபுறத்திலிருந்தும் முதலியார் வீடு நோக்கி ஓடி வந்தனர். முதலியார் வீட்டு முற்றத்தை அடைந்த மக்கள் அங்கு எவ்வித அனர்த்தங்களுமின்றி யாவும் வழமைபோல் இருப்பதைக் கண்டு அதிசயித்தனர். முதலியாரிடம் தாம் வந்த காரணத்தை விளக்கினர். முதலியார் அதற்குத் தான் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் வேளயில் இரு பிராமணச் சிறுவர்கள் தன்னை அணுகித் தாம் காஞ்சியிலிருந்து வந்ததாகவும், தம்மை ஆதரிக்குமாறும் கூறி மறைந்துவிட்டனர் என்று கூறினார். தனது குலதெய்வமாகிய காஞ்சியம்பதி குமரகோட்டக் கந்தப்பெருமானே தனக்கும் தனது குடிமக்களுக்கும் நல்லருள் பாலிக்கும் பொருட்டுக் காட்சிகொடுத்துள்ளாரென மனம்நெகிழ்ந்து இறைவனின் திருவருளை வியந்து ஆனந்தத்தில் சிலிர்த்தார். முதலியார் சித்தத்திற்கிணங்க முருகப்பெருமானையும், வைரவப்பெருமானையும் இல்லத்தில் குடிலமைத்து வழிபட்டு வந்தாரென கர்ணபரம்பரைக் கதை ஒன்றுள்ளது. இக்கனகராச முதலிக்கு மக்கள் நினைவுக்கல் நாட்டி வழிபட்ட இடமே இன்று இவ்வாலயத்திற்கு முன்பாகக் காணப்படும் முதலியாரடி எனப்படும் சிறு ஆலயமாகும்.
1620 ஆம் ஆண்டளவில் போர்த்துக்கேயர் வருகையால் கிறிஸ்தவ சமயம் மேலோங்கி ஏனைய மதங்களும் சுதேச மக்களது பண்பாடு பழக்க வழக்கங்களும் அதற்கிரையாக வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள்ளாகின. அதற்கமைவாகப் போர்த்துக்கேயரால் பல ஆலயங்கள் இடித்தழிக்கப்பட்டன. அக்காலத்தில் அந்த அன்னியரால் அழிவுக்குட்பட்டு அழிந்து போன இத்தலம் மீண்டும் 1621 ஆம் ஆண்டளவில் அமைக்கப்பட்டுத் தோற்றம் பெற்றதே தற்போதுள்ள கந்தசுவாமி கோவிலாகும். அக்காலத்தில் வாழ்ந்த வேலாயுதர் என்பவரது கனவில் கந்தக் கடவுள் தோன்றித் தம்மை ஆதரிக்கும் படியும், தான் காஞ்சியிலிருந்து வந்ததாகவும் கூறி உனது வெற்றிலைத் தோட்டத்தில் நாட்டப்பட்டுள்ள மரத்தடியில் காலால் மிதித்து அடையாளம் இட்டிருப்பேன் அவ்விடமே எனது இருப்பிடம் எனக்கூறி மறைந்தார். அதிகாலை எழுந்த வேலாயுதர் தான் கண்ட கனவை எண்ணியவாறு வெற்றிலைத் தோட்டத்திற்குச் சென்றார். இது என்ன அதிசயம் கண்டது கனவல்ல நனவுதான் என உணர்ந்தார். பெருமான் உரைத்ததற்கிணங்கப் புதிதாக ஓர் நொச்சிமரம் நாட்டப்பட்டு அருகில் பாதச்சுவடும் இருப்பதைக் கண்டு அவ்விடத்தில் குடிலமைத்து வேற்பெருமானை வணங்கி வந்தார். ஆலயம் அமைந்துள்ள காணியின் பெயர் நொச்சியொல்லை மிதியன் என வழங்கப்படுகிறது. 
