விராலி மலை - திருச்சி





	


	



























	




 




	








 




5:54:23 PM         Monday, April 20, 2026

விராலி மலை - திருச்சி

விராலி மலை - திருச்சி
விராலி மலை - திருச்சி விராலி மலை - திருச்சி விராலி மலை - திருச்சி விராலி மலை - திருச்சி விராலி மலை - திருச்சி விராலி மலை - திருச்சி விராலி மலை - திருச்சி விராலி மலை - திருச்சி விராலி மலை - திருச்சி விராலி மலை - திருச்சி விராலி மலை - திருச்சி விராலி மலை - திருச்சி விராலி மலை - திருச்சி விராலி மலை - திருச்சி
Product Code: விராலி மலை - திருச்சி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
                                                         விராலிமலை முருகன் கோயில்
 
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டம் திருச்சி - மதுரை வழித்தடத்தில் திருச்சியிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவிலும், புதுக்கோட்டைக்கு வடமேற்காக சுமார் 40 கி.மீ தொலைவிலும், விராலிமலை பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
 
மூலவர் : சண்முகநாதர் (ஆறுமுகம்)
 
அம்மன் : வள்ளி, தெய்வானை
 
தலவிருட்சம் : விராலிச் செடி
 
தீர்த்தம் : சரவணப் பொய்கை, நாக தீர்த்தம்
 
தலச் சிறப்புக்கள் :  இக்கோயிலின் கருவறையில் அருள் மிகு சுப்பிரமணியசுவாமி வள்ளி, தெய்வானயுடன் அருள்பாலிக்கிறார். இங்கு வள்ளி திருமணம் நடந்த தலம் என்று கூறப்படுகிறது. மூலவர் முருகப்பெருமான் 10 அடி உயரத்தில் இருப்பது சிறப்பாகும். சிறப்பு முருக வாகனமான மயில்கள் நடமாடும் கோயில். வசிஷ்டரும் அவர்தம் இல்லாள் அருந்ததியும் தமது சாபம் நீங்க இத்தலத்தில் தவமிருந்தனர். இம்மலையில்தான் பரகாயப்பிரவேசம் என்னும் சித்தியை அருணகிரிநாதருக்கும் பெம்மான் வழங்கியதாகப் புராணம் உண்டு. இத்தலம் குறித்துத் திருப்புகழில் சுமார் 16 பாடல்கள் உள்ளன. நோய் மற்றும் துன்பங்கள் நீங்க, கல்வி, செல்வம், மற்றும் ஆயுள் நீடிக்கவும் இங்குள்ள முருகனாரை வேண்டிச் செல்வர். இத்தலத்தின் மீது, விராலிக் குறவஞ்சி என்னும் நூலை முத்துப்பழனிக் கவிராயர் இயற்றினார். 
 
எந்த ஒரு முருகன் கோயிலிலும் அல்லாத ஒரு விசித்திர வழக்கம், சுருட்டை நிவேதனமாகப் படைக்கும் வழக்கம் ஒன்று இக்கோயிலில் உண்டு. இதற்குப் பின்னால் ஒரு கதையும் உண்டு. சூறாவளிக் காற்றிலும், வெள்ளத்திலும் துன்புற்று வீடு செல்ல இயலாது கருப்பமுத்து என்னும் அடியவர் நிற்கையில், அருகையில் மற்றொருவர் குளிரில் நடுங்கி நிற்பதைக் கண்டு, குளிருக்கு இதமாக இருக்கட்டும் என்று சுருட்டு ஒன்றைக் கொடுத்தாராம். பின்னர் இருவருமாக ஆற்றைக் கடந்து செல்கையில் அவர் காணாமற் போய்விட்டது கண்டு வியப்புற்ற கருப்பமுத்து, கோயிலை அடைந்ததும் அங்கு முருகனாருக்கு முன்னர் சுருட்டு இருப்பதைக் கண்டு, தம்மிடம் சுருட்டு பெற்றவர் எம்பிரானே என உணர்ந்தார் எனவும், அன்று முதல் சுருட்டு படைக்கும் பழக்கம் உருவானதாகவும் கூறுவர். ஒரு முறை, இதற்கு புதுக்கோட்டையை மன்னர் தடையிடவும், பெம்மான் அவர் கனவில் தோன்றி சுருட்டு நிவேதனம் பிறர் துன்பம் கண்டு அன்பை வளர்க்கும் குறியீடுதான் எனவும், புகைப் பழக்கத்தை ஊக்குவிப்பது அல்ல எனவும் கூறியதாகவும், மன்னர் தமது தடையை நீக்கிக் கொண்டதாகவும் கூறுவர்.
 
