கந்தக்கோட்டம் - சென்னை





	


	



























	




 




	








 




3:20:32 PM         Monday, May 25, 2026

கந்தக்கோட்டம் - சென்னை

கந்தக்கோட்டம் - சென்னை
கந்தக்கோட்டம் - சென்னை கந்தக்கோட்டம் - சென்னை கந்தக்கோட்டம் - சென்னை கந்தக்கோட்டம் - சென்னை கந்தக்கோட்டம் - சென்னை கந்தக்கோட்டம் - சென்னை கந்தக்கோட்டம் - சென்னை கந்தக்கோட்டம் - சென்னை கந்தக்கோட்டம் - சென்னை கந்தக்கோட்டம் - சென்னை கந்தக்கோட்டம் - சென்னை கந்தக்கோட்டம் - சென்னை கந்தக்கோட்டம் - சென்னை கந்தக்கோட்டம் - சென்னை
Product Code: கந்தக்கோட்டம் - சென்னை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                      சென்னை, கந்தக்கோட்டம் 

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், கந்தசுவாமி திருக்கோயில் சென்னை பாரிமுனை அருகிலுள்ள கந்தகோட்டத்தில் அமைந்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம்  இருந்து ஐந்து நிமிட நடையில் கோயிலை அடையலாம். 

மூலவர் :   கந்தசுவாமி

உற்சவர்  :   முத்துக்குமாரர்

அம்மன்  :  வள்ளி, தெய்வானை

தல விருட்சம்  :  மகிழம்

தீர்த்தம்    :       சரவணப் பொய்கை

பாடியவர்கள்:    சிதம்பரசாமி, பாம்பன் குமரகுருபரதாச சுவாமிகள், இராமலிங்க அடிகளார்

தலச் சிறப்புகள் : உற்சவர் முத்துக்குமாரர் தனிக்கொடிமரத்துடன் உள்ளார். இவர் தனது முகத்தில் புள்ளிகளுடன் மிகவும் அழகு பொருந்தியவராக காட்சி தருகிறார். விசேஷ காலங்களில் இவருக்கே பிரதான பூஜை நடத்தப்படுகிறது. இங்குள்ள விநாயகர் குளக்கரை விநாயகர், சித்திபுத்தி விநாயகர் அமர்ந்த கோலத்தில் தனிச்சன்னதியில் உள்ளார். சித்தியும், புத்தியும் ஒருகாலை மடக்கி, மற்றொரு காலை தொங்கவிட்ட கோலத்தில் காட்சி தருகின்றனர். சரவணப்பொய்கையின் கரையிலும் ஒரு விநாயகர் இருக்கிறார். இவருக்கு வலப்புறத்தில் லட்சுமிதேவியும், இடப்புறத்தில் சரஸ்வதி தேவியும் உள்ளனர். தீர்த்தத்தை நம் மீது தெளித்துக்கொண்டு ஒரே சமயத்தில் இம்மூவரையும் வணங்கினால் கல்வி சிறக்கும், செல்வம் பெருகும், ஞானம் கிடைக்கும் என்கின்றனர்

கோயில் அமைப்பு : இங்குள்ள கோபுரம் ஐந்து நிலைகளை கொண்டது. சுவாமி இவ்விடத்தில் தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்து, தரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அளவில் மிகவும் சிறிய மூர்த்தியாக உள்ள இவருக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். மூலவருக்கு நேரே வாயில் இல்லை. அவருக்கும், கொடிமரத்திற்கும் இடையே துளைகளுடனான சுவர் மட்டும் உள்ளது. ராஜகோபுரமும், பிரதான வாயிலும் வடக்குப்பகுதியில் உள்ளது. இது 1000 வருடங்களுக்கு மேல் பழமையான கோவில் என்று கூறப்படுகிறது.

