சிறுவாபுரி - சென்னை தமிழ்நாடு





	


	



























	




 




	








 




8:46:03 PM         Monday, April 20, 2026

சிறுவாபுரி - சென்னை தமிழ்நாடு

சிறுவாபுரி - சென்னை தமிழ்நாடு
சிறுவாபுரி - சென்னை தமிழ்நாடு சிறுவாபுரி - சென்னை தமிழ்நாடு சிறுவாபுரி - சென்னை தமிழ்நாடு சிறுவாபுரி - சென்னை தமிழ்நாடு சிறுவாபுரி - சென்னை தமிழ்நாடு சிறுவாபுரி - சென்னை தமிழ்நாடு சிறுவாபுரி - சென்னை தமிழ்நாடு சிறுவாபுரி - சென்னை தமிழ்நாடு சிறுவாபுரி - சென்னை தமிழ்நாடு சிறுவாபுரி - சென்னை தமிழ்நாடு சிறுவாபுரி - சென்னை தமிழ்நாடு
Product Code: சிறுவாபுரி - சென்னை தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                             சிறுவாபுரி, பாலசுப்பிரமணியர் கோவில்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின்  திருவள்ளூர் மாவட்டத்தில் சின்னம்பேடு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற முருகன் கோவில் ஆகும். சென்னையிலிருந்து செங்குன்றம் காரனோடை வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம். இவ்வூர், சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசலபுரி என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து சிறுவாபுரிக்குச் செல்ல பஸ்கள் உள்ளன, தனி வாகனத்திலும் செல்லலாம். சென்னையில் இருந்து இந்த ஆலயம் சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ளது.

மூலவர் : பாலசுப்பிரமணியர்

பாடியோர் :   அருணகிரிநாதர்

தலச் சிறப்புகள் : முருகம்மையார் கை தழைக்கச்செய்தது, தேவர்கள் இருந்து அமுதுண்டது., தேவேந்திரப்பட்டணம் கிடைக்கப்பெற்றது, இந்திரனுக்கு இந்திரபதி கிடைத்தது, இலவன்-குசன்-இராமனின் அசுவத்தைக் கட்டிய இடம், இராமனுடன் போரிட அதிகாரம் பெற்ற இடம், இராமனுடன் இலவன்-குசன் போரிட்டு சிறுவையை வென்று ஜெயநகராக்கியது, அர்ச்சனை திருப்புகழ் பாடப்பெற்றது, சிறப்புத் திருப்புகழ்கள் பாடப்பெற்ற தலமானது, ஒரே திருப்புகழ் மூலம் ஐந்து பலன்களைத் தரும் கோயில் என்ற பெருமை, மரகதப் பச்சைக் கல்லில் செய்யப்பட்ட தெய்வத் திருவுருவங்கள் அமைந்த திருத்தலம். கலியுகத்தில் பேசும் கடவுளாகத் திகழும் சிறுவாபுரி முருகன் கோயில் அமைந்த பெருமை எனும் பன்னிரண்டு பெருமைகளை உடையது இத்தலம்.மணக்கோலத்தில் காட்சி தரும் இது போன்ற சிலை வேறு எங்கும் கிடையாது. இந்த முருகப்பெருமானை  வணங்குவோருக்கு திருமணத்தடை நீங்கி மனம் போல துணை அமையும் என்பது ஐதீகம்.

இந்த ஆலயத்தில் உள்ள ஒரு விசித்திரம் என்ன என்றால் இங்குள்ள அனைத்து சிலைகளும் மூலவரைத் தவிர பச்சை நிறக்  கல்லில் செய்யப்பட்டு உள்ளன.  இந்த ஆலயத்தில் உள்ள  சன்னதிகள்  அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன்  ஆதி விநாயகர், நாகர், பைரவர், முனீஸ்வரர், அருணகிரிநாதர், உற்சவ மூர்த்தியாக திருமணக் கோலத்தில் உள்ள  வள்ளி -முருகன், நான்கு கரங்களுடன் முருகப் பெருமான்  மற்றும் சண்டிகேஸ்வரர் போன்றவர்களுக்கு உள்ளன. இங்குள்ள கொடி மரத்தின் முன்னால் முருகனின் வாகனமான பெரிய பச்சை வண்ண மயில் உள்ளது   விஷேஷமானக் காட்சியாகும்.  சப்த மாதர் கோயில், நடுநாயகமாக அகத்தீஸ்வரர் கோயில் மேற்கே பெருமாள்  கோயில் பெருமாள் கோயிலுக்குப் பின்னால் விஷ்ணுதுர்கை கோயில்கள் உள்ளன. வடக்கே வாயு மூலையில்  சிறுவாபுரி பாலசுப்ரமண்ய சுவாமி ஆலயம் கம்பீரமாக நம் கண்ணுக்கு காட்சி தருகிறது. 