தல வரலாறு : விஜயநகரப் பேரரசரின் வழிவந்த இரண்டாம் தேவராயரின் கி.பி.1422 -1446 காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவனது அரசியல் தலைவன் அழகிய மணவாளத்தேவன் அருகில் உள்ள கத்தலூர், பேரம்பூர் ஆகிய இடங்களை தலைமையிடமாக கொண்டு ஆண்டுள்ளான். இவனது கட்டுப்பாட்டில் விராலிமலை இருந்துள்ளது.இப்போது கோயில் இருக்கும் இடத்தில் ஒரு காலத்தில் குரா மரம் இருந்தது. வேடன் ஒருவன் வேங்கையை விரட்டி வந்தான். அவ்வாறு வரும்போது குரா மரம் இருக்கும் இடத்தில் வேங்கை காணாமற் போய் விடுகிறது. குரா மரம் இருக்கும் இடத்திலேயே இறைவன் இருப்பதாக எண்ணி வழிபாடு நடந்திருக்கிறது. வயலூரிலிருந்த அருணகிரிநாதரை, "விராலி மலைக்கு வா' என்று முருகப்பெருமான் அழைக்க அவ்வாறே வந்த அருணகிரிநாதர் குறிப்பிட்ட இடம் தெரியாமல் தவிக்க வேடன் ரூபத்தில் வந்த முருகன் விராலிமலைக்கு வழிசொல்லி அழைத்து சென்று மலையை அடைந்தவுடன் மறைந்து விடுகிறார்.அஷ்டமாசித்தியை அருணகிரிநாதருக்கு இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் வழங்கியதால் இத்தலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இன்றளவும் கருதப் படுகிறது. திருப்புகழில் 18 தடவை இத்திருத்தலத்தைக் குறித்தே அருணகிரிநாதர் பாடியுள்ளார்.
 
தற்போது கோயில் இருக்குமிடத்தில் குரா மரம் ஒன்றிருந்ததாகவும், வேடன் ஒருவன் துரத்தி வந்த வேங்கை அக்குரா மரத்தினுள் மறைந்து விட்டதாகவும், அவ்விடமே ஆறுமுகனாரின் உறைவிடமாகக் கொண்டு வழிபடத்துவங்கியதாகவும் கூறுவர். முனிவர்களும், சித்தர்களுமே அக்குரா மரவடிவில் தவமியற்றி வந்தனர் என்றும் கூறுவதுண்டு. அருணகிரிநாதரைத் தடுத்தாட்கொண்ட முருகப்பெம்மான், அவருக்கு விராலிமலை இருக்குமிடத்தைக் காட்டவே இவ்வாறு வேடன் வேடம் பூண்டு வேங்கையைத் துரத்தி வந்ததாகவும் கூறுவர்.
 