தமிழ் நாட்டில் இருந்து வந்த கலைஞர்கள் கூட எம்பெருமானது திருவுருவம் போன்று இந்தியாவிற் கூடப் பார்த்ததில்லை என வியந்து கூறுகின்றமை ஆறுமுகப்பெருமானது திவ்விய மூர்த்திகரத்துக்கு எடுத்துக்காட்டாகும். குடிலாக இருந்த கோயில் செங்கற் கட்டிடமாகக் கட்டப்பட்டுக் குடமுழுக்கும் செய்து வைக்கப்பட்டது. 1840 ஆம் ஆண்டளவில் கோயில் வெள்ளைப் பொழி கற்களினால் கட்டி முடிக்கப்பட்டது. 1891 ஆம் ஆண்டளவில் பெரிய சந்நியாசியார் என அழைக்கப்பட்ட ஆறுமுகம் சந்நியாசியார் இக் கோயில் திருப்பணிகளில் ஈடுபடலானார்.சுதுமலையைச் சேர்ந்த முத்து நாகலிங்கம் என்பவரால் 1905-1909 காலப்பகுதியில் கோயிலுக்காக மூன்று தளங்களைக் கொண்ட கோபுரமும் அமைக்கப்பட்டது. இவரது முயற்சியினால், இக்கோயிலுக்காக மஞ்ச வாகனம் ஒன்றைச் செய்யும் பணிகள் 1910 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட சிற்ப வல்லுனர்கள் இப் பணியில் ஈடுபட்டனர். உலகப் பெருமஞ்சம் என ஊரவர்களால் குறிப்பிடப்படும் இப் புகழ் பெற்ற மஞ்சம் 1912 ஆம் ஆண்டில் வெள்ளோட்டம் விடப்பட்டது. 1946 ஆம் ஆண்டளவில் மணிக்கோபுரங்களையும் கட்டினர். 1967 ஆம் ஆண்டு இவ்வாயலம், இருதள விமானங்களைக் கொண்ட கருவறை அமைக்கப்பட்டுப் புனருத்தாரனம் செய்யப்பட்டு மூலவராக இருந்த வேற்பெருமானுக்குப் பதிலாக வள்ளி தெய்வயானை சமேத முத்துக் குமாரசாமி பிரதிஷ்டை செய்யப்பட்டுக் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இப்போது ஐந்து தளங்களைக் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டு காட்சியளிக்கிறது. ஆலயத்தின் முன்பாகத்திலுள்ள ஊஞ்சல்மடமும் அன்னாராலேயே கட்டப்பட்டது.
வேலாயுதர் ஆறுமுகம் என்பவரால் ஆலயத்திற்கு ஓர் கேணி உருவாக்கப்பட்டது. அக்கேணி காலப்போக்கில் தூர்ந்துவிட வேலாயுதம் ஆறுமுகம் மரபில் வந்தவர்களால் கேணிக்குரிய நீரூற்றுப் பாதுகாக்கப்படும் பொருட்டுத் தற்போது கிணறாக வடிவமைக்கப்பட்டுக் காட்சியளிக்கிறது. ஆலயத்தின் மேற்குப் புறமாகக் காணப்படும் இக்கிணறும், கிணற்றிற்கு வடக்கே காணப்படும் ஆவுரஞ்சிக்கல்லும் கேணி இருந்த இடத்தை உறுதி செய்வனவாக உள்ளன.  
ஆலயத்தின் வேட்டைத் திருவிழாவின்போது எம்பெருமான் பவனிவரும் சிவப்புக் குதிரைவாகனம் ஏறத்தாழ 100 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. கலைநுணுக்கங்கள் நிறைந்து கம்பீரமாகக் காட்சி தரும் குதிரைவாகனம் வேலாயுதர் செல்லையா என்பாரின் முன்னோர்களால் வட்டுக்கோட்டையில் இருந்த சிற்பவல்லுநர்களைக் கொண்டு உருவாக்கப்பெற்றதாகும். இதே போன்ற அமைப்பை உடையதே எம்பெருமான் சூரசங்காரத்தின் போது பவனி வரும் கடாவாகனமும் ஆகும். இதனுடைய காலமும் 100 ஆண்டுகள். சாத்திரி சின்னையா என்னும் அடியவருக்கு எம்பெருமான் கனவில் தோன்றித் தனக்குக் கடாவாகனம் அமைக்கும் படி கூறினார். இதற்கேற்ப அமைக்கப்பட்ட கடாவாகனத்திற்கு கொம்பினைச் சரியான முறையில் அமைப்பதற்குச் சிற்பி பெருமுயற்சி எடுத்தார். சிற்பியின் முயற்சி கைகூடவில்லை. சாத்திரி சின்னையாவின் கனவில் முருகப்பெருமான் தோன்றிக் கடா ஆட்டிற்குக் கொம்பு எப்படி இருக்குமோ அதே போன்ற தோற்றத்தில் ஒரு பற்றைக்குள் கொடியொன்று திரண்டு முறுகி இருப்பதை இடக்குறிப்போடு உணர்த்தி அருளினார். ஆண்டவனால் உணர்த்தப்பட்ட கொடியே இன்றும் இவ்வாகனத்தின் கொம்பாகப் பரிமளிக்கிறது. ஆண்டவனின் சித்தப்படி அமைக்கப்பெற்ற ஆறுமுகசுவாமியையும், கடாவாகனத்தையும் சூரசங்காரத்தின் போது தரிசிப்பதற்காக அயல் நாடான இந்தியத்தமிழகத்தில் உள்ள வேதாரணியத்தில் இருந்து கூட அன்றைய நாட்களில் அடியவர்கள் வந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
இவ்வாலயத்தின் கந்தசஷ்டித் திருவிழா வெகு சிறப்பு திருவிழாவாகக் காணப்படுகிறது. மஹோற்சவத்தினைப் போன்று யாகம் அமைக்கப்பட்டு 6 நாட்களும் யாக பூசை செய்யப்படுகிறது. உற்சவ மூர்த்தியாக ஆறுமுகப்பெருமானே எழுந்தருளுப் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 6 நாட்களும் கந்தபுராணத்தில் வரும் சூரபதுமன் வதைப்படலம் படிக்கப்பட்டு உரை சொல்லப்படுகிறது. சூர சங்காரத்தின் போது ஆறுமுகப்பெருமான் கடாவாகனத்தில் எழுந்தருளிச் சூரபத்மனுடன் போர் புரியும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.