சிறுவாபுரி முருகன் முன் வலக்கரம் அடியவருக்கு அபயம் அளிக்க பின் வலக்கரம் ஜபமாலை ஏந்தியிருக்க முன்  இடக்கரம் இடுப்பிலும்பின் இடக்கரம் கமண்டலமும் தாங்கி பிரம்ம சாஸ்தா கோலத்தில் இருக்கிறார். பிரம்மனை தண்டித்து பிரம்மனின் படைப்பு தொழிலை ஏற்ற கோலம் கொண்ட இம்முருகனை வழிபட்டால் வித்தைகள் பல  கற்ற பேரறிஞர் ஆகலாம் என அருணகிரி நாதர் பாடியுள்ளார்.

தல வரலாறு : முருகப் பெருமான் வள்ளி தேவியை திருமணம் செய்து கொண்டப் பின் தம் மனைவியுடன் கிளம்பி தம்முடைய இடத்துக்குச் செல்லத் துவங்கினார். முருகப் பெருமானுக்கு எப்போதுமே சோலைகள் மிகுந்த இடம் மனதுக்கு பிடித்த இடமாக இருக்கும். அவர்  சென்று கொண்டு இருந்த நேரத்தில்  ராமாயண யுத்தம் முடிந்து அயோத்திக்குத் திரும்பிய ராமபிரானைப் பிரிந்து சீதையானவள் ஒரு வனப்பகுதியில் தனது இரண்டு குழந்தைகளான லவ-குசாவுடன் தங்கி இருந்தாள். அந்த நேரத்தில்தான் பாலக் குமாரராக இருந்த முருகப் பெருமானும் தனது மனைவியான வள்ளியுடன் அதே வனப் பகுதிக்கு வந்து தங்கி இருந்தார். அந்த இடமே சிறுவாபுரி.

ஒருவகையில் பார்த்தால் வள்ளி தேவியும் மகாவிஷ்ணுவின் இரண்டாவது மகள் ஆனவள். அவள் முருகப் பெருமானை மணப்பதற்காக ஒரு வேடனின் மகளாகப் பிறந்து அவரை மணந்து கொண்டவள். ஆகவே முருகனுடன் தனது இளைய மகளான வள்ளி  புகுந்த வீட்டிற்குச் செல்வதைக் காண விரும்பிய மகாவிஷ்ணுவும் அதே இடத்துக்கு வந்திருந்தார். அது போலவேதான் சிவபெருமானும் திருமணம் ஆனப் பின் தம் வீட்டிற்குச் சென்று கொண்டு இருந்த தமது மகன் மற்றும் மருமகளை பார்ப்பதற்காக அங்கு வந்து இருந்தார். அங்கு தங்கி இருந்த நேரத்தில்  சிவபெருமானும், விஷ்ணுவும் பேசிக் கொண்டு இருக்கையில் விஷ்ணு கூறினாராம் ‘ இந்த இடம் நமது பாலகர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைய  வேண்டும். அதற்குக் காரணம் ராம அவதாரத்தில் இருந்த நான் என் மகன்களின் வீரத்தை உலகறியச் செய்ய வேண்டும் என்பதற்காக நானே அனுப்பிய அஸ்வமேத யாக குதிரையை பிடித்து வைத்து இருந்த எனது மகன்களான லவ- குசாவுடன் இதே இடத்தில் போர் புரிய நேரிட்டது. அதில் நான்  வெற்றி பெற முடியாமல் போக சீதை மூலம் லவ குசா யார் என்பதை தாம் அறிந்து கொள்வது போல நாடகம் நடத்தி உலகிற்கு அவர்களை அடையாளம் காட்ட முடிந்தது. அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த இடத்தில் எனது மகளை மணந்து கொண்ட முருகனும் எழுந்தருளி இந்த இடத்திற்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும.