கோவில் அமைப்பு : விராலிமலை முருகன் கோவில் திருச்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள விராலிமலையின் மலை மேல் அமைந்துள்ளது. 207 படிகளை கடந்தால் கோயிலை அடையலாம். கோயிலுக்கு செல்லும் வழியில் பார்வையாளர்கள் தங்குவதற்கு ஓய்வு அறைகள் என கோவில் நிர்வாகத்தால் நடத்தப்படும் மண்டபங்கள் உள்ளன. இங்கு நடத்தப்படும் பல சடங்குகள் மத்தியில் இறைவன் தண்டாயுதபாணிக்கு சுருட்டு வழங்கும் ஒரு சடங்கு இருக்கிறது இந்த சுருட்டு சந்தன கலவையால் உருவானது.  அது கோவிலின் முக்கிய சடங்குகளில் ஒன்றாகும். இக்கோவில் பழத்தோட்டம் மற்றும் பல குரா மரங்களால் சூழப்பட்டுள்ளது இந்த மரங்கள் விராலிமலை  கோயிலின் முருக கடவுளுக்கு ஏறெடுக்கப்படும் பிரார்த்தனையின் போது பண்டைய யோகிகள் மற்றும் முனிவர்களால் பயன்படுத்தப்பட்டன.  நிறைய மயில்களை கோவிலை சுற்றி காண முடிகிறது. கோவில் வளாகத்தில் நாரத முனி மற்றும் ரிஷி காஷ்யபரின்  சிலைகள் உள்ளன. கோயில் தூண்களில் ஆறுமுகம் மற்றும் அருணகிரி நாதரின் பல்வேறு உருவங்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. 
 
1500 ஆண்டுகள் பழைமையான இந்த கோயிலின் மூலக் கோயிலை அழகிய மணவாளன் என்ற மன்னா் அமைத்தார் என இங்கு உள்ள திருப்பணிக் கல்வெட்டு பாடல் ஒன்று தெரிவிக்கிறது. பிற்காலத்தில் புதுப்பிக்கப்பட்ட இக்கோயில் ஆதித்தசோழன் என்ற மன்னரால் திருப்பணி செய்யப்பட்டதாக இங்குள்ள கல்வெட்டுகள் கூறுகிறது. இவா்களுக்கு பிறகு ஆலயத்தின் மற்ற பிரகாரங்கள் மண்டபங்கள் நாயக்கா்கள் மற்றும் மருங்காபுரியார் வம்சத்தவா்களால் கட்டப்பட்டுள்ளது. பின்னா் புதுக்கோட்டை மன்னா்களால் மணிமண்டமும் நவராத்திரி மண்டமும் கட்டப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது. சோலைகளும், மயில்களும், சுனைகளையும் கொண்ட இந்த மலைத்தலத்தில் முனிவா்கள் மரங்களாக விரவி முருகனை வழிப்பட்டதால், இத்தலம் விராலிமலை என்றழைக்கப்படுகிறது.
 
பிள்ளைச் செல்வம் வேண்டுவோருக்கு நேர்த்திக் கடன் கழிக்கும் பழக்கம் இங்கு உள்ளது. பிள்ளை பிறந்ததும், அதை ஆறுமுகனாரிடமே அவரது பிள்ளையாகக் கொடுத்து விட்டுப் பிறகு பிள்ளையின் மாமன் அல்லது சிற்றப்பன்மார்கள் ஆறுமுகனாருக்குத் தவிட்டைக் கொடுத்துப் பிள்ளையை பெற்றுச் செல்லும் சடங்கு இங்கு பிரபலமானது.
சித்திரா பெளா்ணமி, வைகாசி விசாகம் மற்றும் தெப்பத்திருவிழா, ஐப்பசி, கந்தசஷ்டி, பங்குனி உத்திரம், தைப் பூசம், அருணகிரிநாதர் இசை விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடக்கிறது. தவிர முருகனுக்கு உகந்த நாட்கள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டம் விசேசமாக இருக்கும். பொங்கல், தீபாவளி, வருடப்பிறப்பு ஆகிய நாட்களில் இங்கு சிறப்பாக கொண்டாப்படுகிறது. முத்துபழனி கவிராயா் எழுதிய விராலிமலை குறவஞ்சி இங்கு விழா நாட்களில் நாடகமாக அரங்கேற்றப்படுகிறது. 
 
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
 
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
 
அருகிலுள்ள ரயில் நிலையம் :  திருச்சி
 
பேருந்து வசதி : உண்டு
 
தங்கும் வசதி : உண்டு
 
உணவு வசதி : உண்டு
Mail this page Printable view
×
×
×
×
×
×
×