வெண்ணை மலை - கரூர்





	


	



























	




 




	








 




7:12:13 PM         Monday, April 20, 2026

வெண்ணை மலை - கரூர்

வெண்ணை மலை - கரூர்
வெண்ணை மலை - கரூர் வெண்ணை மலை - கரூர் வெண்ணை மலை - கரூர் வெண்ணை மலை - கரூர் வெண்ணை மலை - கரூர் வெண்ணை மலை - கரூர்
Product Code: வெண்ணை மலை - கரூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
                                                                       வெண்ணெய் மலை, பாலசுப்பிரமணியர்
 
திருத்தல இருப்பிடம் :  இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம், சேலம் நெடுஞ்சாலையில் கரூரிலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது 
 
மூலவர் : பாலசுப்ரமணியர்
 
தீர்த்தம்  :  தேனுதீர்த்தம்
 
தலச் சிறப்புகள் : பிரம்மனால் படைக்கப்பட்ட உயிரினங்கள் பசியில்லாமல் வாழ்வதற்காக வெண்ணெயை மலையென குவித்து அதன் அருகிலேயே தேனு தீர்த்தம் என்னும் பொய் கையை உருவாக்கினார். இதனால் தான் வெண்ணெய்மலை பாறை கடும் வெயிலிலும் குளுமையுடன் திகழ்கிறது.
மூர்த்தி , தலம் , தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் சிறப்பு பெற்ற இத்தலத்திற்கு வந்து வணங்கினால் வளமான வாழ்க்கை அமைகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. 
 
தல வரலாறு : முன்னொரு யுகத்தில் பிரம்மதேவனுக்கு, தனது படைப்பு தொழிலில் கர்வம் தோன்றியது. அவருக்குப் பாடம் புகட்ட ஈசன் எண்ணினார். ஒரு கட்டத்தில் பிரம்மனால் படைக்கும் தொழிலை மேற்கொள்ள இயலாமல் போனது. பிழையை உணர்ந்த பிரம்மன், தன் பிழை பொறுக்குமாறு ஈசனிடம் வேண்டினார். இதற்கு தீர்வாக வஞ்சிவனத்தில் தவம் இயற்ற இறைவன் கூறினார். இந்நிலையில் படைக்கும் தொழிலை தேவலோகப் பசுவான காமதேனுவிடம் இறைவன் ஒப்படைத்தார். தன்னால் படைக்கப்பட்ட உயிரினங்கள், பசியில்லாமல் வாழ்வதற்காக வெண்ணெயை மலையென குவித்தது. அருகிலேயே தேனுதீர்த்தம் எனும் பொய்கையையும் உருவாக்கியது காமதேனு. இதனால் தான் இன்றும் வெண்ணெய் மலைப் பாறை, கடும் வெயிலிலும் குளுமையுடன் திகழ்கிறது. இவ்விடத்தில் நின்றாலே துன்பங்கள் தொலைந்து பந்தபாசத்தை ஒழிப்பதற்குரிய ஞானம் பிறக்கிறது. இம்மலையில் முருகப்பெருமான் பால சுப்பிரமணியராக எழுந்தருளினார்.
யோகி பகவன் என்பவர் இம்மலையில் தியானத்தில் இருக்கும்போது, அவருக்கு பாலசுப்பிரமணியன் காட்சிதந்து, தமது அருள் வெண்ணெய்மலையில் உள்ளதாக அனைவரும் அறியச் செய்யுமாறு கட்டளையிட்டார். முருகனின் அருட்கோலம் தரிசித்த பகவன், இது குறித்துக் கருவூர் அரசனிடம் கூறினார். மன்னரும் மரத்தடியில் உயர்ந்த கோபுரம், மண்டபம் அமைத்து, முருகன் சிலையைப் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார். சன்னதிக்கு தென்புறத்தில் காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் அமைத்தார். முருகன் சன்னதிக்கு வடபுறத்தில் முருகனின் இயந்திரம் அமைத்தார். 
 
கோவில் அமைப்பு : சுமார் இரண்டாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்ததாக நம்பப்படும் இத்திருக்கோவிலை கருவூர் அரசர் அமைத்தார். இந்த கோவிலில் ஒரு உயரமான அமைப்பு, மூன்று அடுக்கு நுழைவாயில் கோபுரம் அமைந்துள்ளது. கோயிலின் எதிரே முன்புறமாக விளக்குத் தூண் அமைந்துள்ளது. இக்கோயிலில் இடும்பன், விநாயகர், மலைக்காவலர் சன்னதிகள் உள்ளன. படிகளைக் கடந்து உள்ளே செல்லும்போது உச்சியில் விசுவநாதர், விசாலாட்சி, கருவூரார், பாலசுப்பிரமணியசுவாமி ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. பாலசுப்பிரமணியசுவாமி சன்னதிக்கு முன்பாக கொடி மரம், பலிபீடம், மயில் ஆகியவை உள்ளன. திருச்சுற்றில் கன்னி விநாயகர், பஞ்சமூர்த்தி, பைரவர் ஆகியோர் உள்ளனர். நவக்கிரகங்களின் சன்னதியும் உள்ளது. கருவூர் சித்தருக்கு தனிச் சன்னதி அமைந்துள்ளது.
 
மாத கிருத்திகை , ஆடி கிருத்திகை , கந்த சஷ்டி , சூரசம்ஹாரம் , கார்த்திகை தீபம் , பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திங்கட்கிழமைகள், தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம் ஆகிய தினங்கள் சிறப்பு தினங்களாக வழிபடப்படுகிறது. மலையின் அடிவாரத்தில் காமதேனுவால் அமைக்கப்பட்ட தேனுதீர்த்தத்தில் ஐந்து தினங்கள் நீராடி முருகனை வழிபட, பிள்ளையில்லாக் குறை தீர்வதுடன், தோஷங்களும் தீர்கிறது. வேண்டுகோள் நிறைவேறியவர்கள் முருகனுக்குப் பால் திருமுழுக்காட்டு செய்து, சந்தனக்காப்பு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
 
காலை 6.00 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
 
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி 
 
அருகிலுள்ள ரயில் நிலையம் : கரூர்
 
பேருந்து வசதி : உண்டு
 
தங்கும் வசதி : உண்டு
 
உணவு வசதி : உண்டு
Mail this page Printable view
×
×
×
×
×
×
×