அதை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் திருமணக் கோலத்துடன் வள்ளியுடன் திரும்பிச் சென்று கொண்டு இருந்த முருகனை சந்தித்து விஷ்ணுவின் ஆசையைக் கூறி, அதை மதிக்கும் விதத்தில் சில நாட்கள் அங்கேயே தங்கி இருந்து பக்தர்களின் வேண்டுகோட்களை நிறைவேறியவாறு அவர்களை ரட்ஷித்து வருமாறு கூறி அவருக்கு பல சக்திகளை தம்மிடம் இருந்து தந்தார். தந்தையின் சொல்லை ஏற்று  முருகப் பெருமானும் தமது வாகனங்கள் மற்றும் தன்னுடன் திரும்பிக் கொண்டு இருந்த அனைவருடனும் அங்கேயே சில காலம் தங்கி இருந்தார். அதுவே அங்கு முருகன் ஆலயம் ஏற்படக் காரணம் ஆயிற்று என்பது மட்டும் அல்ல அந்த அன்றைய வனப் பகுதியிலேயே விஷ்ணு மற்றும் சிவனுக்கும் ஆலயங்கள் ஏற்படக் காரணம். சிறுவாபுரி கிராமத்தில் மூன்று ஆலயங்கள் இருந்தும், லவ-குசர்கள் பெருமை பெற்று இருந்தாலும், அங்கு அமைந்து உள்ள முருகப் பெருமானின் ஆலயமே பெரும் பெருமைப் பெற்ற ஆலயமாக உள்ளது. லவ-குசா இருவரும் சிவபெருமானையும், முருகனையும் இங்கு வழிபாட்டு உள்ளார்கள். வள்ளியுடன் திருமண ஜோடியாக இங்கு வந்து முருகன் தங்கியதினால் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் தடைபட்ட திருமணம் நடைபெறும். வீடு, நிலபுலங்கள் வாங்குதல் அமையும். நோய் நொடிகள் விலகும் மற்றும் செல்வம் சேரும்.

இந்த கிராமத்தில் முருகம்மை என்ற பெண்மணி இருந்தாள். அவள் முருக பக்தை. எப்போதும் முருகனையே போற்றி வணங்கி வந்தால்.  அதனால் ஒருநாள் அவள் மீது ஆத்திரம் அடைந்த  அவளுடையக் கணவன் அவளது கையை வெட்டி எறிந்தான். அவள் அழுதுகொண்டே முருகனை வேண்டினாள். அவளது கணவனின் செயலினால் வருத்தம் அடைந்த  முருகன் அவளுக்கு அங்கேயே காட்சி அளிக்க வெட்டப்பட்ட அவளது கைகள் அப்படியே உடலுடன் இணைந்தது. வெட்டப்பட்ட சுவடே இல்லை. இது உண்மையில் நடந்தக் கதை என்கிறார்கள்.