தல வரலாறு:  திருப்போரூரை அன்னியர்கள் ஆண்டபோது, அங்கிருந்த பல கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன. பாதுகாப்பு கருதி அவ்வூர் கோயிலில் இருந்த கந்தசுவாமியை, பக்தர்கள் புற்றுக்குள் மறைத்து வைத்தனர். பல்லாண்டுகளுக்குப் பிறகு, கோயிலில் மீண்டும் வழிபாடு துவங்கியது. ஆனால், புற்றுக்குள் வைக்கப்பட்ட முருகன் சிலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே புதிய சிலையை பிரதிஷ்டை செய்தனர். தற்போதைய கந்தகோட்டம் பகுதியில் வசித்த பக்தர்கள் இருவர், கிருத்திகை நாட்களில் திருப்போரூர் சென்று சுவாமியை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இப்பகுதியில் வசித்த சிவாச்சாரியார் ஒருவர் அருகிலுள்ள திருப்போரூர் தலத்திற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் சில ஆச்சார்யார்களும் வந்தனர். வழியில் கனத்த மழைபெய்து, வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவர்களால் ஊருக்கு திரும்ப முடியவில்லை. எனவே, அங்கேயே ஓர் மடத்தில் தங்கினர். அன்றிரவில் சிவாச்சாரியாரின் கனவில் காட்சிதந்த முருகன், “தான் அருகிலுள்ள புற்றில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டும்படியும் கூறியருளினார். கண்விழித்த சிவாச்சாரியார் அங்கிருந்த புற்றில் முருகன் சிலை வடிவில் இருந்ததைக் கண்டார். அச்சிலையை எடுத்துக் கொண்டு, ஊருக்கு புறப்பட்டார். வழியில் ஓரிடத்தில் சிலையை வைத்துவிட்டு சிறிதுநேரம் ஓய்வெடுத்தனர். பின் சிலையை எடுக்க முயன்றபோது முடியவில்லை. எனவே, அந்த இடத்திலேயே கோயில் கட்டினர். “கந்தசுவாமி’ என்ற பெயரையே சூட்டினர். பெத்தநாயக்கன்பேட்டை என்றழைக்கப்பட்ட இத்தலம் முருகன் கோயில் அமைந்த பிறகு, “கந்தகோட்டம்’ என மாறியது.

இது வள்ளலார் பாடிய தலமாகும். திருபோரூர் திருகோயிலின் வரலாற்றினை முதன் முதலாக அக் கோயிலின் குருக்களான சோமாசி குருக்கள் என்பவர் தம் மனைவிக்கு எடுத்துக் கூறினார். அதை உடனிருந்து கேட்டிருந்த சபாபதி குருக்கள் அந்த வரலாற்றினைப் பத்து விருத்தங்களாக எழுதி அவற்றை தமது பேரனான சோமாஸ்கந்த குருக்களிடம் கொடுத்தார் .சோமாஸ்கந்த குருக்கள் அவ்வரலாற்றினை நன்கு கற்று தமக்கு ஏற்பட்ட ஐயப்பாடுகளுக்கு வேதகிரி குருக்கள் என்பவர் முலம் விளக்கம் பெற்றார் .சோமாஸ்கந்த குருக்கள் தம்முடைய மாணாக்கரான குளத்தூர் கோயில் கிருஷ்ணப்ப செட்டியாரை அழைத்து அவருக்கு ஆகமங்கள் ,புராணங்கள் ,சமயனுல்கள் , சாத்திரங்கள் முதலியவற்றை கற்பித்து பின்பு தம் பாட்டனார் தமக்கு தந்த கந்தப்பெருமான் வரலாற்றைப் பற்றிய பத்து விருத்தப்பாக்கலையும் அவரிடம் தந்தார்.அப்பாடல்களில் அமைந்துள்ள வரலாறுகள் எல்லோருக்கும் விளங்கும்படி வரகவி கோயில் கிருஷ்ணப்ப செட்டியார் 206 விருத்தப்பாக்களில் சென்னை கந்தப்பெருமான் திருகோயிலின் தலபுராணத்தைப் பாடினார்.

இங்கு சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் செய்யப்படுகிறது.  செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பன்னீர் அபிஷேகம் நடக்கும் நேரத்தில் சுவாமியை வழிபட்டால் குடும்பம் சிறக்கும், ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.பிணிகள், தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பசுவிற்கு பழங்கள், கீரைகள் கொடுத்து வணங்கினால் அவை நீங்கும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்ற அடிப்படையில், இங்கு கோமாதா பூஜை தினமும் நடத்தப்படுகிறது. தோல் நோய், மற்றும் கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சரவணபொய்கை தீர்த்தத்தில் வெல்லம் கரைக்கின்றனர். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பன்னீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. குடும்பத்தில் பிரச்னை உள்ளவர்கள் இங்குள்ள சித்திபுத்தி விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட்டால் அது தீரும் என நம்புகின்றனர்.

தை மாதம் 18 நாள் பிரதான திருவிழா  கந்தசஷ்டி, வைகாசி வசந்த உற்சவம், ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம் ஆகிய முக்கிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
 
அருகிலுள்ள ரயில் நிலையம் :  சென்னைசென்ட்ரல் ரயில் நிலையம்
 
பேருந்து வசதி : உண்டு
 
தங்கும் வசதி : உண்டு
 
உணவு வசதி : உண்டு
Mail this page Printable view
×
×
×
×
×
×
×