இணுவில் கந்தசாமி கோயில் மஞ்சத் திருவிழா ஆண்டுக்கு ஒருமுறை 25 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும். இதன் ஒரு பகுதியாக ஆனி அமாவாசைத் தினத்தில் தீர்த்தத் திருவிழா இடம்பெறும். கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழா 25 ஆம் நாளில் தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவடையும். ஒவ்வொரு நாளிலும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளிகளை வீதியுலாவாக எடுத்து வருவர். இந் நாட்களில் புராண படனம் இடம்பெறும். கந்தபுராணத்தின் சூரபன்மன் வதைப் படலத்தை ஒருவர் வாசிக்க இன்னொருவர் அதற்கு பொருள் சொல்லிவருவார். இறுதி நாளில், முருகன் சூரனுடன் போர்புரிந்து அவனைக் கொல்லும் கதை நிகழ்த்திக் காட்டப்படும். இது சூரன்போர்த் திருவிழா எனப்படும்.
இணுவில் கந்தசாமி கோயில் மஞ்சத் திருவிழா ஆண்டுக்கு ஒருமுறை 25 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும். இதன் ஒரு பகுதியாக ஆனி அமாவாசைத் தினத்தில் தீர்த்தத் திருவிழா இடம்பெறும். கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழா 25 ஆம் நாளில் தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவடையும். ஒவ்வொரு நாளிலும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளிகளை வீதியுலாவாக எடுத்து வருவர். இந் நாட்களில் புராண படனம் இடம்பெறும். கந்தபுராணத்தின் சூரபன்மன் வதைப் படலத்தை ஒருவர் வாசிக்க இன்னொருவர் அதற்கு பொருள் சொல்லிவருவார். இறுதி நாளில், முருகன் சூரனுடன் போர்புரிந்து அவனைக் கொல்லும் கதை நிகழ்த்திக் காட்டப்படும். இது சூரன்போர்த் திருவிழா எனப்படும்.
இணுவில் கந்தசாமி கோயில் மஞ்சத் திருவிழா ஆண்டுக்கு ஒருமுறை 25 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும். இதன் ஒரு பகுதியாக ஆனி அமாவாசைத் தினத்தில் தீர்த்தத் திருவிழா இடம்பெறும். கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழா 25 ஆம் நாளில் தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவடையும். ஒவ்வொரு நாளிலும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளிகளை வீதியுலாவாக எடுத்து வருவர். இந் நாட்களில் புராண படனம் இடம்பெறும். கந்தபுராணத்தின் சூரபன்மன் வதைப் படலத்தை ஒருவர் வாசிக்க இன்னொருவர் அதற்கு பொருள் சொல்லிவருவார். இறுதி நாளில், முருகன் சூரனுடன் போர்புரிந்து அவனைக் கொல்லும் கதை நிகழ்த்திக் காட்டப்படும். இது சூரன்போர்த் திருவிழா எனப்படும். சூரசங்காரத்தின் மறுநாள் காலை சூரிய உதயத்தின்போது ஆறுமுகப்பெருமான் கோவில் வாயிலிலுள்ள கந்தபுட்கரணி என்னும் தீர்த்தத்தில் தீர்த்தத்திருவிழா நடைபெறும். அன்று மாலை திருக்கல்யாண வைபவம் நடைபெறும். ஆறுமுகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வந்து பக்தகோடிகளுக்கு அருட்காட்சி கொடுப்பார். 
வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் கல்யாணவேலவரும், மாதம் தோறும் வருகின்ற கார்த்திகைத் திருவிழா, மாதப்பிறப்பு மற்றும் ஏனைய விசேட திருவிழாக்களின் போது முத்துக்குமாரசாமியும் வீதியுலா எழுந்தருளி அருட்காட்சி கொடுப்பர். மார்கழி மாதத் திருவெம்பாவைத் தினத்தில் மணிவாசகப் பெருமான் வீதியுலாவந்து திருவெம்பாவை பாடி அமைவதாக திருவிழாக்கள் சித்திரிக்கப்பட்டுள்ளன. இறுதி நாளான திருவாதிரையின் போது அடியார்கள் பசனைக்கேற்ப நடராஜப்பெருமான் நடனமாடி வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
அருகிலுள்ள விமான நிலையம் :  யாழ்ப்பாணம் ( பலாலி விமான நிலையம் )
அருகிலுள்ள ரயில் நிலையம் :  யாழ்ப்பாணம்
பேருந்து வசதி  : உண்டு 
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×