கோயில் அமைப்பு : இத்தலத்தின் ராஜகோபுரம் 5 நிலைகளுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது உயரமான கொடிமரம் கொடிமரத்துக்கு முன்னால் அழகே திருஉருவம் கொண்டதுபோல் மரகதப் பச்சைமயில் கொலுவாக வீற்று இருக்கிறது. இதுபோல் சிறந்த வடிவமைப்புள்ள மரகத மயில் உலகிலும் வேறு எங்கும் இல்லை என் உறுதியாகக் கூறலாம். கோயிலின் தென்மேற்கு மூலையில் மரகதக் கல்லில் சூரியனார் ஔ வீசிக்கொண்டு இருக்க நேர் எதிரில் கிழக்கே திருமுகம் கொண்ட கம்பீரமான ராஜகணபதி மரகதக் கல்லில் பச்சைப் பசேல் என மின்னிட மரகத விநாயகர் என்ற நாமத்துடன் வேண்டுவதை அளிக்க அழகுக் கோலத்துடன் வீற்றிருக்கிறார். பின் பிரகாரத்தில் சண்டிகேசுவரர், ஆதிமூலவர், நாகர், பைரவர், நவக்கிரகம் என பரிவார தேவதைகள் சூழ சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் காட்சி தருகிறார். இங்கு நவக்கிரகம் ஒன்பதும் வாகனத்துடன் இருப்பது சிறப்பாகும். சந்தமும் அடியார் சிந்தையில் குடியிருக்கும் முருகப் பெருமான் நம் சிந்தையைக் கவர்கிறார். கலியுகத்தின் பேசும் கடவுளான பாலசுப்பிரமணியப் பெருமானின் அருட்பார்வை நம்மை நோக்கிப் பாய்ந்து வர சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமாள் நாம் வேண்டும் வரங்களை அள்ளி அள்ளித்தர உடலும், உள்ளமும் லேசாகி மிதந்து வர நம்மை நாம் இழந்து அவன் திருவடிகளில் சரணாகிறோம். ஆகம சார சொரூபன், சேவல் மாமயில் பிரீதன், தேவ சேனாதிபதி, தன்தரள மணிமார்பன், தண்தமிழ்மிகு நேயன், சந்தமும் அடியார் சிந்தையில் குடிகொண்டவன், செம்பொன் எழில் சொரூபன், புண்டரிக விழியாளன், தேவேந்திரன் மகள் மணவாளனின் முன் வலது கரம் அடியவருக்கு அபயம் அளிக்க பின் வலக்கரம் ஜபமாலை ஏந்தி இருக்க முன் இடக்கரம் இடுப்பிலும் பின் இடக்கரம் கமண்டலமும் தாங்கி பிரம்மசாஸ்தா கோலத்தில் காட்சி அளிக்கிறார். பிரம்மனைத் தண்டித்து, பிரம்மனின் படைத்தல் தொழிலை ஏற்றுக்கொண்ட கோலம் உடைய முருகப் பெருமானை வணங்கினால் வித்தைகள் பல கற்ற பேரறிஞர் ஆகலாம் என அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார். முக மண்டபத்தில் அருணகிரிநாதர் சிறுவை பாலசுப்பிரமணியப் பெருமானை கண்ட பெருமிதத்துடன் திருப்புகழ் பாடி நிற்கும் கோல வடிவை காணலாம். முருகப் பெருமானுக்கு தெற்கே அண்ணாமலையார் மரகதப் பச்சையில் கரும்பச்சை வைரம் போல பிரகாச ஜோதியாகக் காட்சி அளிக்கிறார். இத்துணை பெரிய மரகதலிங்கம் வேறு எங்கும் இல்லை.

அருணகிரிநாதர் திருவண்ணாமலைக்கு மயிலுமாடி நீயுமாடி வரவேணும் என்று பாடியதற்கு இணையாக இங்கு மைந்துமயில் உடன் ஆடிவர வேணும் எனப் பாடியுள்ளதால் அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மையும் இங்கு எழுந்தருளி இருக்கிறார்கள். அருணாசலேசுவரர், அபீதகுஜாம்பிகை (உண்ணாமுலை) இருவருக்கும் நடுவே அற்புதத் தோற்றமாய் அச்சம், மடம், நாணம், பயிர்ப்புடன் கூடிய வள்ளிநங்கை தம் மணவாள பெருமான் முருகனைக் கைத்தலம் பற்றும் திருமணக் காட்சியாய் எழுந்தருளியிருக்கிறார். கைத்தலம் பற்றுகின்ற பொழுது இயற்கையாய் பெண்ணுக்கு ஏற்படும் கூச்சல், நாணம், பயிர்ப்பு காரணமாக வள்ளி ஒய்யாரமாக லேசாக முன் சாய்ந்து ஒரு கண்மூடிய நிலையில் நிற்கின்ற கோலம் காணவேண்டிய ஒன்றாகும். பின்புறத்திலிருந்து நோக்கும் போது, வள்ளி கள்ளத்தனமாக, அரைக்கண் பார்வையாக முருகனை நோக்குவது போல் சிற்பி சிலையை வடித்திருக்கிறார். மிக நேர்த்தியான வேலைபாடு. இதுபோன்று சிலை வடிவம் வேறு எங்கும் இல்லை. ஓவியமாக வள்ளி மலையில் இருக்கும் கோலத்தை சிலை வடிவாக இங்கு அமைத்து இருப்பது மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. வள்ளி மணவாளப் பெருமானின் அழகைக்காண கண் கோடி வேண்டும்.

திருத்தல புராணம் : அசுவமேத யாகம் செய்ய விருப்பங்கொண்ட இராமபிரான், யாகப்பசுவாக அனுப்பப்படவேண்டிய குதிரையை ஏவிவிட அது வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தின் அருகில் வர அதை அங்கு வளர்ந்து வந்த இராமனின் பிள்ளைகளான லவனும், குசனும் கட்டிப்போட்டுவிட்டனர். இச்செய்தி அறிந்த ராமன் இலக்குமணனை அனுப்ப அவனால் முடியாமல் போகவே இராமனே நேரில் வந்து சிறுவர்களை எதிர்கொண்டு போரிட்டு வென்ற குதிரையை மீட்டுச் சென்றான் என்பது இராமாயணச் செய்தியாகும். இவ்வாறு இராமனிடம், லவனும்-குசனும் சண்டை செய்த இடமே இச்சிறுவாபுரி என்பது வரலாறு ஆகும். இச்செய்தியை திருப்புகழில் உள்ள பாடல் வழியாக அறியப்படுகிறது. இராமாயணத்தில் கூறப்பட்ட குசலபுரியே இன்றைய 'சிறுவாபுரி' ஆகும்.

முருகம்மையார் என்னும் முருக பக்தர் வாழ்ந்த இடம் இந்த சிறுவை. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் ஓயாது முருகா! முருகா! என  முருகனின் பெயரை எப்பொழுதும் உச்சரித்து வந்தார் முருகம்மையார். எப்பொழுதும் முருகனையே நினைத்து இருப்பதை பொறுக்கமுடியாத முருகம்மையாரின் கணவர், ஒருநாள் கடிதெனக் கோபம் கொண்டு முருகம்மையின் கையை வெட்டித் துண்டித்தார். உடனே முருகா என்ற பெயரை என்றும் மறவாத மாதவச் செல்வி முருகம்மையார் முருகா எனப் புலம்பி அழுது வேண்டிட உடனே சிறுவை முருகன் அம்மையார் முன் தோன்றி காட்சி தந்து துண்டித்த கையை முன்னிருந்தபடி சேர்த்து அருளினார் என்று சிறுவை நகர் குகன் பதிகத்தில் திருவாமாத்தூர் தவத்திரு முருகதாச சுவாமிகள் தனது பாடலில் சிறப்பித்து பாடி இருக்கிறார்.

ஒரு குறிப்பிட்ட முறையில் ஆறுவாரங்கள் முருகனை இங்கு வந்து வணங்கினால்  நினைத்தவை நிறைவேறும் என்பது நம்பிக்கை. வாஸ்து அதிபதியான பிரம்மாவை தண்டித்து படைப்பு தொழிலை ஏற்ற கோலத்தில் காட்சி அளிப்பதால் பூமி சம்பந்தமான அனைத்து கோரிக்கைகள் நிறைவேறவும், வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடு அமையவும்,  பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பிள்ளைப்பேறு பெறவும், கடன் தொல்லைகள் தீரவும், சிறுவாபுரி சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறி வருவது  நிதர்சன உண்மையாகும். வாஸ்து அதிபதியான பிரம்மாவை தண்டித்து படைப்பு தொழிலை ஏற்ற கோலத்தில் காட்சி அளிப்பதால் இவரை வழிபடுவதால் வாஸ்து தோஷம் நீங்கி வீடு கட்டுவதில் தடைகள் விலகும். பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பிள்ளைப்பேறு பெறவும், கடன் தொல்லைகள் தீரவும், சிறுவாபுரி சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறி வருவது நிதர்சன உண்மையாகும்.

சிறுவாபுரி கோவில் ஞாயிறு தோறும் காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை திறந்து இருக்கும். பிறகு  பிற்பகல் 4.00 மணி முதல்    8.00மணி வரை நடைதிறந்து இருக்கும். செவ்வாய்கிழமைகளில் அதிகாலை 5.00 மணி முதல்  இரவு 9.00 மணி வரை வழிபாடு செய்யலாம். மற்ற நாட்களில் காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரையிலும்,  மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும்  வழிபாடு செய்ய முடியும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம் : சென்னை

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×